குழந்தைகள் தினம் இன்று. குழந்தைகளால் நேரு மாமா என்று அன்புடன் அழைக்கப்படும் நம் முதல் பிரதமர் திரு. பண்டித ஜவகர்லால்நேரு அவர்களின் பிறந்த நாள், 125 வது பிறந்த நாள் .
குழந்தைகள் நலமே நாட்டின் நலம். குழந்தைகளுக்கு நாம் தரும் அன்பும் அர்வணைப்பும் அவர்களை நல்லவர்களாக நல்ல மனிதர்களாக வாழ வைக்கும்.
குழந்தைகளுடன் நேரம் செலவிட்டால் நமக்குக் கிடைப்பது உற்சாகம் .’டானிக்’’சாப்பிட்ட தெம்பு தரும்.
எனக்கு குழந்தைகளுடன் பேச பிடிக்கும், விளையாடப் பிடிக்கும். ரயிலில் வரும்போது முன்பெல்லாம் ஒருத்தருடன் ஒருத்தர் பேசி வருவோம். இப்போது எல்லாம் அவர்கள் ஆளுக்கு ஒரு செல்போன் அல்லது லேப்டாப், என்று வைத்துக் கொண்டு அதில் ஆழந்து விடுகிறார்கள். ரயில் சிநேகம் குறைந்து வருகிறது. கோவைக்கு ரயிலில் போனபோது ஒரு குழந்தை எனக்கு சிநேகம் ஆனாள். அந்த குழந்தை என்னிடம் பாடல்கள் பாடிக் காட்டினாள். அந்த பாடல்களை இன்று குழந்தைகள் தினத்தில் கேட்டு மகிழலாம். மழலை பாடல் கேட்க இனிமை.
குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்கு ஓவியப் போட்டிகள் நடத்திப் பரிசு கொடுக்கிறார்கள்.
என் பேரன் வரைந்த ஓவியங்கள், அவன் பள்ளியில் செய்த கைவேலைகள் எல்லாம் கீழே காணலாம்.
ஓடி விளையாடு பாப்பா என்று பாரதி சொன்னது போல், ஓடி விளையாடு தாத்தா, பாட்டி என்று பேரக் குழந்தைகள் தாத்தா, பாட்டிகளை விளையாட வைத்து அவர்களை ஆரோக்கியமாய் வைத்து இருக்கிறார்கள்.
மழலைச் செல்வங்கள் வாழக! வளர்க!
வாழக வளமுடன்.
==================
இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்! ஓவியங்கள் அழகு! பேரனுக்கு வாழ்த்துக்கள்! நன்றி!
பதிலளிநீக்குபேரன் வரைந்த ஓவியங்கள் அழகு. குழந்தைகள் தின வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபேரனுக்குத் தாத்தாவின் கை வண்ணமோ.? வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகுழந்தையின் பாடல்கள் கேட்டேன். இதைக் கேட்டதும் முன்பெல்லாம் சென்னை வானொலியில் சனிக்கிழமை மாலைகளில் 'பிள்ளைக்கனியமுது' என்ற ஒரு நிகழ்ச்சி வைப்பார்கள். காத்திருந்து அந்த நிகழ்ச்சிகளைக் கேட்ட நினைவு வருகிறது. ரேடியோ அண்ணா (கூத்தபிரான்) நடத்திய நிகழ்ச்சி. இப்போது சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் குழந்தைகளைப் பெரிய தனத்துடன் காட்டும் நிகழ்ச்சிகள்தான் வருகின்றன.
பதிலளிநீக்குஉங்கள் பேரனுக்கு எங்கள் வாழ்த்துகள்.
ஓடி விளையாடு தாத்தா, பாட்டி என்று பேரக் குழந்தைகள் தாத்தா, பாட்டிகளை விளையாட வைத்து அவர்களை ஆரோக்கியமாய் வைத்து இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குமழலைச் செல்வங்கள் வாழக! வளர்க!
வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமழலை பாடல் கேட்கவில்லையா?
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
பேரனுக்கு வாழத்து சொன்னதற்கு நன்றி.
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், பேரனுக்கு தாத்தா, அப்பா, அம்மா எல்லார் கைவண்ணமும் வந்து இருக்கிறது. வாழ்த்துக்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குபாப்பானு பார்க்கும்போது நாம் ஒரு சிலவற்றை மறந்து விடுகிறோம்..நீங்களும் ஒரு காலத்தில் சுட்டிப்பாப்பாவாகத்தான் இருந்தீர்கள்..பாலுசார்கூட சுட்டிப் பையனாகத்தான் இருந்தார்..உங்களுடைய தாத்தா பாட்டிகளால் இதேபோல் ரசிக்கப் பட்டீர்கள். :)
பதிலளிநீக்குஆனால் காலம் கடக்கக் கடக்க நாம் நாமும் பிறர் ரசிக்கும் இதே குழந்தைகளாக இருந்ததையும் மறந்துவிடுகிறோம். இல்லையா? :)
வணக்கம் ஸ்ரீராம், குழந்தையின் பாடலகளை கேட்டது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குசினிமா குழந்தைகள் அதிகபடியாக பேசும், அதுபோல் இப்போது சூப்பர் சிங்கரிலும் நடக்கிறது.
