சிங்காரத் தோட்டத்திற்கு வந்த விருந்தினர் என்று முன்பு போட்ட பதிவில் அணில் படங்கள் பகிர்ந்து இருந்தேன்.
”அங்குள்ள அணிலுக்கு முதுகில் மூன்று கோடுகள் இல்லைதானே!” என்று கேட்டு இருந்தார் ஜீவி சார்:
//அங்கைய அணில்களுக்கு முதுகில் மூன்று கோடுகள் இல்லை, தானே? நான் பார்த்ததை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக கேட்கிறேன். கீரிப்பிள்ளை மாதிரி தண்டியான அடர்த்தியான வால்.//
ஜீவி சார் கேள்விக்கு வருண் இப்படி பதில் சொல்லி இருந்தார்:
//இந்த ஊர் அணில்கள் கொஞ்சம் வேறு வகை. கோடுகள் இருக்கா என்னனு தெரியவில்லை. நம்ம ஊர் அணிலில் தெரிவதுபோல பளிச்சுனு கோடுகள் தெரியாது. கவனிச்சுப் பார்த்தால் இருந்தாலும் இருக்கும். பெரியவைகளாக நல்லா ஹெல்த்தியாகவும் இருக்கும். தக்காளிச்செடியெல்லாம் வளர்த்தால் அணிலுக்குப் போக மிச்சம் ஏதாவது இருந்தால்தான் உங்களுக்கு தக்காளிப் பழம் கிடைக்கும். :) //
இரண்டாவது பின்னூட்டத்தில் வருண் தங்கள் தோட்டத்தில் அணில் படுத்தும் பாட்டை சொல்கிறார் பாருங்கள்:
//அணில், முயல் எல்லாம் எங்க வீட்டிலும் டேராப் போடுவாங்க. எங்கெ மேலே ரொம்பப் பிரியமாவும், உரிமையுடனும் நடந்துக்குவாங்க. :)நம்ம ஊரில் பிரிய்ங்கெட்ட பொழப்புனு ஏதோ சொல்லுவாங்க இல்லை. அதெல்லாம் ஞாபகப்படுத்துவாங்க. :)
என்ன நம்ம ஏதாவது ஒரு ப்ளான் பண்ணினால், அணில்களும், முயல்களும் வேற ஒரு ப்ளான் பண்ணி நம்ம ப்ளானை ஒப்பேத்திவிடும். நம்ம வீட்டில் நம்ம குடியிருக்கிற நேரத்தைவிட அவங்கதான் அதிகம் நேரம் இருக்காங்க? என்னவோ போங்கப்பானு அணிலின் கோணத்தில் இருந்து யோசித்து நல்லாயிருனு வாழ்த்திட்டு, போயிடுவேன். :) //
என்று சொல்லி விட்டு சின்ன அணிலை பார்த்தநினைவு இல்லை
தேடிப் பிடித்து போடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்:
//நான் இதுவரை அந்த வகை அணில் இங்கே பார்த்ததாக ஞாபகம் இல்லைங்க. முடிந்தால் தேடிப்பிடித்து ஒரு படம் பிடிச்சுப் போடுங்க! :)//
வருண் இப்படி சின்ன அணிலைப் பார்க்க விருப்பப்பட்டு கேட்கும்போது போடாமல் இருக்க முடியுமா ? அதனால் நேயர் விருப்பம் நிறைவேற்றப்பட்டது. மருமகள் தேடி எடுத்து கொடுத்து உதவி செய்தாள். மருமகள் தேடி கொடுத்ததற்கு நன்றிசொல்லி உங்களுக்காக பதிவு போட்டு விட்டேன். ஜீவி சாருக்காக்வும் தான்.
கோடுகள் உள்ள சின்ன அணில்



கோடுகள் இல்லாத பெரிய அணில்


ஜீவி சார் சொல்வது போல் கீரிப்பிள்ளை மாதிரி பெரிய அணிலும் இங்கு இருக்கிறது. அது இன்னும் அகப்படவில்லை காமிராவிற்குள்.
அணில் ராமனுக்கு பாலம் கட்ட உதவியதால் ராமர் அதை கையில் அன்பாய் எடுத்து முதுகைத் தடவி விட்டதால் அந்த மூன்று கோடுகள் என்று பெரியவர்கள் ராமர் கதை சொல்லும் போது சொல்வார்கள்.
