வியாழன், 21 மார்ச், 2013

வாழைக்காய் அப்பளம்



மாசி மாதம் ஆரம்பித்துவிட்டால் வத்தல், வடகம் போட ஆரம்பித்து விடுவார்கள். பங்குனிக்குள் முடித்துவிடுவார்கள். சித்திரை வத்தல் சிவந்துவிடும் என்று சொல்வார்கள்.


அக்கம் பக்கத்து வீடுகளில் கூழ்வடகம் போடவில்லையா? என்றும்  முடித்துவிட்டீர்களா? என்றும் ஒருவருக்கு ஒருவர்   கேட்டுக் கொள்வார்கள்.
 திருநெல்வேலியில் சாலைக்குமரன் கோவில் எதிரில் அருமையான வீட்டுமுறையில் போட்ட வடகம், வத்தல் கிடைக்கும். சென்ற முறை அங்கு சென்றிருந்தபோது அதை வாங்கி வந்து விட்டேன்.  அங்கு வாங்கியதை குழந்தைகளுக்கு கொடுத்து விட்டுவிட்டேன். நம்மால் இப்போது செய்ய முடியவில்லை. வீட்டில் எல்லோரும், கஷ்டப்படுத்திக் கொள்ளாதே போதும். வத்தல் எல்லாம் போட்டு வத்தலாய் காய்ந்தது எல்லாம் போதும் என்கிறார்கள்.
முன்பெல்லாம் இரவு சுடச் சுட சாதம் , வத்தக் குழம்பு , மிளகு ரசம், , துவையல், வத்தல் , வடகம்தட்டு நிறைய வறுத்து வைத்து  சாப்பிட்ட காலங்கள் போய் விட்டது. இப்போது இரவு, பலகாரம் தான். குழந்தைகளுக்கும் வித விதமாய் டிபன் தான் வேண்டி இருக்கிறது. வத்தல் வடகம் பொரிப்பது குறைந்து விட்டது.

இந்த முறை வாழைக்காய் அப்பளம்  மட்டும் செய்தேன்.முன்பு ஒருமுறை மஞ்சரி பத்திரிக்கையில் வந்த குறிப்பு அது.

அதன் செய்முறை :
வாழைக்காய் -பெரியது 6
பச்சைமிளகாய் -6
உப்பு, பெருங்காயம்- தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் -ஒரு ஸ்பூன்.

உப்பு, காரம் அவர் அவர்கள் விருப்பம் போல் கூடவோ, குறைத்தோ போட்டுக் கொள்ளலாம்.

பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயத்தை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

வாய் அகன்ற பாத்திரத்தில் வாழைக்காயை முழுதாய் தோலுடன் வேக வைக்க வேண்டும். குக்கரில் வேக வைக்கலாம். ஆனால் கலர் வெள்ளையாக இருக்காது.

நான் குக்கரில் தான் வேகவைத்தேன்.முன்பு எல்லாம் இட்லி கொப்பரையில் வேக வைப்பேன். நேரத்தை மிச்சம்செய்யவும் , கேஸ் சேமிப்புக்காகவும் குக்கரில் வேக வைத்துவிட்டேன்.

வாழைக்காய் இளஞ்சூட்டில் இருக்கும் போதே கல்லுரலில் இட்டு அரைத்துக் கொள்ளவேண்டும் .

நான்  கல்லுரல் இல்லாத காரணத்தால் காரட் துருவியில் துருவிக் கொண்டேன். பின்  பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம் வைத்து  அரைத்துக் கொண்ட கலவையை, வாழைக்காய் துருவி வைத்ததில்  கலந்து, நன்றாக பிசைந்து கொண்டு, சிறிது சிறிதாக உருட்டிக் கொண்டு, இரண்டு பாலீதீன் சீட்களுக்கு நடுவில் வைத்து, சப்பாத்திக் கட்டையால் அப்பளம் போல் செய்து கொள்ளலாம்.  கைகளால் தட்டவும் செய்யலாம்.
அப்பளம் ஒன்றுபோல அழகாய் இருக்க, நான் பில்டர் மூடியால் வெட்டிக் கொள்வேன்.

