”THE VERSATILE BLOGGER AWARD ”
இந்த விருதை மூன்று அன்பு உள்ளங்கள் எனக்கு அளித்து
இருக்கிறார்கள். ஏற்கனவே இந்த விருதைச் சிலவருடங்களுக்கு முன்
தெய்வீக பதிவுகளை மணிராஜ் என்ற வலைத்தளத்தில் எழுதி வரும்
திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களிடமிருந்துபெற்றுக்கொண்டு
இருக்கிறேன். வல்லி அக்கா என்று நான் அன்புடன் அழைக்கும்
திருமதி. வல்லி சிம்ஹன் அவர்கள், திருமதி . துளசி கோபால் அவர்கள்,
ஹுஸைனம்மா அவர்கள், திருமதி. சித்ரா அவர்களுடன் விருதைப் பகிர்ந்து
கொண்டு இருக்கிறேன்.
அரட்டை என்று தன் தளத்திற்கு பேர் வைத்து நம்மை அவர் தளத்திற்கு
அன்புடன் அரட்டைக்கு அழைக்கும் ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்,
பல்சுவை பதிவுகளை எழுதுவார் குறிப்பாக நல்ல நகைச்சுவை எழுத்தாளர்.
இரண்டு வலைத்தளம் வைத்து இருக்கிறார். தன்பதிவுகளை மின்னூல் ஆக்கி
இருக்கிறார்.திறமைவாய்ந்தவர் . உங்கள்எல்லோருக்கும் தெரியும்
அவரை. அவர்கள் அளித்த இந்த விருதுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
காலையில் திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் விருது கொடுத்தார்கள்.
தஞ்சையம்பதி என்று வலைத்தளம் வைத்து இருக்கும்
திரு.துரைசெல்வராஜூ அவர்கள் மாலையில் இந்த விருதை எனக்கு
அளித்தார்கள். தன் தளத்தில் ஆன்மீகப் பதிவுகள் பதிந்து வருவது
எல்லோருக்கும்தெரியும் தானே! சார் எனக்கு அளித்த விருதுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
இருவருக்கும் நன்றிகள்! இந்த விருதைத் துவக்கி வைத்த திருமதி. ரஞ்சனி
நாராயணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள், நன்றிகள்.
ஒரு சமயத்தில் நிறைய விருதுகள் அடுத்தடுத்து ஒருவருக்கு ஒருவர்
கொடுத்துக் கொண்டார்கள். எல்லாவற்றிலும் சாதனை படைக்கும்
திரு. வை.கோபாலகிருஷ்ணன் சார், விருதுகள் கொடுப்பதிலும் சாதனை
படைத்தார். எனக்கு ஒரே நேரத்தில் மூன்று விருதுகள் கொடுத்தார். அவற்றை
வலைத்தளமுகப்பின் ஓரத்தில் போட்டுகொண்டுள்ளேன், நன்றி சொல்லி.
எல்லோர் கொடுத்த விருதுகளும் அதில் இடம்பெறுகிறது.
விருது கொடுப்பது நல்லதுதான். எழுதுவதில் தொய்வு ஏற்படும்போது
உற்சாகம் தந்து மீண்டும்எழுத வைக்கும்.
![]() |
திருமதி . ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் கொடுத்த விருது |
திரு. துரைசெல்வராஜூ அவர்கள் கொடுத்த விருது |
1. எனக்கு நல்ல இசையைக் கேட்கப் பிடிக்கும்.
2. எனக்கு சினிமா பாடல்கள் பழைய பாடல்கள் கேட்கப் பிடிக்கும்.
புதுப் பாடலும் நல்ல பாடலாய் இருந்தால் பிடிக்கும்.
3. இயற்கையை ரசிக்கப் பிடிக்கும்.
4. நல்ல புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும்.
5. கள்ளமில்லா குழந்தைகளோடு விளையாடப் பிடிக்கும்.
6 .இறைவனைத் துதிக்கப் பிடிக்கும்.
7. தொலைக்காட்சி, இணையம் , பாடல், புத்தகங்கள் என்று இவற்றோடும்,
உறவினர்கள் மற்றும் நண்பர்களோடும் உரையாடியபடி இருக்கவேண்டும்.
எனக்கு திருமதி. ராஜலக்ஷ்மி அவர்கள் கொடுத்த விருதை இவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பன்முக திறமைகள் உடையவர்கள்:-
”சமையல் அட்டகாசம்” என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் திருமதி. ஜலீலா அவர்கள்
”அடிசில்” என்ற வலைத்தளத்தில் அம்மாவின் கைவண்ணம் என்று வைத்து இருக்கிறார், திருமதி சுந்தராமுத்து அவர்கள்.
”காகிதப்பூக்கள்” என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் திருமதி. ஏஞ்சலின் அவர்கள் .
தோழி பூவிழி , “பூவிழி” என்ற வலைத்தளம் வைத்து கவிதை, பொன்மொழி விழிப்புணர்வுக் கட்டுரைகள் எழுதியவர் மீண்டும் எழுத வரவேண்டும். ஒருவருடமாய் அவர்களிடமிருந்து பதிவுகள் இல்லை.
திரு. தமிழ் இளங்கோ அவர்கள் சொன்னது போல் முகநூலில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள் போலும்.
திருமதி. விஜி பார்த்திபன் அவர்கள், விஜிபார்த்தி என்ற வலைத்தளத்தில் சமையல் குறிப்பு, கைவேலைகள், (பின்னல், தையல்கலை)நல்ல கட்டுரைகள் என்று எழுதுவார்.
அடுத்து எனக்கு திரு. துரைசெல்வராஜூ அவர்கள் கொடுத்த விருதை இவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பன்முக திறமைகள் உடையவர்கள்:-
முருகானந்தம் சுப்பிரமணியன் அவர்கள் , தன் வலைப்பூவை ஆனந்த தாண்டவநடராஜமூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ என்கிறார்.
ஆன்மீக யாத்திரை போக விரும்புவர்கள் இவரது வலைத்தளத்தைப் படித்துப் பயன்பெறலாம்.
கற்கை நன்றே, கபீரின் கனிமொழிகள் என்ற வலைத்தளங்கள் வைத்து அருமையான ஆன்மீக பதிவுகளை எழுதி வரும் கபீரன்பன் அவர்கள்
வடுவூர் குமார் தன் மடவிளாகம் என்னும் வலைப்பூவில் அவர்கள் பலதரப்பட்ட பதிவுகளை எழுதி வருகிறார். தன் தொழில் சார்ந்த பதிவுகளும் வரும் என்று எச்சரிக்கிறார்.
குறள் காட்டும் பாதை, இன்றையபழமொழி,, பயனுள்ள கட்டுரைகள் என்று தன் அந்திமாலை என்ற வலைத்தளத்தில் எழுதி வருகிறார். இ.சொ.லிங்கதாசன் அவர்கள்.
”எல்லாப்புகழும் இறைவனுக்கே! ”என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் திருமதி ஸாதிகா அவர்கள், பலவகையான பதிவுகளை எல்லோரும் விரும்பும் வண்ணம் எழுதுவதில் வல்லவர்.
இன்று காலை இரண்டு பேர் கொடுத்த இரண்டு விருதுகளுக்கு நன்றி சொல்லி பதிவு எழுதிக் கொண்டு இருக்கும் போது ரூபன் அவர்கள் இரண்டு விருதுகளை கொடுத்து பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறார். ரூபனின் எழுத்து படைப்புகள் என்று கவிதைகள் , கட்டுரைகள், கதைகள் எல்லாம் எழுதி வருகிறார். தன் தளத்தில் கவிதை போட்டிகள் எல்லாம் நடத்தி வருகிறார்.
அவர் கொடுத்த விருதை பெற்றுக் கொண்டேன் இத்தளத்தில் பதித்து விட்டேன். ரூபன் அவர்களின் அன்புக்கு நன்றி. என் பதிவுகள் வலைச்சரத்தில் இடம்பெறும் போதெல்லாம் முதலில் வந்து வாழ்த்து தெரிவித்துவிடுவார். அவரைத் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.
உடனே பதிவு போட்டு இருந்தால் நான் இந்த விருதை வாங்கியது தெரிந்து இருக்கும். மறுபடியும் கொடுத்து இருக்க மாட்டார்கள்.
ரூபன் அவர்களின் விருதுகளை வலைத்தளத்தில் எழுதி வரும் அனைவரும். ஏற்றுக் கொள்ளுங்கள்.
ரூபன் அவர்கள் கொடுத்த இரண்டு விருதுகள்.