புதன், 21 டிசம்பர், 2011

திருக்கயிலை யாத்திரை -பகுதி -4

காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி!

7.09.11

இன்று காலை 7 மணியளவில் சாகாவிலிருந்து புறப்பட்டோம். வழி முழுதும்
மலைப்பாலைவனம் எனலாம். குடியிருப்புப் பகுதிகள் அநேகமாகஇல்லை எனலாம்.
சீனாவில் நெடுஞ்சாலைகள் நன்கு பராமரிக்கப்படுகின்றன. போக்குவரத்துக்குறியீடுகள்
சில இடங்களில் காணப்படுகின்றன. கைகாட்டிகளில் ஊர்ப்பெயர்கள் சித்திர எழுத்துக்களில் மட்டுமே உள்ளன. சீனமொழி என்றார்கள். ஆங்கிலப் பயன்பாடு எங்குமே இல்லை.
ஊர்களுக்கிடையே உள்ள தூரம் குறிக்கும் கற்கள் மிகச்சிலவே. எல்லா நெடுஞ்சாலைகளிலும்
ஆங்காங்கே கடல்மட்டத்திலிருந்து அந்த அந்த இடத்தின் உயர விவரங்கள் மீட்டர் அளவில் காணப்படுகிறது. வழியில் ஒரு சிறிய விடுதியில் காலை உணவு உண்டோம்.


மீண்டும் பயணம்.மதியத்தில் zhongba என்ற சிற்றூரை அடைநதோம். old drong payak hotel என்ற விடுதியில் மதிய உணவு உண்டோம்.வசதிகள் இல்லாத விடுதி.மண்விடுதி (mud house)
என்றுதான் சொல்ல வேண்டும்.(கயிலையிலிருந்து திரும்பிவந்த போது இங்கு ஓர் இரவு தங்கினோம்.)


பிற்பகல் 3 மணியளவில் பரியாங்(buryong) என்னும் ஊரைச் சென்றடைந்தோம்.சிறிய ஊர். வசதிகள் இல்லாத ஊர்.






அங்கு ”தேஜி ஓட்டல்”(deji hotel)என்னும் விடுதியில் தங்கினோம். அடிப்படை வசதிகள் சரியில்லை.அது ஒரு mud house.ஒரு சிறிய வளாகத்தில் விடுதி அமைந்துள்ளது.

அங்கு எங்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டன.ஆறு பேர்,4பேர்



எனத் தங்கும்
அறைகள் உள்ளன. இரவு நேரங்களில் வளாகத்தை விட்டு வெளியே செல்வது உசிதம் அல்ல. நாய்கள் நிறைய உள்ளன.எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.


08.09.11.


இன்று காலை பர்யாங்கிலிருந்து புறப்பட்டோம். அருமையான சாலை.
இருபுறமும் அருமையான மலைகள். 10 மணியளவில் ஓரிடத்தில் இறங்கி
உணவு உணடோம். புளியோதரை, வத்தக்குழம்பு சாதம் சாப்பிட்டோம்.









அங்கிருந்து பேருந்தில் ஒரு மேடு ஏறி இறங்கியதும் திருக்கயிலாய மலை கண்முன்
தோன்றியது. அப்போது எங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!
ஓம் நமச்சிவாயா! ஓம் நமச்சிவாயா! என எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். காவாய் கனக திரளே போற்றி ! கயிலை மலையானே போற்றி போற்றி!என பக்தி மேலிடக் கூறி கற்பூரம் ஏற்றி வழிபட்டோம். ”வேற்றாகி விண்ணாகி’ என்று தொடங்கும்
திருமுறைப் பதிகத்தைப் பாடினோம்.

