வெள்ளி, 29 மார்ச், 2013

கடல் அழகு





                       
கடல் அழகு எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. கடல் ஒரு அலுக்காத பொழுது போக்கு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும். கடல் அற்புதமான  இதம் தரும் மருந்து. மனதை மகிழச் செய்யும் குழந்தை. அவர் அவர் மனநிலைக்கு ஏற்ற இடம் கடல் தான்.

இந்தத் கோடை வெயிலுக்கு இதம் தரும் இடம். காசு செலவில்லாமல்
காற்றை நாம் எவ்வளவு வேண்டும் என்றாலும் வாங்கி வரலாம், காற்று
வாங்கப் போய் கவிதையும் வாங்கி வரலாம் என்று கவிஞர்களும் பாடி
இருக்கிறார்கள். வெயில் காலத்தில் கடற்கரை  இருக்கும் ஊரில்
உள்ளவர்கள் எல்லாம்  மாலை நேரம் அங்கு கூட ஆரம்பித்து
விடுவார்கள். சுகமான காற்று வாங்கி மாலைப் பொழுதை மகிழ்ச்சியாகக்
களிப்பார்கள். கடலைப்பார்த்தவுடன் சிலருக்கு கவிதை, பாட்டு எல்லாம் வருகிறது. எனக்குக் கடலை ரசிக்கத் தெரியும், அதைக் கண்டு குதூகலிக்கத் தெரியும்.   இதில்  பாரதியின் பாடலையும், புகழ்பெற்ற  எழுத்தாளர் எழுதிய கதையில் வரும் ஒரு பெண்  பாத்திரம் கடலில் போகும் போது பாடிய பாடலையும் பகிர்ந்து இருக்கிறேன்.
 
பாரதி கடல் நீர் ஆவியாகி மழை பொழிந்தால் நல்லது என்கிறார்.
மக்கள், பறவைகள்  பகல் பொழுதில் வெயிலின் கொடுமையால்
படும் துன்பம், குறைய இன்ப மழையை அழைத்துப் பாடுகிறார். நாமும் அவருடன் சேர்ந்து இன்ப மழையை அழைத்துப் பாடுவோம்.

//வெம்மை மிகுந்த பிரதேசங்களிலிருந்து வெம்மைகுன்றிய
     பிரதேசங்களுக்கு காற்று ஓடி வருகிறது.
அங்ஙனம் ஓடி வரும்போது காற்று மேகங்களையும் ஓட்டிக்
     கொண்டு வருகிறது.
இவ்வண்ணம் நமக்கு வரும் மழை  கடற்பாரிசங்களிலிருந்தே
     வருகின்றது.
காற்றே , உயிர்க்கடலிலிருந்து எங்களுக்கு நிறைய உயிர்
     மழை கொண்டு வா.
உனக்குத் தூபதீபங்கள் ஏற்றி வைக்கிறோம்.
வருணா, இந்திரா, நீவிர் வாழ்க
இப்போது நல்ல மழை பெய்ய்யும்படி அருள் புரிய வேண்டும்.
எங்களுடைய புலங்களெல்லாம் காய்ந்து போய் விட்டன்.
சூட்டின் மிகுதியால் எங்கள் குழந்தைகளுக்கும் கன்று
     காலிகளுக்கும் நோய் வருகிறது. அதனை மாற்றியருள
     வேண்டும்.
பகல்நேரங்களிலே அனல் பொறுக்க முடியவில்லை
மனம்” ஹா ஹா” வென்று பறக்கிறது.
பறவைகளெல்லாம் வாட்டமெய்தி நிழலுக்காகப்
    பொந்துகளில் மறைந்து கிடக்கின்றன.
பலதினங்களாக, மாலை தோறும் மேகங்கள் வந்து
    கூடுகின்றன.
மேக மூட்டத்தால் காற்று நின்றுபோய்,ஓரிலைகூட
     அசையாமல்,புழுக்கம் கொடிதாக இருக்கிறது.
சிறிதுபொழுது கழிந்தவுடன் பெரிய காற்றுக்கள் வந்து
     மேகங்களை அடித்துத் துரத்திக் கொண்டு போகின்றன.
இப்படிப் பல நாட்களாக ஏமாந்து போகிறோம்.
இந்திரா, வருணா, அர்யமா, பகா, மித்திரா, உங்கள்
     கருணையைப் பாடுகிறேன்.
எங்கள் தாபமெல்லாந் தீர்ந்து உலகம் தழைக்குமாறு
 இன்ப மழை பெய்தல் வேண்டும்.//

