//வாழ்க்கைத் துணை-இறைவன் கொடுத்த வரமே:
தனக்குக் கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி தம்பதியர் யாருக்கும் குறையிருக்கத் தேவையில்லை.”பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டார்கள்,பிடாரியைக் கட்டி வைத்து விட்டாகள்”
என்பனவெல்லாம் அறியாமையே. அவரவர்களுடைய அடிமனமே வாழ்க்கைத துணைவரைத் தேர்ந்தெடுக்கிறது. அவரவர்கள் மனத்தின் தரத்தைக் கொண்டு அவர்களுக்கு வாழ்நாளில் என்னென்ன இன்பம்,துன்பம் வர வேண்டுமோ அதற்குச் சரிபங்கேற்க ஒரே ஒருவரால் தான் முடியும்.அந்த ஒருவரை அவரவர் அடிமனமே தேர்ந்தெடுக்க அது பல் பேர் மனதில் பிரதிபலிக்க,மற்றவர்கள் வெறும் கருவிகளாகத் திருமணத்தை நடத்திவைப்பார்கள்.இதையே”
’மனம்போல் மாங்கல்யம்’ என்றும் ‘திருமணம் சொர்க்கத்தில் நிச்சியிக்கப்ப்டுகிறது’என்றும்
கூறுவர்.சொர்க்கம் என்பது சுவர்+அகம்.’சுவரென்றால் உயிர்;’அகம்’என்றால் உள்ளம்,அடிமனம்.இந்த தத்துவத்தைப் புரிந்து கொண்டு வாழ்க்கைத் துணைவருக்குத் தகுந்த மதிப்பளித்து வாழ வேண்டும். தமிழர்கள் உயர்ந்த பண்பாட்டிலே வாழக் கூடியவர்களாக இருப்பதால்தான் துணைவியைத் ‘தேவி’என்று அழைக்கும் வழக்கம் இங்கே,தமிழ்நாட்டிலே ஏற்பட்டது.’தெய்வி’என்ற வார்த்தையே மருவி’தேவி’என ஆயிற்று. தெய்வமே என்று அழைப்பதற்குப் பதிலாக தெய்வி;அதே போல் வாழ்க்கைத்துணைவரை
‘தெய்வா’என்பது ‘தேவா’என்று ஆயிற்று. இதை தமிழ் நூல்களில் பார்க்கிறோம்.
இருவர் இணைய சமுதாய ஒப்புதல்:
மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஒத்துக்கொள்ளவேண்டும். அதாவது பொருத்தம் இருக்க வேண்டும்.அதன் பிறகு மணமக்களின் பெற்றோர்கள் அனுமதி கொடுக்க வேண்டும்.ஏன்?இது வரைக்கும் அவர்களை வளர்த்து ஆளாக்கி வேண்டியவற்றை யெல்லாம் செய்து வந்ததால் அவர்களுடைய நன்மையைக் கருதக் கூடியவர்கள் பெற்றோர்கள் அல்லவா? ஆகையால் பெற்றோர்கள் ஒப்புக்கொள்ள் வேண்டும்.அடுத்துச் சமுதாயம் சாட்சியாக அமைய வேண்டும்.இந்த மூன்றும் திருமணச்சடங்குகளில் உள்ள முக்கியமான் அம்சமாகும்.இன்றைய சமுதாய அமைப்பினிலே பல்வேறு விதமான திருமண முறைகள் இருப்பினும் மணமக்கள் திருமண மேடையில் சுற்றி வரும்போது சமுதாயத்திலே இன்னார் பெண்,இன்னார் பிள்ளை,இவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக பார்த்துக் கொள்கிறார்கள்.அதற்குப்பின் பெற்றோருக்கு பாதபூஜை செய்யும் சடங்கு மூலமாகப் பெற்றோர்கள் அனுமதி அளித்தார்கள் என்று அர்த்தம். பிறகு இரண்டு பேரும் ஒருவரை யொருவர் ஒத்துக்கொண்டார்கள் என்று அர்த்தம்.ரிஜிஸ்தர் ஆபீஸில் கூடப் பதிவுத் திருமணம் எனற முறையில் படிக்கப்ப்டுகிறது. அதாவது இன்னார் பிள்ளையை நான் கணவனாக ஏற்றுக்கொள்கிறேன் என்று பெண் படிக்கவும், அதேபோல் மாப்பிள்ளையானவன் இன்னார் மகளை நான் மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன் என்று படித்துவிட்டுப் பின் இருவரும் கையெழுத்துப் போடுகிறார்கள்.இதற்கு எல்லாம் ஈடாகச் சடங்குளிலேயே வைத்துள்ளார்கள.//
இவ்வாறு அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி திருமணத்தைப் பற்றி சொல்கிறார்.