திருக்கயிலையின் வெள்ளிமுடி தரிசனம் கிடைத்தது. மானசரோவர் ஏரியையும் அங்கு தரிசிக்க முடிந்தது. மானசரோவர் ஏரியில் கயிலை மலை காட்சி தெரிந்த்தது. பின்னர் பேருந்திலேயே மானசரோவரை வலம் வரத் தொடங்கினோம். சுற்றி வரும் போது கயிலை காட்சியை பார்த்துக் கொண்டே வந்தோம்.கயிலை காட்சி தந்தவுடன் என் மனதில் என் மாமனார் சிவபூசை செய்யும் போது பாடும் பாட்டு நினைவுக்கு வந்தது. கண்களில் நீர் துளிர்த்தது.

அந்தப்பாடல்:

மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான்
வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர்
இனத்தகத்தான் இமையவர் தஞ்சிரத்தின் மேலான்
ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதினுள்ளான்
பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றினுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத்து உச்சி யுள்ளான்
காளத்தியான் அவனென் கண்ணுளானே

-திருநாவுக்கரசர்.




35 கிலோமீட்டர் தொலைவிற்கு ஏரியைச் சுற்றிவர நல்ல மண்சாலை உள்ளது.







அப்போது ஓரிடத்தில் பேருந்தை நிறுத்தி மானசரோவர் ஏரியில் இறங்கி நீராடினோம். மிகக் குளிர்ந்த தெளிவான நீர். முதலில் தண்ணீரில் காலை வைத்தவுடன் ஜில் என்று ஜஸ் மாதிரி இருந்தது. ஏரியில் மூன்று முங்கு முங்கியவுடன் குளிர் இருந்த இடம் தெரியவில்லை. நீரில் மூழ்கியெழுந்து கயிலையைநோக்கித் தரிசித்தோம். நீரில் மூழ்கி மூர்த்தங்கள் சேகரித்தோம். கண்களை மூடிக் கொண்டு மூர்த்தங்களை எடுக்க வேண்டும்.( நீரில் உள்ள கற்களை மூர்த்தங்கள் என்பார்கள்.) கேன்களில் புனித நீரை சேகரித்துக் கொண்டோம்.

அங்கு திபத்திய பெண்கள் மணி மாலைகள் விற்க வருகிறார்கள். அவர்கள் நம்மிடம் பொட்டு. வளையல் , கேட்கிறார்கள். ஒரு பெண் என் காலில் உள்ள மெட்டியைப் பார்த்து அதை தா என்று கேட்டார்கள்.திருவாரூரிலிருந்து எங்களுடன் வந்தவர்கள் தன்னிடமிருந்த ஒட்டுப் பொட்டுகளை கொடுத்தார்கள். பின்னர் பஸ்ஸிலே ஏறி வலம் வருதலைத் தொடர்ந்தோம்.

மானசரோவர் ஏரியில் அன்னப்பறவைகள்? நீந்திக்கொண்டிருந்தன. சீகல் பறவைகள் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன. வலம் வரும்போது எங்கிருந்து பார்த்தாலும் கயிலையை நன்கு தரிசிக்க முடிந்தது. அவ்வப்போது மேகங்கள் அதைச் சூழ்ந்திருந்தன பின்னர் சூகேம்ப் என்னும் இடத்தில் இறங்கி ஒரு மண் விடுதியில் தங்கினோம்.


09.09.11

சூகேம்பிலிருந்து பார்த்தாலும் கயிலைமலை நன்கு தெரிந்தது. அன்று மாலைப் பொழுதில் இளம்வெயிலில் மானசரோவர் ஏரிக்கரையில் அமர்ந்து கயிலைமலையின் அழகையும், மானசரோவரின் அழகையும் கண்டு ரசித்தவண்ணமே இருந்தோம். எனினும் இந்த இடத்தில் ஏரியில் இறங்க முடியவில்லை. ஏரிக்குள் வேலி இடப்பட்டிருந்தது. குளிர்காலங்களில் ஏரி உறைந்து போய்விடுமாம். ஏரியின் மீது தரைப் போக்குவரத்து இருக்குமாம்.