 --இவை கடலை பார்த்தவுடன்  பாரதிக்கு தோன்றும் எண்ணம்.

அவர் அவர் மனநிலைக்கு ஏற்ற இடம் கடல் தான் என்று முன்பு
சொன்னது போல் ஒரு மங்கைக்கு இந்த கடலைப் பார்த்தவுடன் இப்படி
மனது பொங்கிப் பாடுகிறாள்.- யார் என்று சொல்லுங்களேன்!

//அவளுடைய  கானத்தைக் கேட்பதற்காகவே கடலும் அலை அடங்கி
ஓய்ந்திருந்தது போலும்! அதற்காகவே காற்றும் வீசி அடிக்காமல் மெள்ள
மெள்ள தவழ்ந்தது போலும்! தூரத்தில் தெரிந்த காட்டு மரங்களுமிலை
அசையாமல் நின்று அவளுடைய கானத்தைக் கவனமாகக் கேட்டன
போலும்! வானமும் பூமியும் அந்த கானத்தைக் கேட்டு மதி மயங்கி
அசைவற்று நின்றன போலும்! கதிரவன் கூட அந்த கானத்தை
முன்னிட்டே மூலைக்கடலை அடைந்தும் முழுகி மறையாமல் தயங்கி
நிற்கிறான் போலும்!
தேனில் குழைத்து வானில் மிதந்து வந்த பாடலை நாமும் சற்றுச் செவி
கொடுத்துக் கேட்கலாம்.

“அலைகடலும் ஓய்ந்திருக்க
அகக்கடல்தான் பொங்குவதேன்?
நிலமகளும் துயிலுகையில்
நெஞ்சகந்தான்  பதைப்பதுமேன்?
காட்டினில் வாழ் பறவைகளும்
கூடுகளைத் தேடினவே!
வேட்டுவரும் வில்லியரும்
வீடு நோக்கி ஏகுவரே!
வானகமும் நானிலமும்
மோனமதில் ஆழ்ந்திருக்க
மான்விழியாள் பெண்ணொருத்தி
மனத்தில் புயல் அடிப்பது மேன்?
வாரிதியும் அடங்கி நிற்கும்
மாருதமும் தவழ்ந்து வரும்
காரிகையாள் உளந்தனிலே
காற்று சுழன்றடிப்பதுமேன்?”//

யார் என்று தெரிந்து விட்டதா?
எல்லோருக்கும் தெரிந்த பெண் தான்.  இந்தப் பெண் எந்தக்கதையில் வரும் பாத்திரம் என்று தெரிகிறதா?

----------



61 கருத்துகள்:

  1. ’கடல் அழகு’ பற்றிய கட்டுரையும் அழகோ அழகு தான்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  2. //“அலைகடலும் ஓய்ந்திருக்க
    அகக்கடல்தான் பொங்குவதேன்?
    நிலமகளும் துயிலுகையில்
    நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?//

    மிகவும் அழகான கவிதை.

    திண்டுக்கல் திரு. தனபாலன் அவர்கள் சொல்லியுள்ள பதில் தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

    பதிவிட்ட தங்களுக்கும், மிகச்சரியாக விடையை முந்திக்கொண்டு கொடுத்துள்ள அவருக்கும், என் மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுக்கள், நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. கடல் அழகுதான் .அங்கே ஆபத்தும் உள்ளதால்தான் கருங்கற்களை கொட்டி வைத்துள்ளார்கள்

    பதிலளிநீக்கு
  4. கோடைக்கு இதமான பகிர்வுங்க.

