அன்பான கணவர் பேரனுடன். மகன் அனுப்பிய படம்
வெளி நாட்டில் நன்றி தெரிவிக்க ஒரு நாள் வைத்து இருக்கிறார்கள். நம் நாட்டு தை பொங்கல் போன்ற நாள்.
உறவுகளுடன் கொண்டாடும் நாளாம். விடுமுறை நாள் அவர்களுக்கு.
Happy Thanksgiving
Day Aachi!
பேரன் எனக்கு சொல்லி இருக்கிறான் இன்று.
பேரன் "வாழ்க்கை என்றால் என்ன தெரியுமா ஆச்சி" என்று கேள்வி கேட்டு விட்டு பதிலை அவனே சொல்வான். நன்றி சொல்வது தான் என்பான்.
என் கணவர் என்னை விட்டு பிரிந்த இந்த ஒரு வருட காலத்தில் எனக்கு உறுதுணையாக இருக்கும் என் பிள்ளைகள், பேரன்கள், பேத்தி, மற்றும் நண்பர்கள், உறவினர்கள், இருபக்க உடன்பிறந்தவர்கள் என்று எல்லோருக்கும் நானும் இன்று நன்றி தெரிவித்து கொள்கிறேன்.