மானசரோவர் நீர்ப்பரப்பில் நள்ளிரவு நேரங்களில் வானிலிருந்து நட்சத்திரங்கள் இறங்கி வரும் எனக்கூறுகிறார்கள். (தேவர்கள் முதலியோர் அந்த நேரங்களில் வருவார்கள் என்று புராணம் கூறுகிறது.) எங்களில் சிலர் அக்காட்சியைக்காண ஆவலாய் விழித்திருந்தார்கள் . எனினும் அன்று முன்னிரவிலிருந்தே பலத்த காற்றும்,நல்ல மழையும் இருந்தது. ஓயவேயில்லை. எனவே அந்த அரிய காட்சியைக்காணும் வாய்ப்பு கிட்டாமல் போய்விட்டது.

மறுநாள் மானசரோவர் ஏரிக்கரையில் வேள்வி செய்தோம். அதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

34 கருத்துகள்:

  1. மான்ஸரோவர் ஏரி பார்க்கக் கடலைப் போல இருக்கிறது. அழகும் கண்ணைப் பறிக்கிறது.

    “மணல் ஹோட்டல்” - நகரங்களில் இப்படி இருந்தால், “ஆண்டிக்” என்று சொல்லி கட்டணம் தீட்டி விடுவார்கள்.

    //நீரில் உள்ள கற்களை மூர்த்தங்கள் //
    இவை எதற்காக?

    பதிலளிநீக்கு
  2. மானசரோவர், கயிலை பார்க்கப் பார்க்க திகட்டாத ஒரு காட்சி....

    எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிம்மா...

    பதிலளிநீக்கு
  3. ஹீஸைனம்மா, உங்கள் முதல் வருகைக்கும் ஆழ்ந்து படித்து கேள்வி கேட்பதற்கும் மகிழ்ச்சி.

    திருக்கயிலை 2ம் பகுதியில் சாளக்கிரமங்கள் என்றால் என்ன என்று கேட்டீர்கள் அல்லவா? சாளக்கிரத்தை வீட்டில் பூஜையில் விஷ்ணுவாய் வைத்து வழிபடுவார்கள்.

    வீட்டில் மூர்த்தங்களை பூஜையில் வைத்து சிவனாய் வழிபடுவார்கள்.

    உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், இந்த மூர்த்தங்களை கொடுப்போம்.

    பதிலளிநீக்கு
  4. “மணல் ஹோட்டல்” - நகரங்களில் இப்படி இருந்தால், “ஆண்டிக்” என்று சொல்லி கட்டணம் தீட்டி விடுவார்கள்.//

    நீங்கள் சொல்வது சரிதான் ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  5. அருமை அருமை எல்லாமே அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

    உங்களுடனேயே திருக்கயிலை யாத்திரையின் பங்கு கொண்டது போல மகிழ்ச்சியாய் உள்ளது.

    தொடருங்கள்.

    வாழ்த்துகள்,
    பாராட்டுக்கள்,
    பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு.
    அருமையான படங்கள்.
    அற்புதமான விளக்கங்கள்.
    நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு
  7. ஆஹா அழகான புகைப்படங்களுடன் பயணம் பற்றிய தகவல் தந்தமை அருமை சகோ அருமை

    த.ம 3


    இன்று நமது தளத்தில்

    ஆட்டிறைச்சி குணங்கள் அறிந்துகொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
  8. அருமையான பதிவு.
    அருமையான படங்கள்.

