வீட்டுக்குள் வந்த பெண் குயில். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீட்டுக்குள் வந்த பெண் குயில். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

வீட்டுக்கு வந்த பெண்குயில்

 மதியம் வீட்டுவேலைகளை முடித்து சற்று ஓய்வாக சோபாவில் படுத்துக் கொண்டு முரசு  தொலைக்காட்சியில்  'துணைவன்' படம் பார்த்துக்கொண்டு இருந்தேன் . உடல் நலம் இல்லாமல் குழந்தையை எடுத்துக் கொண்டு குமரன் இருக்கும் ஊர்களில் எல்லாம் போய் உருக்கமாய் வேண்டிக்கொண்டு குழந்தையைக் குணப்படுத்தப் பாடிக் கொண்டு இருந்தார்கள்.

மதியம் 3.40  இருக்கும் திடீர் என்று ஒரு சத்தம்- இறக்கை 'பட பட' என்று அடிக்கும் சத்தம். (ஹாலில் இரண்டு ஃபேனில் ஒன்று ஓடிக்கொண்டு இருந்தது ஒன்று ஓடாமல் இருந்தது)  ஓடாத ஃபேனில் வந்து அமர்ந்தது ஒரு  பெண் குயில்.நான் படுத்திருந்தவள் எழுந்ததும் அது பயந்து பறந்து ஓடிக் கொண்டு இருந்த ஃபேனில் அடிபட்டு சோபாவில் விழுந்தது. பதறிப் போனேன் "முருகா "என்று வாய் அழைத்தது.