செவ்வாய், 27 செப்டம்பர், 2022

நலம் தரும் நவராத்திரி




அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்
இந்த படம் எங்கள் வீட்டு கொலு பொம்மையில் உள்ள மூன்று தேவியரும்.

நேற்று எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் அருள்மிகு ஸ்ரீ பொய்சொல்லா மூர்த்தி அய்யனார் கோவிலுக்கு போய் இருந்தேன்.  நவராத்திரி விழாவிற்கு கொலு வைத்து இருக்கிறார்கள்.

10 நாட்களும் ஆன்மீக சொற்பொழிவுகள், பக்தி இசைக் கச்சேரி, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
நேற்று முதல் நாள்  சொற்பொழிவு.


"நலம்தரும் சக்தி" என்ற தலைப்பில் முனைவர் சத்யா மோகன் அவர்கள் பேசினார்கள். (யாதவா மகளிர் கல்லூரி)

.
சரஸ்வதி தேவியை பற்றி பேசும் போது  குமரகுருபருக்கு அவர் அருளியதை சொன்னார். காசிக்கு சென்ற குமரகுருபர் அங்கு மடம் நிறுவ ஆசைபட்டார். காசி அப்போது  டெல்லியை ஆண்டு வந்த மொகலாய மன்னர்கள் வசம் இருந்தது.

அவர்களிடம் பேச இந்துஸ்தானி மொழி வல்லமையை தந்தருள வேண்டுமென   சரஸ்வதியை வேண்டி சகலகலாவல்லி மாலை  பாடியதால் இந்துஸ்தானிய மொழி அவருக்கு பேச   முடிந்தது என்றார். இந்துஸ்தானி மொழி பேச சரஸ்வதி தேவி அருளினார் என்றார்.

சகல கலாவல்லி மாலை பாடலை பிள்ளைகள் பாடினால் படிப்பு நன்றாக வரும் . என்று சின்ன குழந்தைகளை பார்த்து சொன்னார். குமரகுருபர் கதையை சொல்லி   .

சகல கலாவல்லி மாலை பாடலில் முதல் பாடலை நான் பாடி காட்டுகிறேன், முதல பாடலை மட்டுமாவாது தினம் பாடுங்கள் என்றார்.

//வெண்தாமரைகன்றி நின்பதந் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்டாமரைக்குத் தகாது கொலோ சகமேழும் அளித்து 
உண்டான் உறங்க வொழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம் 
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலா வல்லியே//

லட்சுமிதேவி பற்றி பேசும் போது இந்திரன் ஆணவத்தால்  அனைத்து செல்வங்களும் கடலில் சென்றதையும், பாற்கடல் கடைந்து இழந்த செல்வங்கள் மீண்ட   கதை சொன்னார். லட்சுமி வந்த கதை மாலவன் மார்பில் இருக்கும் கதை  அதனால் பெருமாளையும், லட்சுமியை வணங்கினால் உங்களுக்கு செல்வங்கள் அருள்வார் என்றார்.

காளிக்கு காளிதாசர்  கதை சொன்னார். சிறு வயதில் அறிவில்லாமல் அவர் மரக்கிளையை வெட்டியவர் பின்னாளில் இளவரசியை மணந்த கதை, உஜ்ஜயனி காளி அருளால் எப்படி புகழ்பெற்ற காவியங்கள் இயற்றினார் என்பதை சொன்னார்.

 தாயைபற்றி பேசும் போது  சம்பந்தருக்கு ஞானபால் வழங்கிய அன்னையைப்பற்றி பேசினார். மற்றும் கோசெங்கணான் தாயார் கமலவதி   பற்றி பேசினார்.


//வையம் , துரகம் மதகரி , மாமகு டம் சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை யாரம், பிறைமுடித்த 
ஐயன் திருமனை யாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு 
செய்யும் தவம் உடையாருக்கு  உளவாகிய சின்னங்களே.//

- அபிராமி அந்தாதி

இந்த அபிராமி அந்தாதி  பாடலை தினம் பாடினால் அனைத்து 
செல்வங்களும் அடியார்களுக்கு கிடைக்கும்  என்றார்.