    பதிலளிநீக்கு
  9. //திருக்கயிலாய மலை கண்முன்
    தோன்றியது. அப்போது எங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!//

    நிச்சயம் சிலிர்ப்பான அனுபவமாக இருந்திருக்கும். ஏரி, சூழ்ந்திருக்கும் மேகக்கூட்டம்.. படங்களில் அழகு அள்ளிக் கொண்டு போகிறது. அருமையான பகிர்வுக்கு நன்றி. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  10. வாங்க வெங்கட், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வாங்க கோபலகிருஷ்ணன் சார்,
    உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வாங்க ரத்னவேல் சார், உங்கள் வருகைக்கும் ,பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வாங்க M.R, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வாங்க மாலதி, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வாங்க ராமலக்ஷ்மி,
    உண்மையில் சிலிர்ப்பு தான் ஏற்பட்டது, முதன் முதலில் கயிலை காட்சி தெரிந்த போது.
    நீங்கள் சொல்வது போல் அனுபவம் மிக சிலிர்ப்பானது தான்.

    வானமும் பூமியும் இணைந்த மாதிரி தான் இருக்கும். பார்க்க பார்க்க தெவிட்ட வில்லை.
    நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  16. கூடவே வந்துகிட்டிருக்கேன்.. கயிலை யாத்திரையில். போட்டோஸ் எல்லாம் சூப்பர்.
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  17. வாங்க ரிஷபன், கயிலை யாத்திரையில் கூடவே வருவது மகிழ்ச்சி தருகிறது.

    உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. எங்களையும் உடன் அழைத்துப் போகிற மாதிரி... அழகான வர்ணனை. அந்தப் படங்கள்!

    பதிலளிநீக்கு
  19. மானசரோவரில் இருந்து கயிலையை தர்சிக்க முடிந்தது.

    கயிலை நாதன் அருளுடன் மலரும் புதுவருடம் உங்களுக்கு இனிய புத்தாண்டாக அமையும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. வாங்க கே.பி ஜனா, உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. கயிலை நாதன் அருளுடன் மலரும் புதுவருடம் உங்களுக்கு இனிய புத்தாண்டாக அமையும். வாழ்த்துகள்.//

    வாங்க மாதேவி, உங்கள் வாழ்த்து மனதில் உற்சாகத்தையும், மகிழ்வையும் தருகிறது.

    உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. "First sight of Kailash'- என்று சுட்டியிருக்கிற படத்தைப் பார்க்கும் பொழுதே உங்கள் குழு எப்படிப் பட்ட உணர்வில் ஆட்பட்டிருப்பர் என்று தெரிகிறது. பர்யாங்கிலிருந்து நீங்கள் புறப்பட்டதுமே, இந்த எதிர்ப்பார்ப்பு எங்களையும் ஆட்கொள்கிறது.
    திருக்கயிலையின் வெள்ளிமுடி தரிசனம் பெற்ற பொழுது உணர்வுப் பிழம்பாய் தான் இருந்திருக்க முடியும். அந்தப் பேற்றை பெற்றவுடனே, மிகப் பொருத்தமாக

    '...புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதினுள்ளான்; பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றினுள்ளான்;
    கனத்தகத்தான் கயிலாயத்து உச்சி யுள்ளான்; காளத்தியான் அவனென் கண்ணுளானே..' என்கிற நாவுக்கரசரின் பாடல் உங்கள் நினைவுக்கு வந்ததைப் படிக்கும் பொழுது மனம் நெகிழ்கிறது.

    படத்தைப் பார்க்கும் பொழுதே தெரிகிறது. மானசரோவர் ஏரி அற்புத அனுபவம். அதுவும்,

    '..ஏரிக்குள் வேலி இடப்பட்டிருந்தது. குளிர்காலங்களில் ஏரி உறைந்து போய்விடுமாம். ஏரியின் மீது தரைப் போக்குவரத்து இருக்குமாம்.' என்று படிக்கும் பொழுது நட்சத்திர கதை கேட்ட உணர்வு கலைந்து யதார்த்த உண்மைகள் பிரமிக்க வைத்தது.

    இவ்வளவு சிறப்பாக இந்தக் கட்டுரையைக் கொண்டு போவதற்கு ரொம்பவும் நன்றி. கரும்பு தின்ன கசக்குமோ?.. கூடவே வருகிறோம்.