எல்லா உயிர்களையும் தன் அன்பெனும் குடைக்குள் காப்பாற்றிய
கண்ணனுக்கு இன்று பிறந்த நாள் , அனைவருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
”அங்குள்ள அணிலுக்கு முதுகில் மூன்று கோடுகள் இல்லைதானே!” என்று கேட்டு இருந்தார் ஜீவி சார்:
//அங்கைய அணில்களுக்கு முதுகில் மூன்று கோடுகள் இல்லை, தானே? நான் பார்த்ததை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக கேட்கிறேன். கீரிப்பிள்ளை மாதிரி தண்டியான அடர்த்தியான வால்.//
ஜீவி சார் கேள்விக்கு வருண் இப்படி பதில் சொல்லி இருந்தார்:
//இந்த ஊர் அணில்கள் கொஞ்சம் வேறு வகை. கோடுகள் இருக்கா என்னனு தெரியவில்லை. நம்ம ஊர் அணிலில் தெரிவதுபோல பளிச்சுனு கோடுகள் தெரியாது. கவனிச்சுப் பார்த்தால் இருந்தாலும் இருக்கும். பெரியவைகளாக நல்லா ஹெல்த்தியாகவும் இருக்கும். தக்காளிச்செடியெல்லாம் வளர்த்தால் அணிலுக்குப் போக மிச்சம் ஏதாவது இருந்தால்தான் உங்களுக்கு தக்காளிப் பழம் கிடைக்கும். :) //
இரண்டாவது பின்னூட்டத்தில் வருண் தங்கள் தோட்டத்தில் அணில் படுத்தும் பாட்டை சொல்கிறார் பாருங்கள்:
//அணில், முயல் எல்லாம் எங்க வீட்டிலும் டேராப் போடுவாங்க. எங்கெ மேலே ரொம்பப் பிரியமாவும், உரிமையுடனும் நடந்துக்குவாங்க. :)நம்ம ஊரில் பிரிய்ங்கெட்ட பொழப்புனு ஏதோ சொல்லுவாங்க இல்லை. அதெல்லாம் ஞாபகப்படுத்துவாங்க. :)
என்ன நம்ம ஏதாவது ஒரு ப்ளான் பண்ணினால், அணில்களும், முயல்களும் வேற ஒரு ப்ளான் பண்ணி நம்ம ப்ளானை ஒப்பேத்திவிடும். நம்ம வீட்டில் நம்ம குடியிருக்கிற நேரத்தைவிட அவங்கதான் அதிகம் நேரம் இருக்காங்க? என்னவோ போங்கப்பானு அணிலின் கோணத்தில் இருந்து யோசித்து நல்லாயிருனு வாழ்த்திட்டு, போயிடுவேன். :) //
என்று சொல்லி விட்டு சின்ன அணிலை பார்த்தநினைவு இல்லை
தேடிப் பிடித்து போடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்:
//நான் இதுவரை அந்த வகை அணில் இங்கே பார்த்ததாக ஞாபகம் இல்லைங்க. முடிந்தால் தேடிப்பிடித்து ஒரு படம் பிடிச்சுப் போடுங்க! :)//
வருண் இப்படி சின்ன அணிலைப் பார்க்க விருப்பப்பட்டு கேட்கும்போது போடாமல் இருக்க முடியுமா ? அதனால் நேயர் விருப்பம் நிறைவேற்றப்பட்டது. மருமகள் தேடி எடுத்து கொடுத்து உதவி செய்தாள். மருமகள் தேடி கொடுத்ததற்கு நன்றிசொல்லி உங்களுக்காக பதிவு போட்டு விட்டேன். ஜீவி சாருக்காக்வும் தான்.
கோடுகள் உள்ள சின்ன அணில்
கோடுகள் இல்லாத பெரிய அணில்


ஜீவி சார் சொல்வது போல் கீரிப்பிள்ளை மாதிரி பெரிய அணிலும் இங்கு இருக்கிறது. அது இன்னும் அகப்படவில்லை காமிராவிற்குள்.
