சனி, 25 அக்டோபர், 2014

படம் இங்கே ! பதில் அங்கே!

சும்மா என்ற வலைத்தளம் வைத்து இருக்கும்  திருமதி . தேனம்மை அவர்கள்  தன் வலைத்தளத்தில்  ’சாட்டர்டே ஜாலி கார்னர்’ என்று ஒரு பதிவர் பேட்டியை பகிர்ந்து கொள்கிறார். இந்தமுறை என்னை அழைத்து இருந்தார்.  

 கோலங்கள் போடுதல் தொடர்பான உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். என்றும்,

 உங்களுக்குப் பேர்வாங்கித்தந்த கோலம் எது. ?///; இரண்டு கேள்விகள் கேட்டு இருந்தார். கோலங்களும் சில அனுப்பி வைக்க சொல்லி இருந்தார். அதில் என்ன தவறு என்று தெரியவில்லை. அவரது தளத்தில் என் கோலங்கள் தெரியவில்லை.


 ரோல் காமிராவில் எடுத்து இருந்த பழைய படங்களை ஆல்பத்திலிருந்து டிஜிடல் காமிரா மூலம் எடுத்து அனுப்பினேன்.

 இப்போது படங்களை இங்கு அனுப்பிப் பார்த்தேன் வருகிறது. படங்கள் இங்கே பதில்கள் அங்கே. தேனம்மை அவர்களின் தளத்திற்குப்   போய்ப் படித்து பார்த்துக் கருத்துகளை அங்கு  சொல்லும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
                                               









                                
                                                             வாழ்க வளமுடன்.
                                                                       ------------------------

61 கருத்துகள்:

  1. பார்த்தேன், படித்தேன்
    சிறந்த பகிர்வு

    தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!
    http://eluththugal.blogspot.com/2014/10/blog-post_97.html

    பதிலளிநீக்கு
  2. இங்கும் ஒரு படமும் தெரியவில்லையே...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் காசிராஜ லிங்கம் வாழ்க வளமுடன்.படம் தெரியவில்லை என்கிறார்கள் நீங்கள் பார்த்தேன், படித்தேன் என்று சொல்கிறீர்கள். உங்களுக்கு மட்டும் படம் தெரிகிறதா? ஆச்சிரியம்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் காசிராஜ லிங்கம் வாழ்க வளமுடன்.படம் தெரியவில்லை என்கிறார்கள் நீங்கள் பார்த்தேன், படித்தேன் என்று சொல்கிறீர்கள். உங்களுக்கு மட்டும் படம் தெரிகிறதா? ஆச்சிரியம்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன். என் தளத்தில் எல்லா படங்களும் தெரிகிறது. ஆனால், ராமலக்ஷ்மி, என் மகள் எல்லோரையும் பார்க்க சொல்லி பார்த்து விட்டேன் வரவில்லை என்கிறார்கள். நாளை முயன்று பார்க்கிறேன் இல்லையென்றால் நம் திண்டுக்கல் தனபாலன் அவர்களிடம் சந்தேகம் கேட்க வேண்டும்.
    உங்கள் வரவுக்கு நன்றி ஸ்ரீராம்.
    கணிப்பொறி தொழில் நுட்பம் நான் நிறைய படிக்க வேண்டி உள்ளது.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன். என் தளத்தில் எல்லா படங்களும் தெரிகிறது. ஆனால், ராமலக்ஷ்மி, என் மகள் எல்லோரையும் பார்க்க சொல்லி பார்த்து விட்டேன் வரவில்லை என்கிறார்கள். நாளை முயன்று பார்க்கிறேன் இல்லையென்றால் நம் திண்டுக்கல் தனபாலன் அவர்களிடம் சந்தேகம் கேட்க வேண்டும்.
    உங்கள் வரவுக்கு நன்றி ஸ்ரீராம்.
    கணிப்பொறி தொழில் நுட்பம் நான் நிறைய படிக்க வேண்டி உள்ளது.

    பதிலளிநீக்கு
  7. எனக்கு இங்கும் தெரியல்லம்மா இந்த படங்கள் மட்டும் .. பதிவு ப்ரிவியூ பண்ணும்போது தெரிஞ்சதா படங்கள் ?

    ..