பாரதியாரின்காளி பாடல்களை சொன்னார்.  ஒரு மணி நேரம் போனது தெரியவில்லை. அருமையாக பேசினார்.

குட்டி குட்டி கதைகளை சொல்லி  பேசுவேன், சத்தம் போடாமல் கேட்க வேண்டும் என்று பிள்ளைகளிடம் சொன்னார். அவர்கள் அப்படியும் சத்தம் போட்டார்கள், குருக்கள் மனைவி இந்த 10 நாளும் வந்து  அமைதியாக நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களிடம்
கேள்விகள் கேட்போம் நல்ல பதில் சொல்பவர்களுக்கு பரிசு கடைசி நாளில் கொடுக்கபடும் என்றார்.உடனே குழந்தைகள் அமைதியானார்கள்.

வாரியார் நினைவுக்கு வந்தார். முன்னாடி அமர்ந்து பேச்சை கேட்கும் குழந்தைகளிடம் கேள்வி கேட்பார் பதில் சொன்னால் அவர் கையெழுத்து போட்ட சிறு புத்தகங்கள் கொடுப்பார்.

சொற்பொழிவு செய்யும் முனைவர்  சத்யா  குருக்கள் மனைவியை பாராட்டினார் "உங்களுக்கு  குழந்தைகளை அனுகும் முறை தெரிந்து இருக்கிறது" என்று "பரிசு பொருள் தரப்படும் என்றதும் அமைதியாகி விட்டார்களே! "என்றார்.

குழந்தைகளிடமும், பெண்களிடமும் இந்த நவராத்திரி நாளில் சோம்பல் இல்லாமல்  வீட்டை சுத்தமாக வைத்து தேவிகளை துதித்து நலம், வளம் பெறுங்கள் என்றார்.

ஸ்ரீ பொன்முனியாண்டி சுவாமி

                        ஸ்ரீ கருணையே வடிவான கருப்பண சுவாமி
 
                      அம்மன்  ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில்

நேற்று அம்மன் அலங்காராத்தை பட்ம் எடுத்தேன். இன்று பதிவு போட காலையில் பார்த்தேன்,  எங்கே போச்சு படம் என்று தெரியவில்லை, மீண்டும் கோவிலுக்கு காலை போனேன். சோதனையாக அபிஷேகம் செய்ய கலைத்து விட்டார்கள்.

 அபிசேகத்திற்கு முன்பு  படம் எடுக்கலாம் என்று வந்தேன் (6.30) குருக்களிடம்  என்று சொன்னேன். அலங்காரம் செய்பவருக்கு எங்கோ போக வேண்டுமாம், காலையில் வந்து விடுகிறேன் என்றாதால் கலைத்து விட்டோம் விரைவில் என்றார். "நான் எடுத்து வைத்து இருக்கிறேன் தருகிறேன்" என்றார். குருக்கள் தந்த  அம்மன் படம் மூலம்    பதிவில் இடம் பெற்று விட்டாள் .

புளியோதரை, சுண்டல், சர்க்கரை பொங்கல் பிரசாதம் கொடுத்தார்கள்.

இன்று நாகேஷ் அவர்கள் பிறந்தநாள் என்று ஜெயா தொலைகாட்சியில்  சிறப்பு தேன் கிண்ணம் நாகேஷ் பாடல்கள் வைத்து கொண்டு இருக்கிறார்கள்.

எனக்கு நம்மவீட்டுத் தெய்வத்தில் அவர் நடித்த இந்த பாடல் நினைவுக்கு வந்தது.  நாகேஷ் நன்றாக நடித்து இருப்பார். அதனால் இந்த பகிர்வு. இவர் நடிப்பும் டி.எம்.எஸ் அவர்கள் குரலும் மிக அருமையாக இருக்கும். கேட்டு பாருங்கள்.

எங்கெங்கு காணினும் சக்தியடா  என்ற  பாவேந்தர் பாடலுக்கு நாகேஷ் நடித்த பாடல் காட்சி.