அணில் ராமனுக்கு பாலம் கட்ட உதவியதால் ராமர் அதை கையில் அன்பாய் எடுத்து முதுகைத் தடவி விட்டதால் அந்த மூன்று கோடுகள் என்று பெரியவர்கள் ராமர் கதை சொல்லும் போது சொல்வார்கள்.
எல்லா உயிர்களையும் தன் அன்பெனும் குடைக்குள் காப்பாற்றிய
கண்ணனுக்கு இன்று பிறந்த நாள் , அனைவருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
நன்றிங்க. நான் இப்போத்தான் வடஅமெரிக்காவில் வாழும் இந்த "மூனுகோடுள்ள சிறிய அணில்" பார்க்கிறேன். :)
பதிலளிநீக்கு***கண்ணனுக்கு இன்று பிறந்த நாள் , அனைவருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.***
பதிலளிநீக்குஓ, கிருஷ்ண ஜெயந்தியா? கண்ணன் பொறந்தநாள் னு நீங்க சொன்னதும் ஏதோ உங்க பேரன் பெயர் கண்ணனோனு நினைத்தேன். அப்புறம்தான் கூகில் செய்து "கண்ணன் பிறந்தநாளை"ப் புரிஞ்சுக்கிட்டேன் :)
இந்த வாரம்.. லேபர் டே வீக் எண்ட் வரப்போது.. அடுத்தவாரம் அமெரிக்கன் ஃபுட்பால் சீசன் ஸ்டாட் ஆகப்போதுனு இவைகளில் "கலந்துவிட்டதால்" நம்ம கிருஷ்ண ஜெயந்தியை இந்த மாதம் வரும்னு மறந்துட்டேன். :)
சரி, உங்க வாக்கியத்தைத் கடன் வாங்கி, "நம்மால் முடிந்த உதவியைப் பலருக்கும் செய்து அனைவரும் வாழுவோம் வளமாக!" (அணில், முயல், மான் எல்லாரும்தான்) னு நானும் வாழ்த்திடுறேன் என் பங்குக்கு! :)
நன்றி! :)
அணிலையும், வண்ணத்து பூச்சிக்களையும், வெட்டிக்கிளிகளையும், மலர்களையும், அழகான தோட்டத்தையும் படம் பிடித்துக்காட்டி என்னை வழக்கத்துக்கு அதிகமாக பேச வச்சுட்டீங்கனு நெனைக்கிறேன். :)
வாங்க வருண், வாழ்க வளமுடன். உங்கள் விருப்பத்தால் தான் சீக்கிரம் தேடி அணில் படத்தை போட முடிந்தது. அதற்கு உங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குகண்ணன் பிறந்தநாளை கூகிள் ஆண்டவர் மூலம் தெரிந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.
வார இறுதியில் விடுமுறை என்றால் உங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சி தானே!
//"நம்மால் முடிந்த உதவியைப் பலருக்கும் செய்து அனைவரும் வாழுவோம் வளமாக!" (அணில், முயல், மான் எல்லாரும்தான்) நானும் வாழ்த்திடுறேன் என் பங்குக்கு! :)//
நல்ல கருத்தை சொன்னீர்கள், நம்மால் முடிந்த உதவிகளை செய்து வாழ்வோம் வளமாக. நீங்களும் வளமாக வாழுங்கள்.
நிறைய பேசியது மகிழ்ச்சி, நன்றி.
அணில் படங்களும் விளக்கங்களும் அருமை.
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்.
அன்புடன்
கோபாலகிருஷ்ணன்
வாங்க கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன். அதிகாலை(இரவு) இரண்டு மணி மேல் ஆகிறது! தூங்கவில்லையா?
பதிலளிநீக்குஇந்த நேரத்திலேயும் வந்து கருத்துக்களும், வாழ்த்துக்களும் சொன்னதுற்கு நன்றி சார்.
அன்புள்ள மேடம், வணக்கம்.
பதிலளிநீக்குகோகுலாஷ்டமியன்று கோபாலகிருஷ்ணனே தூங்கி விட்டால் எப்படி? நாளைய தினம் புதிதாய் குழந்தையாய் அவதரிக்க வேண்டாமா?
அதன் பிறகு தூளியில் / தொட்டியில் தூங்கினால் போச்சு என்று தான்.