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
    பதிவு ப்ரிவியூ பண்ணிய போது தெரிந்தது. ப்ப்ளிஷ் செய்து பின் தமிழ்மணம் சப்மிட் செய்த் போதும் எனக்கு தெரிகிறது. தமிழ்மணம் திறந்து பார்த்தபோதும் படம் என் தளத்தில் தெரிகிறது, மற்றவர்களுக்குதான் தெரியவில்லை ஏன் என்று தெரியவில்லை. நாளை வேறு படங்கள் அனுப்பி டெஸ்ட் செய்து பார்க்கிறேன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ஏஞ்சலின்.

    பதிலளிநீக்கு
  9. கோமதிம்மா ! இப்போ படங்கள் தெரிகிறது இங்கே

    பதிலளிநீக்கு
  10. ப்ளு கலர் dungarees போட்ட கரடியார் ,மாடிப்படி அருகே கோலம் போடும் நீங்க ,ஓடையும் வீடும் படகும் ,சோடி மயில்கள் புறாக்கள் வெண்ணெய் உண்ணும் கண்ணன் சாண்டா தாத்தா ,சீனப்பெண் பாப்பா ,ரெட் ரைடிங் ஹூட் ,மும்மதங்கள் வழிபாட்டுத்தலங்கள் என அனைத்தும் அருமைம்மா

    கடைசி படத்துக்கு முந்தின படம் மட்டும் தெரியவில்லை ..

    பதிலளிநீக்கு
  11. அன்பு ஏஞ்சலின், தேவதை போல் அதிகாலையில் வந்து ”படங்கள் தெரிகிறது” என்று சொல்லிவிட்டீர்கள்.
    இரவு 12வரை படங்களை மீண்டும் வலை ஏற்றினேன். எனக்கு தெரிகிறதே மற்றவர்களுக்கு தெரிய வேண்டுமே! என்றும், நாளை எப்படியும் தெரியும் என்ற நம்பிக்க்கையுடனும் உறங்க சென்றேன்.
    அது போலவே உங்கள் பின்னூட்டம் வந்து விட்டது.
    நன்றி. மீண்டும், வந்து பார்த்து கருத்து சொல்லி என்னை மகிழவைத்தமைக்கு.

    பதிலளிநீக்கு
  12. கடைசிப் படத்துக்கு முந்தையப் படத்தைத் தவிர மற்ற அனைத்துப் படங்களும் தெரிகின்றன.

    கோலங்களா இவை? நீங்கள் ஒரு கோலத்தைப் போடுவதிலிருந்துதான் நம்ப முடிகிறது. பொங்கல் வாழ்த்துப் படங்களைத் தரையில் ஒட்டினாற்போல.... :)))))

    அருமை. எவ்வளவு நேரம் பிடிக்கும் இது போன்ற கோலங்கள் போட்டு, வண்ணங்கள் தீட்ட? அரை மணி நேரம்?

    பதிலளிநீக்கு
  13. முதல் படத்தை பெரிசு பண்ணி இன்னும் தெளிவாகக் கோலங்களைப் பார்க்கலாம் என்று முயற்சித்தேன்;
    ஆனால் அந்தோ! அது இன்னும் சின்னதாகி விட்டது!

    முதல் படத்தில் மலை முகட்டுக்குள்
    பதுங்கியிருந்து பாதி தெரிகிற மாதிரி
    உதய சூரியனாய் போட்டிருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    கடைசிப் படம் கரடி படம் தான் பழைய படத்தை நீக்கி விட்டு மறுபடியும் டவுன்லோடு செய்து போட்டுப் பார்த்தேன்.

    பழைய கரடி படத்தை நீக்க மறந்து விட்டேன் போலும். அதையும் நீக்கி விடுகிறேன்.

    //பொங்கல் வாழ்த்துப் படங்களைத் தரையில் ஒட்டினாற்போல.... :)))))//

    நன்றி, நன்றி.

    நான் மட்டும் போடுவதால் கலர் போட்டு முடிக்க ஒருமணி நேரம் ஆகும்.

    இவை எல்லாம் ரோல் காமிராவில் எடுத்த பழைய படங்கள். ஏதோ குழந்தைகளிடம் காட்ட அப்போது ஆல்பத்தில் ஒட்டி வைத்த படங்கள்.

    குழந்தைகளுக்கு வரைந்த படத்தை பாராட்டியதற்கு நன்றி ஸ்ரீராம்.