பின் வெயிலில் காயவைக்கவேண்டும். இரண்டு நாளில் காய்ந்துவிடும் .
எண்ணெயில் பொரித்தோ, அல்லது சுட்டோ சாப்பிடலாம்.
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தது வாழைக்காய் அப்பளம்.


































செய்து பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.

85 கருத்துகள்:

  1. வாழைக்காய் அப்பளம் எல்லாம் செய்ததே இல்லை...

    Bookmark செய்து விட்டேன்... வீட்டில் பிறகு வந்து குறிப்பு எடுத்துக் கொள்வார்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. வாழைக்காய் அப்பளம் செய்முறையும் படங்களும் மிகவும் அருமையாக உள்ளன.

    பச்சைமிளகாய் சேர்ந்துள்ளதால் காரசாரமாக ஜோராகத்தான் இருக்கும்.

    வாழைக்காய் பொடிமாஸ் போல இருக்கும் என்று நினைக்கிறேன்.

    பகிர்வுக்கு பாராட்டுக்கள், நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. நான் கேள்வி படாதது சகோ நன்றி விவரமாய் பகிர்ந்த்தற்கு

    பதிலளிநீக்கு
  4. வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    தலைப்பு கொடுக்கும்முன் தவறுதலாய் வந்து விட்டது முதலில்.
    அதற்குள் அதைபடித்து கருத்து சொல்லிவிட்டீர்கள்.
    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  5. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

    நீங்கள் சொன்னது போல் அந்த துருவலுடன் வெங்காயம் பச்சைமிளகாய், இஞ்சி தாளித்து தேங்காய் துருவல் கலந்தால் வாழைக்காய் புட்டு, வாழைக்காய் பொடிமாஸ் என்று சொல்லல்லாம்.


    என் அம்மா வாழைக்காய் தோலையும் விடமாட்டார்கள் அதை சிறிது சிறிதாக அரிந்து கொண்டு மிள்காய்த்தூள், மஞ்சள்த் தூள், பெருங்காயத்தூள், எல்லாம் போட்டு பிசறி கடுகு உளுந்து போட்டு தாளித்தால் அருமையான துவரன் (பொரியல்)தயிர் சாதம் சாம்பார் சாதத்திற்கு பொருத்தமாய் இருக்கும்.
    இப்போது மருந்து அடிப்பதால் தோலை பயன்படுத்த பயமாய் உள்ளது இயற்கை உரம் போட்ட அல்லது நம் வீடுகளில் காய்த்த வாழைக்காய் என்றால் இப்படி செய்து சாப்பிடலாம்.

    வாழைக்காய் கலவையுடன் பொட்டுகடலை பொடி கலந்து வடை செய்யலாம்.
    உங்கள் பாராட்டுக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  6. வாங்க மலர் பாலன், வாழ்கவளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வாங்க மகி, வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சி, நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வாங்க காஞ்சனா ராதகிருஷ்ணன், வாழ்கவளமுடன்.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வாழைக்காயில் அப்பளம் இப்போதுதான் அறிய வருகிறேன். படங்களும் குறிப்பும் அருமை. செய்து பார்க்கிறேன். வாழைக்காய் புட்டுக்கு இப்படிதான் அவித்துத் துருவிக் கொள்வது வழக்கம்.

    சென்ற வார தினகரன் வசந்தத்தின் ‘இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்கள்’ வரிசையில் இடம் பெற்றிருப்பதற்கு வாழ்த்துகள் கோமதிம்மா:)!

    மற்ற தோழியருக்கும் வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  10. வாழைக்காய் அப்பளம் இதுவரை இப்படிக் கேள்விப்பட்டதே இல்லை. அருமை. படங்களே ஆசையைத் தூண்டுகிறது.