[பல இரவுகள் எனக்கு என்னவோ தூக்கம் வருவது இல்லை மேடம். விடியற்காலம் தான் தூங்க ஆரம்பித்து பிறகு காலை 10 மணிக்கு மேல் எழுவதே வழக்கமாகி விட்டது. ;))))) I AM ENJOYING A VERY VERY HAPPY RETIRED LIFE.]
கோடு போட்ட அணிலை எப்படியோ கண்டு பிடித்து ஒரு பதிவு போட்டு அசத்தி விட்டீர்கள்.
பதிலளிநீக்குநானும் இங்கே குண்டு அணில்களைத் தான் பார்க்கிறேன்.ராமரால் ஆசீர்வதிக்கப் பட்டது இந்திய அணில்கள் என்றே எண்ணியிருந்ன்தே. அப்படி ஒன்றுமில்லை என்று புரிந்தது.
நன்றி.
என்னவொரு அழகான அணில்!!!!
பதிலளிநீக்குகண்ணன் பிறந்துட்டானா?
எங்கூரில் மூணுநாளுக்கு முன்பே பிரசவ வலி கண்டு புள்ளை பொறந்தாச்சு.
எதுன்னாலும் வீக் எண்ட் ஆகத்தான் இருக்கணும் என்பது விதி. கூட்டம் வரவேணாமா ?
கோவிலில் கொண்டாடிட்டோம்.
இன்றைக்கு நம்ம வீட்டில் சின்ன் அளவில்:-)
தேங்காய் இனிப்பு அவல், ஸ்ரீகண்ட், பழங்கள் மட்டும்.
இனிய வாழ்த்து(க்)கள்.
தோட்டத்தின் குளுமையும்
பதிலளிநீக்குஅணிலின் சந்தோஷமும் தங்கள் பதிவின் மூலம்
எங்களுக்குள்ளும்..
பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
tha.ma 1
பதிலளிநீக்குவாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஇனிமையான இசையை கேட்டு கொண்டு இருந்தால் இரவு நல்ல தூக்கம் வரும் .
இன்று புதிதாக பிறந்தாய் எண்ணி மகிழ்ச்சியாக இருங்கள்.
ஒய்வுக் காலத்தை மகிழ்ச்சியாய் கழிப்பது அறிந்து மகிழ்ச்சி.
வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம், நீங்களும் இப்போது நியூஜெர்சி வந்து இருக்கிறீர்களா?
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக நன்றி.
வாங்க ரமணி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் மகிழ்வான பின்னூட்டத்திற்கும், தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி சார்.
வாங்க ரமணி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் மகிழ்வான பின்னூட்டத்திற்கும், தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி சார்.
வாங்க துளசி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்களும் இனிப்பு அவல் செய்து கண்ணனை வணங்கியாச்சா?
கண்ணன் முன்பே பிறந்து விட்டால் என்ன? எப்போது வேண்டும் என்றாலும் கடவுளை வணங்கலாம்.
இங்கு மருமகள் திரட்டுப்பால் செய்தாள், நான் தேங்காய் வெல்லம் போட்டு இனிப்பு அவல், செய்தேன். பால், தயிர், வெண்ணெய் வைத்து எளிமையாக கொண்டாடி விட்டோம்.
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
கோடுகள் உள்ள சின்ன அணில்அழகு..!
பதிலளிநீக்குஇனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள்..!
ஆஹா, கொஞ்சம் பிந்தி வந்ததுல அணிலைப் பற்றி இவ்வளவு பெரிய ஆராய்ச்சியே நடந்திருக்கிறதா? :-)
பதிலளிநீக்குஉங்க தோட்டத்திற்கு வரும் விருந்தினர்கள் அழகு; அதுவும் (கோடில்லாத பெரிய) அணில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டே உணவுண்ணும் விதம்... என்னா சாகசம்!! (’குரு’ படத்தில் கமல், இப்படித்தான் அந்தரத்தில் தொங்கிக் கொண்டே வைரக்கல்லைத் (அல்லது வேறு ஏதோ ஒன்று) திருடுவார்!! வேற எதுவுமே ஞாபகம் வரலையான்னு கோச்சுக்காதீங்க. என் டேஸ்ட் அவ்வளவுதான். :-) )
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்! பேரனோடு கொண்டாடியது சிறப்பாக இருந்திருக்கும்.
