ஆலய தரிசனம் தொடர் பதிவு திருபுவனம் கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆலய தரிசனம் தொடர் பதிவு திருபுவனம் கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 மே, 2022

திருபுவனம்


திருப்புவனம் கோபுரம்

வைத்தீஸ்வரன் கோயில் வணங்கி விட்டு அடுத்து நாங்கள் போன கோயில்  திருப்புவனம்.நாங்கள் ஏபரல் மாதம் 22ம் தேதி மாலை . 6.40க்கு  போனோம். இருட்ட ஆரம்பித்து விட்டது.
.

இறைவன் கம்பகரேஸ்வரர், கம்பகரேஸ்வரர் என்றால்   நடுக்கத்தை  போக்கியவர் என்று அர்த்தம். நடுக்கத்தை போக்கியவர்  என்பதால் "நடுக்கம் தவிர்த்த பெருமான்"  என்று அழைக்கப்படுகிறார்.

அம்மன் தர்மசம்வர்த்தினி. அறம்வளர்த்தநாயகி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

   சரபேஸ்வரர்  வழிபாடு இங்கு ஞாயிறு மிகவும் சிறப்பு. 

தீர்த்தம் சரப தீர்த்தம் உட்பட 9 தீர்த்தங்கள் இருக்கிறது.தல விருட்சம் வில்வமரம்.