நவராத்திரி நாளில் மூன்று தேவியர்களை வணங்கி அனைத்து நலங்களும் பெறுவோம். 
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
------------------------------------------------------------------------------------------------

31 கருத்துகள்:

  1. படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது தரிசித்து கொண்டேன் நன்றி சகோ.

    பதிவின் விடயங்கள் அருமை வாரியாரை நினைவு கூர்ந்து பொருத்தம்.

    காணொளி சிறப்பாக உள்ளது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது தரிசித்து கொண்டேன்//

      நன்றி.

      பதிவை காணொளியை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  2. படங்கள் மிக அழகு. பதிவில் இடம்பெற அம்பாள் வந்துவிட்டார்.

    கோச்செங்கணான் தாயார் கமலவதி பற்றி என்ன சொன்னார்? இந்தக் கோச்செங்கணான், கோட்செங்கட்ச்சோழனா? 70 ஆலயங்கள் (மணிமாடக் கோவில்கள்) நிர்மாணித்தவனா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      கோட்செங்க்ட்ச் சோழன் தான் மாடக்கோயில் கட்டியவர்தான்.

      சோதிடர்கள் "இந்தப்பிள்ளை ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமாகில், முப்புவனங்களையும் அரசாளும்" என்றார்கள். கமலவதி "என் பிள்ளை இப்போது பிறவாமல் ஒருநாழிகை கழித்துப் பிறக்கும்படி என்னைத் தலைகீழாகக் கட்டித் தூக்குங்கள்" என்று சொன்ன கதையை சொன்னார். தாய்மை தன் மகன் முப்புவனங்களையும் அரசாள வேண்டும் என்று விரும்பிய தியாக உணர்வை சொன்னார்.
      முற்பிறவி கதையை சொன்னார்.
      நமக்கு தெரிந்த கதை என்றாலும் அவர் சொல்லும் போது நன்றாக இருந்தது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. காலம் தாழ்ந்து பிறந்த காரணாத்தால் கண்கள் சிவந்த கண்களையுடையதாய் இருத்தல்கண்டு, "என்கோச்செங்கண்ணானோ" என்று சொல்லிக்கொண்டு, உடனே இறந்துவிட்டாள். கோச்செங்கண்ணன் பெயர் காரணம். முற்பிறப்பு வாசனையால் யானைக்கு பயந்து யானை வர முடியாத மாடக்கோயிலை நிறுவியவர்.

      நீக்கு
  3. குழந்தைகளை கவனிக்க வைத்தது சிறப்பு.  சிவவயதிலேயே இது போன்ற விஷயங்களை மனதில் ஊட்டினால் நற்செயல்கள் வளரும்.  இதைத்தான் சமீப காலங்களில் நாம் இழந்து வருகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      குழந்தைகளை கவனிக்க வைத்தது சிறப்புதான் அவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து பேசி மனதை கவர்ந்தார்.

      பேசுவது ஒரு கலை, அதுவும் குழந்தைகளுக்கு ஏற்றார் போல அவர்கள் மனதில் பதிவது போல பேச வேண்டும்.

      இன்று பேசியவர் தான் எழுதி வைத்து இருந்தததை அப்படியே பார்த்து படித்தார், தலை குனிந்து கொண்டே பேசினார். யாரையும் தலை நிமிர்ந்து பார்க்கவில்லை.

      நீக்கு
  4. பொய் சொல்லா மூர்த்தி அய்யனார்...   அடடே...   என்ன ஒரு நாமம் ஸ்வாமிக்கு.  சகலகலாவல்லி மாலை ஒரு காலத்தில் மனப்பாடமாக தெரியும்.  சீர்காழியுமா அவர் மகனும் பாடுவதை அடிக்கடி ரேடியோவில் கேட்ட வகையில்...இப்போது மறந்து விட்டது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொய் சொல்லா மூர்த்தி நிறைய இடங்களில் அய்யனார் பேர் அதுவாக இருக்கிறது.
      ஒரு கலத்தில் சகலகலாவல்லி மாலை மனபாடமாக தெரியும் என்றால் இப்போது தெரியாதா என்ன?பாடினால் அடுத்த அடுத்த வரிகள் நினைவுக்கு வந்து விடும்.
      எங்கள் வீட்டில் விஜயதசமி அன்று புத்தகங்களை எடுத்து படிக்கும் போது சார் சகலகலா மாலை படிக்க வேண்டும் என்பார்கள் வீட்டில் எல்லோரும் படிப்போம்.