    என்ன இங்கெல்லாம் வெய்யில் காண்பதே நல்ல கோடை கால நிலை வந்து ஓரிரு வாரங்களுக்குத்தான். அதுவும் ஒருநாள் இருக்கும் வெப்பநிலை அடுத்தநாள் இருக்காது.

    ம்ஹும் அதுக்கும் குடுப்பினை இருக்கவேண்டும். உங்க படத்தில் இருப்பதையே நான் எடுத்து பொரிச்சு சாப்பிட்டதா நினைச்சுக்கிறேன்...:)

    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி!

    பதிலளிநீக்கு
  11. வாழைக்காயில் செய்யலாம் என்றால் எல்லாக் கர்போ ஹைட்ரேட் பண்டங்களிலும் செய்யலாம் இல்லையா கோமதி.

    அளவாக அடுக்கிய வாழை அப்பளங்களைப் பார்க்கும் போது மிக அருமை.முதல் தடவை இது போலப் பார்க்கிறேன்.இன்னும் புதிதாக யோசனைகள் கொடுக்கவும்.
    சாரோட கார்டூன் ஒண்ணும் இல்லையே:)

    பதிலளிநீக்கு

  12. வாழைக்காய் அப்பளம் கேட்டதில்லை. என் மனைவியிடம் செய்யச் சொல்லி இருக்கிறேன். பார்ப்போம். புதிய ரெசிபிக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  13. வாழைக்காய் அப்பளம் புதுமையா இருக்கு..இதுவரை கேள்விப்பட்டது இல்லை அக்கா. செய்து பார்க்கிறேன்.. சுட்ட அப்பளமோ அல்லது பொரிச்ச அப்பளமோ படம் போட்டிருந்தா நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  14. முதலில் தினகரன் வசந்தம் இதழில் வந்ததற்கு வாழ்த்துக்கள். உங்கள் பதிவிலேயே அதைப் பற்றி எழுதலாமே. தினகரன் வாங்காத என்னை போன்றவர்களுக்கு படிக்க வாய்ப்பு கிடைக்குமே. ப்ளீஸ் போடுங்கள்.

    இரண்டாவது எல்லோரையும் போலவே எனக்கும் இது புது செய்முறைதான். கூடவே மறுமொழியில் வாழைக்காய் தோலியில் செய்யும் துவரன் பற்றிய, மற்றும் வாழைக்காய் வடை பற்றிய குறிப்புகளுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  15. பகிர்வுக்கு பாராட்டுக்கள், நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  16. வசந்த வாழ்த்துக்கள் அம்மா . நலமறிய ஆவல் . அமைதிசாரலில் பார்த்தேன் உங்களின் சாதனையை.

    பதிலளிநீக்கு
  17. வாங்க ராமலக்ஷ்மி, வாழகவளமுடன்.
    வாழைக்காய் அப்பளம் மாலை டிபன் மாதிரியும் சாப்பிடலாம்.

    வாழைக்காய் புட்டுக்கு இப்படித்தான் துருவிக்கொள்வோம்.

    உங்கள் வாழ்த்துக்கு மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.


    பதிலளிநீக்கு
  18. வாங்க இளமதி, வாழக வளமுடன்.
    உங்களுக்கு என்று பொரித்து வைத்து இருக்கிறேன். வந்து எடுத்து சாப்பிடுங்கள்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வாழைக்காய் அப்பளம் கேள்விப்பட்டதே இல்லை.வித்தியாசமாக உள்லது.ஹ்ம்ம்..என்ன செய்ய...வற்ரல் போட்டு அது கூட நாமும் சேர்ந்து காய்ந்து வற்றலாக போக எனக்கும் பொறுமை இருப்பதில்லை.அப்பளம் பப்படம் வற்றல்.வடகம் எல்லாம் ரெடிமேட் ஆகத்தான்.

    பதிலளிநீக்கு
  20. வாங்க வல்லி அக்கா, வாழ்கவளமுடன்.

