திங்கள், 15 நவம்பர், 2010

கன்னடிய பெருமாள் கோவில்






இத் திருக்கோவில் பழனியிலிருந்து தெற்கு திசையில் கொடைக்கானல் செல்லும் பாதையில் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.மக்கள் அதிகம் செல்லாத சிறு திருக்கோவில்.இக் கோவில் ஒரு பெரிய பாறையின் மீது உள்ளது. இதை சிறு குன்று என்றும் சொல்லலாம்.பொதுவாக மலையின் மீது முருகனுக்கு தான் இருக்கும்.இங்கு பெருமாள் இருக்கிறார்.முற் காலத்தில் இத் திருக் கோவிலை அடையாளம் கண்டு செல்வது கடினமாக இருந்ததாம். பழனியிலிருந்து கொடைக்கானலுக்கு சாலை வசதி செய்யப்பட்ட பின் இப்போது எளிதாகி விட்டது.கொடைக்கானல் செல்லும் பேருந்தில் ஏறி ஆசிரமம் என்னும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஆசிரமத்திற்கு எதிர் திசையில் ஒரு கிலோமீட்டர் மண் சாலையில் செல்ல வேண்டும்.வழியில் பாலம் இல்லாத ஓடையை கடக்க வேண்டும்.கார்,ஆட்டோவிலும் செல்லலாம்.மழைகாலங்களில் செல்வது கடினம். ஓடையில் தண்ணீர் போகும் .நாங்கள் ஆட்டோவில் சென்றோம்.கோவிலை சுற்றிலும் வயல்களும் நீர் நிலைகளும் காட்டு பகுதிகளும் அமைந்து அழகாகவும் அமைதியாகவும் இருக்கிறது.அருகில் எந்த ஊரும் கிடையாது.கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு வீடும் கிடையாது.

இந்த சிறிய கோவிலை கண்ணாடி பெருமாள் கோவில் என்றும் சிலர் கூறுகிறார்கள். கோவில் முன்னே நெடிய விளக்கு தூணைக் கொண்ட மண்டபம் உள்ளது.கோவிலின் முகப்பு பகுதி பழமையான ஓட்டு கட்டிடமாக இருக்கிறது.உள்ளே சிறிய பிரகாரம் அமைந்துள்ளது.நடுவில் உயர்ந்த மேடையில் ஏறி சென்றால் ஒரு முன் மண்டபமும் உள்ளே கருவறையும் இருக்கிறது.மிக சிறிய வடிவில் பெருமாள் இருக்கிறார் அருள்பாலித்துக் கொண்டு.

இக் கோவில் நாயக்கர் மன்னர்கள் காலத்தில் சிறப்போடு இருந்தாக கூறப்படுகிறது.

தினமும் ஒரு வேளை பூசை நடைபெறுகிறதாம்.ஒரு பூசாரி சற்று தொலைவில் உள்ள ஒரு ஊரிலிருந்து வந்து பூசை செய்து விட்டு உடனே போயவிடுகிறார்.சனிக்கிழமை காலை 10 மணி அளவில் சிறப்பாக பூசை நடை பெறுகிறது. இக் கோவிலுக்கு சனிக் கிழமை காலை செல்வது தான் நல்லது.

நாங்கள் சென்றபோது பூசாரி இல்லை, இப்போது தான் பூசை முடித்து போனார்.என்று காரைக்காலிலிருந்து அடிக்கடி அந்த கோவிலுக்கு வரும் ஒரு அடியார் சொன்னார்.நாங்கள் வெளியூரிலிருந்து வந்து இருக்கிறோம் என்று சொன்னவுடன் பக்கத்தில் இருந்த பெரியவர் கதவின் ஓட்டை வழியாக பாருங்கள் என்றார்.நாங்கள் பார்த்தோம் வெறும் புகை மண்டலமாக இருந்தது.கவலை தோய்ந்த முகமாய் நாம் நிற்பதைப் பார்த்து கன்னடிய பெருமாள் அந்த பெரியவர் மனதில் புகுந்து கதவை திறக்க வைத்தார்.என்னிடம் சாவிக் கொடுத்து போய்விடுவார் என்று சொல்லி நீங்கள் வெகு தொலைவிலிருந்து வருகிறீர்கள் பெருமாளைப் பார்க்காமல் போக வேண்டாம் வாருங்கள் என்று திறந்தார் சினிமாவில் சாமி காட்சி கொடுக்கும் போது முதலில் புகை மண்டலம் வந்து பின் சாமி காட்சி கொடுப்பது போல் வெண்புகையாய் இருந்த்து.பூசாரி பூசைமுடிந்தபின் சாம்பிராணி புகைப் போட்டு பின் கதவை மூடி போவாராம்.
கொஞ்ச நேரம் புகை எல்லாம் அடங்கிய பின் பெருமாள் காட்சிக் கொடுத்தார்.
நல்ல தரிசனம் செய்து மனமகிழ்ச்சியுடன் திரும்பி வந்தோம்.