    அழகான பாடல் வரிகள் ஆமாம் பூங்குழலி பாடிய வரிகள் தாம் .

    பதிலளிநீக்கு
  5. கடல் குறித்த ஆழமான அழுத்தமான பதிவு
    மனம் கவர்ந்தது.தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. கவிதையும் படங்களும் அழகாக இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  7. கடல் குறித்துப் போடபட்டிருக்கும் பதிவு
    அலைகளைப் போன்ற அழகான பதிவு.
    ரசித்தேன் புகைப்படத்துடன் கூடிய பதிவை.

    இந்தப் பாடல் திண்டுக்கல் தனபாலன் சார் சொல்வது போல் பொன்னியின் செல்வனில் வரும் பூந்குழலி பாடியதா?

    பதிலளிநீக்கு
  8. கடல் கடல்தான் அது நிகர் எது ம்ம்ம் ..பொன்னியின்செல்வனில் தானே

    பதிலளிநீக்கு
  9. உண்மை. பார்க்க அலுக்காதது கடல்!

    படங்களும் பாடல், கவிதை பகிர்வும் அருமை. விடையை சொல்லிவிட்டிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  10. கடலை நினைத்தவுடன் பூங்குழலி நினைவு வந்தது மிகப் பொருத்தம்.

    'சமுத்திர குமாரி' யின் ஒருதலைக் காதலை மறக்கமுடியுமா? அந்தக் காதலின் நாயகன் பொன்னியின் செல்வனை மறக்க முடியுமா?

    கடலின் அழகு ஆரம்பித்து பாரதியை நினைவு கூர்ந்து கல்கியின் நாயகியின் பாடலுடன் முடித்தது 'கோடையிலே இளைப்பாற....' கிடைத்த ஒரு குளிர் தென்றல்!

    பதிலளிநீக்கு
  11. கொஞ்ச நாளா கடல்னதும் சமீப தமிழ்சினிமா கெட்ட சொப்பனமா வந்து உடம்பெல்லாம் நடுங்குது.
    அசல் கடல் அற்புதம் தான்.
    என்ன கதாபாத்திரம் சொல்லிடுங்க. கல்கி நாவல் எதுவுமே படிச்சதில்லே.

    பதிலளிநீக்கு
  12. வாங்க வை,கோபாலகிருஷ்ணன், வாழ்க வளமுடன்.

    நீங்கள் முதல் வருகை தந்து
    கட்டுரையின் அழகை பாராட்டியதற்கு நன்றி.

    நீங்கள் பாராட்டிய கவிதை அழகான கவிதை கல்கி அவர்களின் கவிதை.
    நீங்கள் நினைத்தது சரி
    திண்டுக்கல் தனபாலன் அவர்கள் சொன்னது சரியான விடை.
    உங்கள் பாரட்டுக்கள் வாழ்த்துக்கள் அவருக்கு கிடைத்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  13. வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்கவளமுடன்.கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் கதை தான், பாடல் பாடிய பெண் பூங்குழலி தான் சரியாக சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்களை வை.கோபாலகிருஷ்ணன் சார் முதலில் சொல்லிவிட்டார்.
    நானும் சொல்லிக் கொள்கிறேன்.
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  14. வாங்க கவியாழி கண்ணதாசன்.வாழ்க வளமுடன்.
    கவி+ ஆழி = கவியாழி.
    கவிதைக்கடல் நீங்கள்.
    கடலை ரசிக்கும் போது குழந்தை ஆகிவிடுவோம், குழந்தைக்கு பயம் கிடையாது. கடல் ஆபத்து என்று தெரியாது.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வாங்க சசிகலா, வாழ்கவளமுடன்.
    கோடைக்கு ஏற்ற இடம் தான் கடல்.
    பொன்னியின் செல்வன் கதையில் வரும் பூங்குழலி பாடும் பாடல் தான் அற்புதமான பாத்திரம் இரண்டாம் பாகத்தில் அவள் அறிமுகபடலத்தில் இந்த பாட்டு வரும். அவள் படம் பகிர்ந்து இருக்கிறேன் பாருங்கள்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வாங்க ரமணி சார், வாழ்கவளமுடன்.
    உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும், தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வாங்க மாதேவி, வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. மேலும் இரண்டு படங்கள் பகிர்ந்து இருக்கிறேன் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  18. வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
    நீங்களும் கடற்கரையின் அழகை குறிப்பிட்டு பதிவு எழுதினீர்கள் அல்லவா?
    //இந்தப் பாடல் திண்டுக்கல் தனபாலன் சார் சொல்வது போல் பொன்னியின் செல்வனில் வரும் பூந்குழலி பாடியதா//

