புதன், 18 மே, 2022

மலர்குழல்மின்னம்மை




 

அம்மன்  சந்நதி  தனி கோபுரத்துடன் பெரிய பிரகாரம் கொண்ட அழகிய கோயில்.  திருக்கடவூர் மயானம் முதல் பகுதி

படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

                                                  அம்மன் கோவில் 

                                          நடராஜர் சந்நதி.
                       கோவில் மணி இருக்கும் மண்டபம்
1928 ல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது என்று கல்வெட்டு சொல்கிறது. கல்வெட்டில் அம்மனின் பெயர் "ஸ்ரீ வாடாமல்லிகை அம்பாள்" என்று போட்டு இருக்கிறது. மலர்குழல்மின்னம்மை என்று தல வரலாறு சொல்கிறது.

                                      தற்போதைய பெயர்.

இணையத்தில் அம்மனின் பெயர் நிமலகுசாம்பிகை என்று போட்டு இருக்கிறது.



பிராகாரத்தில் உள்ள  கிணறு இப்போது மோட்டார் போட்டு தண்ணீர் எல்லா சுவாமி சன்னதிகளிலும் கிடைக்கிறது. தண்ணீர் அபிஷேகத்திற்கு தூக்கி சுமக்க வேண்டாம்.
மாலை நேர சூரிய ஓளி  எதிர்பக்கம் என்பதால் படங்கள் கொஞ்சம் இருட்டு. பிள்ளையார்
                           அம்மன் கோவில் விமானம்

அம்மன் பிராகரத்திலிருந்து சுவாமி பிரம்மபுரீசுவரர் கோயில் கோபுரம் தெரிகிறது.
விநாயகர், சண்டிகேஸ்வரி சந்நதிகள் பிரகாரத்தில் இருக்கிறது.



//அடுத்து  அம்மன் சன்னதி போவோம். அதுவும் தனி கோயில் போல பெரிய சன்னதி .
அம்மன் கோயிலில் என்ன பார்த்தேன் என்பதையும்  சொல்கிறேன்.//

இதற்கு முந்திய பதிவில் இப்படி சொல்லி இருந்தேன் நினைவு இருக்கும் உங்களுக்கு. அங்கு பார்த்தது கீழே.



"இல்லம் தேடிக் கல்வி" என்ற தன்னார்வ தொண்டு  கொரோனா பெருந்தொற்று சமயம் நடைபெற்று வந்து இருக்கிறது. இப்போதும் மாலை அரசு  பள்ளி முடித்து வரும் குழந்தைகளை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும்   மாணவர்களுக்கு கற்பிக்கும் பணி நடக்கிறதாம்.
                                  மதினியும், தங்கையும்

 நாங்கள் கோயிலுக்குள் போன போது குழந்தைகள் மட்டும் கோபுர வாசலில் தங்கள் புத்தகபைகளை வைத்து விட்டு உள்ளே வந்து அமர்ந்து இருந்தார்கள்.


அவர்களிடம் "என்ன கோயிலை பார்க்க அழைத்து வந்தார்களா? "என்று கேட்டேன். இல்லை நாங்கள் இந்த ஊர் பள்ளிகூடத்தில் படிப்பவர்கள் "வீடு தேடி கல்வி என்ற  திட்டத்தில் மாலை வகுப்பு" என்று சொன்னார்கள்.
தன்னார்வலர்கள் பதிவு செய்து கொண்டு கற்பித்து வருகிறார்களாம். கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது.


//தன்னார்வலர்கள்..

  1. வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் (அல்லது) பகுதி நேரமாகவும் தன்னார்வலராக இருக்கலாம்.
  2. கண்டிப்பாக குழந்தைகளுடன் உரையாட தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
  3. தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் கற்றுத்தர வேண்டும். (பயிற்சிகளும் உபகரணங்களும் வழங்கப்படும்)
  4. யார் நிர்பந்தமும் இன்றி தன்முனைப்பாக பங்கேற்க வேண்டும்
  5. குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருத்தல் அவசியம்//
இணையத்தில் இல்லம் தேடி கல்வியை பற்றி அறிந்து கொள்ள படித்த போது தெரிந்து கொண்டது.


