வியாழன், 19 டிசம்பர், 2013

மணக்குடி ஆருத்ரா தரிசனம்

வெகு நாட்களாய் காணவில்லையே! என தேடினீர்களா?
போனிலும், மெயில் மூலமாகவும் போஸ்ட் போடவில்லையா? நலமா? என விசாரித்த  அன்பு வலை உலக நட்புகளுக்கு நன்றி.

இந்த முறை ஊர்களில் நெட் இல்லாமல் இருந்து விட்டேன்.  இணைய பயன்பாடு இல்லாமல் பழைய காலம் போல் வானொலி கேட்டுக் கொண்டு, உறவுகளின் இன்ப, துன்ப நிகழ்வுகளில் பங்கு கொண்டு   இருந்தேன்.

போஸ்ட் போட செய்திகள் நிறைய உள்ளன.  ஒன்று ஒன்றாய் போட வேண்டும்.

நேற்று, கூட்டம் இல்லாத - ஆருத்ரா தரிசனம் சமயத்தில் மட்டுமே திறந்து இருக்கும்- ஒரு கோவிலுக்கு சென்று வந்தோம்.

மபிலாடுதுறையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மணக்குடி என்ற கிராமத்தில் உள்ள அருள்மிகு சுந்தேரஸ்வரர் திருக்கோயிலுக்குப் போய் இருந்தோம்.

திருக்கோயிலின் கிழக்குவாயில்
1941க்கு பிறகு இந்தக் கோவிலுக்கு கும்பாபிஷேகமே ஆகவில்லை போலும்!
கோவிலின் நிலையைப் பார்த்தால் மனதுக்கு மிகவும் கஷ்டமாய் இருந்தது.

கோவில் குளம் மிக அழகாய் அல்லி மலர்கள் மலர்ந்து காணப்பட்டது. அழகிய படித்துறை உள்ளது. கிராமமக்கள் குளத்தை சுத்தமாக வைத்து இருக்கிறார்கள்.குளத்திற்கு தண்ணீர் வரும் வழிகள் அடைக்கப்படாமல் இருப்பதால் நிறைய தண்ணீர் இருக்கிறது குளத்தில்.
அழகிய படித்துறையுடன் கூடிய குளம்

அல்லி மலர்கள் நிறந்து இருக்கும் அழகிய திருக்குளம்

நாங்கள் போனபோது குருக்கள், கோவிலை சுத்தம் செய்பவர்கள், தென்னைமரத்தில்  இளநீர் பறிக்க வந்த ஆட்கள் மட்டும் இருந்தார்கள். இந்த கோவில் சிதிலம் அடைந்து பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் இந்தக்கோயிலுக்குரிய நடராசர் திருஉருவச்சிலை பக்கத்தில் உள்ள கருங்குயில்நாதன்பேட்டை, அருள்மிகு சக்திபுரீஸ்வரர் திருக்கோவிலில் பாதுகாப்பாக இருப்பதாக சொன்ன குருக்கள் இன்னும் சிறிது நேரத்தில் அங்கிருந்து நடராஜர் வருவார், இருந்து பார்த்து செல்லுங்கள்  என்றுசொல்லிப்போய் விட்டார். கோவில் திறந்து இருக்கிறதா ? என்று கேட்டால் திறந்து இருக்கிறது என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். ஆனால் உள்ளே போனால் ஏமாற்றம். அம்மன் , சுவாமி சன்னதி பூட்டி இருந்தது.  மற்ற சன்னதிகள் கதவு இல்லாததால் திறந்து இருந்தது . பார்த்து விட்டோம். நாங்கள் காத்து இருக்க வேண்டுமே என்று நினைத்து அவர் சொன்ன சகதிபுரீஸ்வரர் கோவிலுக்கே போய் பார்த்துவிடலாம் என்று  போனபோது நடராசர்  வேறு பாதை வழியாக சுந்ரேஸ்வரர் கோவிலுக்கு வந்து விட்டார்.