    ஆமாம். அவர் சரியாக சொன்னார்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராஜி.


    பதிலளிநீக்கு
  19. வாங்க பூவிழி, வாழக வளமுடன்.
    பொன்னியின்செல்வனில் தானே//

    பொன்னியின் செல்வந்தான், பாடல் பாடியது கோடுக்கரை பூங்குழலி.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்கவளமுடன்.
    எத்தனை முறை பார்த்தாலும் கடல் அலுக்காதது தான்.

    உங்களுக்கு தெரியும் தானே விடை.பூங்குழலி படம் இரண்டு பகிர்ந்து இருக்கிறேன் பாருங்கள். திரு, மணியம் வரைந்த படம்.

    பதிலளிநீக்கு
  21. வாங்க ரஞ்சனி நாராயணன், வாழ்கவளமுடன்.

    சமுத்திர குமாரி' யின் ஒருதலைக் காதலை மறக்கமுடியுமா? அந்தக் காதலின் நாயகன் பொன்னியின் செல்வனை மறக்க முடியுமா?//

    பூங்குழலி வந்தியதேவனிடம் கடலில் இறங்கி விட்டால் என் தந்தை சமுத்திர ராஜன்,என்னுடைய
    இன்னொரு பெயர் சமுத்திர குமாரி என்பாள்.
    நல்ல நினைவாற்றல் உங்களுக்கு, பாராட்டுக்கள்.

    ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை .
    பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள யாரையும் மறக்க முடியாது தான்.

    //கடலின் அழகு ஆரம்பித்து பாரதியை நினைவு கூர்ந்து கல்கியின் நாயகியின் பாடலுடன் முடித்தது 'கோடையிலே இளைப்பாற....' கிடைத்த ஒரு குளிர் தென்றல்! //

    ஆஹா! பதிவு பிடித்து இருப்பதை எவ்வளவு அழகாய் கூறிவிட்டீர்கள். நன்றி ரஞ்சனி.

    பதிலளிநீக்கு
  22. வாங்க அப்பாதுரைசார், வாழ்கவளமுடன்.
    பொன்னையும்,மணியையும், மற்றும் வளங்களையும் வைத்து இருக்கும் கடல் அற்புதம் தான். அதை துண்டு போடும் மனிதன் மனம் தான் சரியில்லை என்ன செய்வது?

    கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் கதையில் கோடிக்கரையில் படகு ஓட்டும் பெண் பூங்குழலி.
    1950லில் பொன்னியின் செல்வன் கதையை எழுதி இருக்கிறார்.(1950லில் வந்த பொன்னியின் செல்வன் கதை தொகுப்பு அம்மாவீட்டில் இருக்கும்)