    //வாழைக்காயில் செய்யலாம் என்றால் எல்லாக் கர்போ ஹைட்ரேட் பண்டங்களிலும் செய்யலாம் இல்லையா கோமதி.//

    நான் சேனைக்கிழங்கில் செய்துப்பார்த்து இருக்கிறேன், அதுவும் நன்றாக இருந்தது.
    பதிவு போட்டு நாள் ஆகி விட்டதே என்று அப்பளம் போட்டதை படம் எடுத்து பதிவு போட்டு விட்டேன். வேறு என்ன புதுமை செய்கிறேன். இந்த அப்பளம் எல்லாம் கல்யாணம் ஆன புதிதில் தினம் ஏதாவது புதுமையாக செய்து கணவரிடம் பாராட்டு பெற வேண்டும் என்று செய்தது. குடும்பத்தினர் அனைவர் பாராட்டையும் பெற்றது இந்த அப்பளத்தை புத்தகத்தில் பகிர்ந்து கொண்டவர் வாழ்க!

    சாரோட கார்டூன் ஒண்ணும் இல்லையே:)//

    என்கணவர் கல்லூரியில் தொல்காப்பியப் பயிலரங்கம்(செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் , மற்றும் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி )நடத்திய பயிலரங்கத்தில் பயிற்றுநராய் பணி ஏற்றுக் கொண்டமையால் என் பதிவுக்கு படம் வரைய நேரம் இல்லை.
    உங்கள் உடல் நலம் எப்படி இருக்கிறது?
    ஜல்தோஷம் சரியாகி விட்டதா?
    அப்பளம் பொரித்தபடம் போட்டு இருக்கிறேன் பாருங்கள்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி அக்கா.





    பதிலளிநீக்கு
  21. வாழைக்காய் அப்பளம்.இது புதுசு அம்மா புதுசு.தொடர்ந்து கலக்குங்கள் அம்மா.

    பதிலளிநீக்கு
  22. வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழக் வளமுடன். உங்கள் மனைவியை செய்ய சொன்னது அறிந்து மகிழ்ச்சி.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வாங்க ராதாராணி, வாழ்க வளமுடன்.
    உங்கள் விருப்பத்தை நிறைவேற்றி விட்டேன் பொரித்த அப்பளம் படம் உங்களுக்காக பகிர்ந்து இருக்கிறேன், ருசித்துவிட்டுச் சொல்லுங்கள்.
    நன்றி ராதாராணி.

    பதிலளிநீக்கு
  24. வாங்க ரஞ்சனி, வாழ்கவளமுடன்.

    முதலில் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. இன்று அமைதிச்சாரல் அதை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னொரு நாள் உங்களுக்காக பகிர்கிறேன்.
    நானும் தினகரன் வாங்குவது இல்லை.எனக்கு முதலில் வசந்தம் இதழில் இடம் பெற்றதை சொல்லி வாழ்த்து தெரிவித்தவர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் சார் தான்.
    பிறகு தான் இணையத்தில் போய் பார்த்து மகிழ்ந்தேன். பின் ஜலீலா அந்த பக்கத்தை போட்டோ எடுத்து அனுப்பி இருந்தார்கள். வாழ்த்து சொன்னார்கள். பிறகு சாரும் போட்டோ எடுத்து அனுப்பி இருந்தார்.
    அவர்கள் இருவருக்கும் நன்றிகள்.

    வாழைக்காய் தோல் துவரன், வாழைக்காய் புட்டு, வடை எல்லாம் நன்றாக இருக்கும் ரஞ்சனி.
    உங்கள் உற்சாகம் அளிக்கும் பின்னூடங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வாங்க மாலதி, வாழக வளமுடன்.
    உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வாங்க விஜி பார்த்திபன், வாழ்க வளமுடன். உங்களைப் பார்த்து வெகு நாட்கள் ஆகி விட்டதே! நலமா?
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி விஜி.
    அடிக்கடி வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  27. வாங்க ஸாதிகா, வாழ்க வளமுடன்.
    வெயிலில் போய் மற்ற வற்றல் போல் இதற்கு காய வேண்டாம். வீட்டுக்குள் இருந்து செய்யலாம். மின்விசிறிக்கு கீழ் உட்கார்ந்து செய்து விட்டு பின் மேலே கொண்டு வைத்து விடலாம் காய. உங்கள் வரவுக்கும்கருத்துக்கும் நன்றி.