வாழ்க்கைத் துணை இறைவன் கொடுத்த வரமாகவும் ,சமுதாய ஒப்புதலுடனும், எனக்கு பிப்ரவரி 7ம் தேதி திருமணம் நடந்தது.
திருமணநாள் அன்னிக்கி எங்களை எல்லாம் வாழ்த்துங்க கோமா அம்மா.
பதிலளிநீக்கு/.’தெய்வி’என்ற வார்த்தையே மருவி’தேவி’என ஆயிற்று. தெய்வமே என்று அழைப்பதற்குப் பதிலாக தெய்வி;அதே போல் வாழ்க்கைத்துணைவரை
பதிலளிநீக்கு‘தெய்வா’என்பது ‘தேவா’என்று ஆயிற்று. /
ஓ..இதுதானா விஷயம். :-) தெரியவைச்சதுக்கு நன்றி!
முதலில் திருமணநாள் வாழ்த்துக்களை சொல்லி உங்கள் இருவரின் ஆசிகளையும் வாங்கிக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குவாழ்க்கை துணைநலம் பற்றிய அருமையான பகிர்வுக்கும் நன்றிம்மா.
சின்ன அம்மிணி,
பதிலளிநீக்குஉங்கள் எல்லோருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள்...:)
பதிலளிநீக்குமுல்லை,எங்கே இரண்டு பதிவு பக்கம்
பதிலளிநீக்குகாணோம்? இந்த பதிவுக்கு வந்ததற்கு
நன்றி.
ராமலக்ஷ்மி,வாழ்த்துக்கு நன்றி.
பதிலளிநீக்குஎங்கள் இருவரின் ஆசிகள்,வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்.
ஆகா..ஆகா...அதான் விஷயமா!!!!
பதிலளிநீக்குசூப்பரு ;))
\\சின்ன அம்மிணி said...
திருமணநாள் அன்னிக்கி எங்களை எல்லாம் வாழ்த்துங்க கோமா அம்மா.
\\
ரீப்பிட்டே ;))
திர்மணத்துக்கு நல்ல விளக்கம்
பதிலளிநீக்குவாழ்த்து கேட்டு வாழ்த்துகிறோம்
கோபி,எங்கள் வாழ்த்துக்கள்:
பதிலளிநீக்குவாழ்வில் எல்லா வளங்களும்,எல்லா நலங்களும் பெற்று வாழ்வாங்கு வாழுங்கள்.
முத்துலெட்சுமி,வாழ்த்துக்கு நன்றி.
பதிலளிநீக்குஉங்களுக்கும் வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கு நன்றி,கோமா.
பதிலளிநீக்குஉங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்!!
நல்லதொரு பதிவு, இறைவனால் நிர்ணயிக்கப்பட்டதுதான் நமக்கு கிடைக்கும் கிடைத்ததை நல்லமுறையில் கையாளவேண்டும்..
பதிலளிநீக்குஎந்தளங்களுக்கு வந்துசென்றமைக்கு மிக்க நன்றிகள் கோமதிமேடம், தொடர்ந்து வாருங்கள்.
//நல்லதொரு பதிவு,இறைவனால் நிர்ணயிக்கப் பட்டது தான் நமக்கு கிடைக்கும் கிடைத்தை நல்ல முறையில் கையாள வேண்டும்.//
பதிலளிநீக்குநன்றாக சொன்னீர்கல் மலிக்கா.
வாழ்க்கையிலே மேம்பாடாக,
நற்றுணையாக மதிக்க வேண்டியது,கணவனை மனைவியும்
மனைவியை கணவனுமே.எனவே ஒவ்வொருவரும் கணவன் மனைவி உறவை உயிருக்கு மேலானதாக மதித்துப் போற்ற வேண்டும்.
நீங்கள் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
//நல்லதொரு பதிவு,இறைவனால் நிர்ணயிக்கப் பட்டது தான் நமக்கு கிடைக்கும் கிடைத்தை நல்ல முறையில் கையாள வேண்டும்.//
பதிலளிநீக்குநன்றாக சொன்னீர்கள் மலிக்கா.
வாழ்க்கையிலே மேம்பாடாக,
நற்றுணையாக மதிக்க வேண்டியது,கணவனை மனைவியும்
மனைவியை கணவனுமே.எனவே ஒவ்வொருவரும் கணவன் மனைவி உறவை உயிருக்கு மேலானதாக மதித்துப் போற்ற வேண்டும்.
நீங்கள் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
//அவர்களுடைய நன்மையைக் கருதக் கூடியவர்கள் பெற்றோர்கள் அல்லவா? ஆகையால் பெற்றோர்கள் ஒப்புக்கொள்ள் வேண்டும்.அடுத்துச் சமுதாயம் சாட்சியாக அமைய வேண்டும்.//
பதிலளிநீக்குநம் நல்லது, கெட்டதுகளில் பங்கு வகிக்கும் பெத்தவங்களும், உறவினர்களும் கூட வாழ்த்தணும் இல்லையா? ஒரு புது வாழ்வு ஆரம்பிக்கும்போது எல்லார் மனமும் மகிழ்வுற்று வாழ்த்தினால் நமக்கும் நிம்மதிதானே?