    ஒவியர் மணியம் அவர்கள், இப்போது உள்ள மணியம் செல்வன் (ம.செ)அவர்கள் அப்பா வரைந்த சரித்திரக்கால ஓவியங்கள் மிக அருமையாக இருக்கும்.1987லில் மறுபடியும் மணியம் படங்களுடம் மறு தடவை கல்கியில் வெளியிட்டார்கள், அப்போது கல்கி வாங்கி படித்து தொகுத்து வைத்து இருக்கிறேன். அதில் பூங்குழலியின் பாடல் எனக்கு பிடிக்கும் அதை கடலைப்பற்றி எழுதியவுடன் பகிர்ந்து கொண்டேன்.
    செம்பியன் மாதேவி தஞ்சை மாவட்டத்தில் கட்டிய கோவில்கள் நிறைய உள்ளன. அந்த கோவில்கள் நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.
    சுந்தரர் சோழர்,வானவன் மாதேவி, அருள்மொழி வர்மன்(ராஜராஜ சோழன்) சின்னபழுவேட்டரையர், பெரியபழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான், நந்தினி , வந்தியதேவன், குந்தவைபிராட்டி, ஆதித்த கரிகாலன் என்ற பாத்திரங்களை சுத்தி கதை. படித்தால் மிக நன்றாக இருக்கும். இணையத்தில் இருக்கிறது படித்து பாருங்கள். கரைக்கால் வானொலியில் தொடர்சித்திரமாய் வைக்கிறார்கள்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. கடல் அழகு பற்றி கவிதையும் படங்களும் அழகாக இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  24. கடல் பற்றிய பகிர்வு கடல் காற்றாய் இனிதானது ..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  25. பூங்குழலியின் படங்கள் அருமை. முதன் முறை வெளியான தொடர் எங்கள் வீட்டில் பைண்டு செய்த புத்தகமாகப் பார்த்திருக்கிறேன். படங்களையும் ரசித்திருக்கிறேன். சரித்திரக் கதைகளில் நாட்டமின்மையால் அப்போதும் படிக்கவில்லை. புத்தகமாக அனைத்துப் பாகங்களும் இருவருடங்களுக்கு முன் வாங்கி வைத்ததையும் இன்னும் வாசிக்கவில்லை. பூங்குழலியை விரைவில் சந்திக்கப் பார்க்கிறேன்:)!

    பதிலளிநீக்கு
  26. வாங்க விஜிபார்த்திபன், வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன்.
    உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.மறுமுறை வந்து படங்களை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
    படித்துப்பாருங்கள் நன்கு விறு விறுப்பாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  29. கடலின் அழகை கவிதை அழகோடு ரசிக்கத் தந்தமைக்கு மிகவும் நன்றி. கற்பனையில் காற்றுவாங்கினேன் கடலோரக்கவிதைகளில்!

    பதிலளிநீக்கு
  30. வாங்க கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
    நலமா? வெகுநாட்கள் ஆகி விட்டது உங்களைப் பார்த்து!


    //கற்பனையில் காற்றுவாங்கினேன் கடலோரக்கவிதைகளில்!//

    கவிதாயினி அல்லவா! அழகாய் இருக்கிறது பின்னூட்டம்.
    நன்றி கீதமஞ்சரி.


    பதிலளிநீக்கு
  31. பூங்குழலியை மறக்கமுடியுமா?????


    எங்களுக்கும் ஃபேமிலி மீட்டிங், குழப்பத்தைத் தீர்க்கும் முடிவெடுத்தல், பயணங்கள் திட்டமிடல் எல்லாம் கடலுக்கு அருகில்தான்.

    என்ன ஒன்னு...இங்கெல்லாம் மாலை நேரத்தில் கடற்கரையில் ஈ காக்கா இருக்காது,எங்களைத்தவிர!!!

    பதிலளிநீக்கு
  32. வாங்க துளசி கோபால், வாழ்கவளமுடன்.
    உங்களை பூங்குழலி அழைத்து வந்து விட்டாளா?
    பூங்குழலியை மறக்க முடியாது என்பது உண்மைதான்.
    கடல் உங்கள் குடும்பத்தில் ஒருத்தர் என்று சொல்லுங்கள்.
    முக்கிய முடிவுகள் எடுக்கும் போது குடும்ப உறுப்பினர் மட்டும் தானே இருக்க வேண்டும் அது தான் ஈ, காக்கா கூட வரவில்லை போலும்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி துளசி.

