பறவைகளும். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பறவைகளும். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 நவம்பர், 2014

மெல்ல விடியும் பொழுது

காலை பொழுதின் அழகை நின்று ரசிக்க  நேரம் இல்லாமல்  ஓடிக் கொண்டு இருந்த காலங்கள் ஒன்று உண்டு. காலை மாலை இரண்டு நேரமும் வானத்தை பார்ப்பது அழகுதான். மீண்டும் நேரம் கிடைத்த  போது நான் கண்ட காட்சிகளை  இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.

                   

கார்த்திகை பனி மூட்டத்தில்  சூரியன் எழுவது கடலலையின் மேல் சூரியன் காட்சி அளிப்பது போல் இல்லே!

பறவையும் , மரமும், சூரியனும் 


ஓவியர்கள் நிலா, மரம், பறவை வருவது போல் பெரும்பாலும் வரைந்து இருப்பார்கள்   அது போன்ற ஒருகாட்சி   கிடைத்தது.

மேக மூட்டத்தில் நிலவை போல் காட்சி அளிக்கும் சூரியன்


காலை நேரத்தில் சூரியன் சந்திரன் போல் தோன்றும் ,  அந்த மாயத்தோற்றத்தை  ஒரு விடியலில் கண்ட காட்சியை பதிவாக்கி இருக்கிறேன்.

முழுநிலா வரும் காலமும் அது தேயும் போது ஒவ்வொறு தோற்றமும் அழகுதான். மூன்றாம் பிறையை சீக்கிரம் பார்த்துவிட வேண்டும் சிறிது நேரத்தில் மறைந்து விடும். 

நிலவோ! சூரியனோ!


பவுர்ணமி நிலா போல் இருக்கிறதா?


பனியை விலக்கி வெளி கிளம்பும் சூரியன்

காலை பனியை விலக்கி கொண்டு தன் இளம்கதிரை வீசி பனி மூட்டத்தை வெளி கிளம்பி வரும் காட்சி இரவு மேகங்களுடன் மறைந்து மறைந்து விளையாடும்  நிலவை போல் இருக்கிறது அல்லவா?


உணவும் தண்ணீரும் எடுக்க வரும் பறவைகள்







உணவு உண்ணும் மைனா

                                       
                                             இது என்ன பறவை கண்டு பிடியுங்கள்?


காலை நான் வைக்கும் உணவை எடுக்க வந்த பறவைகளை கண்டு களித்தீர்களா?

                                                            வாழ்க வளமுடன்.
=======================================================================