குழந்தைகளுக்கு தனியாக மழலை பாடல் போட்டி, வயது வந்த குழந்தைகளுக்கு தனியாக பாடல் போட்டி என்று வைக்க வேண்டும் எல்லோரும் எல்லா பாடலும் எனும் போது குழந்தைத்தனம் பறி போய்விடுகிறது.
வானொலியில் வரும் ரேடியோ மாமா, ரேடியா அண்ணா நிகழ்ச்சி நானும் கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன்.கண்மணி பூங்கா, பிள்ளைகனிஅமுது, மழலை உலகம், எல்லாம் அருமையான நிகழ்ச்சிகள்.
பேரன் ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று என்று பாடினான், அநத பாடல் ஏனோ ஏற மாட்டேன் என்று விட்டது.
என் ரயில் சிநேக குழந்தை பாடல் நினைவுக்கு வந்து அதை இங்கு பகிர்ந்தேன்.
உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி.
பேரனுக்கு வாழ்த்து சொன்னதற்கு நன்றி.
வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
குழந்தையின் கையெழுத்தில் வாழ்த்து அட்டை. ச்சோ ஸ்வீட்.
பதிலளிநீக்குவாங்க வருண், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநலமா?
வருண், நானும் இப்படி பிறர் ரசிக்கும் குழந்தையாக இருந்ததை அம்மா இருந்த வரை சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.
நீங்கள் சொல்வது போல் என் பிள்ளை பருவம் என் தாத்தா பாட்டியால் பாராட்டபட்டது. உண்மை.
இப்போது நான் பேர குழந்தைகளை பாராட்டிக் கொண்டு இருக்கிறேன்.
எனக்குள் இருக்கும் குழந்தைதனமும் இன்னும் மறையவில்லை, சிறு குழந்தைகளை கண்டால் வந்து விடுகிறது. அவர்களுடன் அவர்களுக்கு ஏற்ற மாதிரி விளையாடுகிறேன், சிரிக்கிறேன், மகிழ்கிறேன்.
எல்லோருக்குள்ளும் இருக்கும் குழந்தைத்தனத்திற்கு வாழ்த்துக்கள் வருண்.
சின்னகுழந்தைகள் போல் விளையாடி சிரித்து களித்து இருப்போம் நாம் சிரித்து களித்து இருப்போம்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வாங்க வருண், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநலமா?
வருண், நானும் இப்படி பிறர் ரசிக்கும் குழந்தையாக இருந்ததை அம்மா இருந்த வரை சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.
நீங்கள் சொல்வது போல் என் பிள்ளை பருவம் என் தாத்தா பாட்டியால் பாராட்டபட்டது. உண்மை.
இப்போது நான் பேர குழந்தைகளை பாராட்டிக் கொண்டு இருக்கிறேன்.
எனக்குள் இருக்கும் குழந்தைதனமும் இன்னும் மறையவில்லை, சிறு குழந்தைகளை கண்டால் வந்து விடுகிறது. அவர்களுடன் அவர்களுக்கு ஏற்ற மாதிரி விளையாடுகிறேன், சிரிக்கிறேன், மகிழ்கிறேன்.
எல்லோருக்குள்ளும் இருக்கும் குழந்தைத்தனத்திற்கு வாழ்த்துக்கள் வருண்.
சின்னகுழந்தைகள் போல் விளையாடி சிரித்து களித்து இருப்போம் நாம் சிரித்து களித்து இருப்போம்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் புதுகைதென்றல், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் அக்கா!.. இனிய குழந்தைகள் தின நல் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஉங்க பேரக்குட்டிகளுக்கும் அன்பு வாழ்த்துக்கள்!
மழலைகள் உலகம் மகத்தானது என்பார்களே.! அவர்களுடன் இருந்தால் அவர்களாகவே நாமும் மாறிவிடுவோம்.. அத்தனை இனிமையானவர்கள்..!
பல வருடங்களுக்கு முன்பு தமிழ்க் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியப் பணியின்போது ஆரம்ப வகுப்பு – பாலர் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு நானே விரும்பிக் கேட்டு கற்பித்தேன். அப்போது அந்த 2 மணி நேரமும் நானடைந்த மகிழ்வு.. சொல்லுக்குள் அடங்காதது..! அத்தனை சந்தோஷத் தருணங்கள் அவர்களுடனான கடந்த கால நிகழ்வுகள்!
பேரக் குட்டிகளின் குரல்களும், அவர்களின் ஆக்கங்களும் மிகச் சிறப்பு!
கொடுத்து வைத்தவர் அக்கா நீங்கள்! எல்லோருக்கும் இனிய வாழ்த்துக்கள்!