ஆசிரியர் சின்ன பெண்ணாக இருந்தார் அனைவருடனும் சிரித்து அன்பாக பேசி கொண்டு இருந்தார்.

உயரமான விதானம்.  ஜன்னல்கள் இருந்தன.

பக்கத்தில் இருபுறமும்  மண்டபம்  வெவ்வால் நந்தி மண்டபம் என்று சொல்வார்கள் அது போல இருந்தது. 
மாணவர்கள் அலங்காரம்.


கோவிலை வலம் வந்தவிட்டு திரும்பியபோது ஆசிரியர் வந்து விட்டார் . அவர்  குழந்தைகளுக்கு உடை அணிவித்து கொண்டு இருந்தார். ஆசிரியருக்கு வணக்கம் சொல்லி என்ன விழா என்று கேட்டபோது நாடகம் நடித்து காட்ட போகிறார்கள் என்றார்கள்.

என்ன கதை என்று கேட்டேன்?  "கண் தெரியாத ஒவியர்  ஓவிய போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக  படம் வரைவதும் அதற்கு  அரசர் வந்து பரிசு அளிப்பாதான கதை என்று  சொன்னார்." அரசர்தான் போட்டிக்கு அழைக்கிறார் போலும்.

நாடகம் பார்க்கலாம் என்றால் என் தங்கையின் 60 கல்யாண  முதல்  கால ஹோமம்  5.30க்கு ஆரம்பித்து விடும் என்பாதால் எல்லோரும் காரணத்தை சொல்லி, பிள்ளைகளை, ஆசிரியரை வாழ்த்தி விடைபெற்றோம். 

குழந்தைகளின் பெற்றோர்கள் நாடகத்தை பார்க்க வருவார்களா தெரியவில்லை. பார்வையாளர்கள் யாரும் இல்லை. ஆசிரியரும், குழந்தைகள் மட்டுமே இருந்தார்கள். நாடகம் தொடங்கும் போது வருவார்கள் என்று நினைக்கிறேன்.

//இந்த பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள் 6 மாதம் தினமும் 1 மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவை மூலம் குழந்தைகளுக்கு புதுமையான முறையில் பாடம் கற்று கொடுப்பார்கள்.//

பாடதிட்டத்தில் உள்ள பகுதி நாடகம். என்று தெரிந்து கொண்டேன்.



பிரம்மபுரீஸ்வரர், மலர்குழல்மின்னம்மை இந்த குழந்தைகளை நல்ல படியாக வைக்க வேண்டும் அவர்கள் பண்பிலும் கல்வியிலும் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டோம்.

அடுத்து திருக்கடவூர் திருக்குளம், மார்க்கேண்டையர்  கோவில் பார்க்கலாம்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------

40 கருத்துகள்:

  1. கோமதிக்கா அக்கா, படங்கள் எல்லாம் அழகோ அழகு. நடராஜர் சன்னதி, ஆம்லகுஜநாயகி (பெயரே வித்தியாசமாக இருக்கிறது!!) அம்மன் சன்னிதான விமானங்கள் எல்லாம் செம அழகு. நீங்கள் எடுத்த விதமும் பிரமாதம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  2. கோவிலின் அழகையும் பிரம்மாண்டத்தையும் கண்களால் பருகி, இவ்வளவு பெரிய கோவில், இத்தனை முயற்சிகளோடு சமூக நலனுக்காகக் கட்டப்பட்டிருக்கிறதே..அனைவரும் வந்து பங்கெடுத்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே..... மாலை நேரக் கல்வி பற்றிய பகுதி படித்தேன். எளிய குழந்தைகளுக்கு கோவிலில் கல்வி, தன்னார்வலர்களின் துணையோடு... அவர்கள் எல்லோரும் வாழ்க வளமுடன். அந்தக் குழந்தைகளும் நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேறட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //இத்தனை முயற்சிகளோடு சமூக நலனுக்காகக் கட்டப்பட்டிருக்கிறதே..அனைவரும் வந்து பங்கெடுத்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே..... மாலை நேரக் கல்வி பற்றிய பகுதி படித்தேன். //

      நல்ல இதயங்கள் நினைக்கும் யாவும் நடக்கும். நல்லது நடக்கட்டும்..