    பதிலளிநீக்கு
  23. மிகவும் மகிழ்கிறேன், இன்றைய வலைச்சரத்தின் மூலமாக இங்கு வந்தேன்.,

    யாத்திரை நடந்தவிதத்தை தாங்கள் எழுதி உள்ள விதம் என் யாத்திரை நினைவுகளை மீண்டும் மீண்டும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றது.,

    அடுத்த இடுகைக்காக பொறுமையாக காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. வாங்க ஜீவி சார், நீங்கள் சொன்ன மாதிரி நாங்கள் எல்லாம் வெள்ளிமுடி தரிசனம் பெற்ற பொழுது உணர்வுப் பிழம்பாய் தான் இருந்தோம்.

    உங்கள் விரிவான பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

    வலைச்சர ஆசிரியர் பொறுப்பு மேற்கொண்டு இருப்பதால் கால தாமதம் ஆகிவிட்டது பதில் அனுப்ப.

    பதிலளிநீக்கு
  25. வாங்க நிகழ்காலம், நீங்களும் கயிலை நாதரை தரிசித்து வந்தீர்களா?, மகிழ்ச்சி.
    அனுபவங்களை பகிர்ந்து விட்டீர்களா?

    உங்கள் வரவுக்கும், காத்திருப்புக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. சீனாவுக்குள் நானும் நுழைந்து விட்டேன் தங்கள் பதிவு மூலமாக.

    எங்கும் உறைபனியை பார்க்க முடியவில்லையே !
    வர்ணனைகள், எளிமையில் இனிமை. தொடரக் காத்திருப்போம்.
    புத்தாண்டு வாழ்த்துகள்
    நன்றி

    பதிலளிநீக்கு
  27. படத்தைப் பார்க்கும் பொழுதே தெரிகிறது. மானசரோவர் ஏரி அற்புத அனுபவம். கயிலை தரிசனம் உக்காந்த இடத்திலேயே செய்யும்படி இருக்கு பகிர்வு. நன்றி

    பதிலளிநீக்கு
  28. வாங்க கபீரன்பன், உறைபனி தூரத்தில் சிகரங்களில் காணபட்டது.

    குளிர் காலத்தில் மானஸரோவர் ஏரி பனியால் உறைந்து தரை வழி போக்கு வரத்து நடை பெறும்.

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வாங்க லக்ஷ்மி அக்கா, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. கடும்குளிரினால் கணினி பக்கமே வரமுடியவில்லை அம்மா. தங்களது வலைச்சரப் பணி சிறப்பாக இருந்தது. என்னையும் குறிப்பிட்டதற்கு நன்றி.

    படங்களுடன் மானசரோவர் ஏரியும், திருக்கயிலாயத்தின் தரிசனமும் அற்புதமாக இருந்தது. தங்களால் நாங்களும் காணும் பேறு பெற்றோம்.
    தாங்கள் எனக்கு தந்த ”மூர்த்தத்தை” பூஜையறையில் வைத்து வழிபடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  31. கடுங்குளிரிலும் வந்து பின்னூட்டம் கொடுத்தற்கு நன்றி ஆதி.

    ”மூர்த்தத்தை” வைத்து வணங்குவது அறிந்து மகிழ்ச்சி. கயிலை நாதர் எல்லா வளங்களும், எல்லா நலமும் அருளுவார் ஆதி.

    பதிலளிநீக்கு
  32. வாங்க தாமோதரன், உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
    திருக்கயிலை 6 பகுதி எழுதி இருக்கிறேன். முக்தி நாத் கோயில் பற்றியும் எழுதி இருக்கிறேன்.
    முடிந்தால் படித்துப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  33. தொடர்ந்து எழுதி வைங்கம்மோய்...

    படங்களில் உள்ள மேக மூட்டம் அள்ளுது போங்க. எஞ்சாய்ட் :)

    பதிலளிநீக்கு