உங்கள் பேரனின் கைவண்ணம் மிளிர்கிறது. அவன் மென்மேலும் வளர்ந்து பல சிகரங்களை சென்றடைய
பதிலளிநீக்குவாழ்த்துகிறேன்.
நீங்கள் பதிவு செய்துள்ள காணொளிகள் அனைத்துமே , ஸ்ரீராம் சார் சொல்வது போல் வானொலியில் "பாப்பா மலரில் " கேட்டிருக்கிறேன்.
மீண்டும் கேட்கும் வாய்ப்பை நல்கியதற்கு நன்றி கோமதி.
வணக்கம் இளமதி வாழக வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
பாட்டு பாடும் பாப்பா ரயிலில் என்னுடன் உரையாடி கொண்டும் அவளுக்கு தெரிந்த பாடல்களை பாடி காட்டிக்கொண்டும் வந்த ரயில் நட்பு செல்லம்.
ஓவியங்கள், கைவேலை செயதது என் பேரன்.
சிறு குழந்தைகளுக்கு ஆசிரியராக இருந்தீர்களா? அது மகிழ்ச்சியான தருணம் தான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி இளம்தி.
வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழக் வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது, நன்றி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
மழலைச் செல்வங்களுக்கு நல்வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குவாழ்க!.. வளர்க!..
அழகு... இனிமை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
மழலையின் கையெழுத்தில் வாழ்த்து அருமை
பதிலளிநீக்குபெயரக் குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்
நன்றி சகோதரியாரே
வணக்கம் துரைசெல்வராஜூ வாழகவளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குநலமா? பதிவர் திருவிழா சிறப்பாக நடத்தி விட்டீர்கள்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
டி,என். முரளிதரன் மூங்கில்காற்று:-
பதிலளிநீக்குஉங்கள் பேரனின் ஓவியங்கள் சூப்பர். பெற்றோரை விட பேரன் பேத்திகளின் திறமைகளால் தத்தா பாட்டிகளே பெரிதும் மகிழ்கிறார்கள். பெற்றோர் படிப்பை மட்டுமே முன்னிலைப் படுத்துகிறார்கள்
குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்//
மன்னிக்கவும் முரளிதரன், போனில் பார்த்து படித்தவிட்டு மறந்து விட்டேன் பப்ளிஸ் செய்ய அப்புறம் லேப்டாப் வந்து பப்ளிஸ் செய்தால் வரவில்லை அதனால் காப்பி செய்து பேஸ்ட் செய்து இருக்கிறேன் உங்கள் பின்னூட்டத்தை.
எல்லோருக்கும் மகிழ்ச்சி தான். படிப்பும் மற்ற திறமைகளும் வேண்டும்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. வாழ்த்துக்களுக்கு நன்றி.
டி,என். முரளிதரன் மூங்கில்காற்று:-
பதிலளிநீக்குஉங்கள் பேரனின் ஓவியங்கள் சூப்பர். பெற்றோரை விட பேரன் பேத்திகளின் திறமைகளால் தத்தா பாட்டிகளே பெரிதும் மகிழ்கிறார்கள். பெற்றோர் படிப்பை மட்டுமே முன்னிலைப் படுத்துகிறார்கள்
குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்//
மன்னிக்கவும் முரளிதரன், போனில் பார்த்து படித்தவிட்டு மறந்து விட்டேன் பப்ளிஸ் செய்ய அப்புறம் லேப்டாப் வந்து பப்ளிஸ் செய்தால் வரவில்லை அதனால் காப்பி செய்து பேஸ்ட் செய்து இருக்கிறேன் உங்கள் பின்னூட்டத்தை.
எல்லோருக்கும் மகிழ்ச்சி தான். படிப்பும் மற்ற திறமைகளும் வேண்டும்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. வாழ்த்துக்களுக்கு நன்றி.
அழகு!
பதிலளிநீக்கு''..இப்போது எல்லாம் அவர்கள் ஆளுக்கு ஒரு செல்போன் அல்லது லேப்டாப், என்று வைத்துக் கொண்டு அதில் ஆழந்து விடுகிறார்கள்..''
பதிலளிநீக்குஉலகில் நடக்கும் இது ஒரு சோகம்.
அது ஒரு புறம் இருக்க
அருமையான பேரனின் ஓவியங்கள்
இனிய வாழ்த்துகள் சகோதரி நல்ல பதிவு.
வேதா.இலங்காதிலகம்.
குழந்தையின் பாடல்கள் அருமை. பேரனின் ஓவியங்கள் அழகு. கைவேலைப்பாடுகள் நேர்த்தியாக உள்ளன. எல்லாக் குழந்தைகளுக்கு நம் குழந்தைகள் தின வாழ்த்துகள்:)!
பதிலளிநீக்குவணக்கம் கே.பி.ஜனாசார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் வேதா. இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபாடல்களை கேட்டு , பேரனின் கைவேலை, ஓவியங்களை ரசித்து எல்லா குழந்தைகளுக்கும் வாழ்த்து சொன்னதற்கு வாழ்த்துக்கள்.