மார்க்கண்டேயர் கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மார்க்கண்டேயர் கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 மே, 2022

முனீஸ்வரர் கோபுரமும் திருக்குளமும் (திருக்கடவூர்)

திருக்கடவூர்  அமிர்தகடேஸ்வரர்  கோயில் திருக்குளம்  இருக்கும் கீழ கோபுர வாசல்.

 ஜோதி தொலைக்காட்சியில் திருக்கடவூர் கும்பாபிஷேக காட்சிகளை நேரலையில் பார்த்தேன். அதில்  கோயிலை பறவை பார்வையாக மேலிருந்து காட்டிய போது திருக்குளத்தை காட்டினார்கள், அதில் படகு வேறு விட்டு இருந்தார்கள்

எத்தனையோ முறை திருக்கடவூர் போய் இருக்கிறேன், திருக்குளத்தை பார்த்தது  இல்லை.  திருக்கடவூர் போகும் வாய்ப்பு கிடைத்தால் குளத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டேன். தங்கை கணவர் மணிவிழாவில் அந்த வாய்ப்பை  இறைவன் தந்தார். 48 நாள் மண்டல பூஜை சமயம் பார்த்து விட்டோம் .