இந்த முறை மகா கண்பதி கோவிலுக்கு மகன் செய்து கொடுத்த பிள்ளையாருடன் பேரன் இருக்கிறான்.
"மகா கணபதி ஆலயம் "அரிசோனாவில் இருக்கிறது. இந்த கோவிலில் வருடா வருடம் பிள்ளையார் சதுர்த்தி விழா சிறப்பாக நடக்கும்.
பிள்ளையார் சதுர்த்திக்கு சில தினங்களுக்கு முன் குழந்தைகள் களிமண்ணால் தங்கள் கைகளால் பிள்ளையார் செய்வார்கள். அதற்கு விளம்பர பலகைகள் மகன் செய்து தருவான். பல இடங்களில் இந்த கோவிலின் சார்பாக நடைபெறும். இந்த முறை 24 இடங்களில் நடைபெறுகிறது. அதற்கு 6 பிள்ளையார்கள் செய்து கொடுத்து இருக்கிறான் மகன்.
தாங்கள் செய்த பிள்ளையாரை வைத்து பிள்ளையார் சதுர்த்திக்கு பூஜை செய்வது குழந்தைகளுக்கு மகிழ்ச்சி.
உங்கள் அனைவருக்கும் "பிள்ளையார் சதுர்த்தி" வாழ்த்துகள்.