    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ஜீவிசார், வாழ்க வளமுடன்.
    படங்கள் தெரியவில்லை என்பதால் கொஞ்சம் சிறிதாக போட்டு இருக்கிறேன்.(பெரிதாக்கி விடுகிறேன்)

    நீங்கள் சொல்வது போல் மலைமுகட்டுக்குள் சூரியன் மறைந்து இருப்பது போல் ஒருமுறை போட்டு இருக்கிறேன் சார்.
    தை பொங்கல் அன்று அதை பகிர்ந்து இருக்கிறேன்.
    இது கொஞ்சம் மாற்றமாய் மேலே வந்து விட்டது.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம்
    அம்மா

    ஒவ்வொரு கோலங்களும் மிக அழகாக உள்ளது பகிர்வுக்கு நன்றி ஒரு படம் தெரியவில்லை. கடசிக்கு முன் உள்ளபடம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  17. அழகான, நேர்த்தியான கோலங்கள்! ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல கடைசிக்கு முந்தையபடம் மட்டும் எனக்கும் இப்போது தெரியவில்லை. ஏன் படங்களை நேற்றுப் பார்க்க முடியாமல் போனது என்பது விந்தையாகவே உள்ளது. உங்கள் விடாமுயற்சியால் காணத் தந்து விட்டீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  18. எனக்கும் என் வலைத்தளம் ஓபன் ஆகும்போதெல்லாம் தெரிகிறது. மற்றவர்களுக்கு ஏன் தெரியவில்லைன்னு தெரியலை. ஒரு வேளை இவற்றை நீங்கள் முன்பே பகிர்ந்து இருக்கீங்களா. ஷேர்டு ப்ரைவேட்லி போட்டா மட்டும்தான் யாருக்கும் தெரியாது.. ஹ்ம்ம் பார்ப்போம் . நாளை தனபாலன் சகோ வந்தவுடன் கேட்போம் அதுவரை இதையே நானுமென் வலைத்தளத்தில் பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ரூபன்.என் முந்திய தீபாவளி பதிவில் உங்களை காணவில்லை.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    அந்த கடைசி படம் கரடிதான் அது பழைய படம்.

    முதலில் அனுப்பிய பழைய படங்கள் தேனம்மைக்கு மெயிலில் அனுப்பிய படங்களை காப்பி செய்து பேஸ்ட் செய்தேன் அதனால் தெரியவில்லை போலும்.

    மறுபடி இரவு புதிதாக படங்களை டவுன்லோடு செய்து போட்டுப்பார்த்தேன் , ஏஞ்சலின் காலையில் வந்து தெரிகிறது என்ற பின் நிம்மதி.

    ஏன் என்ன காரணம் நேற்று வரவில்லை,மெயிலில் படங்கள் அனுப்பியதில் என்ன தவறு? என்பதை யாராவது உங்களைப் போன்றவர்களும் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களும் தான் சொல்லவேண்டும்.

    புது புது அனுபவங்களை தருகிறது இந்த இணையம்.

    உங்கள் உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கு நன்றி ராமலக்ஷ்மி.



    பதிலளிநீக்கு
  21. வணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்.

    எனக்கும் என் வலைத்தளம் ஓபன் ஆகும்போதெல்லாம் தெரிந்தது.

    உங்களுக்கு மெயிலில் அனுப்பிய படங்களை காப்பி செய்து பேஸ்ட் செய்தேன் அதனால் தெரியவில்லை போலும்.

    மீண்டும் புதிதாக ட்வுன்லோட் செய்து போட்டுப்பார்த்தேன் என்னவோ தெரிகிறது.
    நாம இரண்டு பேரும் சேர்ந்து ஒரு புதுமை செய்து விட்டோம்.
    படம் இங்கே! பதில் அங்கே! என்று.
    தனபாலன் அவர்கள் வந்த பின் இதைப்பற்றி கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
    நன்றி தேனம்மை உங்கள் வலைத்தளத்தில் இதை பகிர்ந்தமைக்கு .

    பதிலளிநீக்கு
  22. எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் எல்லாப் படங்களும் தெரிகின்றன. கண்ணன் தான் வெண்ணையைத் திருடும்போது யாரோ வந்துட்டாங்க போல, பயந்தாற்போல் காண்கிறான். :) மற்றவைகளும் ஶ்ரீராம் சொன்னாப்போல் கோலங்களாய்த் தெரியவில்லை. ஓவியங்களாகவே தெரிகின்றன.

