ஸ்ரீ வேங்கடேஸ்வர் ,திருக்கோயில் நவராத்திரி கொலு
அட்லாண்டா இந்து கோயில் என்று இதற்கு முன்பு போட்ட பதிவு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா அருகில் உள்ள "ரிவர்டேல்" எனும் நகரத்தில் உள்ளது இந்த கோயில்.
இந்த இடத்தில் ஸ்ரீ வேங்கடேஸ்வர் ,திருக்கோயிலும், அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயிலும் ஒரே வளாகத்தில் அமைந்து இருக்கிறது.
நாங்கள் போன ஞாயிறு போய் இருந்த போது நவராத்திரி கொலுவிற்கு தயார் செய்து கொண்டு இருந்தார்கள் என்றேன்.
இந்த ஞாயிறு நவராத்திரி கொலுவைப் பார்க்க அழைத்து போனாள் மகள். பெருமாள்கோயில், சிவன் கோயில் இரண்டிலும் மிக அழகாய் கொலு வைத்து இருந்தார்கள்.
அங்கு பார்த்த கொலு படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.