நீங்கள் போவதாய் இருந்தால் போக வசதியாய் பூசாரியின் போன் நம்பர் வாங்கி வந்தேன்
பாலசமுத்திரம் வீரமணி பூசாரி
செல் நம்பர்- 9965305724

பழனி சென்றால் போய் வாருங்கள் இயற்கையை ரசிக்கலாம்.பெருமாளை வணங்கலாம்.
குழந்தைகளுக்கு பாறையில் (சாய்வாய் இருப்பதால்)ஏறி இறங்க பிடிக்கும்.

16 கருத்துகள்:

  1. புதியதொரு இடத்தினை தெரிந்து கொண்டேன் அம்மா. பகிர்வுக்கு நன்றி. மலையின் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. கோயில் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி அம்மா. அருமையான புகைப்படங்கள்.

    பதிலளிநீக்கு
  3. இது வரை தெரியாத கோவில்.. சான்ஸ் கெடைச்சா போயிட்டு வர வேண்டியதுதான்.. வழக்கம் போல நன்றி.

    பதிலளிநீக்கு
  4. சாமி காட்சி தந்த காட்சியை விவரித்த வித ம் நினைத்துப்பார்த்தேன் புதிய அனுபவம் தான்.

    பதிலளிநீக்கு
  5. சாமி காட்சி தந்த காட்சியை விவரித்த வித ம் நினைத்துப்பார்த்தேன் புதிய அனுபவம் தான்.

    பதிலளிநீக்கு
  6. இறை தரிசனம் பகவான் மனம் வைத்தாலே கிடைக்கும் என்பார்.

    //கன்னடிய பெருமாள் அந்த பெரியவர் மனதில் புகுந்து கதவை திறக்க வைத்தார்.//

    அற்புதம்.

    கோவிலைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. புதிய ஒரு கோவிலை பற்றி அறிந்து கொண்டோம். சந்தர்ப்பம் கிடைக்கும் போது சென்று வருகிறோம். நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு
  8. சான்ஸ் கிடைத்தால் போய் வாருங்கள் மாதவன்.நன்றி.

    பதிலளிநீக்கு
  9. ஆம்,முத்துலெட்சுமி புது அனுபவம் தான்.

    பதிலளிநீக்கு
  10. //இறை தரிசனம் பகவான் மனம் வைத்தாலே கிடைக்கும் என்பார்//

    ஆம் ராமலக்ஷ்மி, உண்மை.

    அவனருளாலே அவன் தாள் வணங்கி என்று மாணிக்கவாசக சுவாமிகளும் கூறுகிறார்.

    முயற்சி மட்டும் தான் நம்முடையது
    மற்றவை அவர் கருணை.

    பதிலளிநீக்கு
  11. சந்தர்பம் கிடைக்கும் போது போய் வாருங்கள் கோவை2தில்லி.

    உங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. //கோவில் முன்னே நெடிய விளக்கு தூணைக் கொண்ட மண்டபம் உள்ளது.//
    தூணிலும் துரும்பிலும் இருப்பவன் அவன்!!
    தாயார் சந்நிதி கிடையாதா? ;-)
    கண்ணாடி பெருமாள் இயற்கையோடு அருள்பாலிக்கிறான். அவன் நினைத்தால் நானும் பார்க்கலாம். பார்க்கலாம்!
    தகவலுக்கு நன்றி. ;-)

    பதிலளிநீக்கு
  13. RVS, தாயார் சன்னதி கிடையாது.

    தூணிலும்,துரும்பிலும் இருப்பவன் நினைத்தால் நீங்கள் நிச்சியம் பார்க்கலாம்.

    நன்றி உங்கள் வருகைக்கு.

    பதிலளிநீக்கு
  14. இயற்கைசூழ பெருமாள் அமர்ந்திருப்பது பார்க்கவே மிகவும் நன்றாயிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. இயற்கை எழில் கொஞ்சும் சூழலும்,அமைதியும் குடிக் கொண்ட இடம் கன்னடிய பெருமாள் இருக்கும் இடம் மாதேவி.

    பதிலளிநீக்கு