 சக்திபுரீஸ்வரர் கோவிலைக் குருக்கள் திறந்து காண்பித்தார். அதுவும் மிகவும் பழுது அடைந்து இருந்தது. அதை அடுத்த முறை பகிர்கிறேன்
.
பின் மறுபடியும் சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வந்தோம்.  தனியாக யாரும் இல்லாமல்  சுவாமியும், அம்பாளும் இப்போது அங்கே எழுந்தருளி இருந்தார்கள். எங்களுக்கே எங்களுக்கு மட்டும் காட்சி கொடுத்த மாதிரி இருந்தார்கள். நன்கு தரிசனம் செய்து விட்டு வந்தோம்.
நடராசரும் சிவகாமியும்
நடராசப்பெருமானின் திருவடிகளின் கீழே பஞ்சமுகவாத்தியம் வாசிக்கும்  உருவம்
பூதகணம்
அழகான நடராஜர்! அம்பாள்!  நடராஜரின்  திருவடி அருகில் இருபுறமும் அழகான சிவகணங்கள் இருந்தார்கள். ஒருவர் பஞ்சமுகவாத்தியம் வாசித்தார். இன்னொருவர் தாளம் வைத்து இருந்தார். பூமாலைகள் முதலிய அலங்காரங்கள் எதுவும் இல்லாதிருந்ததால் இவ்வுருவங்களைப் பார்க்கமுடிந்தது.

ஸ்வாமி சுற்றி வருவதற்காக கோவிலைச் சுற்றிலும் சுத்தம் செய்து இருந்தார்கள்.  சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி தவிர மற்றவை கதவுகள் இல்லாமல் இருந்ததால் நன்கு தரிசனம் செய்ய முடிந்தது. இரண்டு சுற்று மதில் சுவர்கள் உள்ள (உள்பிரகாரம்,வெளிப் பிரகாரம்) அழகிய கோவில், கவனிப்பு இல்லாமல் இருக்கிறது.


திருமடைப்பள்ளியின் இடிந்த தோற்றம்


உள்பிரகாரம், வெளிப் பிரகாரம் நடுவில் நடராஜர் சுற்றி வர சுத்தம் செய்து இருக்கிறார்கள்.


இரண்டு சுற்று மதிலில்  ஒரு சுற்று மதில் உடைந்த கோலம்

நடராஜர் விமானம் கலசம் இழந்த நிலையில்

அருள்மிகு செளந்திரநாயகி அம்பாள் சந்நிதி
அருள்மிகு சுந்தரேஸ்வரர் சந்நிதி
தேவார மூவர்
மகாவிஷ்ணு, முருகன்,வள்ளி, தெய்வானை

இலக்குமி
தக்ஷ்ணாமூர்த்தி
பைரவரும் சூரியனும
பழங் கல்வெட்டு
சண்டேசுவரர்
புதிய கல்வெட்டு
கோவிலில் உள்ள சிறப்பை மக்களுக்கு எடுத்துச் சொன்னால் கோவிலுக்குக் கூட்டம் வரும்  ( இப்போது எல்லாம் எல்லாக் கோவில்களிலும்  அதன் சிறப்பை விளம்பரம் செய்கிறார்கள்) இந்த  தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான கோவிலின் பெருமை என்னவென்றால் ,இது பார்வதியை மணக்க இறைவன் கயிலையிலிருந்து வந்து தங்கிய இடம். அதனால்தான்  தான் மணக்குடி என்று இவ்வூருக்குப் பெயர் போலும்!  கன்னிப் பெண்கள் நல்ல கணவர் கிடைக்க வழிபட வேண்டிய இடம் என்று சொல்கிறார்கள் .


கோவிலில் இறைவனைத் தரிசனம் செய்து வீட்டுக்கு வந்த பின் அவருக்கு  பிடித்த களி படைத்து  களிப்பு அடைந்தேன்!

வாழக வளமுடன்
------------------



37 கருத்துகள்:

  1. ரொம்ப நாட்களுக்குப்பிறகு உங்களை இங்கு பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி! ஆன்மீகப்பயணத்துடன் ஆரம்பித்திருக்கிறீர்கள்!
    புகைப்படங்களெல்லாம் சிறப்பாக இருக்கின்றன! மணக்குடி நன்னிலம் அருகே கூட ஒன்று இருக்கிறது. அது வேறு என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. சிறிது இடைவெளி விட்டு வந்தாலும் சிறப்பான பகிர்வுடன் ஆரம்பம்... வாழ்த்துக்கள்... படங்கள் அனைத்தும் மிகவும் அருமை...

    பதிலளிநீக்கு
  3. அழகான நடராஜர்! அம்பாள்! நடராஜரின் திருவடி அருகில் இருபுறமும் அழகான சிவகணங்கள் இருந்தார்கள். ஒருவர் பஞ்சமுகவாத்தியம் வாசித்தார். இன்னொருவர் தாளம் வைத்து இருந்தார். பூமாலைகள் முதலிய அலங்காரங்கள் எதுவும் இல்லாதிருந்ததால் இவ்வுருவங்களைப் பார்க்கமுடிந்தது.

    அழகான உருவச்சிலைகள் காட்சிக்கு பாராட்டுக்கள்..!