    வசந்தம் இதழில் உங்கள் வலைதளமும் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.


    பதிலளிநீக்கு
  28. வாங்க இந்திரா, வாழ்கவளமுடன்.
    நலமா?
    வாழைக்காய் அப்பளம் செய்முறை மிகவும் பழசு.
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி இந்திரா.

    பதிலளிநீக்கு
  29. வாங்க பாலா சுப்பிரமணியன், வாழ்கவளமுடன்.
    உங்கள் முதல் வரவுக்கும், கருத்துக்கும் மகிழ்ச்சி, நன்றி.

    பதிலளிநீக்கு
  30. வித்தியாசமா இருக்கே! எங்க அம்மா கிட்ட சொல்லி செய்து பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
  31. பொரித்த அப்பளம் படத்தில நல்லா இருக்கு அக்கா..ரசம் சாதத்திற்கும் வத்த குழம்பிற்கும் சரியான பொருத்தமா இருக்கும்..நாளை செய்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  32. வாங்க சுரேஷ் , வாழ்கவளமுடன்.
    அம்மாவிடம் சொல்லி செய்து பார்ப்பது அறிந்து மகிழ்ச்சி.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  33. வாங்க ராதாராணி., வாழ்கவளமுடன். ரசம் சாதத்திற்கும் வத்தகுழம்பிற்கும் பொருத்தமாய் இருக்கும் தான். நாளை செய்து விடுகிறேன் என்று சொல்வதை கேட்டு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  34. வாழைக்காய் அப்பளம் புதிதாக இருக்கிறதே. மிகவும் பொறுமையாக
    step by step ஆக படங்களுடன் அழகான பதிவாகியிருக்கிறது.

    புதிது புதிதாக செய்து பார்த்து அசத்துகிறீர்கள் .
    தொடருங்கள்.....

    பதிலளிநீக்கு
  35. அப்பளம் என்றாலே அருமை அதிலும் புதிதாய் வாழக்காய் அப்பளம் நன்றாகத்தான் இருக்கும் .அனுப்பி வையுங்கள் ருசிபார்த்துச் சொல்கிறேன்

    பதிலளிநீக்கு
  36. வாங்க ராஜி, வாழ்கவளமுடன்.
    பதிவு போடவே (எல்லோருக்கும் உதவியாக இருக்கும்) படங்கள் எடுத்தேன்.

    உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  37. வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்கவளமுடன்.வாழைக்காய் அப்பளம் பொரித்து அனுப்பி இருக்கிறேன்.
    சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கள்.
    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  38. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
  39. புதுசா இருக்கு.. வெய்யிலை வீணாக்காமல் இப்படி ஏதாவது செய்தால் நல்லாத்தான் இருக்கு.

    வடக்கே உருளைக்கிழங்கை வேக வைத்து அப்பளம் செய்வார்கள். அடுத்து வரும் மழைக்காலத்துல சாயாக்கு துணையா இந்த அப்பளத்தைக் கடிச்சிக்கிறதுண்டு.