    பதிலளிநீக்கு
  23. வேர்ட் வெரிஃபிகேஷன் இப்போப் புதுசா வைச்சிருக்கீங்களோ? உங்களுக்குப் பிரச்னை இல்லைனால் எடுத்துடுங்க. :)))))

    பதிலளிநீக்கு
  24. கருத்துள்ள கோலங்கள் சிந்தை கவர்ந்தன.

    ஒருமுறை பேரூர் ஆலயத்தில் பெரிய நாகம் கோலம் போட்டிருந்தோம்..

    அடுத்தநாள் அந்த கோலத்தைச்சுற்றி கயிறு கட்டி நாகத்தில் தலையில் புகுந்து வால் வழியாக வெளியேறினால் சர்ப்பதோஷம் நீங்கும் என்ற அறிவிப்புடன் டிக்கெட் விற்றுக்கொண்டிருந்ததைப் பார்த்து கோலம் போட்ட நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்..

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்கவளமுடன்.
    கீதா அவர்கள் சொல்வது எல்லாம் நேற்று நிலை. இன்று காலையிலிருந்து தெரிகிறது படங்கள்.. தெரியாத ஒரு படத்தை நீக்கி விட்டேன்..

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி கீதமஞ்சரி.

    பதிலளிநீக்கு
  26. அங்கே படங்கள் சரியா தெரியலையேன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன். படங்கள் அருமை அம்மா.

    பதிலளிநீக்கு
  27. கீதமஞ்சரி இல்லை. நான் கீதா சாமபசிவம்.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.

    நீங்கள் போட்ட கோலத்திற்கு காசு வசூல் செய்ததை படிக்கும் போது அதிர்ச்சியாய் இருந்தது.
    எப்படி எல்லாம் மனிதர்கள்
    பிழைக்கிறார்கள்!

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன். உங்களை கீதாஎன்று மட்டும் தான் கூப்பிட்டு மறுமொழி தருவேன், இன்று கொஞ்சம் கீதமஞ்சரி பாதிப்பு. காலையில் அவர்கள் பதிவை படித்ததால் வந்து விட்டது. அவர்கள் சேமிப்புகள் அழிந்து விட்டது என்று படித்ததை பேசிக் கொண்டு இருந்ததால் அவர்கள் பேர் டைப் செய்யும் போது வந்து விட்டது.

    மன்னிக்கவும்.

    கண்ணன் பயந்தமாதிரி இருக்கிறானா பாவம் குழந்தை தானே! அதுதான்.
    மற்றபடங்களை பாராட்டியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. மிகவும் அருமையான கோலங்கள்.
    பாராட்டுகள் + வாழ்த்துகள்.

    அங்கு ‘சும்மா’ திருமதி. தேனம்மை அவர்களின் பதிவினில் ஒரு கோலத்தையும் நேற்று என்னால் பார்க்கவே முடியவில்லை.

    அதனால் மட்டுமே, அங்கு கோலங்களைத்தவிர, தங்களின் பேட்டியைப்பற்றி மட்டுமே எழுதி இருந்தேன்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  31. //இராஜராஜேஸ்வரி said...

    ஒருமுறை பேரூர் ஆலயத்தில் பெரிய நாகம் கோலம் போட்டிருந்தோம்..

    அடுத்தநாள் அந்த கோலத்தைச்சுற்றி கயிறு கட்டி நாகத்தில் தலையில் புகுந்து வால் வழியாக வெளியேறினால் சர்ப்பதோஷம் நீங்கும் என்ற அறிவிப்புடன் டிக்கெட் விற்றுக்கொண்டிருந்ததைப் பார்த்து கோலம் போட்ட நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்..//

    இதை ஏற்கனவே தங்கள் பதிவினில் எங்கோ ஓரிடத்தில் தாங்கள் சொல்லி, நான் படித்து என் மனதிலும் பதிய ஏற்றிக்கொண்டுள்ளதால், எங்கெல்லாம் கோலப்பதிவுகளை நான் பார்க்கிறேனோ, அங்கெல்லாம் எனக்கு உடனே உங்களின் இந்த ‘அதிர்ச்சி’யான விஷயங்களே நினைவுக்கு வந்து நான் எனக்குள் சிரித்துக்கொள்வது உண்டு.