    பதிலளிநீக்கு
  33. கடல், யானை, ரயில், விமானம் இவை யாவும் பார்க்கப் பார்க்க அலுக்காதவை. பொன்னியின் செல்வனில் கல்கியின் கவிதை. லேட்டாக வந்ததால் எல்லோரும் பதில் சொல்லி விட்டார்கள். பொன்னியின் செல்வன் ஒரு முறையாவது படிக்காதோர் மிக மிகக் குறைவு. அப்பாதுரை படித்ததில்லை என்பதை நம்ப முடியவில்லை. ராமலக்ஷ்மி இதுவரைப் படிக்கவில்லை என்பதையும். ரா.ல...விரைவில் படித்து விடுங்கள்.

    கடல் என்றதும் அப்பாதுரையின் பயம் சிரிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  34. வாங்க ஸ்ரீராம், வாழ்கவளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் கடல், யானை, ரயில், விமானம் இவை எல்லாம் பார்க்க அலுக்காதவை தான்.

    நீங்கள் சொன்னது போல்பொன்னியின் செல்வன் ஒரு முறையாவது படிக்காதோர் மிக மிகக் குறைவு தான் என்று நினைக்கிறேன். அப்பாதுரை அவர்கள் படித்தாலும் படித்து இருப்பார்கள்.
    ராமலக்ஷ்மி படித்துவிடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  35. கடலோரம் வாங்கிய காற்று இனிக்குது. அருமையான பாடலுடன் அழகான படங்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி கோமதிம்மா..

    பதிலளிநீக்கு
  36. வாங்க அமைதிச்சாரல். வாழ்கவளமுடன்.
    கடலோரம் வாங்கிய காற்று இனிக்கிறதா!
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  37. எனது நண்பர் இன்னும் சொல்வார். அவருக்கு வயது ஐம்பதுக்கு மேல் ஆகிறது.கடலும்,ரயிலும் பார்க்க திகட்டாதது என/நல்ல ரசிப்பு மனோபான்மை.

    பதிலளிநீக்கு
  38. வாங்க விமலன், வாழ்கவளமுடன்.
    ரசிப்புக்கு ஏது வயது?

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  39. கடல் குறித்த அழகான பகிர்வு. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது...:)

    பதிலளிநீக்கு
  40. கடல் பற்றிய வர்ணிப்பு மற்றும் ஆழமான ரசனை அழகு

    பதிலளிநீக்கு
  41. வாங்க ஆதி, வாழ்க வளமுடன்.
    எத்தனை முறைப்பார்த்தாலும் கடல் அலுக்காது என்பது உண்மைதான்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  42. வாங்க தியாவின் பேனா, வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  43. @ கோமதிம்மா & ஸ்ரீராம்,

    நேரத்தை ஏற்படுத்திக் கொண்டு வாசித்து விடுகிறேன்:). நன்றி.

    பதிலளிநீக்கு
  44. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    நேரத்தை ஏற்படுத்திக் கொண்டு வாசித்து விடுகிறேன் என்று சொல்வதை கேட்டு சந்தோஷபடுவார் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  45. கோமதி பொன்னியின் செல்வனிலிருந்து அழகான வரிகளைக் கொடுத்திருக்கிறீர்கள். நானும் கடலைப் பற்றி ஒரு கவிதை எழுதி வைத்திருக்கிறேன். போடத்தான் நேரமில்லை.
    இந்த ஜேமாமியை உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். திரு வெங்கட் நாகராஜ் அவர்களின் வலைப்பூவில் என் (ஜெயந்தி ரமணி) கவிதையைப் பாராட்டியதற்கு நன்றி. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அப்படியே என் வலைப்பூவிற்கும் வருகை தாருங்கள்.
    மிக்க நன்றி .
    http://manammanamviisum.blogspot.in/

    பதிலளிநீக்கு
  46. பொன்னியின் செல்வன் பூங்குழலியை ஞாபகப் படுத்தி விட்டீர்கள்.
    கடல்,யானை இவற்றை எவ்வள்வு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுக்காது என்று சொல்வார்கள்
    அழகான பதிவு மேடம்.

