Monday, December 31, 2012

புத்தாண்டு சிந்தனைகள்

என் தங்கை,  கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்று  கடந்த வாரம்
குடும்பத்துடன் எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தார்கள்.  நிறைய  கோவில்களுக்கு  தங்கையின் குடும்பத்துடன் சென்று வந்தோம்.

மார்கழி மாதம் என்றாலே கோவில் வழிபாடு சிறப்பு அல்லவா!

எங்கள் அம்மா மார்கழி என்றால், அதிகாலை நீராடி , விளக்கு ஏற்றி, திருப்பாவை திருவெம்பாவை பாடல் பாடி , கோவிலுக்கு சென்றுவருவதை  எங்கள்  எல்லோருக்கும் வழக்கப்படுத்தி இருந்தார்கள். நானும் என் தங்கையும்
அதிகாலை எழுந்து  வண்ணக் கோலம் போட்டும் , கோவிலுக்குப் போயும்  எங்கள் பழைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டோம்..

முன்பு, ’என் அம்மாவின் பொக்கிஷங்கள்’ என்று அம்மா எழுதி வைத்து இருந்த பாடல்களை பகிர்ந்து கொண்டேன்.

இந்தமுறை -   என் அம்மா குமுதம் பத்திரிக்கையில் 1960, 61, 63 , வருடங்களில்
வந்த அறிஞர்களின் பொன்மொழிகளை தொகுத்துத் தைத்து வைத்திருந்த பழைய  புத்தகத்திலிருந்து சிலவற்றைப் புத்தாண்டுச் சிந்தனைகளாய்ப் பகிர்ந்து கொள்கிறேன்.


1. நல்ல கருத்துக்களை, உயர்ந்த பண்புகள் முதலியவற்றைப் பற்றி அடிக்கடி
சிந்தனை செய்தால்தான் அவற்றிடம் ஈடுபாடு உண்டாகும். ஈடுபாடு, உண்டானால் தான் அவற்றுக்காக ஏங்குவோம். ஏங்கினால் தான் தேடுவோம். தேடினால் தான்  அழகும் அருளும் நம் வாழ்க்கையில் புகுந்து அவை நமக்கு சொந்தமாகும்
                                                      .------- வேன் டைக்.

2. மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?
உங்களுடன் சேர்ந்து வாழ்பவர்களுடைய நற்குணங்களை -- உதாரணமாக
ஒருவருடைய சுறுசுறுப்பு,  இன்னொருவருடைய அடக்கம்,  மற்றொருவருடைய கொடை, இவை போன்றவற்றை கண் முன் நிறுத்திக் களிப்படைவதில் இருக்கிறது.
                                                      ---- மார்கஸ் அரீலியம்.


3. உற்சாகம் இழந்து விட்டீர்களா?
அதைத்  திரும்ப அடைய ஒரு ராஜபாட்டை இருக்கிறது.  உற்சாகமாக எழுந்து
உட்காருங்கள்.  உற்சாகமாக நடந்து கொள்ளுங்கள்.  உற்சாகமாகப் பேசுங்கள்,
துணிச்சலை வரவழைத்துக் கொள்ள வேண்டுமா?  அப்படியானால் துணிச்சல்
உள்ளவர் போல் நடியுங்கள்.  முழுமனத்தோடு,  உறுதியுடன்  நடியுங்கள் குலைநடுக்கத்துக்குப் பதில் வீராவேசமும் உண்டாகும்.

                                                  --------  வில்லியம் ஜேமஸ்.

4. இருக்கிற செல்வம் போதுமென்று திருப்தியடைவது சரிதான். ஆனால் இருக்கிற  திறமை போதும் என்று திருப்தியடைவது சரியல்ல.

                                                      ---------- மாகின் டாஷ்.

5. தோல்வி எதை நிரூபிக்கிறது?

 வெற்றி அடைய வேண்டும் என்ற நமது தீர்மானத்தில் போதிய வலு
இருக்கவில்லை என்ற ஒன்றை மட்டும் தான்.

                                                         --------- பெர்வீ

6. எல்லா சக்தியும் உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் எதையும் சாதிக்கலாம்.
எல்லாவற்றையும் சாதிக்கலாம்.  நம்புங்கள்.  நாம் பலவீனர்கள் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்
                                                     --------  விவேகானந்தர்.