    பதிலளிநீக்கு
  40. தினகரன் வசந்தத்தில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  41. வாங்க திண்டுக்கல் தனபாலன் சார், வாழ்கவளமுடன்.
    உங்கள் தகவலுக்கு மிக நன்றி.
    துள்ளி குதிக்குது தளம் என்று சொல்லும் அருணாவிற்கு நீங்கள் கொடுத்து இருக்கும் ஆலோசனைப்படி என் தளத்தில் செய்துப்பார்க்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  42. வாங்க அமைதிச்சாரல், வாழ்கவளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் வெயிலை வீணாக்காமல் செய்ய ஆசை தான், ஆனால் முன் போல் உடல் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது. ஏதோ ஆசைக்கும் கொஞ்சம் செய்தேன்.
    உருளை கிழங்கை அங்கு இப்படி அப்பளமாய் செய்வார்களா?
    நான் முன்பு உருளையை வட்டமாய் கொஞ்சம் கனமாக வெட்டிக்கொண்டு உப்பு போட்டு லேசாக வேகவைத்துக் கொண்டு காயவைத்து எடுத்து வைத்துக் கொண்டால் மழைக் காலத்தில் காய் வராத போது உதவும் என்று செய்வேன். உருளை அப்பளம் செய்து பார்க்க வேண்டும்.
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  43. வாழைக்காய் அப்பளம் எனக்குப் புதிது.
    வாசிக்கவே வாயூறுகிறது.
    மிக்க நன்றி. புகைப்படங்கள் மிகத் தெளிவாக உள்ளன.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  44. வாங்கவேதா. இலங்காதிலகம், வாழ்கவளமுடன்.

    உங்களுக்கு வாழைக்காய் அப்பளம் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  45. தினகரன் வசந்தத்தின் அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.

    புதிய செய்முறை நன்றி.

    பதிலளிநீக்கு
  46. இன்றைய வலைசரத்தில் பாராட்டப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  47. வாழைக்காய் அப்பளம் - புதிய விதமாக இருக்கிறது.

    குறிப்பிற்கு நன்றிம்மா....

    பதிலளிநீக்கு
  48. வாங்க வெங்கட் நாகராஜ், வாழ்கவளமுடன்.
    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  49. வாழைக்கையில் விதம் விதமாக செய்வீர்கள் போலிருக்கிறதே!ஒவ்வொன்றாக எழுதுங்கள்.

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.

    அங்கிருக்கும் இணைப்பைத் தொடர்ந்து வந்தால் உங்கள் தளம் 'மின்னல்' போல வந்து வந்து மறைகிறது.
    தமிழ்மணம் இணைப்பிலிருந்து வந்தால் சரியாகவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  50. படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை
    கொஞ்சம் தூரமாக இல்லாமல் பக்கமாக இருந்தால்
    கூச்சப்படாமல் சாம்பிள் வாங்கி வரலாமோ எனத் தோன்றியது
    நிச்சயம் செய்து பார்க்க உள்ளோம் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  51. வாங்க மாதேவி,வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
    வாழைக்காய் அப்பளம் ருசி பிடித்து இருக்கா?
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  52. வாங்க ரஞ்சனி, வாழ்க வளமுடன். உங்கள் வாழ்த்துக்கு நன்றி. வாழைக்காய் வித விதமாய் செய்யலாம்.
    http://mathysblog.blogspot.com/ncr போட்டு வாருங்கள் மின்னல் போல் மறையாது.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  53. வாங்க ரமணி சார், வாழ்க வளமுடன். எங்கள் ஊர் வெகு தூரம் இல்லை.
    உங்கள் வீட்டில் செய்து தருகிறேன் என்று சொல்லி விட்டார்கள் அல்லவா?
    மதுரையில் சீக்கிரம் காய்ந்து விடும்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  54. வாழைக்காய் அப்பளம வித்யாசமான பகிர்வு ..

    இதையே வடை மாதிரி எண்ணையில் பொறிப்பதும் உண்டு ...

    மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து இப்படி அப்பளம் செய்வார்கள்..

    பதிலளிநீக்கு
  55. வாழைக்காய் அப்பளம் கேள்விப் பட்டதில்லை. செய்முறை விளக்கம் நன்று நன்றி..

    பதிலளிநீக்கு
  56. வாழைக்காய் அப்பளம் குறிப்பு புதுமையாக இருக்கிறது. இந்த முறை ஊருக்குப்போகும்போது செய்து பார்த்து விட வேன்டும்.
    நல்ல குறிப்பு தந்ததற்கு அன்பு நன்றி!!

