என் கணவரின் அத்தை வீட்டில் அரிதான புத்தகம் ஒன்று கிடைத்தது.அந்த புத்தகத்தின் பெயர் “வைகுந்த அம்மானை” 1904ல் வெளி வந்த புத்தகம். அதைத் தொட்டாலே உடைந்து விடும் போல் இருந்தது. அதில் வந்த விளம்பரம் என்னைக் கவர்ந்தது.அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.இந்தக் காலத்தில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று சொல்வது போல் அன்றும் உள்ளது, ஒன்று வாங்கினால் ஒன்று இனாம் என்று.
//மோதிரம் வாங்குங்கள்! மோதிரம்!// 2010 ஆண்டு நவம்பர் 1 ம் தேதி எழுதிய பதிவு.
இதோ அந்த விளம்பரத்தைப் பாருங்களேன்:
// விளம்பரம்
சீர்மையிலிருந்து வரவழைக்கப்பட்ட
எங்களுடைய
ரோஜாப்பு மொட்டை
பரிட்சித்துப் பாருங்கள்
ரோஜாப்பு மொட்டு என்பது
ஒரு ஷோக் மோதிரம்
இந்த மோதிரமானது அன்று அரும்பி இதழ்மலர்ந்த மொட்டை நடுவில் உடையதுபோல
பிரகாசிக்கும். பார்வைக்கு மிக்க பகட்டாயும் சோபிதமாயுமிருக்கப்பட்ட 9-போலி ரவைகள் வைத்து இழைத்தது .இது இங்கலாண்டு கெமிகல்கோள்டு யென்னும் ஒருவித லோகத்தாற் செய்து விராகனிடை 8 ரூபா விலையுடைய சுயத்தங்கத்தினால் மேற் பூசலும் பூசப்பட்டது.
இந்த மோதிரத்தில் எண்ணைபட்டாலும் ஜலம்பட்டாலும் பளபளப்பு மங்குகிறதில்லை. கொஞ்சம் காந்தி குறைந்த போதிலும் சீமைசுண்ணாம்பு பூசிவைத்து புருஷினால் துடைத்து விட்டால் மறுபடியும் பிரகாசிக்கும் இந்த மோதிரத்திற்கும் ஜெனங்கள் 2,000 ரூபாய் விலையிருக்குமேயென்று மதிப்பிடுவதற்கு அஞ்சமாட்டார்கள்.--இதன் விலை 2-ரூபாய்தான் வி.பி. தபாற்கூலி பிரத்தியேகம்.
8-மோதிரத்திற்கு மல்பீஸ் இனாம்
8--எட்டு மோதிரங்கள் ஒரேதடவையில் வாங்குவோருக்கு நாணயமானதாய்
(ஒரு பீஸ் சலவைமல்) அதாவது 20-கெஜமுடைய தான் இனாமாய் அனுப்படும்.
4.மோதிரத்திற்கு இனாம்
4--நாலு மோதிரம் ஒரேதடவையில் வாங்குவோருக்கு சரட்பட்டன் ஒரு செட்டு இனாமாய் அனுப்பபடும்.
என்னுடைய முழுகேட்லாக் வேண்டுமானால் அரையணா ஸ்டாம்பு அனுப்பினால் அனுப்பப்படும்.
வித்தியாரத்திநாகர அச்சுக்கூடத்தலைவர்
பி.நா.சிதம்பரமுதலியார்
பெரம்பூர் பாரெக்ஸ்போஸ்டு மதராஸ். //
வாங்குங்கள் ஷோக்மோதிரம் விரைந்து.
வைகுந்த அம்மானை என்ற இந்த புத்தகமும் நன்றாக இருக்கிறது.மகாபாரதக் கதையைப் பாடுகிறது.விநாயகர் துதி,சுப்பிரமணியர் துதி,சரஸ்வதி துதி,ஈஸ்வரர் துதி,மகாவிஷ்ணு துதி, எல்லாத் துதியும் முடித்து பின் கதைக்குப் போகிறது.
வல்லி அக்கா பின்னூட்டத்தில் //எனக்கு முப்பது மோதிரம் வேணுமே தங்கச்சி.:)// வேண்டும் என்றார் பழைய பதிவில்.

குழந்தைகளைக் கவரும் விளம்பரங்கள்.
தொடர்கதைகளை சேகரித்து பைண்ட் செய்வதில் சில கஷ்டங்கள் முடிவு அடுத்த இதழில் இருக்கிறது முடிவுப் பக்கத்தைக் காணோம்.
மீண்டும் படிக்கும் ஆவல் போச்சு.

பதின்மூன்றாம் அத்தியாயத்திலிருந்து தான் பொன்னியின் செல்வன் வாங்க ஆரம்பித்தோம். (87ம் வருடம்.) அதற்கு முன் சர்குலேஷன் புத்தகம் வாங்கி படித்து கொண்டு இருந்தேன் மாதா மாதம் பணம் கொடுத்து விட்டு எல்லா மாதா, வார இதழ்கள் படித்துக் கொண்டு இருந்த காலம். பொன்னியின் செல்வன் புத்தகம் சேகரிக்க எண்ணி வாங்க ஆரம்பித்த போது பதின்மூன்று அத்தியாயம் ஓடி விட்டது. பழைய புத்தகக் கடையிலும் கிடைக்கவில்லை.

அப்புறம் 2014ம் ஆண்டு மீண்டும் கல்கியில் வந்தது பொன்னியின் செல்வன் ஆனால் படம் மணியம் இல்லை, வேதா என்ற ஓவியர். ( பொன்னியின் சித்திர கதைக்கு வேதா அவர்கள்தான் வரைந்து வருகிறார்.)
12 அத்தியாயம் மட்டும் வாங்கித் தொகுத்து தனியாக வைத்து இருக்கிறேன். கல்கி புத்தகம் அகலமாக வித்தியாசமாய் வந்தது பழைய புத்தகம் போல் இல்லை.
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு இந்த புத்தகங்கள் 10 ரூபாய் தான். இந்த புத்தகங்களை முன்பு ஞாயிறு வழிபாட்டில் கலந்து கொள்ளும் போது வாங்கி வந்தவை, தினம் ஒரு பக்கம் படிப்பேன்.

திருக்குறள், பாரதியார் கவிதைகள் என் கணவர் எனக்குப் பிறந்த நாள் பரிசாகக் கொடுத்தது. வேதாத்திரி மகரிஷி அவர்களின் "வாழ்க்கை மலர் " புத்தகம் வருடம் முழுவதும் படிக்க (நாள் ஒரு நற்சிந்தனை)
'அன்னையின் அருள்மலர்கள்' புத்தகம் அன்னையின் பொன்மொழிகள் தொகுப்பு .
தினசரி தியானம் புத்தகம் கைலாயம் போன போது எங்களுடம் ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த மூன்று சாமியார்களும் வந்து இருந்தார்கள் அவர்களில் ஒரு சுவாமி பக்தானந்தா அவர்கள் கொடுத்த புத்தகம்.
ஒரு கல்யாண வீட்டில் கொடுத்த புத்தகம் 'மன அமைதிப் பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை ' சுவாமி சிவானந்தா ' அவர்கள் அருளுரை நர்மதா வெளியீடு.
இதுதவிர சிவானந்தலஹரி பாஷ்யம் ஸ்ரீ ராமகிருஷ்ணமடம் வெளியீடு புத்தகம் எல்லாம் படிப்பேன்.
அம்மா கொடுத்த 'ஸெளந்தர்ய லஹ்ரி" (சகுந்தலை நிலையம் வெளியீடு)
மாமா கொடுத்த "ஸ்ரீ மஹா பக்த விஜயம்" (லிப்கோ பதிப்பகம் வெளியீடு)
எல்லாம் தினம் கொஞ்ச நேரம் படிப்பேன்.
முக நூலில் புத்தகப் பகிர்வு நடந்து வருகிறது. படித்தபுத்தகம் அட்டைப் படம் மட்டும் போட்டால் போதும். விளக்க வேண்டாம். படிப்பதில் கொஞ்சம் சோர்வு ஏற்பட்டு இருந்தது , இப்போது மீண்டும் படிக்க ஆரம்பித்து விட்டேன்.
வீட்டு வேலைகள், வலைத்தளங்களை படித்தல் என்பதுடன் புத்தகங்கள் படிக்க எண்ணம் வந்து இருக்கிறது.
அப்பாவின் ஆன்மீக புத்தக சேகரிப்புகள் (உபநிஷத்துக்கள்)
அனைத்தும் ஆங்கிலம் அவை எல்லாம் என் கணவர் படிக்கிறார்கள்.
நான் தமிழாக்கங்களைத்தான் படிக்கிறேன்.
வல்லி அக்கா, ஆதிவெங்கட் இருவரும் புத்தக்ப் பகிர்வுக்கு அழைத்தார்கள் இருவர் அழைப்பையும் ஏற்று இரண்டு வாரங்கள் புத்தகம் பகிர்ந்து கொண்டு விட்டேன். நாள்தோறும் படித்துக் கொண்டு இருப்போம்.
நான் யாரையும் அழைக்கவில்லை. நம் வலை அன்பர்கள் பலர் நல்ல நல்ல புத்தகப் பகிர்வை முன்பே செய்து விட்டார்கள்.
வாழ்க வளமுடன்.
வல்லி அக்கா பின்னூட்டத்தில் //எனக்கு முப்பது மோதிரம் வேணுமே தங்கச்சி.:)// வேண்டும் என்றார் பழைய பதிவில்.

என் அம்மா சேகரித்து வைத்து இருக்கும் பழைய கதை புத்தகத்தில் இடையில் வரும் ரேடியோ விளம்பரம்.
குழந்தைகளைக் கவரும் விளம்பரங்கள்.

ஒரு கதை இரு ஓவியர் அன்று, இன்று என்ற கதை களத்திற்கு அன்றுக்கு "ம.செ," இன்று நடைபெறும் கதைக்கு "ஜெ"