    களிபடைத்து களிப்படைந்த களிமொழிகளுக்கு வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  4. நாங்களும் தரிசித்தோம்
    படங்களுடன் பகிர்வு அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. நல்ல தரிசனம் எங்களுக்கும்
    உங்களால் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி!
    களியும் (வரப்)பிரசாதமாய் கிடைத்தது
    இரட்டிப்புச் சந்தோஷமே சகோதரி!

    இத்தனை சிறப்பு வாய்ந்த கோயில்கள்
    சிதிலமடைந்த நிலையில் காண மனசு சங்கடமாக இருக்கிறது...
    என்ன செய்வது. வாயிற்கும் வயிற்றுக்கும் இருக்கிற சண்டையில்
    வரம் தருவோன் அரண்மனை பராமரிக்க முடியாமல் கிடக்கிறது போலும்...:(

    அருமையான படங்களுடன் சிறப்புப் பகிர்வுக்கு
    மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

    த ம.2

    பதிலளிநீக்கு
  6. நல்ல பழைய கோவிலாய்த் தெரிகிறது. அவ்வளவாகக் கூட்டம் வராததாலேயே படமெடுக்க அனுமதித்திருக்கிறார்கள் போல! படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  7. அழகான படங்கள். அற்புதமான தகவல்கள். ருசியான களி. களிப்புடன் படித்தேன், ரஸித்தேன்.;)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் மீண்டும் வலையுலா வருவது மகிழ்ச்சி கோமதி. கோவில் தரிசனத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    அருமையான விளக்கம் மிக அழகான படங்கள். பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. வருக வருக.
    படங்கள் பிரமாதம்.
    இது அரசாங்க பராமரிப்பில் இருக்கும் கோவிலா ?

    பதிலளிநீக்கு
  11. அருமையான படங்களுடன் சிறப்பான பகிர்வும்மா...

    நல்ல தரிசனம்...

    களியும் பிரமாதம்.. எடுத்துக் கொண்டேன்..

    பதிலளிநீக்கு
  12. புது ஆலயங்களை கட்டுவதை விட பழைய ஆலயங்களை பாராமரிப்பதே சிறந்தது என காஞ்சி மகான் கூரியுள்லார். இது போன்ற கிராமக் கோயில்கள்கள் புதுப்பிக்க அந்த இறைவன் கருணை புரிய வேண்டும்.

    நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  13. படங்களும் பகிர்வும் மிக அருமை. அல்லிக்குளமும் சிற்பங்களும் கவருகின்றன. லைட் பாக்ஸில் பெரிய அளவில் அனைத்தையும் இரசித்தேன். மூடிய சன்னதிக் கதவுகள் பராமரிப்பின்மையைக் காட்டுகின்றன.
    பழமை வாய்ந்த இக்கோவில்களை அறநிலைத் துறை கவனிப்பதில்லை. சக்திபுரீஸ்வரர் கோவில் குறித்த பகிர்வுக்குக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  14. வாங்க மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
    எனக்கும் உங்கள் வரவு மகிழ்ச்சியை அளிக்கிறது.
    நன்னிலம் அருகில் ஒரு மணக்குடி இருக்கா! எனக்கு தெரியவில்லை.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வாங்க ரமணி சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வாங்க இளமதி, வாழ்க வளமுடன்.
    //வாயிற்கும் வயிற்றுக்கும் இருக்கிற சண்டையில்
    வரம் தருவோன் அரண்மனை பராமரிக்க முடியாமல் கிடக்கிறது போலும்...://
    கோவில்களுக்கு உள்ள நிலங்களில் இருந்து வருமானம் வந்தாலே கோவிலை நன்கு பராமரிக்கலாம்.

    மக்கள் தனி தனியாக கோவில் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள் இளம்தி. நாளும் புது புது கோவில்கள் வந்துக் கொண்டு இருக்கிறது.
    பழைய கோவில்களை பராமரிக்க உதவினலே போதும்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வாங்க ஸ்ரீராம், வாழ்கவளமுடன்.
    மிகவும் பழைய கோவில்தான்.
    கோவிலில் யாரும் கிடையாது. நாங்கள் இருவர் மட்டும் தான் இருந்தோம். சாமியை இறக்கி வைத்து விட்டு அவர்களும் எங்கோ போய் விட்டார்கள். அதனால் தான் படம் எடுக்க முடிந்தது.
    தென்னை மரத்தில் இளநீர் பறிப்பவர்கள் மட்டுமே இருந்தார்கள்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    பதிவை ரஸித்து படித்து, களியை ருசித்து பாராட்டியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
    பதிவுலகத்திற்கு அடிக்கடி விடுமுறை விடும் படி ஆகி விடுகிறது.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், மகிழ்ச்சி, நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வாங்க ரூபன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வாங்க அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவேற்புக்கு மகிழ்ச்சி.
    படங்களை பாராட்டியதற்கு நன்றி.
    தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான கோவில்.