    பதிலளிநீக்கு
  57. உங்களின் வலைத்தளம் மின்னி மின்னி மறைகிறது. தொடர்ந்து வர முயற்சித்தும் முடியவில்லை. இன்று பரவாயில்லை. அதனால் அவ‌சரமாக பின்னூட்டம் எழுதி போஸ்ட் செய்து விட்டேன்!

    பதிலளிநீக்கு
  58. எல்லோரும் சொல்லியிருப்பது போல நானும் வாழைக்காய் அப்பளம் கேள்விப் பட்டதேயில்லை. குறித்து வைத்துள்ளேன் பாஸ் கிட்ட காட்டி செய்யச் சொல்ல வேண்டும். ஜவ்வரிசி வடகத்தில் பிசியாயிருக்கிறார் பாஸ்!

    பதிலளிநீக்கு
  59. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன்.

    நீங்களும் நல்ல வத்தல் அயிட்டங்கள் சொன்னீர்கள்.
    செய்துப் பார்க்க ஆசை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  60. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன்.

    நீங்களும் நல்ல வத்தல் அயிட்டங்கள் சொன்னீர்கள்.
    செய்துப் பார்க்க ஆசை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  61. வாங்க முரளிதரன் ,வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  62. வாங்க மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
    செய்து பாருங்கள்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

    .http://mathysblog.blogspot.com/ncr

    ஹுஸைனம்மா மேலே கொடுத்து இருப்பது போல் போட்டு என் வலைப்பக்கம் வந்தால் மின்னி மறையாது என்றார்கள் அப்படி வந்து பாருங்கள்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  63. வாங்க மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
    செய்து பாருங்கள்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

    .http://mathysblog.blogspot.com/ncr

    ஹுஸைனம்மா மேலே கொடுத்து இருப்பது போல் போட்டு என் வலைப்பக்கம் வந்தால் மின்னி மறையாது என்றார்கள் அப்படி வந்து பாருங்கள்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  64. வாங்க ஸ்ரீராம் வாழ்கவளமுடன். ஊருக்கு போய் இருந்தீர்களா?
    நானும் ஜவ்வரசி வடகம் செய்ய வேண்டும்.
    பாஸ் கிட்ட காட்டி செய்ய சொல்வதில் மகிழ்ச்சி.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  65. ஆ! படிக்கும் போதே ஆயாசமாத் தோணுதே! (tastyஆவும்)

    இதுக்கெல்லாம் யார் காரணம்னு அந்த உச்சிப் பிள்ளையாருக்கு தெரியும்.

    கடைசியில் தட்டை போலத் தெரிகிறதே?

    பதிலளிநீக்கு
  66. வாழைக்காய் புட்டுனு நைசா என்னவோ நடுவுல சொல்லியிருக்கீங்களே.. அது அடுத்ததா? :)

    பதிலளிநீக்கு
  67. சரியான ஆளப்பா.. எதுக்கெடுத்தாலும் பாஸ் கிட்டே சொல்றேன்றாரே தவிர, சொன்னப்புறம் இவரு நிலமை என்னாச்சுனு ஒரு தடவையாவது சொல்லக்காணோம்..

    பதிலளிநீக்கு
  68. வாங்க அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.

    படிக்கும் போது ஆயாசமாத தோணுதே!//

    ஏன் ஆயாசம்?அப்பளம் செய்ய வேலை அதிகமென்றா?

    இதுக்கெல்லாம் யார் காரணம்னு அந்த உச்சிப் பிள்ளையாருக்கு தெரியும்.//

    ருசியான வாழைக்காய் குறிப்பு கொடுத்த்வர் யார் என்பது உச்சி பிள்ளையாருக்கு தான் தெரியும்.
    என்னவருக்கும்.,என் குழந்தைகளுக்கும் பிடிக்கும் அதனால் செய்கிறேன் என்பதும் ஒரு காரணம்.