      //எளிய குழந்தைகளுக்கு கோவிலில் கல்வி, தன்னார்வலர்களின் துணையோடு... அவர்கள் எல்லோரும் வாழ்க வளமுடன். அந்தக் குழந்தைகளும் நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேறட்டும்.//

      ஆமாம், அதுதான் வேண்டும். நம் எல்லோர் வாழ்த்துக்களும் அந்த குழந்தைகளை வாழ்க்கையில் முன்னேற வைக்கும்.

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. அழகான படங்களுடன் பதிவு.. இல்லந்தேடி கல்வி - செய்திகள் அருமை..

    அம்பாளின் அழகுக் கோலம் மனதில் நிறைகின்றது..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
      இல்லம் தேடி கல்வி திட்டம் மிகவும் பயனுள்ளது.
      அம்பாளின் கருணைமிகு அழகுக்கோலம் மன நிறைவை தரும் என்பது உண்மை.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. மிக அருமையான படங்கள். அன்பின் கோமதிமா, வாழ்க வளமுடன்.

    என்ன் ஒரு அற்புதமான கோவில் !!!
    நல்ல தமிழ்ப் பெயருடன் இருந்தால் மகிழ்ச்சியே. புரியாத பிற மொழியைச் சிதைத்து

    அம்பாள் பெயராக வைக்காமல் இருக்கலாம். அவள் அன்னை . ஆகையால்

    பொறுத்து அருள்வாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

      அற்புதமான கோயில்தான்.
      கல்வெட்டில் உள்ள தமிழ் பெயரும், வரலாறு சொல்லும் தமிழ் பெயரும் நன்றாக இருக்கிறது.


      நீக்கு
  5. தன்னார்வலர்கள் இளவயதினராக இருந்து குழந்தைகளுக்கு உதவுவதைக் கண்டு மிக மிக
    மகிழ்ச்சி அம்மா.
    உங்களுக்கும் ஸாருக்கும் கல்வியின் மேலும்
    தமிழின் மேலும் ஆர்வம் இருப்பதை வெகு
    நாட்களாகக் கண்டிருக்கிறேன்.
    அந்தக் குழந்தைகளுக்கும் நல் வாழ்வு அமையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தன்னார்வலர்கள் இளவயதினராக இருந்து குழந்தைகளுக்கு உதவுவதைக் கண்டு மிக மிக
      மகிழ்ச்சி அம்மா.//

      ஆமாம் அக்கா , அவர் ஆர்வமாக எல்லாம் செய்கிறார்.



      //ஸாருக்கும் கல்வியின் மேலும்
      தமிழின் மேலும் ஆர்வம் இருப்பதை வெகு
      நாட்களாகக் கண்டிருக்கிறேன்.//

      அவர்கள் படித்த படிப்பும், வேலையும் அப்படி.
      //அந்தக் குழந்தைகளுக்கும் நல் வாழ்வு அமையட்டும்.//

      உங்கள் வாழ்த்துக்கு நன்றி அக்கா.


      நீக்கு
  6. பிரம்மபுரீஸ்வரர், மலர்குழல்மின்னம்மை....
    இந்தப் பெயரின் அழகு பிரமிக்க வைக்கிறது.
    மின்" என்ற சொல்லுக்கு என்ன பொருளோ தெரிய
    ஆவல். ஒளிரும் என்று அர்த்தம் செய்து
    கொள்ளலாமா.