அழகாச் சொல்லிருக்கீங்க அக்கா.
//ஒரு புது வாழ்வு ஆரம்பிக்கும் போது எல்லார் மனமும் மகிழ்வுற்று வாழ்த்தினால் நமக்கு நிம்மதிதானே?//
பதிலளிநீக்குஆம் சகோதரி,நீங்கள் சொல்வது போல் புது வாழ்வு ஆரம்பிக்கும் போது எல்லார் மனமும் மகிழ்வுற்று வாழ்த்தினால் வாழ்வில் எல்லா வளமும் ,நலமும் பெருகும்.
திருமண நாள் வாழ்த்துக்களம்மா!! :-)
பதிலளிநீக்குதிருமண நாள் வாழ்த்துகளுடன் ஆசிர்வாதங்களை பெற்று கொள்கிறேன்மா. :)
பதிலளிநீக்குதெகா,
பதிலளிநீக்குவாழ்த்துக்களுக்கு நன்றி.
ஆதவன்,
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி.
எங்கள் ஆசிர்வாதங்கள்.
வாழ்க வளமுடன்.
//முதலில் திருமணநாள் வாழ்த்துக்களை சொல்லி உங்கள் இருவரின் ஆசிகளையும் வாங்கிக் கொள்கிறேன்//
பதிலளிநீக்குஉங்களுடைய ஊர் சங்கரன்கோவிலா மேடம்??
பாண்டி,
பதிலளிநீக்குஉங்களுக்கு எங்கள் ஆசிகள்.
உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
என் பெயரைப் பார்த்து சங்கரன் கோவிலா என்று கேட்கிறீர்களா?
இல்லை.
அன்பு கோமதிக்கு,
பதிலளிநீக்குஇனிய திருமண நன்னாள் வாழ்த்துகள். இல்லறத்தைப் பற்றி நீங்கள் எழுதிர்யிருப்பது மிகவும் அருமை.
சலனமில்லாத நீரோடையாக உங்கள் இல்லறம் இருக்கும் என்று நம்புகிறேன். மனம் புரிந்த பின் மணம் புரிவது இனிமை. நன்மக்களை ஈவதும் இந்த நல்லறத்திலே தான்.
ஆகையால் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் உங்களுக்கு ஒரு நாள் பிந்தங்கி வாழ்த்துஷ் சொல்கிறேன். எங்கள் ஆசிகளும் வாழ்த்துகளும்.
அன்பு வல்லி அக்கா,
பதிலளிநீக்குஉங்கள் கருத்து அருமை. அழகாக சொல்லிவிட்டீர்கள்.
வாழ்த்துக்கும்,ஆசிகளுக்கும் நன்றி.
திருமணநாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி,மாதேவி.
பதிலளிநீக்குதிருமணநாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி,கண்மணி.
பதிலளிநீக்கு//’தெய்வி’என்ற வார்த்தையே மருவி’தேவி’என ஆயிற்று. தெய்வமே என்று அழைப்பதற்குப் பதிலாக தெய்வி;அதே போல் வாழ்க்கைத்துணைவரை
பதிலளிநீக்கு‘தெய்வா’என்பது ‘தேவா’என்று ஆயிற்று//
ஆஹா.... மிக மிக அருமையான விளக்கம் கோமதி மேடம்...
நீங்கள் சொல்லாமல் எங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை... நன்றி...
உங்களுக்கு என் மனம் கனிந்த இனிய திருமண நாள் வாழ்த்து கூறி உங்கள் பதில் ஆசிகளுக்காக காத்திருக்கிறேன்...
வாழ்த்துக்கு நன்றி கோபி.
பதிலளிநீக்குஎங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு.
வாழ்க வளமுடன்!
வணக்கம்
பதிலளிநீக்குஅம்மா.
""""திருமணம் சொர்க்கத்தில் நிச்சியிக்கப்ப்டுகிறது’என்றும்
கூறுவர்.சொர்க்கம் என்பது சுவர்+அகம்.’சுவரென்றால் உயிர்;’அகம்’என்றால் உள்ளம்,அடிமனம்.இந்த தத்துவத்தைப் புரிந்து கொண்டு வாழ்க்கைத் துணைவருக்குத் தகுந்த மதிப்பளித்து வாழ வேண்டும்"""
மிகச் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் அம்மா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி திருமணத்தைப் பற்றி சொல்கிறார்.
பதிலளிநீக்குஅருட்தந்தையின் அழகான வரிகள் அருமை..!