அவரே நடித்து பாடியது "வா ராஜா வா" என்ற படத்தில் பாடியது.
அருமையான வரிகள். கேட்டு பாருங்கள்
இன்று இசையோடு நீங்கள் என்று நிகழ்ச்சி மதுரை ரெயின்போ பண்பலையில் கேட்டேன். சினேகிதி நேயர் விருப்பத்தில். ஒரு அம்மா இன்று சீர்காழி கோவிந்த ராஜன் அவர்களின் நினைவு நாள் என்றார்கள். அதனால் இந்த பாடலை கேட்டார்கள். எனக்கு பிடித்து இருந்தது, அதனால் இந்த பகிர்வு.
//இசையால் அவனை இரங்க வைப்பது மனிதன் குணமாகும்
இசையால் மயங்கி இரங்கி வருவது இறைவன் மனமாகும்//
இந்த பாட்டில் வரும் வரி அது போல அவர் தன் பாடல் மூலம் இறைவனை இரங்கி வர வைத்தவர் தான்.
நெல்லை அருள் மணி அவர்கள் பாடலை இயற்றி இருக்கிறார். இசை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்.