7.என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையை உங்களால் வரவழைத்துக் கொள்ள முடிந்தால்,  எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும் சரி, அதை கண்டிப்பாகச் சாதித்து விடுவீர்கள்.  மிக எளிய காரியமாக இருந்தாலும் அதை உங்களால் செய்ய  இயலாது என்ற கற்பனை செய்து கொள்வீர்களேயாகில்,  செய்ய முடியாமலே போய்விடும். கறையான் புற்றுக் கூடக் கடக்க முடியாத மலையாகிவிடும்.

                                                      --------எமிலி கூவே.

8. செயலை விதையுங்கள்
பழக்கம்  உருவாகும்
‘பழக்கத்தை விதையுங்கள்
குணம் உருவாகும்
குணத்தை விதையுங்கள்
உங்கள் எதிர்காலம் உருவாகும்.
                                                     --------- போர்டுமன்.

9. தன் கடமை எது  என்பதை உணர்ந்தவன் அறிவாளி ; கடமையை எப்படி செய்ய வேண்டும் என்பதை அறிந்தவன் திறமைசாலி ;  கடமையை செய்பவன் நல்லவன்.
                                                      ---------ஜோர்தான்.


10.எல்லா இடத்திலும் கடவுள் இருக்க முடியாது  ஆகவே தாயைப்  படைத்தார். --
-                                                      ------- யூதர்.

                                                 **********
அம்மாவும் நானும்

                                                     
 உலகத்தில்  இந்த (2012)வருடத்தில் நடந்த சில கசப்பான சம்பவங்கள் இனி
நடக்காமல் இருக்கவும், வரும் காலம் எல்லோருக்கும் மகிழ்ச்சியும். மனநிறைவும்  தரும் நாட்களாய் இருக்கவும்   நாம் எல்லோரும் பிராத்தனை செய்வோம்.

 வலை உலக அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..

                                                             வாழ்க வளமுடன்!


                                                                   ________________

53 comments:

இராஜராஜேஸ்வரி said...

பொக்கிஷமான பகிர்வுகளாக புத்தாண்டு சிந்தனைகள் மலர்ந்திருக்கிறது ..பாராட்டுக்கள்..

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

G.M Balasubramaniam said...


Happy New Year toyou and your family.God bless you all.

middleclassmadhavi said...

Thanks.
Wish u a very happy new year!

Sasi Kala said...

அற்புதமான பகிர்வு தங்களுக்கும் தங்கள் குடுபத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Lakshmi said...

happy new year

s suresh said...

நல்லதொரு தொகுப்பு! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Ramani said...

அற்புதமான பதிவு
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Ramani said...

tha.ma 1

T.N.MURALIDHARAN said...

சிந்திக்க வைக்கும் பொன்மொழிகள்
நல்ல பகிர்வு

ஜீவி said...

புத்தாண்டு சிந்தனைகள் வித்தியாசமாகவும், புதுமையாகவும் இருந்தது.

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினரு க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், கோமதிம்மா.

Kanchana Radhakrishnan said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்த புத்தகத்திலிருந்து பகிர்ந்த பொன்மொழிகள் அனைத்தும் நன்று.

அம்மாவுடன் இருக்கும் படமும் அருமையான பகிர்வு.

குட்டன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Indhira Santhanam said...

நல்லதொரு புத்தாண்டுசிந்தனைகள் பகிர்வுக்கு நன்றி அம்மா.

ஸாதிகா said...

புத்தாண்டு சிந்தனைகள் அத்தனையும் அருமை.உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கோபிநாத் said...

அப்பா அம்மா இருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ;))

Ranjani Narayanan said...

நல்ல சிந்தனைகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளீர்கள்.
ஒவ்வொன்றும் ஒரு வைரம்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஹுஸைனம்மா said...

அம்மா அழகாகத் தொகுத்து வைத்திருக்கிறார்கள். நீங்க அதே அக்கறையொடு பாதுகாத்து வைத்திருக்கிறீர்கள். :-)))

எல்லாருக்கும் இனி இனிமையே வாய்க்கட்டும், இறைவனருளால்.

Avargal Unmaigal said...


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

கோமதி அரசு said...

வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க பாலசுப்பிரமணியம் சார் , வாழ்கவளமுடன் வாழ்த்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க மாதவி, வாழ்க வளமுடன் உங்களைப் பார்த்து வெகு நாட்கள் ஆகி விட்டது. உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க சசிக்கலா,வாழ்க வளமுடன்.உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க லக்ஷ்மி அக்கா, வாழ்கவளமுடன். உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க சுரேஷ், வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ரமணி சார், வாழ்கவளமுடன்.உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க முரளிதரன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ஜீவி சார், வாழ்க வளமுடன்.
புத்தாண்டு சிந்தனையில் புதுமையை ரசித்த உங்களுக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன், உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ராமல்க்ஷ்மி, வாழ்க வளமுடன்.
உங்கள் காமிராகண்கள் அம்மாவும், நானுமிருக்கும் படத்தைப் பார்த்து விட்டதே!

வாழ்த்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க குட்டன், வாழ்க வாளமுடன்.
உங்கள் முதல் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க இந்திராசந்தானம், வாழ்க வளமுடன். உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ஸாதிகா, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க கோபிநாத், வாழ்கவளமுடன். உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ரஞ்சினி நாராயணன், உங்கள் முதல் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க மதுரை தமிழன், வாழ்க வளமுடன். எனக்கும் மதுரை தான்.
உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன். எல்லோருக்கும் இனிமை வாய்க்க சொல்லும் உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்த புத்தகத்திலிருந்து பகிர்ந்த பொன்மொழிகள் அனைத்தும் நன்று.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

பகிர்வுக்கு நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

’அம்மாவும் நானும்’ என்ற அந்தக்கால புகைப்படத்தில் நீங்கள் குட்டியூண்டு குழந்தையாக இரண்டு பக்கமும் தலையில் பூ வைத்துக்கொண்டு ...

அது மிகவும் அழகாக உள்ளது.
மலரும் நினைவுகளை மீட்டுத்தரும்
புகைப்படத்தினை பகிர்ந்துள்ளது சிறப்பு.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

கோமதி அரசு said...

வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன். உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி.

மார்கழி மாதம் என்றால் அம்மாவின் நினைவுகள் என் மனதில் நிறைந்து இருக்கும். மலரும் நினைவுகளை ரசித்தமைக்கு நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புத்தாண்டு வாழ்த்துகள் :)
பொன்மொழிகளுக்கும் பொக்கிஷப் பகிர்வுக்கும் நன்றிம்மா..

கோமதி அரசு said...

வா முத்துலெட்சுமி, வாழ்க வளமுடன், புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அம்மாவின் பொன்மொழிகளிந்தொகுப்பு உற்சகத்தையும் நல்லெண்ணங்களையும் மனத்தில் பதிக்கிறது. அம்மாவின் வளர்ப்பே உங்களது நற்குண்த்துக்குக்காரணம்.
அழகான படம் அம்மாவுடன் நீங்கள் நிற்பது.
வாழ்க வளமுடன். இனிய புத்தாண்டு நற்சிந்தனைகளை வளர்க்கட்டும்.

கோமதி அரசு said...

வாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
அம்மா தொகுத்த பொன்மொழிகள் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.

புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி.

Asiya Omar said...

அருமை கோமதியக்கா.புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

வாங்க ஆசியா, வாழ்க வளமுடன்.
உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி.

மாதேவி said...

வாழ்த்துக்கு நன்றி.

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Seshadri e.s. said...

பொக்கிஷப் பதிவிற்கு நன்றி!

கோமதி அரசு said...

வாங்க மாதேவி, வாழ்கவளமுடன்.

உங்கள் புத்தாண்டு நல் வாழ்த்துக்கு நன்றி மாதேவி.

கோமதி அரசு said...

வாங்க சேஷாத்திரி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

rajalakshmi paramasivam said...

உங்களுடைய தொகுப்பு மிக அருமை.
படித்து மகிழ்ந்தேன் .
உங்களுடைய அடுத்த பதிவை படிக்க முடியவில்லை.
read more என்ற இடத்தில் க்ளிக் செய்தால் page not available என்று வருகிறது.
என் கணினியில் அப்படி தெரிகிறதா
புரியவில்லை.?


இந்த பகிர்வுக்கு நன்றி.

ராஜி

கோமதி அரசு said...

வாங்க ராஜலக்ஷ்மி பரசிவம், வாழ்க வளமுடன்.
புத்தாண்டு சிந்தனைகள் தொகுப்புக்கு பிறகு வேறு இன்னும் எழுதவில்லை. இன்று அல்லது நாளை அடுத்த பதிவு போடுவேன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராஜி.

Jaleela Kamal said...

pathivu padikkala

very cute little gomathi akkaa