வாங்க ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் போன பதிவை படித்து விட்டு வாருங்கள் அதில் எங்கள் தோட்டத்திற்கு வந்த விருந்தினர்களின் படம், காணொளி எல்லாம் போட்டு இருக்கிறேன்.
பார்த்து விட்டு சொல்லுங்கள் பெரிய அணில் நிறைய சாகசம்செய்வார் அதில் .
பேரனுடன் இனிமையாக கிருஷ்ணஜெயந்தியை கொண்டாடினோம். மனதுக்கு நிறைவாக இருந்தது.
.
உங்கள் வரவுக்கும், கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளுக்கும் நன்றி.
//போன பதிவை படித்து விட்டு வாருங்கள்//
பதிலளிநீக்குஅங்குள்ள பூனை, வண்ணத்துப்பூச்சி, ப்ரேயிங் மேண்டிஸ் எல்லாத்துக்கும் சேர்த்துத்தான்க்கா இந்தப் பின்னூட்டம்!! :-)))
வாங்க ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபார்த்து விட்டுதான் இந்த பின்னூட்டமா? நன்றி நன்றி.
உங்கள் வருகைக்கு நன்றி.
அணில் படங்கள் அழகு. கோடுகள் இல்லாத அணில் ஒன்று இந்தப்பட வரிசையிலேயே இருக்கிறது போலவே...
பதிலளிநீக்குஇரண்டு நாட்கள் முன்பு அலுவலகத்தில் முக்கிய இடத்தில் ஏராளமான பஞ்சு போன்ற பொதிகள் நடுவே இரண்டு, மூன்று அணில் குஞ்சுகள்! அவற்றை அட்டைப் பெட்டியில் எடுத்து பத்திரமாக வேறு இடம் வைத்தோம்! இப்போது நினைக்கும்போது அவற்றைப் படம் பிடித்திருக்கலாம் என்று தோன்றுகிறது!
கண்ணன் வருவான்..கதை சொல்லுவான்..வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்..குழலிசைப்பான்..பாட்டெடுப்பான்..என்று நாங்களும் காத்திருக்கிறோம்! :)
வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅணில் படங்கள் கோடு உள்ளதும் கோடு இல்லாத பெரிய அணிலும் போட்டதுக்கு காரணம் அப்போது தான் சின்ன அணில் வித்தியாசமாய் தெரியும் என்பதால்.
ஆஹா! அணில் குஞ்சுகளை படம் பிடித்து இருக்கலாமே! எல்லோரும் தான் காமிரா வசதி உள்ள அலைபேசி வைத்து இருப்பீர்களே!
கண்ணன் வந்தான், கதைகள் சொன்னான், வண்ணமலர்களால் தொட்டிலை அலங்காரம் செய்தோம், பேரன் கிருஷ்ணர் அலங்காரத்தில் குழலிசைத்தான். ஆயர்பாடி மாளிகையில் பாட்டு பாடினான்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.
வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கோமதிம்மா:)! இந்த பிறந்த தினம் மகன் குடும்பத்தினருடன் சிறப்பாக, மறக்க இயலாததாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
பதிலளிநீக்குவாசகர் விருப்பத்தை அழகான படங்கள் எடுத்துப் பகிர்ந்து நிறைவேற்றி விட்டீர்கள். கோடில்லாத அணில் நானானி அவர்கள் பதிவில் பார்த்திருக்கிறேன்.
கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளும்!
@ ஸ்ரீராம்,
பதிலளிநீக்கு/காமிரா வசதி உள்ள அலைபேசி வைத்து இருப்பீர்களே!/
கவனிக்க:)!
பெரிய சந்தேகம் தீர்ந்தது.
பதிலளிநீக்குநான் அமெரிக்காவில் இருந்த பொழுது முதுகில் கோடுகளிட்ட அணில்களையே பார்க்காத பொழுது, அந்த நாட்டு அணில்கள் அப்படித்தான் இருக்குமோ என்று எண்ணியிருந்தேன். இப்பொழுது அந்த சந்தேகம் தீர்ந்தது. முனைப்புடன் செயல்பட்டு அந்த சந்தேகத்தைத் தீர்த்தமைக்கு நன்றி.
இரண்டு அணிலுடைய படங்களையும் போட்டு அசத்திவிட்டீர்கள்.