    கடைசியில் தட்டை போலத் தெரிகிறதே?//

    ஆம்,தட்டை முறுக்கு போல் காரசாரமாய் இருக்கும்.

    வாழைக்காய் புட்டுனு நைசா என்னவோ நடுவுல சொல்லியிருக்கீங்களே.. அது அடுத்ததா? :)//

    வாழைக்காய் புட்டு எல்லோருக்கும் தெரியும். சிலர் பொடிமாஸ் என்பார்கள்.
    வாழைக்காய் வடை, வாழைக்காய் தோல் துவரன் குறிப்பு இருக்கே படிக்கவில்லையா? வை.கோபாலகிருஷ்ணன் சாருக்கு அளித்த பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

    //சரியான ஆளப்பா.. எதுக்கெடுத்தாலும் பாஸ் கிட்டே சொல்றேன்றாரே தவிர, சொன்னப்புறம் இவரு நிலமை என்னாச்சுனு ஒரு தடவையாவது சொல்லக்காணோம்..//

    ஆமாம், அது தானே! ஸ்ரீராம் பாஸ் என்ன சொன்னார் (நிலமை என்னாச்சுனு)என்று அறிய ஆவல்.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சார்.



    பதிலளிநீக்கு
  69. ஹிஹி.... இதுவரைக்கும் (அப்பளம் உட்பட) ஒண்ணுமே ஆகலை. இரண்டு நாட்களாகச் சென்னை மேகமூட்டமாக வேறு இருக்கிறது! (சே...என்னென்ன சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கிறது)

    பதிலளிநீக்கு
  70. வாழைக்காய் பொடிமாஸ் தான் புட்டா? பொடிமாஸ் கறி/பொறியல் வகைனு நினைச்சேன்.

    பதிலளிநீக்கு
  71. வாங்க ஸ்ரீராம், வாழ்கவளமுடன்.
    இரண்டு நாளாய் மேகமூட்டமா?மழை பெய்தால் பொருள் வீணாகி விடுமே!
    வெயில் அடிக்கும் போது பாஸ்கிட்ட சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  72. வாங்க பாலா சுப்பிரமணியன், உங்கள் வரவுக்கும் வாழ்கவளமுடன் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  73. வாங்க அப்பதுரை சார், வாழ்கவளமுடன்.
    புட்டு என்பது வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி தாளித்து அதில் வெந்த வாழைக்காயை துருவி போட்டு தேங்காய் துருவல் போட்டால் புட்டு.
    வாழைக்காயை ஆரஞ்சுவில்லை மாதிரியோ அல்லது வட்டமாய் வெட்டி மஞ்சள்தூள், மிள்காய்தூள், உப்புத்தூள் போட்டு எண்ணெய் விட்டு தாளித்து அதில் போட்டு வதக்கி மூடி வைத்து இடை. இடையே கிண்டி விட்டு எடுத்தால் வாழைக்காய் காரக்கறி.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  74. வாழைக்காய் அப்பளம் நன்றாக இருக்கிறது அம்மா. செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  75. http://blogintamil.blogspot.in/2013/04/2013.html

    தங்களின் இந்தப்பதிவு இன்று 20/04/13 வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு என் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  76. புதுசாக அருமையாக இருக்கு கோமதிக்கா.

    பதிலளிநீக்கு
  77. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,வாழ்கவளமுடன்.
    உங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  78. வாங்க ஆசியா, வாழ்கவளமுடன்.
    உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  79. வாழைக்காய் அப்பளம் இன்று வலைச்சரத்தில் வாசனை கிளப்பியிருக்கிறதே!
    வாழ்த்துக்கள் கோமதி!

    பதிலளிநீக்கு
  80. வாங்க ரஞ்சனி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  81. வாழைக்காயில் அப்பளம் இபப் தான் கேள்வி படுகிறேன்
    உருளை அப்பளம் , தக்காளி அப்பளம் தெரியும் இது புதுசாக இருக்கு.,

    முடிந்த போது செய்து பார்க்கீறேன்

    பதிலளிநீக்கு