    இன்று இந்தப்பதிவினைப்படிக்கும் போதும் எனக்கு அந்த ஞாபகமே தான் முதலில் வந்தது. சிரித்துக்கொண்டேன்.

    பிறகு தங்களின் பின்னூட்டத்தைப் படித்ததும், மேலும் அதையே நினைத்து மீண்டும் சிரித்துக்கொண்டேன்.

    எப்படியெல்லாம் ஏமாற்றிப் பிழைக்கிறார்கள், பாருங்கோ.

    மறக்க மனம் கூடுதில்லையே !

    VGK

    பதிலளிநீக்கு
  32. வாங்க புதுகைதென்றல், வாழ்க வளமுடன்.

    அங்கு பதில்களை படித்து இங்கு வந்து கோலங்களை பார்த்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

    தேனம்மையின் தளத்தில் உங்கள் பின்னூட்டம் படித்தேன். நன்றி.

    உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் சார், வாழ்க வளமுடன்.

    என் கோலத்தைப்பற்றிய கருத்துக்கும், திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் கருத்துக்கும் அளித்த பின்னூட்டமும் அருமை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  35. எல்லாப் படங்களும் நன்றாகத் தெரிகின்றன கோமதி. கோலம் போடும் கோலமயிலாக நீங்களும் அழகாக இருக்கிறீர்கள். வண்ணக்கலவையும் வடிவங்களும் ,போட்டோ எடுத்த நேர்த்தியும் மிக அழகுமா. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் அன்பு வல்லி அக்கா, நலமா?
    வாழ்க வளமுடன்.

    எல்லா படங்களும் பார்த்தீர்களா? தேனம்மை தளத்தில் பதில்கள் படித்தீர்களா?

    அக்கா, நான் கோலமயிலா!

    உங்கள் வரவுக்கும், அன்பான கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  37. வேர்ட் வெரிஃபிகேஷன் இப்போப் புதுசா வைச்சிருக்கீங்களோ? உங்களுக்குப் பிரச்னை இல்லைனால் எடுத்துடுங்க. :)))))//
    அப்படி ஒன்றும் வைக்க வில்லையே!

    வாங்க கீதா, இந்த பின்னூட்டம் மறைந்து இருந்தது.
    இப்போது தான் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  38. அருமையான கோலங்கள் அம்மா..... நீங்கள் கோலங்கள் என்று சொல்லாமல் இருந்தால் இவை கோலங்கள் என்றே தெரிந்திருக்காது. ஸ்ரீராம் சாருக்கு வந்த அதே யோசனை எனக்கும் வந்திருக்கும்!

    பதிலளிநீக்கு
  39. வணக்கம், வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.

    பக்கத்து வீட்டுக் குழந்தைகள் அவர்கள் பென்சில்பாக்ஸ், சட்டையில் உள்ள படங்களை கொடுத்து வரைய சொல்வார்கள் அப்படி அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற போட்ட கோலங்கள் .

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  40. மயிலும் புறாவும், போட்டிப் போட்டுக் கொண்டு கண்ணைக் கவர்கின்றன.
    உங்கள் ஓவியத் திறமை வியக்க வைக்கிறது.
    பாராட்டுக்கள் கோமதி!

    பதிலளிநீக்கு
  41. வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
    கோலத்தை ரசித்து சொன்ன
    உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  42. ஆகா...அனைத்து கோலங்களும்....அருமை..

    பதிலளிநீக்கு
  43. எவ்வளவு சிரத்தையுடன் அழகாகவும் அம்சமாகவும் வரைந்துள்ளீர்கள். கோலம் போலவே தெரியவில்லை. தரையில் ஒரு ஓவியக்கம்பளம் விரித்தாற்போன்ற அழகு. மனம் நிறைந்த பாராட்டுகள் மேடம். தோழி தேனம்மையின் பதிவிலும் படங்கள் எனக்குத் தெரிகின்றன. அங்கும் கருத்திட்டேன்.