பதிலளிநீக்குகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.
அழகு அணிற்பிள்ளைகள்..
பதிலளிநீக்குஇந்த வருஷம் உங்கூட்டுக் கிருஷ்ணனுடன் அமர்க்களமா கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடியாச்சா.. கலக்குங்க :-))
மாறுபட்ட இரண்டு அணில்களின் படங்களும் உங்களின் பதிவும் அருமை
பதிலளிநீக்குவாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஇந்த முறை கண்ணன் பிறந்த நாள் சிறப்பாக மறக்க முடியாத பிறந்தநாள் தான்.
சின்ன அணிலை என் காமிரவில் தூரத்தில் தான் எடுக்க முடிந்தது. காமிரவை எடுத்துக் கொண்டு பக்கத்தில் போனால் ஓடி போய் விடுகிறது அப்பறம் மருமகள் தான் வேறு காமிராவில் நன்றாக ஜூம் செய்து எடுத்தாள் அதைஅன்று போடுவதற்கு தேட வேண்டியது ஆகி விட்டது.
அது தான் அடுத்த பதிவில் இடம் பெற்றது.
நானானி எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் இப்போது பதிவு எழுதுவதே இல்லையே! அவர்களை மிகவும் கேட்டதாகச் சொல்லுங்கள்.
உங்கள் வாழ்த்துக்களூக்கு நன்றி.
ராமலக்ஷ்மி, இனி ஸ்ரீராம் கவனமாய் இருப்பார் இப்படி ஏதாவது அற்புத காட்சி கிடைத்தால் விடமாட்டார் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குவாங்க ஜீவி சார், வாழ்க வ்ளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் கேட்டதும் அணீலை படம் எடுத்து வைத்து இருந்ததால் போட முடிந்தது. அன்றே போட்டு இருப்பேன். அந்த அணில் படத்தை எதில் சேமித்து வைத்தேன் என்றே தெரியவில்லை.உங்கள் வருகைக்கு நன்றி சார்.
வாங்க மாதெவி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வாங்க அமைதிச்சாரல், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅணிற்பிள்ளைகள் நம் ஊர் பக்கம் இப்படிதானே அதையும் பிள்ளை ஆக்கி பேசுவது, கேட்டு வெகு நாட்கள் ஆகி விட்டது. மீண்டும் நீங்கள் சொல்லி கேட்கும் போது மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது.
சின்ன கண்ணனுடன் கிருஷ்ணஜெயந்தி இறைவன் அருளால் நடந்தது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
மூணு கோடு போட்ட அணில் சென்னைல ,நாலு வளர்த்தோம் ...அவங்களே கொம்ஞ்ச நாள் இருந்திட்டு கொய்யா மரத்து கிட்ட போய்ட்டாங்க .இப்பவும் நிறைய பேர் இருக்காங்க .குட்டி poda சேப்டிக்கு வருவாங்க..அப்புறம் போவாங்க .அவங்கதான் நல்ல அழகு இங்கே யூகேவில் சிவப்பு மற்று க்ரே நிற அணிலார்கல்தான் ..:)பயமில்லாம கிட்ட வருவாங்க :))
பதிலளிநீக்கு...நி றைய நினைவுகளை கிளறி விட்டுட்டீங்க அக்கா .
and now for the birthday butter boy:))
many happy returns of the day kannan:)
....Angelin..
வாங்க ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅணிகள் யூகேவில் பக்கத்தில் வருகிறார்களா! பரவாயில்லையே ஜாலியாக விளையாடலாம்.
நாங்கள் முன்பு திருவெண்காட்டில் இருந்த போது எங்கள் வீட்டில் பரணில் வந்து குட்டி போட்டார்கள். தேங்காய் நார் படுக்கை அமைத்து சுகமாய் அதன் உள்ளே தூங்கும் குட்டிகள் அழகாய் இருக்கும் பார்கவே!
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும்நன்றி.
பதிலளிநீக்குஅணில் படங்களும் விளக்கங்களும் அருமை
அணில் பிள்ளையார் மிக அழகாக உள்ளார். படங்களும் அருமை.
பதிலளிநீக்குஇவை எவ்வளவு மனமகிழ்வு தரும் என்ற அனுபவம் ஊரில் இருந்தது.