    கூந்தலுக்கு வாசம், ஒளி எல்லாம் உண்டு என்று அன்னை சொல்கிறாளோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மின்" என்ற சொல்லுக்கு என்ன பொருளோ தெரிய
      ஆவல். ஒளிரும் என்று அர்த்தம் செய்து
      கொள்ளலாமா.

      கூந்தலுக்கு வாசம், ஒளி எல்லாம் உண்டு என்று அன்னை சொல்கிறாளோ//
      நீங்களே அழகான விளக்கம் சொல்லி விட்டீர்கள்.
      அக்கா நான் தலவரலாறில் உள்ள பேர், கல்வெட்டில் உள்ள பேர், அம்மன் சந்நதி வாசலில் இருந்த பேரை போட்டேன்.
      நீங்கள் பேரை வைத்து ஆராய்ச்சி எல்லாம் செய்கிறீர்கள்.
      நீங்கள் அம்மன் பேருக்கு சொல்லிய விளக்கம் அருமை.

      நீக்கு
  7. கோவிலின் கட்டமைப்பு ஆச்சரியம் ஊட்டுகிறது.
    காலாற நடந்து அம்மாவைக் காண ஆசை.
    உங்கள் ஃபோட்டோ எடுக்கும் திறன் என்னை
    அசர வைக்கிறது அன்பு தங்கச்சி.
    மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோவிலின் கட்டமைப்பு ஆச்சரியம் ஊட்டுகிறது//

      பழமையான கோயில் எல்லாம் எப்போது அழகுதானே அக்கா!
      நான் எடுத்த் படங்களை பாராட்டியதற்கு நன்றி.
      மீண்டும் வாங்க.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  8. படங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது பெரிய கோயிலாக தெரிகிறது பராமரிப்பு இல்லை போலும் பாரம்பரியம் காப்பது அரசின் கடமை ஆனால் நமது அரசியல்வாதிகளுக்கு கடவுளே பிடிக்காத போது.....

    வீடு தேடி கல்வி சிறக்கட்டும் நல்ல திட்டம். வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      படங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது //

      நன்றி.

      பராமரிப்பு நிறைய கோயில்களில் நடந்து கொண்டு இருக்கிறது, இங்கும் நடக்கும்.


      வீடு தேடி கல்வி சிறக்கட்டும் நல்லதிட்டம்//

      ஆமாம். நல்லதிட்டமாக தெரிகிறது.

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  9. அக்கா ரெண்டாவது படமும் செமையா இருக்கு...அழகா எடுத்துருக்கீங்க
    ஆம்ல குஜநாயகி தற்போதைய பெயர் - இணையத்தில் அம்மனின் பெயர் நிமலகுசாம்பிகை என்று போட்டு இருக்கிறது. நிமல வதான் போர்ட் எழுதிய போது அப்படி எழுதியிருக்காங்களோ...ஆனால் பெயரே - நிமல குசாம்பிகை என்று இருக்கிறதே எதுவா இருந்தா என்ன நமக்கு அம்மன் சக்தி!!

    கீதா





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அக்கா ரெண்டாவது படமும் செமையா இருக்கு...அழகா எடுத்துருக்கீங்க//

      நன்றி கீதா.

      நீங்கள் சொல்வது போல் அம்மனின் பெயர் எப்படி இருந்தால் என்ன என்ன பேரில் அழைத்தாலும் அவள் அருள்புரிவாள். எத்தனை பேர் இருந்தாலும் நாம் அழைப்பது "அம்மா" என்றுதான்.கன்றுக்கு இரங்கும் தாயாக ஓடி வருவாள் அன்னை. நமக்கு சகதிதான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. படங்கள் எல்லாமே வழக்கம்போலவே சிறப்பாக வந்துள்ளன.  சென்று வரவேண்டும் என்று ஆர்வத்தைத் தூண்டுகின்றன.

      நீக்கு
    3. படங்களை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.சென்று வாருங்கள் பணி ஓய்வு பெற்றவுடன் தரிசனம் செய்ய கிளம்பி விடலாம்.