    பதிலளிநீக்கு
  47. வாங்க ஜெயந்தி ரமணி, வாழ்க வளமுடன்.

    உங்களையும் உங்கள கவிதையும் நினைவு இருக்கிறது.

    கடல் கவிதையை பதிவிடுங்கள் படிக்கிறேன்.

    உங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  48. வாங்க முரளிதரன், வாழ்க வளமுடன்.
    கடல் ,யானை எல்லாம் எப்போது பார்த்தாலும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது என்பது உண்மைதான்.

    பூங்குழலி நினைவுக்கு வந்து விட்டதா?
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  49. கடல்.பூங்குழலி,பொன்னியின் செல்வன் ,பாரதி அனைவரும் ஒரே பதிவில் வந்துவிட்டார்கள்.
    கடல் என்றதும் நினைவுக்கு வருவது அலை ஓசை நாவல்தான்.
    அருமையாகப் பதிவிட்டிருக்கிறீர்கள் கோமதி. மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  50. வாங்க லீலா, வாழ்க வளமுடன்.
    உங்கள் முதல் வரவுக்கு நன்றி,
    உங்கள் வலைத்தளத்திற்கு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  51. வாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.

    கடல் என்றதும் கல்கியின் அலை ஓசை நாவல் நினைவுக்கு வந்து விட்டதா?
    நானும் அலை ஓசை படித்து இருக்கிறேன்.

    பாடல் என்பதால் பொன்னியின் செல்வனில் பூங்குழலி பாடியதை பகிர்ந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  52. சுவாரசியமான பின்னூட்டங்கள்.
    கல்கியின் எழுத்து என்னைப் படிக்கத் தூண்டியதேயில்லை. என்னவோ தெரியவில்லை.
    அத்தோடு சரித்திரக் கதைகளில் எனக்கு அவ்வளவாக அந்நாளில் ஈடுபாடு இருந்ததில்லை (இப்பொழுதும்..)
    மணியம் + செல்வன் ஓவியங்கள் பிடிக்கும்.
    இத்தனை பேர், ஒருமுறை அல்ல, பலமுறை பொசெ படித்திருக்கிறார்கள் என்பது பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  53. வாங்க அப்பாதுரை சார், வாழ்கவளமுடன்.
    வாசிப்பதில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி ரசனை ,எல்லோருக்கும் ஒரே மாதிரி ரசனை இருக்காது என்பது உண்மை.
    உங்கள் மறு வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  54. கடல் மிக அதிசய சுரங்கம். நல்ல படங்கள்.
    கவிதையும் நன்று. இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  55. வாங்க வேதா.இலங்காதிலகம், வாழ்கவளமுடன்.

    உங்கள் வரவுக்கும்,இனிய வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  56. கடற்கரைப் புகைப்படங்கள் அருமை
    நல்ல பதிவ

    பதிலளிநீக்கு
  57. வாங்க முருகானந்தன் சார், வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  58. பூங்குழலியை மறக்க முடியுமா.... இல்லை கடல் தான் பிடிக்காது எனச் சொல்ல முடியுமா.....

    கடல் பற்றிய பகிர்வில் பாரதியையும் கல்கியையும் கொண்டு வந்து சுவையாக்கிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  59. வாங்க வெங்கட், வாழகவளமுடன்.
    //பூங்குழலியை மறக்க முடியுமா.... இல்லை கடல் தான் பிடிக்காது எனச் சொல்ல முடியுமா.....//

    பூங்குழலியை மறக்க முடியாது. கடல் பிடிக்காதவர்கள் கிடையாது உண்மைதான்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு