திங்கள், 7 பிப்ரவரி, 2022

விழுதுகள் தாங்கும் ஆலமரம்

   மதுரை கோச்சடையில் பாரம்பரிய முறையில் உணவும், தங்கும் வசதியும் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் ( Heritage Madurai) உள்ள ஆலமரம். மகன் அழைத்து சென்ற உணவு விடுதி. இதை பற்றிய பதிவு பின்பு வரும்.


ஆலமரத்தை தாங்கும் விழுதுகள் போல என் குழந்தைகள் பேரக்குழந்தைகள் இருக்கிறார்கள்.


வல்லி அக்கா சொன்னது போல இனிய நினைவுகள்  தந்த படம்


// அன்பின் கோமதி அரசுவின் திருமண நாள்
ஃபெப்ரவரி ஏழாம் தேதி.

மனம் நிறைய இனிய நினைவுகளுடன்
ஸாரின் அன்புடனும் 
நல் ஆரோக்கிய வாழ்வு அமைய வேண்டும்.
சுற்றம், குடும்பம் என்று 
எல்லோரும் கோமதியின் மீது பரிவுடன் இருப்பதற்கு
அவரின் ஆழ்ந்த புரிதலே காரணம்.
வாழ்க வளமுடன்.//

ஒரு நாள் என்ற அக்காவின் பதிவில் இப்படி என்னை வாழ்த்தி இருக்கிறார்கள்.

இப்படி அன்பான நட்புகளை கொடுத்த இறைவனுக்கு நன்றி.
அக்கா சொல்வது போல என்னை என் குழந்தைகள்  புரிந்து கொண்டார்கள் அது தான் உண்மை. என்னை வழி நடத்துகிறார்கள் நாளும். உறவுகளும், இருபக்க உடன்பிறப்புகளும் தகுந்த ஆலோசனைகள் வழங்கி நாங்கள் இருக்கிறோம் என்கிறார்கள்.

 என் கணவர் என்னை குழந்தையை போல பார்த்து கொண்டார்கள். தானே எல்லா பொறுப்புகளையும் செய்தார்கள். நான் அவர்களை சார்ந்தே வாழ்ந்து விட்டேன்.
ஆனால் குழந்தைகள் என் காரியங்களை  நானே செய்து கொள்ள  திடமான மனதுடன் தெளிவான முடிவுகள் எடுக்க கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.


//நெல்லைத்தமிழன் எனக்கு ஆறுதல் சொல்லும் போது நல்ல பயிரை வளர்த்திருக்கிறீர்கள் அவங்க உங்களுக்கு துணையிருபார்கள் நலமே விளைக ! என்றார்.//

அது போல நல்ல குழந்தைகள் என் அறியாமையை போக்கி  எனக்கு நிறைய கற்று கொடுத்து இருக்கிறார்கள். நிறைய விஷயங்கள் மகன் மருமகள், மகள் , மருமகன், பேரக்குழந்தைகள் எல்லாம் வாழ்க்கையை சுலபமாக எதிர் கொள்ள கற்று கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். 

நாள்தோறும் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு இருக்கிறேன்.

இங்கு நமக்கு வீட்டு பக்கமே கடைகள் நினைத்த போது வாங்கி கொள்ளலாம். மகன்  மகள் இருக்கும் ஊரில் நினைத்த போது பொருட்களை வாங்கி கொள்ள முடியாது.  பால் முதல் கொண்டு  காய்கறி வரை முன்பே தேவையானதை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அழகாய் தட்டுபாடே இல்லாமல்  வாங்கி வைத்து கொள்கிறார்கள். தேவையானதை வெளியே போனில் ஆர்டர் செய்து விடுகிறார்கள் வீடுதேடி பொருட்கள் வந்து விடுகிறது.
நான் அவர்களை பாராட்டி கொண்டே இருப்பேன்.எப்படி இப்படி திறமையாக எல்லாம் செய்கிறார்கள் என்று வியந்து போய் விடுவேன். அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. வீட்டு வேலைகளை அவர்களே தான் செய்கிறார்கள்.

இங்கு ஒரு மாதம் இருந்து விட்டு போகும் போது வீட்டுக்கு போவதற்குள் மளிகை, காய், பழங்கள் வீட்டுக்கு முன் இருப்பது போல் போனில் ஆர்டர் செய்து விட்டாளாம் மருமகள். நண்பர் வீட்டிலிருந்து இட்லி, சட்னி, சாம்பாரும் வந்து கொடுத்து விட்டு போனார்களாம். 

 இங்கும் காய்கறி மளிகைபொருட்கள் தேவையானதை  போனில் சொல்லி வாங்கி வைத்துக் கொள்ள பழக்கி விட்டு விட்டார்கள்.

கணவரும்  நானும் லிஸ்ட் போட்டு கடையில் கொடுத்து வருவோம் வீட்டுக்கு பொருட்கள் வரும். இப்போது தனித்து செய்ய பழகி கொண்டு இருக்கிறேன்.