      நீக்கு
  10. பிராகாரத்தில் உள்ள கிணறு இப்போது மோட்டார் போட்டு தண்ணீர் எல்லா சுவாமி சன்னதிகளிலும் கிடைக்கிறது. தண்ணீர் அபிஷேகத்திற்கு தூக்கி சுமக்க வேண்டாம்//

    டெக்னால்ஜி!!! நல்லது சௌகரியம்தான்.

    //மாலை நேர சூரிய ஓளி எதிர்பக்கம் என்பதால் படங்கள் கொஞ்சம் இருட்டு. பிள்ளையார்//

    ஆமாம் அக்கா சூரிய ஓளி நம் பின்னால் இருக்க வேண்டும் அலல்து கொஞ்சம் சைடில் இருக்க வேண்டும் நாம் எடுக்கப் போவதன் மேல் பட வேண்டும்...ஆனால் படம் நன்றாகத்தான் வந்திருக்கிறது கோமதிக்கா...தெரிகிறது.

    விமானங்கள் எல்லாமே நல்ல சூரிய ஒளியில் மிக நன்றாக வந்திருக்கின்றன

    ஆமாம் அம்மன் சன்னதி போவது பற்றி சொல்லிருந்தீங்க

    மதினியும் தங்கையும் மூட்டை முடிச்சுகளுடன்? ஹாஹாஹா குழந்தைகளின் புத்தகப் பைகள்!!

    தன்னார்வலர்கள் பணி மிக மிகச் சிறப்பாக இருக்கிறது. பாருங்க நாம் எவ்வளவோ குறைகள் சொல்கிறோம் சரியான கல்வி இல்லை அது இல்லை என்று.....இப்படி நல்ல விஷயமும் கண்ணில் படாமல் சத்தமில்லாமல் நடந்து வருகிறது இல்லையா...வாசிக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. ஸ்ரீராம் இதனை பாசிட்டிவ் செய்திகளுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. டெக்னால்ஜி!!! நல்லது சௌகரியம்தான்.//

      முன்பு கிணற்றிலிருந்து குடம் குடமாக த்ண்ணீர் அபிஷேகத்திற்கு சுமந்து செல்ல வேண்டும். இப்போது வசதி செய்து கொடுத்து இருக்கிறார்கள்.

      //படங்களை எல்லாம் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
      மதினியும் தங்கையும் மூட்டை முடிச்சுகளுடன்? ஹாஹாஹா குழந்தைகளின் புத்தகப் பைகள்!! //

      ஆமாம் , புத்தக மூட்டைகளுக்கு காவலாக!

      ..//.இப்படி நல்ல விஷயமும் கண்ணில் படாமல் சத்தமில்லாமல் நடந்து வருகிறது //
      ஆமாம் கீதா, நல்லவிஷயம் எனக்கு அந்த குழந்தைகள் சொல்லிதான் தெரியும்.

      அரசின் திட்டம் என்று இணையத்தில் போய் பார்த்தபின் தான் தெரிந்து கொண்டேன்.


      நீக்கு
  11. நாடகத்திற்கான கதை, ஆசிரியர் காட்டும் ஆர்வம் ஊக்கம், நல்ல விஷயம் அதுவும் கோயில் வளாகத்துக்குள் பெரிய மண்டபம் அழகாக இருக்கிறது குழந்தைகளுக்கும் நல்ல நேர்மறையான இடம், நல்ல விஷயங்கள் கற்க, பரவாயில்லை கோயிலில் இதற்கு அனுமதி கொடுத்திருப்பது மிக மிக பாராட்ட வேண்டிய விஷயம்.

    //பிரம்மபுரீஸ்வரர், மலர்குழல்மின்னம்மை இந்த குழந்தைகளை நல்ல படியாக வைக்க வேண்டும் அவர்கள் பண்பிலும் கல்வியிலும் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டோம்.//

    நாங்களும் கோமதிக்கா

    அருமையான் பதிவு கோயிலோடு சேர்ந்து கல்வியும்!!!