மகிழ்ச்சி. இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வாங்க வேதா. இலங்கா திலகம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் ஊரில் இந்த அனுபவம் ஏற்பட்டு இருக்கிறதா! மகிழ்ச்சி.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
ஓ! நெறைய அணில் ஆராய்ச்சி நடந்துகிட்டிருக்கே ! அமெரிக்கா சுவாரஸ்யமாய் இருக்குன்னு சொல்லுங்க. இன்னும் நெறைய ஆராய்ச்சி பண்ணி எழுதுங்க. நான் அப்புறம் வந்து படிச்சுகிறேன்
பதிலளிநீக்குநன்றி
அழகோ அழகு . அணிலின் அழகு அது அமர்ந்திருப்பதிலே தான் இருக்கிறது. அது உணவு உண்பதும் அழகுதான்
பதிலளிநீக்குவாங்க கபீரன்பன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.அமெரிக்கா பேரனால் மகிழ்ச்சி. இயற்கையால், மற்றும் நேரம் கிடைக்கிறது இறைவன் படைத்த இந்த படைப்புகளை ரசிக்க சுவராஸ்யமாய் பொழுது போகிறது.
உங்கள் வரவுக்கு நன்றி.
வாங்க சந்திரகெளரி, வாழ்க வளமுடன்.அழகை ரசித்து கருத்து அளித்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஅணில்கள் மிகவும் அழகு!
பதிலளிநீக்குவாங்க ஹேமா,வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
அணில்களை நாமும் இங்கு வெளிநாட்டில் ஆளுயரக் கூட்டில் வீட்டிற்குள் வைத்து வளர்த்தோம். ஓடியாடி அவை விளையாடுவதை நாள் முழுதும் பார்த்தாலும் சலிக்காது.
பதிலளிநீக்குஉங்கள் படத்தில் இருக்கும் அணில் பிள்ளைகளும் அழகோஅழகுதான் சகோதரி!
பகிர்வினுக்கு மிக்க நன்றி!
வாழ்த்துக்கள்!
வாங்க இளமதி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவீட்டில் வளர்த்தீர்களா? இப்போது இல்லையா?
அணில் பிள்ளைகள் ஓடி ,ஆடி விளையாடுவது மிக அருமையாக இருக்குமே! நன்றாக பழகி விட்டால் நாம் கையில் வைத்துக் கொண்டு உணவைக் கொடுத்தால் நம் கையில் வந்து வாங்கி போகுமே!
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி இளமதி.
அணில்கள் மிகவும் அழகு!
பதிலளிநீக்குவாங்க கே.பி.ஜனா சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
அணில்களைப் பார்க்க தாமதமாக வந்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஎன்ன சொன்னாலும் மூணு கோடுள்ள அணில்தான் அழகு, இல்லையா?
பேரனுடன் அமெரிக்காவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனந்தமாக இருந்துவிட்டு வாருங்கள்.
வாழ்த்துகள்!
வாங்க ரஞ்சனி நாராயணன்,
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
பதிவர் சந்திப்புக்கு சென்னை பயணம், பதிவுகள், நடுவர் பொறுப்பு என்று பன்முக வித்தகி அல்லவா நீங்கள்!
உங்களை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. இத்தனை வேலைகளுடன் பதிவுகளுக்கு கருத்து சொல்வது மகிழ்ச்சியே ! தாமதாமாக வந்தாலும் பரவாயில்லை.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
இன்றுதான் வரமுடிந்தது கோமதி. மகள் வீட்டில் இருவகை அணில்களையும் பார்த்து இருக்கிறேன். அவைகள் தானியன் எடுக்கவந்தால் பறவைகள் ஓடிவிடும். சிலசமயம் ஒற்றுமையாக இருக்கும்.
பதிலளிநீக்குவெகு அழகாகப் படம் எடுத்திருக்கிறீர்கள். உங்கள் மருமகளுக்கும் வாழ்த்துகள்.
அருமையான படங்கள்.அழகான பகிர்வு.
பதிலளிநீக்குவாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஎப்போது வேண்டுமென்றாலும் உங்களுக்கு முடிந்த போது வந்து கருத்து சொன்னால் மகிழ்ச்சிதான் அக்கா.
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வாங்க ஆசியா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.