பதட்டம் இல்லாமல் நிதானமாய் செயல்படுங்கள் இதைதான் திரும்ப திரும்ப சொல்கிறார்கள் குழந்தைகள். பேரன் அமைதி அமைதி என்கிறான்.

இறை நம்பிக்கை வாழ்க்கையில் கற்றுக் கொண்ட அனுபவங்கள் அப்புறம்
உலக சமுதாய சேவா சங்கத்தில் சேர்ந்து  மனவளக்கலை படித்தாலும் அதில் ஆசிரியராக இருந்து வகுப்புகள் நடத்திய  போதும். கவலை , பயம் எல்லாம் என் கணவர் இறைவனடி சேர்ந்தவுடன் வந்து ஒட்டிக் கொண்டது. அதை குழந்தைகள் நினைவு படுத்தி கவலை ஒழித்தல், சினம் தவிர்த்தல், எண்ணம் ஆராய்தல், நான் யார்? என்பதை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய நேரம் இது என்று உணர்த்தினார்கள்.



நேற்று எங்கள் குலதெய்வம் கோவிலில்  (அருள்மிகு ஸ்ரீ களக்கோட்டீஸ்வரர்  தர்ம சாஸ்தா) மகா கும்பாபிஷேகம்  நடந்து இருக்கிறது.

குலதெய்வ அருளால் குடும்பத்தினர் அனைவரும் நோய் நொடி இல்லாமல் மனநிறைவுடன் வாழ வேண்டும். 

என் கணவரும் தெய்வமாக இருந்து அருள்புரிய வேண்டும்.  தினம் தினம் அவர்களின் ஒவ்வொரு செயல்களின் நினைவுகளும் வந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு கணமும் அவர்களின் இருப்பை உணர்கிறேன். அக்கா சொன்னது போல அவர்களுடன்  நாங்கள் இனிமையாக களித்த நாட்களை எண்ணிப்பார்த்து  வாழவேண்டும்.
அவர்கள் ஆசிகள், அன்பு குடும்பத்தினரை வழி நடத்தும்.




1974 ல் என் கணவர்  எனக்கு தெரியாமல் என்னை வரைந்த ஓவியம். நான் படிக்கும் போது இப்படி அமர்ந்துதான் படிப்பேன், எழுதுவேன்.

பேரன், மகனிடம் உங்கள் ஊரில் தினம் பறவைகளை கண்டு மகிழ்ந்தேன் என்றவுடன்
அமேசானில் பறவைகளை  வரவழைத்து விட்டார்கள். மகனும், மருமகளும் சேர்ந்து இரவு சுவற்றில்ஒட்டி காலையில் என்னை ஆச்சரியப்படுத்தி விட்டார்கள். தினம் பறவைகளை வீட்டுக்குள் பார்க்கலாம்.

இங்கு தினம் பறவைகளை பால்கனி சென்று பார்த்து கொண்டு இருக்கிறேன். மகன் ஊரில் வீட்டுக்குள் இருந்தே தோட்டத்திற்கு வரும் பறவைகளை பார்க்கலாம்.


பேரன்கள், பேத்தி, எல்லோரும் மகிழ்ச்சி படுத்த பாடியும் ஆடியும் , பெரிய பேரன் மிருதங்கம் வாசித்தும் மகிழ்வித்தார்கள்.  ஆன் லைனில் வகுப்பு என்பதால் எனக்கு போனஸ் வாய்ப்பு. பெரிய பேரன்,பேத்தி எல்லாம்  அடிக்கடி பேசவில்லை என்று நினைப்பேன், அவர்கள் உடன் இருக்கும் போதுதான் தெரிகிறது அவர்களுக்கு எவ்வளவு படிக்க எழுத என்று வேலைகள் இருக்கிறது என்று. இதற்கு இடையில் நம்மிடம் பேசுகிறார்கள் அதை பாராட்டி மகிழ வேண்டும்.

பேத்தி  அன்பு தோழியாக, தாயாக இருக்கிறாள்.
என்னால் இந்த தடவை அவர்களுக்கு பிடித்தமானதை செய்து கொடுக்க முடியவில்லை. ஊரிலிருந்து வந்த படியால் சில உடல், மன பாதிப்புக்கள். 

ஒரு வருடமாய் நான் சமைக்கவில்லை அதுவும் ஒரு காரணம். மகள், மருமகள் தினம் சுவையாக சமைத்து கொடுத்தார்கள்.
இங்கு வந்த போது விருந்தினர் வருகை போது மருமகள் சமைத்தாள்.


அடுத்த தடவை வரும் போது அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுக்க இறைவன் அருள்புரிய வேண்டும்.

 இந்த ஆண்டு பொங்கலுக்கு  மகன் , மருமகள், பேரன் இருந்தார்கள். மீனாட்சி அம்மன் கோயில் போனோம். சில  ஓட்டல்கள் அழைத்து சென்றான். வேகமாய் நாட்கள் ஓடி விட்டது.


பேரன் கவின்  மகன், மருமகள் ஊருக்கு போய் விட்டார்கள். மகள், பேத்தி பேரன் இருக்கிறார்கள். பொழுதுகள் வேகமாய் ஓடுகிறது. ஸ்கைப்பில் விளையாடுகிறான் உரையாடுகிறான்.  அவன் வரைந்த ஓவியங்களை அனுப்புகிறான். அதை ஒரு நாள் பதிவில் போட வேண்டும்.


வலைத்தளத்திற்கு அடிக்கடி வர முடியவில்லை, பகிர நிறைய விஷயங்கள் இருக்கிறது.

விரைவில் வருவேன் இறைவன் அருளால். 




வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

54 கருத்துகள்:

  1. மனதை மகிழ்ச்சியாக வைத்திருங்கள்.
    பெயரின், பெயர்த்திகளோடு காலத்தை கழிப்பதற்கு இறையருள் வேண்டும் இது என்றும் தங்களுக்கு நிலைத்திருக்க இறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது சரிதான், மனதை மகிழ்ச்சியாக வைத்து இருக்க முயல்கிறேன்.

      பேரன் , பேத்திகளுடன் இருப்பது சந்தோஷம் தான் . நீங்கள் சொல்வது போல் நிறைய பேர் பேரன் பேத்திகளுடன் கூடவே இருக்கிறார்கள் இறையருள் தான்.
      உங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. தங்களுக்கு என் இனிய திருமணநாள் வாழ்த்துகள். வல்லி சகோதரி அவர்களின் பதிவிலும் சில நாட்களாக உங்கள் திருமணநாள் குறித்து தெரிந்து கொண்டுள்ளேன். அவர்களும் உங்கள் நினைவாகவே எப்போதும் உள்ளார்கள். இப்படிபட்ட ஒரு இனிதான நட்பு கிடைக்க நாம் அனைவருமே கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    ஏனோ உங்களின் பதிவு கண்களில் நீரை வரவழைத்து விட்டது. நல்ல குடும்பம், நல்ல வாழ்க்கை, நல்ல குழந்தைகள்,அவர்களின் குழந்தைகளான நல்ல பேரன்,பேத்தி என்ற உறவுகள் என அனைவருமே அன்பாக அமைய உண்மையிலேயே இறைவன் அருள் வேண்டும். அவ்வகையில் உங்களுக்கு இறைவன் அருள் பாலித்திருக்கிறார். இறைவனுக்கு மனப்பூர்வமான நன்றிகள்.

    படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. நீங்களும், சாரும் இருக்கும் போட்டோ நன்றாக உள்ளது. உங்களை உங்கள் கணவர் வரைந்திருக்கும் ஓவியம் மிகவும் அழகாக உள்ளது.

    குழந்தைகள் உங்களுக்காக வாங்கி ஒட்ட வைத்திருக்கும் பறவைகள் படமும் அழகாக உள்ளது. முதல் ஆல மர விழுதுகள் படமும், தங்கள் குல தெய்வ இறைவனின் படமும் கண்டு தரிசித்து கொண்டேன்.

    நானே உங்கள் நலம் குறித்து விசாரிக்க வேண்டுமென இருந்தேன். மனநலவளம் பற்றி படித்து கற்றுத் தேர்ந்திருக்கும் உங்களுக்கு "தைரியமாக இருங்கள்" என நான் சொல்லும் வார்த்தைகள் வெறும் ஆறுதல் மொழிகள்தான். மற்றொரு முறை உங்கள் மகன் குடும்பத்தினர் இங்கு வரும் போது கண்டிப்பாக நீங்கள் அவர்களுக்கு வேண்டியதை செய்து தருவீர்கள். அதனால் வருத்தமடைய வேண்டாம்.
    உங்களுக்கு நேரம் அமையும் போதல்லாம் வலைத்தளம் வந்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களைப் போன்றோரின் இனிய நட்புகள் கிடைத்திருப்பதற்கு நானும் பெருமை கொள்கிறேன். இது என்றும் தொடர வேண்டுமாய் இறைவனை மனமாற பிரார்த்தித்தும் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன். வாழ்க வளமுடன்

      //தங்களுக்கு என் இனிய திருமணநாள் வாழ்த்துகள். வல்லி சகோதரி அவர்களின் பதிவிலும் சில நாட்களாக உங்கள் திருமணநாள் குறித்து தெரிந்து கொண்டுள்ளேன்//

      ஆமாம், வல்லி அக்கா தை மாதம் திருமணங்களில் என் திருமண நாளை மறக்கவே மாட்டார்கள். ஜலீலா "சமையல் அட்டகாசம் " எழுதுவார் அவருக்கும் பிப்ரவரி 7 தான் திருமண நாள். உங்கள் மகனுக்கும் 3ம் தேதி திருமண நாள் என்று வல்லி அக்கா சொன்னார்கள் மகனுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.


      //இப்படிபட்ட ஒரு இனிதான நட்பு கிடைக்க நாம் அனைவருமே கொடுத்து வைத்திருக்க வேண்டும்.//

      உண்மை . அன்பு வடிவானவர் அக்கா.
      இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்தான்.

      //சாரும் இருக்கும் போட்டோ நன்றாக உள்ளது. உங்களை உங்கள் கணவர் வரைந்திருக்கும் ஓவியம் மிகவும் அழகாக உள்ளது.//

      நன்றி.
      பதிவில் அனைததையும் படித்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி.

      //நானே உங்கள் நலம் குறித்து விசாரிக்க வேண்டுமென இருந்தேன். மனநலவளம் பற்றி படித்து கற்றுத் தேர்ந்திருக்கும் உங்களுக்கு "தைரியமாக இருங்கள்" என நான் சொல்லும் வார்த்தைகள் வெறும் ஆறுதல் மொழிகள்தான்//

      படித்தாலும் அதை வாழ்க்கையில் கடைபிடித்தால்தான் பிறருக்கு சொல்வது எளிது அதை நம் வாழ்க்கையில் கடைபிடிப்பது மிகவும் கஷ்டம்தான். நான் முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.

      //மற்றொரு முறை உங்கள் மகன் குடும்பத்தினர் இங்கு வரும் போது கண்டிப்பாக நீங்கள் அவர்களுக்கு வேண்டியதை செய்து தருவீர்கள். அதனால் வருத்தமடைய வேண்டாம்.//

      நம்பிக்கை தான் வாழ்க்கை நீங்கள் சொல்வது போல அடுத்த முறை வரும் போது செய்து கொடுக்க இறைவன் அருள வேண்டும்.

      //உங்களுக்கு நேரம் அமையும் போதல்லாம் வலைத்தளம் வந்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.//

      கண்டிப்பாய்.


      //உங்களைப் போன்றோரின் இனிய நட்புகள் கிடைத்திருப்பதற்கு நானும் பெருமை கொள்கிறேன். இது என்றும் தொடர வேண்டுமாய் இறைவனை மனமாற பிரார்த்தித்தும் கொள்கிறேன்//

      நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.



      நீக்கு
  3. பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. கேட்க, படிக்க ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. இனி சாரின் நினைவுகளும், அடுத்த தலைமுறைகளின் அன்பும்தான் உங்களை வழிநடத்தணும்.

    எப்போதும் முடிந்த அளவு நீங்களே சமையல் செய்யுங்கள். இது நல்ல மனமகிழ்ச்சி தரும்.

    அம்மா இல்லாதபோது துணையை அம்மாவாக நினைத்துக்கொள்வதுபோல, துணை இல்லாதபோது குழந்தைகள்தான் துணையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை வேணும். நல்லா பாத்துப்பாங்க. உங்களுக்கே தெரியும்..தொடர்ந்து இயங்கிக்கொண்டிருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //கேட்க, படிக்க ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. இனி சாரின் நினைவுகளும், அடுத்த தலைமுறைகளின் அன்பும்தான் உங்களை வழிநடத்தணும்.//

      ஆமாம். அவர்கள் தான் என்னை வழி நடத்த வேண்டும்.

      //எப்போதும் முடிந்த அளவு நீங்களே சமையல் செய்யுங்கள். இது நல்ல மனமகிழ்ச்சி தரும்.//

      மகனும் அதுதான் சொல்கிறான். கோவை ஆச்சி எத்தனை வயது வரை அவர்களே உணவு சமைத்தார்கள் அது போல நீங்களும் செய்யுங்கள். என்கிறான்.

      நீங்கள் சொல்வது சரிதான். குழந்தைகள் துணையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

      எழுத நல்ல வசதிகள் செய்து கொடுத்து இருக்கிறான், மேஜை. கணினி நாற்காலி எல்லாம் வாங்கி கொடுத்து போய் இருக்கிறான்.
      எழுத , படம் போட ஊக்கபடுத்தி கொண்டு இருக்கிறார்கள்.
      தொடர்ந்து இயங்கி கொண்டு இருக்கிறேன். இறைவன் உடல் பலத்தை மனபலத்தை தரவேண்டும்.








      நீக்கு
  5. இடுகைக்குள் வரலை. வெறும் தலைப்பைப்படித்த உடனேயே இதுதான் உள்ளடக்கமாக இருக்கும் என்று நினைத்தேன். அதுபோலவே இருந்தது.

    தலைப்பை நன்றாகக் கொடுத்திருக்கிறீர்கள். பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடுகையை படிக்காமல் இதுதான் உள்ளடக்கம் என்று நினைத்து விட்டீர்களா!
      மகிழ்ச்சி.

      உங்கள் பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  6. படம் மிக மிக அருமை. இயல்பாக இருக்கிறது. நல்லா வரைந்திருக்கார் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படம் மிக மிக அருமை. இயல்பாக இருக்கிறது. நல்லா வரைந்திருக்கார் சார்.//

      நன்றி.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  7. இனிய நினைவுகள் துணையிருக்கும். சாரும் தெய்வமாக உடனிருப்பார். குடும்பத்தினர் ஒவ்வொருவரும் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பும் அக்கறையும் மனதுக்கு நிச்சயம் தெம்பையும் மகிழ்ச்சியையும் தரும். இந்தியாவுக்கு வந்து விட்டீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //இனிய நினைவுகள் துணையிருக்கும். சாரும் தெய்வமாக உடனிருப்பார்//


      அப்படியே பலிக்கட்டும் ராமலக்ஷ்மி.
      எல்லோர் அன்பும் அக்கறையும் தான் தெம்பு தரும் என்பது உண்மை.
      அம்மா சாப்பிட்டீர்களா? என்று கேட்டாலே போது அம்மா மகிழ்ந்து விடுவாள்.
      நாங்கல் இருக்கிறோம் கவலை படாதீர்கள் என்று உறவுகள் சொன்னால் மகிழ்ச்சிதான்.
      இந்தியாவிற்கு டிசம்பர் 27ம் தேதி வந்தோம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  8. ஒவ்வொருவராக ஊருக்குச் செல்வதால்  மனம் சற்றே தளர்ந்து மீண்டும் சரியாகும் தருணம்.  சட்டென பழக்கப்பட முடியாது.  உங்கள் தைரியம் உங்களை மீட்டு எடுத்து விடும்.  அடிக்கடி வலைப்பக்கம் வர முடியவில்லை என்று எழுதி இருக்கிறீர்கள்.  அவ்வப்போது வாருங்கள்.   நாம் நம் கலந்துரையாடலில் சோகங்களை விலக வைப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      பிள்ளைகள் ஒருவருக்கு ஒருவர் பேசி கொண்டு நல்ல முடிவு எடுத்தார்கள். மகன் ஊருக்கு போனபின் மகள் வந்து இருக்கிறாள். பேரன் பேத்திகள் மாமா இருக்கும் போதே வந்து விட்டார்கள். இப்போது மகளும் வந்து இருக்கிறாள்.

      //ஒவ்வொருவராக ஊருக்குச் செல்வதால் மனம் சற்றே தளர்ந்து மீண்டும் சரியாகும் தருணம். சட்டென பழக்கப்பட முடியாது. உங்கள் தைரியம் உங்களை மீட்டு எடுத்து விடும். //
      நீங்கள் சொல்வது சரிதான். தைரியமாக என்னை மீட்டு எடுக்க வேண்டும். நீங்கள் சொல்வது போல வலைப்பக்கம் முடிந்த போது எல்லாம் வருகிறேன். தாய் வீடு போல வலைபக்கம். அங்கு ஆறுதலும் , அன்பும் எப்போதும் கிடைக்கும் என்பது உண்மை.
      உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. பேரன், பேத்திகளோடு மகிழ்ச்சியுடன் காலத்தை கழிப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்..

    இது இறையருளால் வாய்த்தது..

    என்றும் தங்களுக்கு
    ஸ்ரீ களக்கோடி சாஸ்தாவின் நல்லருள் துணையிருக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ, துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      பேரன் , பேத்திகளுடன் காலத்தை கழிப்பது சில நேரங்களில் வாய்ப்பு கிடைக்கிறது.
      வேறு வேறு ஊர்களில் இருக்கிறார்கள்.
      இறையருள் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

      //ஸ்ரீ களக்கோடி சாஸ்தாவின் நல்லருள் துணையிருக்கும்..//

      உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

      நீக்கு
  10. ஸ்ரீ களக்கோடி சாஸ்தாவின் திருக்கோயிலின் திருக்குட முழுக்கு நடந்தது அறிந்து மகிழ்ச்சி..

    ஸ்ரீ சாஸ்தாவின் நல்லருளால் நலமே எங்கும் நிறையட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீ களக்கோடி சாஸ்தாவின் திருக்கோயிலின் திருக்குட முழுக்கு நடந்தது அறிந்து மகிழ்ச்சி..//

      உங்கள் பாடலை கோயிலில் கொடுக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன். போக முடியாமல் போய் விட்டது. குலதெய்வம் கூப்பிடும் போது போக வேண்டும். அப்போது கொடுக்க வேண்டும்.

      ஸ்ரீ சாஸ்தாவின் நல்லருளால் நலமே எங்கும் நிறையட்டும்//

      நல் வாக்கு பலிக்கட்டும். எங்கும் நிறையட்டும் சாஸ்தாவின் அருள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  11. என்ன ஒரு அழகான படம் அன்புத் தங்கச்சி.
    ஸாரும் நீங்களும் ஊஞ்சலில் அமர்ந்திருப்பது
    தெய்வ தம்பதிகளைப் பார்ப்பது போல இருக்கிறது.
    அமைதியும் ஆனந்தமும் சேர்ந்த படம்.

    மஹா பொருத்தம் இருவருக்கும்.
    தூய்மையும் அறிவும் மணந்த கோலம். அன்பு வாழ்த்துகள்
    அம்மா.எப்பொழுதும் ஆரோக்கியமும் மன நிம்மதியும் உங்களுடன் இருக்க வேண்டும்.

    மீண்டும் நல வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

      //அன்பு வாழ்த்துகள்
      அம்மா.எப்பொழுதும் ஆரோக்கியமும் மன நிம்மதியும் உங்களுடன் இருக்க வேண்டும்.//
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா.


      நீக்கு
  12. அன்பு மகனும் மருமகளும் சுவற்றில் ஒட்டி இருக்கும் படம் மிக மிக அருமை.
    கூண்டை விட்டுப் பறக்கும் பறைவைகள். தேவையானால்
    கூட்டுக்குள் பாதுகாப்பாகவும் இருக்கலாம். உன்னதமான
    வாழ்க்கைப் பாடம்.தங்கள் மகன் மருமகள் பேரனுக்கு அன்பும் அணைப்பும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகன், மருமகள் சுவற்றில் ஒட்டிய படம் வாழ்க்கை பாடத்தை சொல்வதாக சொன்னது அருமை.

      உங்கள் அன்பான அணைப்பு கிடைத்தது அவர்களுக்கு மகிழ்ச்சி.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  13. உங்களின் மன உறுதி மேலும் சிறக்கட்டும் அம்மா... குல தெய்வமே என்றும் துணை...

    ஓவியம் அற்புதம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //உங்களின் மன உறுதி மேலும் சிறக்கட்டும் அம்மா... குல தெய்வமே என்றும் துணை...//

      உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி. நீங்கள் சொல்வது போல என்க்கு மன உறுதி
      வேண்டும்.குலதெய்வம் அதை கொடுத்தால் போதும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  14. பேரன் பேத்தியோடு நற்பொழுது செல்வது
    மகிழ்ச்சி தருகிறது.இளம் உள்ளங்களின்
    உத்சாகம் நம்மைச் சூழும்போது

    நல்ல உணர்ச்சிகள் நம்மைச் சேரும்.
    மகளும் வந்து சேர்ந்திருப்பது எனக்கே
    சந்தோஷமாக இருக்கிறது.
    நீங்கள் உற்றார் உறவினருடன்
    மீண்டும் பலம் பெற்று, மன தைரியத்துடன் இயங்குவீர்கள்.
    இனி தளர்வு என்பதே கூடாது.

    மகளுக்கு என் அன்பு. பேரனுக்கும் பேத்திக்கும்
    என் ஆசிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேரன் பேத்தியோடு நற்பொழுது செல்வது
      மகிழ்ச்சி தருகிறது.இளம் உள்ளங்களின்
      உத்சாகம் நம்மைச் சூழும்போது

      நல்ல உணர்ச்சிகள் நம்மைச் சேரும்.//

      ஆமாம், அக்கா.

      //மகளும் வந்து சேர்ந்திருப்பது எனக்கே
      சந்தோஷமாக இருக்கிறது.//

      மகிழ்ச்சிதான் எல்லோருக்கும்.

      //நீங்கள் உற்றார் உறவினருடன்
      மீண்டும் பலம் பெற்று, மன தைரியத்துடன் இயங்குவீர்கள்.
      இனி தளர்வு என்பதே கூடாது.//

      உங்கள் வாக்கு பலிக்கட்டும் அக்கா.

      உங்கள் அன்பான ஆசிகளுக்கு நன்றி நன்றி அக்கா.



      நீக்கு
  15. பேரன்கள், பேத்தியோடு இனிமையாகப் பொழுது கழிந்திடவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அருமையான குடும்பம். உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என்றாலும் தாங்கிக்கொள்ளத் துணைகள் சாய்ந்து கொள்ளத் தூண்களைப் போல் இருக்கிறார்கள். என்றென்றும் நீங்கள் அவர் நினைவில் இருந்த இனிமையான நாட்களைப் பற்றி நினைத்துக் கொண்டு மனத் தெம்புடனும் உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கப் பிரார்த்திக்கிறேன். படிக்கையில் கண்ணீர் முட்டியது,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //பேரன்கள், பேத்தியோடு இனிமையாகப் பொழுது கழிந்திடவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.//
      இந்த மாதிரி தருணத்தில் அவர்களும் இருந்தால் என்று எண்ணம் தோன்றாமல் இல்லை.
      சாய்ந்து கொள்ள தூண்கள் இறைவன் அருளி இருக்கிறான்.
      இனிமையான நாட்களை , நினைத்து கொண்டு இருங்கள் வேறு சிந்தனை வேண்டாம் என்றுதான் குழந்தைகளும் சொல்கிறார்கள்.

      மனத் தெம்புடனும் உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கப் பிரார்த்திக்கிறேன்.//


      உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி .

      படிக்கையில் கண்ணீர் முட்டியது,//

      அன்பு உள்ளத்திற்கு நன்றி நன்றி.




      நீக்கு
  16. உங்கள் மகள் வந்திருப்பதும் மனதுக்கு நிறைவையும், சந்தோஷத்தையும் தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகள் வந்து இருப்பது மகிழ்ச்சி மன நிறைவுதான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. ஸ்ரீ களக்கோடி சாஸ்தாவின் திருவுருவத்தை நான் பதிவு செய்து கொள்கிறேன்..