    அபிராமி அந்தாதி நினைவுக்கு வந்தது தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
    மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
    இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
    க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நாடகத்திற்கான கதை, ஆசிரியர் காட்டும் ஆர்வம் ஊக்கம், நல்ல விஷயம்//

      ஆமாம்.

      //குழந்தைகளுக்கும் நல்ல நேர்மறையான இடம், நல்ல விஷயங்கள் கற்க, பரவாயில்லை கோயிலில் இதற்கு அனுமதி கொடுத்திருப்பது மிக மிக பாராட்ட வேண்டிய விஷயம்.//
      கோயில் அறநிலை வசம்தானே இருக்கிறது. அதனால் அனுமதி கொடுத்து இருப்பார்கள். திட்டமும் அரசின் திட்டம்தானே!

      உங்கள் வாழ்த்துக்களும் குழந்தைகளுக்கு கிடைத்தது மகிழ்ச்சி.

      //கோயிலோடு சேர்ந்து கல்வியும்!!!//

      நீங்கள் பகிர்ந்த பாடலும் கருத்தும் அருமை.
      உங்கள் கருத்துகளுக்கு நன்றி கீதா.

      நீக்கு
    2. அந்தத் தன்னார்வலர்களுக்கு நகரங்களில் இருக்கும் சந்தடியும், கவன திசை திருப்பல்களும் (அதிகக்) இல்லை என்பது ப்ளஸ்.

      நீக்கு
    3. ஆமாம், தன்னார்வலர்களுக்கு அமைதியாக அவர்கள் பணியை செய்ய ஏற்ற இடம். நீங்கள் சொல்வது போல் பணியில் இடையூருகள் இல்லாதது அவர்களுக்கு நல்லதுதான்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்
      ஆகா! கல்வி சிறப்பு//

      ஆமாம் தன்பாலன், நல்ல திட்டம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. அம்மனுக்கு பல்வேறு நாமங்கள்.  பழைய கோவில் என்பது பிரகாரச் சுற்றிலிருந்தே எபப்டிக் தெரிகிறது பாருங்கள்.  விசாலமான சுற்று..  பழமையான கற்கள்..  ஆளில்லாத பிரகாரங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      ஆமாம், அம்மனுக்கு பல்வேறு நாமங்கள்.
      பிரகாரம் மிக் அருமையாக இருக்கிறது. மாலை நேரம் அம்மனை தரிசனம் செய்து கோயிலை வலம் வந்தாலே போதும் உடல் நலமாக இருக்கும். ஆனால் மக்கள் வரவு குறைவாக இருக்கிறது. மாலை 6மணிக்கு வருவார்களோ என்னவோ தெரியவில்லை.

      நீக்கு
  14. இல்லம் தேடி கல்வி தகவல் சிறப்பு.  ஆனால் குழந்தைகள் புத்தகப்பையை வெளியில் வைத்துவிட்டு வெறும் கையுடன் உள்ளே இருக்கிறார்களே...  தன்னார்வலர்கள் ஆர்வமும் தொண்டும் பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகள் நாடகம் நடிக்க போகிறார்கள் அதனால் புத்தகபை வெளியில் இருக்கிறது ஸ்ரீராம். நாடகத்துக்கு ஆய்த்தம் செய்யும் படம் பார்த்தீர்கள் அல்லவா?
      தன்னார்வலர்கள் ஆரவத்துடன் தொண்டு செய்வதற்கு பாராட்டவேண்டும் தான். தொடர்ந்து இந்த திட்டம் வரும் கல்வி ஆண்டிலும் இருந்தால் குழந்தைகளுக்கு நல்லது.

      நீக்கு
  15. அடுத்தமுறை திருக்கடவூர் செல்லும்போது அவசியம் இந்தக் கோவிலை சென்று பார்த்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன்.  பார்ப்போம், எப்போது சந்தர்ப்பம் வருகிறது என்று...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவன் அருளால் அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் சென்று வருவீர்கள். வாய்ப்பு விறைவில் வர வாழ்த்துக்கள்.
      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி.