      கோவில்களில் ரேடியோவில் நானும் கேட்டு இருக்கிறேன். கேஸ்ட்டும் இருக்கிறது எங்கள் வீட்டில்.

      நீக்கு
  5. எங்கெங்கு காணினும் சக்தியடா அருமையான பாடல்.  பதிவுக்கேற்ற பொருத்தமான பாடலும் கூட.  இன்று சில நாகேஷ் பாடல்களும், பூஜைக்கு வந்த மலர் நாகேஷ் காமெடியும் பார்த்து ரசித்தேன்.  யு டியூப் உபயம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அருமையான பாடல், எனக்கு பிடிக்கும் , பதிவுக்கு பொருத்தமாக இருக்கிறது என்று தான் இந்த பகிர்வு ஸ்ரீராம்.
      பூஜைக்கு வந்த மலர் படத்தில் ஞாபகம் மறதி உள்ளவராக நடிப்பார். சைக்கிளில் இன்சூரன்ஸ் ஏஜென்டாக வருவார். பாலிசீ பிடிக்க மிகவும் கஷ்டபடுவார் இல்லையா? மனோரமாவும் அதே வேலை பார்ப்பார்.
      நல்ல சிரிப்பு அவருடன்.நானும் ஜெயா தொலைக்காட்சியில் நிறைய நாகேஷ் பாடல்கள் கேட்டேன்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. // சரஸ்வதியை வேண்டி சகலகலாவல்லி மாலை பாடியதால் இந்துஸ்தானிய மொழி அவருக்கு கற்றுக் கொள்ள முடிந்தது.. //

    ஸ்ரீ குமரகுருபரர் ஹிந்துஸ்தானியை கற்றுக் கொண்டு பேசவில்லை..

    அவரது நாவில் பிரவாகமாகப் பொங்கி வந்தது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      // சரஸ்வதியை வேண்டி சகலகலாவல்லி மாலை பாடியதால் இந்துஸ்தானிய மொழி அவருக்கு கற்றுக் கொள்ள முடிந்தது.. //
      நமக்கு தெரியும் அவர் சரஸ்வதியின் அருளால் நாவில் பிரவாகமாக வந்தது என்று.
      குழந்தைகளுக்கு அப்படியே இறைவனை கும்பிட்டு விட்டால் படிப்பு வந்து விடும் என்று படிக்காமல் விட்டு விடுவார்கள் என்று நினைத்தார் போலும் அதனால் சகலகலாவல்லி பாடியதால் இந்துஸ்தானி மொழி பேசமுடிந்தது என்று சொல்லி இருக்கலாம்.

      சகலகலாவல்லி தொடர்ந்து படித்தால் அறிவில் சிறந்து ஓங்கலாம் என்று சொல்லி இருப்பார்கள்.

      சிறு திருத்தம் செய்து விட்டேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. அருமையான பதிவு..

    படங்கள் அனைத்தும் அழகு..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை, படங்களைப்பற்றி கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது.

    தங்கள் வீட்டு கொலுவில் வீற்றிருக்கும் முப்பெருந்தேவியர் படம் நன்றாக உள்ளது. இந்த தடவை பொம்மைகள் வைத்துள்ளீர்கள்? அருகிலிருக்கும் அய்யனார் கோவிலில் வைத்திருக்கும் கொலுவும் நன்றாக உள்ளது. கொலுவிலுள்ள இறைவனார்கள், தங்கள் வீட்டு தேவிகளை தரிசித்து கொண்டேன்.

    ஆன்மீக சொற்பொழிவின் சாராம்சம் கேட்கும் போது மனதிற்கு திருப்தியாக உள்ளது. பக்தியோடும், சொல்நயத்தோடும் சொல்கிறவர்களின் திறமையான பேச்சுக்கள் கேட்பவர்கள் மனதை உருகச் செய்து விடும் என்பது உண்மைதான். அதன்படி இவரும் அழகாக சொல்லியிருக்கிறார்.