    நன்றி..

    பதிலளிநீக்கு
  18. அன்பின் கோமதிமா,

    வாழ்க வளமுடன்.
    ஸாரின் ஓவியத்தைச் சொல்ல மறந்து
    விட்டேன்.
    வல்லமையும் நளினமும் பொருந்திய
    உங்கள் உருவம் அவர் கையில் மகோன்னதமாய்
    காகிதத்தில் வடித்திருக்கிறார்,.
    அற்புதக் கலை அவ்ர் கையில். மனதோடு உங்களுடன் பேசுவார்,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      சாரின் ஓவியத்தை பாராட்டியதற்கு நன்றி.

      //மனதோடு உங்களுடன் பேசுவார்,.//

      அது போதும் அக்கா.
      உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  19. தங்களுடைய பதிவு கண்டு மகிழ்ச்சி. நலமே விளையட்டும். எல்லா பிரச்சனைகளுக்கும் காலம் ஒரு அற்புதமான மருந்து. நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோடு இருப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //நலமே விளையட்டும். எல்லா பிரச்சனைகளுக்கும் காலம் ஒரு அற்புதமான மருந்து. நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோடு இருப்போம்.//

      உங்கள் வாழ்த்துக்கும் ஆறுதலான அன்பான கருத்துக்கும் நன்றி வெங்கட்.

      நீக்கு
  20. கோமதிக்கா ஸாரி லேட்டாகிவிட்டது!

    அக்கா பதிவின் கருத்துகள் அனைத்தும் செம. பொருத்தமான படம்!

    ஆமாம் குழந்தைகள் விழுதுகளைப் போலத் தாங்குகிறார்கள்! என்பது மிகவும் மகிழ்வான விஷயம்.

    //ஆனால் குழந்தைகள் என் காரியங்களை நானே செய்து கொள்ள திடமான மனதுடன் தெளிவான முடிவுகள் எடுக்க கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.//

    இது ரொம்ப நல்ல விஷயம் கோமதிக்கா..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
      //கோமதிக்கா ஸாரி லேட்டாகிவிட்டது!//

      அதெல்லாம் இல்லை கீதா, முடிந்த போது படித்து கருத்து சொல்லுங்கள்.
      நானும் உடனே பதில் தர முடியவில்லை.

      //அக்கா பதிவின் கருத்துகள் அனைத்தும் செம. பொருத்தமான படம்!//

      நன்றி.

      இன்று டாக்டரிடம் சென்று வந்தேன்.
      அவரும் அட்வைஸ் செய்தார் உடல நலத்தை குழந்தைகளுக்காக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று.

      நீக்கு
  21. உங்களுக்குப் பறவைகள் பிடிக்கும் என்பதற்காக மகனும் மருமகளும் சுவற்றில் பறவைகள் கிளை என்று ஒட்டி உங்களை மகிழ்வித்திருப்பது சூப்பர் அக்கா.

    பேரன்கள் பேத்திகள் எல்லாரும் உங்களோடு தோழமையுடன் உங்களைத் தாங்கி நிற்பது இறைவன் கொடுத்த வரம். நீங்களும் மாமாவும் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்திருக்கிறீர்கள் என்பது இதுவே சாட்சி!

    இறைவன் உங்களுக்கும் குழந்தைகள் எல்லாருக்கும் நல்லதே செய்வார் இனியும்! கோமதிக்கா. நல்ல குழந்தைகள் கிடைக்கப் பெற்றமைக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்களுக்குப் பறவைகள் பிடிக்கும் என்பதற்காக மகனும் மருமகளும் சுவற்றில் பறவைகள் கிளை என்று ஒட்டி உங்களை மகிழ்வித்திருப்பது சூப்பர் அக்கா.//

      ஆமாம் கீதா தினம் பறவைகளை பார்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.

      நேற்று பாபா கோவிலுக்கு போய் இருந்த போது நேரடி நிகழ்ச்சியாக காட்டினான் மகன்.

      //இறைவன் உங்களுக்கும் குழந்தைகள் எல்லாருக்கும் நல்லதே செய்வார் இனியும்! கோமதிக்கா.//

      அது போதும் கீதா எனக்கு.

      //நல்ல குழந்தைகள் கிடைக்கப் பெற்றமைக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம்//

      அவருக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கிறேன். அவர்களை தொந்திரவு செய்யாமல் இருக்க அவர்களுக்காக உடல நலத்தை பேண வேண்டும், அவர்களை ஆசீர்வாதம் செய்து கொண்டு கடவுளை பிரார்த்தனை செய்து கொண்டு இருங்கள் என்று இன்று டாகடரும் சொன்னார்.

      நீக்கு
  22. உங்கள் பதிவினைக் கண்டு எனக்கு உடனே தோன்றிய வரிகள்...

    நல்லதொரு குடும்பம். பல்கலைக்கழகம் அன்புமணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க!