      நீக்கு
  16. கோவில் சிறப்பாக இருக்கிறது. தன்னார்வ தொண்டர்களின் பணி மிகவும் நன்று. தகவல்கள் அனைத்தும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. நலம் வாழ்க..
    சித்திரை முதல் நாளில் இருந்து காலையும் மாலையும் தேவாரத் திருப்பதிகங்களை வரிசைக் கிரமமாக வாசித்து வருகின்றேன்.. தங்களது இந்தப் பதிவைக் காலையில் படித்தேன்.. அன்று மாலையில் தேவாரம் படிக்கும் போது எனக்குக் கிடைத்தது
    திருக்கடவூர் மயானத் திருப்பதிகம்..
    இரண்டாம் திருமுறையில்
    எண்பதாவது திருப்பதிகம் அது..

    அம்பிகையின் திருப்பெயர் குறித்த சிறு குறிப்புகள் -

    தருமபுர ஆதீன தளத்தில் இருந்து : -

    இறைவன் - பெரியபெருமான், பிரமபுரீசர்.. இறைவி - மலர்க்குழல் மின்னம்மை..
    வில்வம், காசி தீர்த்தம்..

    காமகோடி தளத்தில் இருந்து:-
    இறைவன் - பிரமபுரீசுவரர்.
    இறைவி - மலர்க்குழல் மின்னம்மை, ஆமல குஜ நாயகி..

    சரியான அர்த்தத்தை சமஸ்க்ருதம் அறிந்தோரிடமிருந்து தெரிந்து தெளிய வேண்டும்..

    கருத்துரையில் வல்லியம்மா அவர்கள் அம்பிகையின் கூந்தல் அழகுக்கு ஒரு பெயரா என்று வியந்திருந்தார்கள்..

    வீட்டிற்கு அருகில் உள்ள சிவாலயத்தின் அம்பிகையின் திருப்பெயர் சுகந்த குந்தளாம்பிகை..
    இயல்பாகவே/ இயற்கையாகவே நறுமணம் மிக்க கூந்தலை உடையவள்,
    நறுங்குழல் நாயகி,

    நக்கீரர் தவறு செய்தது இந்த இடத்தில் தான்..

    பதிலளிநீக்கு
  18. //சித்திரை முதல் நாளில் இருந்து காலையும் மாலையும் தேவாரத் திருப்பதிகங்களை வரிசைக் கிரமமாக வாசித்து வருகின்றேன்..//

    நல்லது மகிழ்ச்சி. என் மாமியார் , என் கணவர் மற்றும் கணவரின் சகோதரர்கள் இப்படி படிப்பார்கள்.
    நானும் தல வரலாறு படித்து தான் செய்திகளை பகிர்ந்தேன். போன பதிவில் இறைவன் இறைவி பேர் தீர்த்தம் பேர், தலவிருடசம் பேர் படம் எல்லாம் பகிர்ந்து விட்டேன்.
    வல்லி அக்கா கூந்தல் அழகுக்கு பெயரா என்று வியந்தது . அதற்கு நீங்கள் அம்பிகையின் பெயர் சொல்லி அந்த பேருக்கு அர்த்தம் சொன்னதற்கு நன்றி.
    அம்பிகையின் நிறைய பேர்கள் மிகவும் அழகாய் இருக்கும்.

    //இயல்பாகவே/ இயற்கையாகவே நறுமணம் மிக்க கூந்தலை உடையவள்,
    நறுங்குழல் நாயகி,//

    உண்மை.

    //நக்கீரர் தவறு செய்தது இந்த இடத்தில் தான்.//

    ஆமாம். அவர் தவறு இறைவனை வரவழைத்தது, அனைவரும் காணும் பேறு கிடைத்தது..