    பதிலளிநீக்கு
  24. வாங்க ஆதி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு
  25. வாங்க முருகானந்தம் சுப்பிரமணியன், வாழ்க வளமுடன்.

    //புது ஆலயங்களை கட்டுவதை விட பழைய ஆலயங்களை பாராமரிப்பதே சிறந்தது என காஞ்சி மகான் கூரியுள்லார்.//

    மகான்களின் அறிவுரைகளை கேட்டு நடந்தால் நல்லது.

    புதிது புதிதாக கோவில்கள் வந்து கொண்டே இருக்கிறது. அதில் மணி கணக்கில் வரிசையில் நின்று இறைவனை பார்க்கிறார்கள்.
    இது போன்ற கோவில்களில் உள்ளூர் மனிதர்களே இல்லை.
    அவர்களை அவர் தான் வரவழைக்க வேண்டும்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    படங்களை பெரிது செய்து பார்த்தமைக்கு நன்றி.
    சிலருக்கு படம் பெரிதாக போட்டால்
    லோட் ஆக மாட்டேன் என்கிறது என்கிறார்கள்.
    அதனால் தான் வேண்டும் என்றால் பெரிதாக்கி பார்த்துக் கொள்ளுவது போல் போட்டேன்.

    இந்த கோவில் தர்மபுரஆதீனத்திற்கு
    சொந்தமானது ராமலக்ஷமி.

    உங்கள் உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கு நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  27. இம்மாதிரி பராமரிக்காமல் இருப்பதற்கு ஆதீனம் அரசிடமே ஒப்படைத்து விடலாமே. முதல்வர் அம்மையார் கோயில் பராமரிப்புகளில் ஈடுபாடு காட்டுவதாக அவ்வப்போது செய்திகள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  28. வாங்க ஜி.எம். பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. கிராமமக்கள் குளத்தை சுத்தமாக வைத்து இருக்கிறார்கள்.குளத்திற்கு தண்ணீர் வரும் வழிகள் அடைக்கப்படாமல் இருப்பதால் நிறைய தண்ணீர் இருக்கிறது குளத்தில்.//

    கோயிலின் நிலைகண்டு மனம் வருந்தினாலும் குளத்தின் நிலை மகிழ்வளித்தது! எத்தனையோ பழமை வாய்ந்த கோயில்கள் இதுபோன்ற நிலையில்! அருமையான படங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! என் வலைப்பூவில் ஓவியக் கவிதை பகிர்ந்துள்ளேன்!

    பதிலளிநீக்கு
  30. நீண்ட நாட்களின் பின் தங்களின் சிறப்பான பகிர்வினைக் கண்டு
    மகிழ்ந்தேன் .ஆரம்பமே ஆலய தரிசனத்துடன் பகிரப்பட்டுள்ளது .
    வாழ்த்துக்கள் தோழி தொடர்ந்தும் தங்களின் ஆக்கங்கள் மலரட்டும் .

    பதிலளிநீக்கு
  31. வாங்க அம்பாளடியாள், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி.
    தொடர்ந்து எழுத உற்சாகப்படுத்துவதற்கு மிகவும் நன்றி, மகிழ்ச்சி.
    வாழ்த்துக்களுக்கு நன்றி.
    நீங்களும் தொடர்ந்து வந்தால் மகிழ்வேன்.

    பதிலளிநீக்கு
  32. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு - கோவில் தரிசனம் மற்றும் படங்கள் என அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  33. வாங்க வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    இன்று ஒரு பதிவு போட்டு இருக்கிறேன்.
    நாளை முதல் வலைச்சரப் பொறுப்பு .அங்கும் வந்து கருத்து தெரிவியுங்கள்.

    பதிலளிநீக்கு
  34. பலகோவில்களில் இதுபோல பாதுகாப்பிற்காக எல்லா உற்சவ மூர்த்திகளையும் ஒரே சந்நிதியில் எழுந்தருளப் பண்ணுகிறார்கள்.
    மணக்குடி கோவில் குளம் வெகு அழகு!

    பதிலளிநீக்கு
  35. வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
  36. மணக்குடி தர்சனம் பெற்றுக்கொண்டோம்.

    வரலாறுடன் சிறப்பாக தந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு