வாழ்வில் இன்பமும், துன்பமும் கலந்து தான் இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுவது போல் நம் முன்னோர்கள் தமிழ்ப்புத்தாண்டில் இனிப்பு, கசப்பும் என்று எல்லா சுவைகளும் கலந்து உண்ணும் பழக்கத்தை வைத்து இருக்கிறார்கள். நம் உணவில் ஆறுசுவைகளும் இருக்க வேண்டும் என்பார்கள். அதை ஒழுங்காய் கடைபிடிப்பது தமிழ்ப்புத்தாண்டில் தான். இனிப்புக்கு வெல்லம் போட்ட அவல், புளிப்புக்கு மாங்காய் பச்சடி, கசப்புக்கு வேப்பம்பூ ரசம் என்று உணவில் சேர்த்துக் கொள்வார்கள்.
வெயில் காலத்தில் வேப்பமரத்தின் காற்று எல்லோருக்கும் மிக தேவையாக இருக்கிறது. கிராமப்புரத்தில் கோடைக்காலத்தில் வேப்பமரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடுவது, கயிற்றுக் கட்டிலை மரத்தடியில் போட்டு தூங்குவது என்று இயற்கையை ரசித்து அனுபவித்து வாழ்ந்து இருக்கிறார்கள்.
சித்திரை மாதத்தில், புளி, மாங்காய், மாம்பழம், பலா, வாழை மஞ்சள், இஞ்சி என்று எல்லாம் நிறைய கிடைக்கும். மக்கள் வருடத்திற்கு வேண்டியவைகளைப் பதப்படுத்தி சேமித்து வைத்துக் கொள்வார்கள். வேப்பம்பூ இப்போது தான் கிடைக்கும். அதைக் காயவைத்து, மோரில்உப்புடன் போட்டு வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக்கொள்வார்கள், அதன் மருத்துவப்பயன் அறிந்தமையால். வேப்பம்பூவை வெந்நீர் விட்டு டீ டிகாக்ஷன் போல் இறக்கி, தேன் அல்லது சர்க்கரை சேர்த்து குடித்தால், வாதம், பித்தம், அகலும். வாய்க்கு ருசி, வயிற்றுக்கு பசி ஏற்படும், சரும நோய்கள் விலகும் என்பார்கள்.
சித்திரை மாதம் வசந்தகாலம் என்பார்கள். இந்த சமயத்தில் பூக்கள், பழங்கள் , காய்கறிகள் என்று இயற்கை அள்ளி கொடுக்கும். அதைய நாம் இறைவனுக்கு நிவேதனம் செய்து வழிபட்டு எல்லோரும் நலமாக இருக்க வேண்டிக்கொள்ளலாம்
பழங்கள்:
சமைக்காத உணவுகளாக பழங்கள் பச்சைக் காய்கறிகள், சாப்பிடலாம். அந்தந்த சீஸனில் கிடைக்கும் பழங்களை உண்பது நல்லது. சமைக்காத உணவாக பழங்களை, பச்சைகாய்கறிகளை உண்ணலாம். இந்த சீஸனில் மா, பலா, வாழை பழங்கள், மற்றும் எல்லா பழங்களும் நிறையகிடைக்கும். “கனிகள் தின்னப் பிணிகள் போகும் என்பார்கள்.”
நாம் தமிழ்ப்புத்தாண்டில் இறைவனுக்கு என்று வழங்கும் பிரசாதங்கள் எல்லாம் என்ன பயன்களைத் தருகின்றன, உணவில் கசப்புச் சுவையை ஏன் கலந்து உண்ணச் சொல்கிறார்கள்? அதன் காரணம் என்ன?
நம் வீட்டை அலங்கரிக்கும் மாவிலை, வாழை மரத்தின் பயன்கள் என்ன என்பதையும் ஏன் அதை நம் முன்னோர்கள் பயன் படுத்தினார்கள் என்பதை எல்லாம் எளிய முறையில் பிணி அகற்றும் தெய்வீக மூலிகைகள் என்ற புத்தகம் மூலம் சொல்கிறார் Dr. C.K.திரு. மாணிக்கவாசகம். அவர்கள் எழுதியதைப் படித்தேன் அதில் சில பண்டிகைக்கு பயன்படுத்தப்படும் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்:-
பஞ்சபூதத்திற்கும் உரிய மூலிகைகள் :
நிலம் - அருகம்புல்
நீர் - மாவிலை,
நெருப்பு – வாழைஇலை
காற்று – வேப்பிலை.
ஆகாயம் – வெற்றிலை
அருகம்புல்:
அருகம்புல் பிள்ளையாருக்கு சமர்ப்பிக்கிறோம். அது நோய்களை நீக்கும் “ஆகாதது அருகம்புல்லில் ஆகும்”என்பது பழமொழி.வாரம் ஒரு முறை கஷாயம் வைத்து குடித்தால் வலியும், வியாதியும் இன்றி
வாழலாம். இரத்த அழுத்தம், சர்க்கரைவியாதி, தோல் நோய்கள், புற்று நோய், இதய நோய் போன்ற நோய்களையும் போக்கும் குணம் அருகம்புல்லுக்கு உண்டு.
மாவிலை:
மாவிலை கஷாயம் நீரின் மூலமாகப் பரவும் நோய்களைப் போக்குகிறது.கங்கை நீர் என்று கலசங்களில் நீரை எடுத்து
மாவிலை வைத்து கும்பாபிஷேகங்களிலும், புதுமனை புகுவிழாவிலும், மற்றும் விழாக்களிலும் வைத்து வணங்கி, அந்த நீரை மாவிலைகளால் தெளித்துத் தூய்மைப்படுத்தி, பின் மக்கள் மீதும் வீடுகள் மீதும் மற்றும் எல்லா இடங்களிலும், தெளிப்போம். தூய்மையான நீரை தெளித்து சுற்றுப்புறத்தை தூய்மை ஆக்கிறோம். வீட்டில் மாவிலை கட்டுவதும் காற்றில் உள்ள நீரைச் சுத்தப்படுத்துகிறது. மற்றும் சுற்றுப் புறத்தில் உள்ள நீர் நிலைகளையும் சுத்தம் ஆக்கும்.
வாழைமரம் கட்டும் காரணம் :
விஷமுறிவுக்கு வாழை என்பார்கள். திருமணம், கோயில் விழாக்கள் வாயில்களில் வாழை கட்டுவதற்கு காரணம், விழாக்களின் போது தீங்கு இழைக்க கூடிய ஜந்துக்களை விரட்டவும், தவறி விஷஜந்துக்கள்
தீண்டிவிட்டால் அவர்களுக்கு முதல் உதவி செய்ய வேறு எங்கும் தேடிக்கொண்டு இருக்காமல் உடனே அருகில் கட்டி இருக்கும் வாழை மரத்திலிருந்து வாழைப்பட்டையை எடுத்து தீமூட்டி அனலில் வாட்டி,வதக்கி சாறு எடுத்து அரை டம்பளர் உள்ளே கொடுத்து, பின் சாறு எடுத்து உடல் முழுக்க பூசிவிட்டால் விஷக்கடியிலிருந்து பிழைத்துக் கொள்வார்கள். இப்படிநல்லது கெட்டது என்று மக்கள் கூடும் இடங்களில் வாழைமரம் கட்டும் காரணம் இது தான் என்பார்கள். ஆதிகாலத்தில் வீடுகள் கோயில்கள் எல்லாம் காட்டுப் பகுதி சூழ்ந்த இடங்களில் தானே இருந்தன!
வேப்பிலை சக்தி கடவுளுக்கு மட்டுமல்ல, நம் உடலுக்கு வேண்டிய சக்திக்கும் தான். வேப்பிலை கஷாயம் அருந்தி வந்தால், உடலிலுள்ள நோய்க் கிருமிகள் அழிவதுடன் கிருமிகள் உற்பத்தி ஆகாமல் அன்றாட உடல் உறுப்பு தேய்மானத்தை தடுத்து உடலைப் புதுப்பிக்கிறது. பிணியின்றி வாழ வைக்கிறது. கசப்பு சுவை பிடிக்காது என்பதால் அதைச் சாப்பிடாதவர்
களுக்கு உடலில் இருக்கும், எலும்பு மூட்டுக்கள், பாதங்களின் தசைகள், பற்கள், என்று பல உறுப்புக்கள் தேய்மானம் ஆகிறது. கசப்பு உண்டு வந்தால், தேய்மானம் தடுக்கப் படுகிறது. பாவைக்காய், சுண்டைக்
காய், போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கடவுளுக்குப் படைப்பதற்கு மட்டும் அல்ல வெற்றிலை ,அறுசுவை உணவை அளவோடு உண்டபின் வெற்றிலை போட்டுக் கொள்வதால் உண்ட உணவு நல்ல முறையில் செரித்து உடலுக்கு சக்தி கிடைக்கும். அதனால்.இப்படி பண்டிகையில் சேர்த்து கொள்ளும் பொருட்கள் எல்லாம் காரண காரியமாய் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
இந்த நந்தன ஆண்டு, அச்சம், கவலை, நோய், நொடி முதலியவற்றை போக்கி மனநிறைவாய், மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும்.
எல்லோரும் எல்லா நலங்களும் பெற்று வாழ இந்த
இனிய புத்தாண்டில் வாழ்த்துகிறோம்.
வாழ்க வளமுடன்!
வாழ்க நலமுடன்.
புதிய தகவல்கள் அறிந்து கொண்டேன்...புத்தாண்டு வாழ்த்துகள்..
பதிலளிநீக்குபுத்தாண்டு பற்றி அறிப்படாத தகவல்கள் அறிந்து கொண்டேன்.நன்றி!உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக் கும் மனம் கனிந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்க்கள்! 'வாழ்க வளமுடன்!' பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும்!
பதிலளிநீக்குதாங்கள் கொடுத்திருந்த படம் மனசில் பல தத்துவ விளக்கங்களை பளிச்சிட்டுக் காட்டியது. பக்தி பவ்யமாக துலங்கியது.
//வேப்பம்பூ ரசம் என்று உணவில் சேர்த்துக் கொள்வார்கள்.//
எங்கள் வீட்டில் வேம்பம்பூவையும் வெல்லமிட்டு பச்சடி மாதிரி செய்து விடுவார்கள்.
//தெய்வீக மூலிகைகள் என்ற புத்தகம் மூலம் சொல்கிறார் Dr. C.K.திரு. மாணிக்கவாசகம்.//
ஒரு தடவை Dr. C.K.M.-மிடம் வைத்தியத்திற்காகப் போயிருந்த பொழுது மருந்தோடு மருந்தாக இந்தப் புத்தகத்தையும் தந்தார்கள். இன்றும் என் புத்தக சேமிப்பில் இருக்கிறது.
விவரமான பதிவிற்கு மிக்க நன்றி.
வாங்க பாசமலர், உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாங்க ஸாதிகா, உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குஜீ.வி சார், உங்கள் மனகனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குஎங்கள் வீட்டில் வெல்லம் போட்டு மாங்காய் பச்சடி செய்வதால் , வேப்பம்பூ ரசம் வைத்து விடுவார்கள்.
புத்தக சேமிப்பில் இருக்க வேண்டிய புத்தகம் தான் ”தெய்வீக மூலிகைகள்”
உங்கள் புத்தக சேமிப்பில் இருப்பது மகிழ்ச்சி.
கனிகள் தின்னப் பிணிகள் போகும்
பதிலளிநீக்குநிறைவான நந்தன புத்தாண்டு வாழ்த்துகள்...
நல்ல படங்களுடன் கூடிய அருமையான பதிவு.
பதிலளிநீக்குஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
அழகான விளக்கங்கள், தகவல்கள்.
பதிலளிநீக்கு/பஞ்சபூதத்திற்கும் உரிய மூலிகைகள்/
இப்போதுதான் அறிந்து கொள்ளுகிறேன். நன்றி.
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
புத்தம் புது தகவல்களுடன் புத்தாண்டு வாழ்த்துக்கள்! தங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநல்ல பகிர்வும்மா...
பதிலளிநீக்குநான் இங்கேயிருந்தே கைநீட்டம் செய்கிறேன்! ஏதோ பார்த்து கொஞ்சம் கொடுத்துடுங்க! :)
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பல புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். இனிய புது வருட வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅருமையான சில புதிய தகவல்கள்!!!!!
பதிலளிநீக்குஇந்தப்புத்தாண்டு தினத்தில் உங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.
அழகான விளக்கங்கள்.
பதிலளிநீக்குதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
அழகான புதிய தகவல்கள்
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
இன்றைய பதிவு50 தேடுஇயந்திரங்களில் உங்கள் பதிவுகளை இனைக்கலாம்
வாங்கா இராஜராஜேஸ்வரி, புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி.
பதிலளிநீக்குவாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் பாரட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குவாங்க ராமலக்ஷ்மி. உங்கள் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குவாங்க கே. பி. ஜனா, உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குவாங்க krishy, உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குவாங்க baleno, உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குவாங்க துளசி கோபால், இந்த புத்தாண்டில் உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.
பதிலளிநீக்குவாழ்த்துக்களுக்கு நன்றி.
வாங்க காஞ்னாராதாகிருஷ்ணன், உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குவாங்க வைரைசதிஷ், உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குவாங்க வெங்கட், உங்களுக்கு இல்லாத கைநீட்டமா!
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.தெரியாத நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு கோமதிக்கா.
பஞ்சபூத மூலிகைத்தகவல் நிச்சயம் புதுசுதான்..
பதிலளிநீக்குகனியும் கண்டாச்சு, கை நீட்டமும் எடுத்துக்கிட்டாச்சு. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
வாங்க ஆசியா, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
பதிலளிநீக்குவாங்க சாந்தி, கனி கண்டு கைநீட்டமும் எடுத்துக் கொண்டதற்கு மகிழ்ச்சி.
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி.
இனிய பகிர்வு.
பதிலளிநீக்குஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாங்க மாதேவி, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குபயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது.
பதிலளிநீக்குஎங்கள் வீட்டிலும் விஷூக்கனி கண்டாச்சு. பச்சடி, பாயசம் என புத்தாண்டு தினம் இனிமையாக கழிந்தது.
புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா.
அன்பு கோமதி இத்தனை விவரமாக அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். நேரம் கழித்துப் படித்தாலும் மனத்துக்கு இதமாக இருந்தது. வெற்றிலை,வேப்பில,மாவிலை நம்மைச் சுற்றி இருக்கும் நல்ல இயற்கையை மதிக்கக் கற்றுக் கொண்டால் எத்தனையோ நன்றக இருக்கலாம். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மனம்நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்மா.
பதிலளிநீக்குவாங்க வல்லி அக்கா, நீங்கள் சொன்ன மாதிரி இயற்கையை மதிக்கக் கற்றுக் கொண்டால் நலமாக வாழலாம்.
பதிலளிநீக்குஉங்கள் மனம்நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி.
சகோதரி இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅருமையான பதிவு. பல பல புதிய தகவல்கள்.
மிக மிக நன்றியும் வாழ்த்துகளும்.
வேதா. இலங்காதிலகம்.
வாங்க வேதா. இலங்காதிலகம், உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்கு