    உங்கள் கருத்துக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. நீங்கள் பகிர்ந்த கோவிலின். இறைவனின் பெயரும், இறைவியின் பெயரும் அழகாக உள்ளது. கோபுர தரிசனத்தையும், அம்மனின் தரிசனத்தையும் கண்டு மன நிறைவடைந்தேன். அம்மன் அழகாக உள்ளார். அவரின் விதவிதமான பெயர்களின் அழகும் மனதை கவர்ந்தது.

    என்றும் மல்லிகை மலரின் வாசத்துடன் இருக்கும் அழகிய மலர் குழல் மின்னம்பிகை அம்மன் வாடா மலராகவும் என்றும் இருந்து நம்மை காத்தருள்வாள் என்பதற்காக அம்மனுக்கு இப்படியான நிறைய வித்தியாசமான பெயர்கள் போலும். ஆம்ல குஜநாயகி பெயரும் நன்றாக உள்ளது.

    அங்கு தன்னார்வலர்களின் கல்வி தொண்டு சிறப்பாக உள்ளது. கல்வி வேறு, கோவில் வேறு அல்லவே... இரண்டும் ஒன்று சேரும் போது குழந்தைகளுக்கு அம்மன் அருள் கண்டிப்பாக கிடைக்கும். அங்கு படிப்பு சொல்லித் தருபவர்களுக்கும் அம்பிகை நிறைவான வாழ்வு தருவாள்.

    படங்கள் வழக்கம் போல் அழகாக எடுத்துள்ளீர்கள். கோவிலின் விபரங்களும் அருமையாக உள்ளது. உங்களின் விபரங்களுடன் படிப்பது எப்போதும் உங்களோடு கோவிலுக்கு வந்த உணர்வை தருகிறது. சென்ற பதிவை படிக்கவில்லை. விரைவில் படிக்கிறேன். என் பதிவில் கூறியுள்ளது போல் சுகர், அதற்கான மருத்துவம் என வெளியில் மருத்துவரிடம் அடிக்கடிச் செல்வதால், தொடர்ச்சியாக வலையுலகிற்கு வரவியவில்லை. இன்று வந்துள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கம்லா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      //என்றும் மல்லிகை மலரின் வாசத்துடன் இருக்கும் அழகிய மலர் குழல் மின்னம்பிகை அம்மன் வாடா மலராகவும் என்றும் இருந்து நம்மை காத்தருள்வாள் என்பதற்காக அம்மனுக்கு இப்படியான நிறைய வித்தியாசமான பெயர்கள் போலும். ஆம்ல குஜநாயகி பெயரும் நன்றாக உள்ளது.//

      அருமையான சொன்னீர்கள்.

      ரும் நன்றாக உள்ளது.

      //அங்கு தன்னார்வலர்களின் கல்வி தொண்டு சிறப்பாக உள்ளது. கல்வி வேறு, கோவில் வேறு அல்லவே... இரண்டும் ஒன்று சேரும் போது குழந்தைகளுக்கு அம்மன் அருள் கண்டிப்பாக கிடைக்கும். அங்கு படிப்பு சொல்லித் தருபவர்களுக்கும் அம்பிகை நிறைவான வாழ்வு தருவாள்.//

      நீங்கள் சொல்வது உண்மை.கல்வி வேறு இல்லிய, கோவில் வேறு இல்லைதான். உங்கள் வாக்கு படி அம்பிகை நல்வாழ்வு தரட்டும்.

      நீங்கள் பதிவு போட்டு இருக்கிறீர்களா? காட்டவில்லையே எனக்கு.
      பார்க்கிறேன். உடல் நலத்தைப்பார்த்து கொள்ளுங்கள்.
      பதிவை நேரம் கிடைக்கும் போது படிக்கலாம். உங்களை வலைத்தளத்தில் பார்க்கவில்லை என்ற போது வீட்டு வேலைகள் அதிகமாக இருக்கும் உறவினர்கள் வருகையால் என்று நினைத்தேன்.
      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.





      நீக்கு