    ஸ்ரீ பொன்முனியாண்டி சுவாமி, கருப்பண்ணசாமி தெய்வங்களின் படங்கள் அழகாக உள்ளது. அம்மன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரம் அருமையாக உள்ளது. அந்தப் படம் தொலைந்து போன நிலையில் மீண்டும் தங்களிடம் அம்மன் படம் வந்திருப்பது அவளின் அருள்தான். சுவாமிகளையும், அம்மனையும் தரிசித்து கொண்டேன். சுவையான பிரசாதங்களையும் எடுத்துக் கொண்டேன்.

    நாகேஷ் அவர்களின் நடிப்பை மறக்க முடியுமா? இந்தப் பாடல் அடிக்கடி கேட்டுள்ளேன். படம் கூட தொ. காட்சியில் பார்த்திருக்கலாம். ஆனால் நினைவில்லை. அத்தனையும் தொகுத்து நவராத்திரி பதிவாக தந்திருப்பதற்கு தங்களுக்கு நன்றி.

    எனக்குத்தான் பதிவுக்கு நேற்று வர இயலாமல் போய் விட்டது. ஏதேதோ வேலைகள். இரவும் படுத்தவுடன் தூங்கி விட்டேன். மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //தங்கள் வீட்டு கொலுவில் வீற்றிருக்கும் முப்பெருந்தேவியர் படம் நன்றாக உள்ளது. இந்த தடவை பொம்மைகள் வைத்துள்ளீர்கள்?//

      நன்றி. நான் கொலு வைக்கவில்லை. நிரந்தர கொலுவாக கண்ணாடி அலமாரியில் கொலுவீற்று இருக்கிறார்கள் அனைத்து கொலு பொம்மைகளும்.

      அய்யனார் கோவில் மற்றும் பக்கத்தில் உள்ள எல்லா கோவில்களிலும் கொலு வைத்து இருக்கிறார்கள். போக முடியவில்லை.

      சார் இருந்த போது ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கோவில்கள் போவோம்.


      //பக்தியோடும், சொல்நயத்தோடும் சொல்கிறவர்களின் திறமையான பேச்சுக்கள் கேட்பவர்கள் மனதை உருகச் செய்து விடும் என்பது உண்மைதான். அதன்படி இவரும் அழகாக சொல்லியிருக்கிறார்.//

      ஆமாம். அவர் நன்றாக பேசினார்.

      அம்மன் படம் பகிர முடியாதே என்று மனது கவலை பட்ட நேரம் குருக்கள் என்னிடம் இருக்கிறது தருகிறேன், என்றது மனதுக்கு ஆறுதல் , அவள் அருள் கிடைத்தது மனதுக்கு மகிழ்ச்சி.

      பதிவு எழுதி கொண்டு இருக்கும் போது ஜெயா தொலைக்காட்சியில் நாகேஷ் பிறந்த நாள் என்று அவர் பாடல் காட்சிகள் வைத்த போது எனக்கு இந்த பாடல் நினைவுக்கு வந்தது அம்மன் அருள் என்றே நினைக்கிறேன்.

      இந்த படத்தில் குணசித்திர நடிகராக நடித்து இருப்பார்.

      வேலைகள் செய்து களைத்து போய் தூங்கி விட்டது அதுவும் படுத்தவுடன் தூங்கி விட்டது நல்லது. தூக்கம் வரவில்லையென்றால் தான் கஷ்டம். பதிவு எப்போது வேண்டுமென்றாலும் படிக்கலாம்.
      தூக்கம் வரும் போது தூங்கி விட வேண்டும் . சில நேரம் தூக்கம் வராது இல்லையா?

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.