    பதிலளிநீக்கு
  44. என்னுடைய பதிவு உங்களை எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதை இங்கு கீதா மேடத்தை கீதமஞ்சரி என்று அழைத்ததன் மூலம் புரிந்துகொண்டேன். உங்களைப் போன்ற நட்புறவுகள் பலரும் தரும் ஆதரவாலும் ஆறுதலாலும் மீண்டும் அவற்றை எழுதத் துவங்குவேன். நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  45. வணக்கம் அனுராதா, வாழ்க வளமுடன்.
    கோலத்தை ரசித்து
    கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  46. அன்பு கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
    கோலங்களை பாராட்டியதற்கு நன்றி.

    தேனம்மையின் பதிவில் தெரிவத்ற்கு உதவியவர் திருமதி .ராமலக்ஷ்மி. அவர்களிடம் யோசனை கேட்டு இருந்தேன் அவர்கள் சரி செய்து மீண்டும் தேனம்மைக்கு அனுப்பினார்கள். ராமலக்ஷ்மியின் சிரத்தையால் மீண்டும் உயிர்பெற்றன படங்கள். ராமலக்ஷ்மிக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  47. ஆம் கீதமஞ்சரி, அன்று முழுவதும் சாரிடம் அதைப்பற்றியே பேசிக் கொண்டு இருந்தேன்.
    கீதாவந்து சொல்லும் வரை என் தவறை பார்க்கவில்லை.’நான் கீதமஞ்சரி இல்லையென்று” வர்கள் சொன்ன போதுதான் பார்த்தேன்.

    கீதமஞ்சரி ஆஸ்திரேலியா காடுரை கதைகள் மிக அருமையாக இருக்கும், அவை எல்லாம் போய் விட்டதாம் என்று. உங்களுக்கு ஆறுதல் சொன்னாலும் என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
    மீண்டும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  48. மிகவும் அருமையான கோலங்கள்.
    பாராட்டுகள் + வாழ்த்துகள்.
    Vetha.Langathilakam

    பதிலளிநீக்கு
  49. அஹா 48 மறுமொழிகளா.. ராமலெக்ஷ்மிக்குத்தான் நன்றி சொல்லணும் நானும் கோமதி மேம். மிக அருமையா மாற்றி அனுப்பித்தார்.

    பதிலளிநீக்கு
  50. வணக்கம் வேதா. இலங்கா திலகம், வாழ்க வளமுடன்.

    உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  51. வணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்.

    ராமலக்ஷ்மிக்கு நன்றி சொல்ல வேண்டும் தான்.
    உங்கள் வரவுக்கு நன்றி.



    பதிலளிநீக்கு
  52. வணக்கம் முரளிதரன், வாழ்க வளமுடன்.

    படம் இப்போது தெரிய வைத்தபின் வந்து இருக்கிறீர்கள்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  53. தாமதமாய் வந்ததால் அழகான கோலங்களை அலுங்காமல் ரசிக்க முடிந்தது.

    கோலம் போடும் அம்மாவைப் பற்றி பல வருடங்களுக்கு முன் ஒரு கவிதை எழுதியிருந்தேன். தினமணிக் கதிரில் வந்த ஞாபகம். அது நினைவுக்கு வந்தது. தேடித் பார்க்கணும்.

    கோலம் போட்ட கைகளுக்கு நாலு ஜோடி வளையல் போட ஆசைதான்.. வார்த்தைகளால் இப்போது போட்டு வைக்கிறேன்.
    அருமை... தேனம்மை மேடத்துக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  54. வணக்கம், மோகன்ஜி, வாழ்க வளமுடன்.
    கோலத்தை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
    அம்மாவைப் பற்றி எழுதிய கவிதையை தேடி படிக்க தாருங்கள்.

    எத்தனை வயது ஆனாலும் சகோதரன் சீர் கொடுத்தால் சகோதரிக்கு மகிழ்ச்சி தான். வார்த்தை மட்டும் போதும். நன்றி.

    பதில்களை படித்தீர்களா?

    நானும் சொல்லிக்கிறேன்.தேனம்மைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  55. Have a very good day..
    Vetha.Langathilakam

    பதிலளிநீக்கு
  56. அழகிய கோலங்கள்.. அங்கு போய்ப் பார்க்கிறேன் உங்களை:).

    பதிலளிநீக்கு
  57. வணக்கம் athira, வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    அங்கு போய் பாருங்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
  58. வணக்கம் ஆசியா, உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  59. வணக்கம் வேதா.இலங்காதிலகம், உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு