கந்தவேள் முருகனுக்கு அரோகரா! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
முருகனை சிந்திப்போம்- பகுதி 6
காலம் காலமாய் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் யுத்தம் நடந்து
கொண்டு தான் இருக்கிறது. முடிவில் நல்லது வெற்றிபெறும். தீயவை
அழியும் என்பது நீதி. அதுதான் கந்த சஷ்டி விழா நமக்கு உணர்த்தும் பாடம்.
சிவபக்தனாக இருந்தாலும் ஆணவத்தால் பாலகன் என்று ஏளனம்
புரிந்து அவரை எதிர்த்து யுத்தம் புரிந்து, உடல் பிளவுபட்டு ஒரு பாதி
சேவலாகவும், மறுபாதி மயிலாகவும் மாறினாலும் முருகனை
எதிர்த்து போர் புரிந்தான், அவைகள் மீது திருநோக்கம் (அருள் பார்வை)
செய்து சாந்தப்படுத்தித் தஞ்சம் அடைய வைத்துச் சினம் கொண்ட
சேவலையும்,செருக்குற்ற மயிலையும் தன்னிடம் பற்றுக் கொண்ட
ஞானியாக மாற்றினார் முருகன்.
பகைவனுக்கும் அருளிய கருணை வள்ளல். சேவலைத் தேரில்
கொடியாகவும், மயிலை வாகனமாகவும் வைத்துக் கொண்டார்.
வெற்றி வேல் வீரவேல்
தாரகாசுரன் (மாயை)
சிங்கமுகாசுரன் (கன்மம்)
சூரபத்மன் (ஆணவம்)
சுற்றி நிற்காதே பகையே துள்ளி வந்த வேல் சூரபதுமனை
வீழ்த்திய காட்சி
சூரபதுமனின் உடல் சேவலும், மயிலுமாக ஆனது
ஞானமே வடிவானது சேவல்., மயில்
கடல் அலை போல் பக்தர்கள் தலைகள்.
வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல்
ஆதி சக்தி அன்னை தந்த ஞான வேல்
அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீர வேல்
ஆதி சக்தி அன்னை தந்த ஞான வேல்
அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீர வேல்
மோதி அந்த குன்றழித்த சக்தி வேல்
மோதி அந்த குன்றழித்த சக்தி வேல்
மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றி வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல்
ஆதி சக்தி அன்னை தந்த ஞான வேல்
அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீர வேல்
ஆதி சக்தி அன்னை தந்த ஞான வேல்
அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீர வேல்
மோதி அந்த குன்றழித்த சக்தி வேல்
மோதி அந்த குன்றழித்த சக்தி வேல்
மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றி வேல்
மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றி வேல்
வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல்
தெய்வம் உண்டு தெய்வம் உண்டு
என்று சொல்லும் வெற்றி வேல்
தெய்வ பக்தி உள்ளவர்க்கு
கை கொடுக்கும் வீர வேல்
தெய்வம் உண்டு தெய்வம் உண்டு
என்று சொல்லும் வெற்றி வேல்
தெய்வ பக்தி உள்ளவர்க்கு
கை கொடுக்கும் வீர வேல்
எய்த பின்பு மீண்டும்
கந்தன் கையில் வந்து நின்ற வேல்
எய்த பின்பு மீண்டும்
கந்தன் கையில் வந்து நின்ற வேல்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல்
தெய்வம் உண்டு தெய்வம் உண்டு
என்று சொல்லும் வெற்றி வேல்
தெய்வ பக்தி உள்ளவர்க்கு
கை கொடுக்கும் வீர வேல்
தெய்வம் உண்டு தெய்வம் உண்டு
என்று சொல்லும் வெற்றி வேல்
தெய்வ பக்தி உள்ளவர்க்கு
கை கொடுக்கும் வீர வேல்
எய்த பின்பு மீண்டும்
கந்தன் கையில் வந்து நின்ற வேல்
எய்த பின்பு மீண்டும்
கந்தன் கையில் வந்து நின்ற வேல்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
காணும் எங்கள் சக்தி வேல்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
காணும் எங்கள் சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல்...
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
காணும் எங்கள் சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல்...
//அடியேன் நினைத்தது : ஒரு சினிமா பாடல்... ஜானகி அம்மாவின்
உன்னத
குரலில்.// என்று சொல்லி இருந்தார்.
தனபாலன் சொன்ன பாடல் இதுதான் என்று நினைக்கிறேன்
காலத்தை வென்ற பாடல். 'கொஞ்சும் சலங்கை' படத்தில்
நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களுக்காகப் பாடிய
இனிமையான பாடல். திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
சொன்னதுபோல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் தான்.
நாதஸ்வர இசைச் சக்கரவர்த்தி, காருகுறிச்சி அருணாசலம்
அவர்களுடன் ஜானகி அவர்களின் குரல் இழைந்து இணைந்து பாடுவது
அற்புதம்.
என் தாய்மாமா அவர்கள் எழுதிய இந்த முருகன் திருத்தல
வரலாற்றில் நான் எழுதிய கதிர்காமம் பதிவும் இடம் பெற்று
இருக்கிறது. மாமா அவர்கள் என்பதிவையும் சேர்த்துக் கொண்டது
அளவில்லா மகிழ்ச்சியைத் தந்தது. இதுவும் முருகனின் அருள்தான்.
அவர்கள் கையெழுத்துப் போட்டு அந்தப் புத்தகத்தைத் தந்தார்கள். அவர்கள் கையெழுத்து அழகாய் இருக்கும். அவர்கள் கம்யூட்டர் கற்றுக்
கொள்ள வில்லை கதை, கட்டுரைகளை அவர்கள் இறக்கும்
வரை (84) அவர்களே எழுதித்தான் அச்சேற்றக் கொடுப்பார்கள்.
முருகன் அவர்களின் இஷ்ட தெய்வம். இன்று அவர்களையும்
நினைத்து வணங்கிக் கொள்கிறேன்.
இந்த ஆறு நாட்களும் முருகன் அருளால் முருகனைச் சிந்தித்து
இந்த ஆறு நாட்களும் முருகன் அருளால் முருகனைச் சிந்தித்து
இருந்தோம். இதில் என்னுடன் தினம் தொடர்ந்து வந்த அனைவருக்கும்
நன்றி.
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க சேவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்.
வள்ளி கணவன் பெயரை தினம் சொல்லடா தம்பி
உன் வாழ்வு வளம் பெறவே! பாடல் அருமையாக இருக்கும்
இந்த காணொளி அருமையாக இருக்கும், பாடல் கேட்டு இருப்பீர்கள்
மீண்டும் கேட்டுப் பாருங்கள்.
அருள் வடிவான வள்ளி தேவசேனாபதியை வணங்கி வாழ்வில்
வளம் பெறுவோம்.
ஆறு நாளும் தொடர் பதிவில் முருகனை சிந்தித்தோம்.
தொடர்ந்து வந்து கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி நன்றி.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------------------------------------