      நீக்கு
  10. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்
      பாடலையும், படங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  11. நவராத்திரி, கொலு ஆரம்பித்து விட்டது! இந்த முறை கோவிட் தொந்தரவு இல்லாததால் ரொம்ப நாட்களுக்குப்பிறகு நவராத்திரி இனிமையாகவும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் ஆரம்பித்துள்ளது போல ஒரு உணர்வு!
    பொய் சொல்லா மூர்த்தி கோவிலின் கொலு பிரம்மாண்டமாகவும் அழகாகவும் உள்ளது. அதென்ன ' பொய் சொல்லாத மூர்த்தி'? அதற்கும் நிச்சயம் ஒரு கதை இருக்குமே? தெரிந்திருந்தால் அதையும் பகிருங்கள்!
    படங்கள், தகவல்கள் அனைத்தும் அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
      இரண்டு வருடங்களுக்கு பிறகு கோயிலில் விழாக்கள் நடக்கிறது.
      நீங்கள் சொல்வது போல இனிமை , அமைதி, மகிழ்ச்சி தொடர்ந்து நிலவட்டும்.
      இந்த கோவிலில் இப்போது பூஜை செய்பவருக்கு அய்யனார் பேர் காரணம் தெரியவில்லை.
      வயதில் மூத்த குருக்கள் வந்தால் கேட்டு சொல்கிறேன்.

      நிறைய ஊர்களில் இந்த பேருடன் அய்யனார் இருக்கிறார்.
      படங்கள் தகவல்கள் அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  12. // நமக்கு தெரியும் அவர் சரஸ்வதியின் அருளால் நாவில் பிரவாகமாக வந்தது என்று.
    குழந்தைகளுக்கு அப்படியே இறைவனை கும்பிட்டு விட்டால் படிப்பு வந்து விடும் என்று படிக்காமல் விட்டு விடுவார்கள் என்று நினைத்தார் போலும் .. //

    இது சரியான அணுகுமுறை இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து..

    சொல்ல வேண்டியதைச் சரியாகச் சொல்லி விட்டால் அதன் பிறகு குழந்தைகளின் சிந்தனைத் திறன் திறந்து கொள்ளும்..

    ஸ்ரீ குமரகுருபரர் வாழ்க்கை அற்புதங்கள் நிறைந்தது.. இயன்ற வரை விவரமாகச் சொல்லிக் கொடுத்தால் தான்
    நமது பாரம்பரியங்களின் மீது பற்று வளரும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /சொல்ல வேண்டியதைச் சரியாகச் சொல்லி விட்டால் அதன் பிறகு குழந்தைகளின் சிந்தனைத் திறன் திறந்து கொள்ளும்..//

      நீங்கள் சொல்வதும் சரிதான்.
      ஸ்ரீ குமரகுருபர் வாழ்க்கை நிறைய அற்புதங்கள் நிறைந்ததுதான்.

      //இயன்ற வரை விவரமாகச் சொல்லிக் கொடுத்தால் தான்
      நமது பாரம்பரியங்களின் மீது பற்று வளரும்..//

      அதுவும் சரிதான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.





      நீக்கு
  13. மூவரும் மிக அழகாக உள்ளனர், நானும் குட்டிக் குட்டிச் சிலைகள் வாங்கி வந்தேன் இம்முறை வட இந்தியா வந்தபோது. எங்கள் வீட்டிலும் விரதம் அமோகமாகப் போய்க் கொண்டிருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      வட இந்தியா வந்தீர்களா? எந்த ஊர்?
      சிலைகள் வாங்கி வந்தது மகிழ்ச்சி.
      விரதம் இருக்கிறீர்களா? அம்மனுக்கு என்னசெய்தீர்கள்? என்று போஸ்ட் போடுங்கள்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  14. நவராத்திரி நல்வாழ்த்துகள்! படங்களும் பகிர்வும் நன்று. குருக்கள் படம் தந்து உதவியது அருமை. போட்டி அறிவித்து குழந்தைகளைக் கவர்ந்த விதம் பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      குழந்தைகளுக்கு கடைசி நாள் பரிசு கொடுத்து இருப்பார்கள். கடைசி நாள் கலந்து கொள்ள முடியவில்லை.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. படங்கள் விழா அலங்காரங்கள் சிறப்பாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      அனைத்து பதிவுகளையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி நன்றி.

      நீக்கு