    அந்தப் பாடல் வரிகள் அப்படியே பொருத்தமாக இருக்கிறது! எனவே வாழ்க வாழ்க! இறைவன் துணை இருப்பார் எப்போதும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
      உங்களுக்கு உடனே தோன்றிய பாடல் நல்ல பாடல்.
      அன்பை கொடுத்து அன்பை பெறுவோம் ,உங்கள் வாழ்த்துக்கு நன்றி. இறைவன் என்று துணையாக இருப்பார் என்ற கருத்துக்கும் நன்றி நன்றி.

      நீக்கு
  23. அக்கா மாமா இப்போது இல்லை ஆனால் உங்களோடுதான் இருக்கிறார். எனவே அப்போது எப்படி இருந்தீர்களோ அப்படியே இப்போதும் அவர் உங்களோடு இருபப்து போலவே நினைத்து எல்லாம் செய்யுங்கள் அவர் உங்களை வழிநடத்துவார்.

    குழந்தைகள் ஆசையாக உங்களுக்கு உதவியாக இருப்பது அருள்!

    உங்கள் மனச்சோர்வு போய்விடும். அக்கா. தைரியமாக இருங்கள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அக்கா மாமா இப்போது இல்லை ஆனால் உங்களோடுதான் இருக்கிறார். எனவே அப்போது எப்படி இருந்தீர்களோ அப்படியே இப்போதும் அவர் உங்களோடு இருபப்து போலவே நினைத்து எல்லாம் செய்யுங்கள் அவர் உங்களை வழிநடத்துவார்.//
      அப்படியே கீதா. உங்கள் அன்பான ஆறுதலான கருத்துக்கு நன்றி.

      குழந்தைகள் ஆசையாக உதவிவருவது இறைவன் கருணைதான். மனசோர்வை விரட்டி தையமாக இருக்கிறேன்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  24. கோமதி அக்கா, போஸ்ட் படிச்சு முழுவிபரமும் அறிஞ்சு கொண்டேன், உங்களைத் தனிமைப்பட விட்டிடாமல் எல்லோரும் கூடவே மாறி மாறி இருப்பது மிக்க மகிழ்ச்சி. தனிமை என்பது என்றோ ஒருநாள் நம் எல்லோருக்கும் வரத்தான் போகிறது, சிலருக்கு கொஞ்சம் ஏழியாக வருகிறது சிலருக்குக் கொஞ்சம் தாமதமாக..., நாம் தான் நம் மனதை தேற்றி, அழகிய மகிழ்ச்சியான விசயங்களில் மனதைச் செலுத்த வேண்டும்.

    படத்தில் இருப்பது மாமாவோ??.. வித்தியாசமாக குண்டாக இருகிறார்:)...

    குருவிகள் ஸ்ரிக்கர் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      நீங்கள் வலைப்பக்கம் வந்து விட்டது மகிழ்ச்சி.
      ஏதோ அவர்களால் முடிந்தவரை இருப்பார்கள்.
      தனிமை என்பதே கிடையாது இறைவனை நம்பும் போது இறைவன் கூடவே இருந்து வழி நடத்துவார் என்று பிள்ளைகள் சொல்கிறார்கள்.

      //நாம் தான் நம் மனதை தேற்றி, அழகிய மகிழ்ச்சியான விசயங்களில் மனதைச் செலுத்த வேண்டும்.//

      உண்மை அப்படி மனதை செலுத்த ஆரம்பித்து விட்டேன்.
      இன்று ஒரு டாகடரிடம் போனேன் கொஞ்சம் உடல் நலக்குறைவு.
      அவர் மிக நன்றாக பேசினார். மனதுக்கு தெம்பு தருகிறது. குழந்தைகளுக்காக , பேரன், பேத்திகளுக்காக உடல் நலத்தை பேண வேண்டும் என்றார். அவர்களை ஆசீர்வாதம் செய்து கொண்டே இருங்கள், அவர்கள் நலத்திற்கு இறைவனை வேண்டிக் கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள் என்று மிக மென்மையாக பேசினார். இரவு உறங்காமல் சோர்ந்து போய் இருந்தேன். நல்ல உறக்க வர மருந்துடன் அன்பான வார்த்தைகளும் தந்தார்.

      மாமாதான் படத்தில் பல வருடங்கள் ஆகி விட்டது இந்த படம் எடுத்து.

      குருவிகள் ஸ்ரிக்கர் நன்றாக இருக்கிறதா? பேரனிடம் சொல்கிறேன்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  25. இனிய நினைவுகள் என்றும் துணை இருக்கும்.
    தொடர்ந்து எழுதுங்கள். குடும்பத்தினர் ஆதரவும் மகிழ்ச்சியும் உற்சாகம் தரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி மாதேவி.
      எழுதுகிறேன்..

      நீக்கு
  26. ஊஞ்சல் படம் அழகிய படம் மகிழ்ந்திருங்கள் இனிய நினைவுகள்தான் மனமகிழ்ச்சி தரும்.

    உங்களுக்காக குழந்தைகள் வீட்டிற்குள் கொண்டுவந்த மரம் குருவிகள் அழகாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், இனிய நினைவுகளை மனதில் இருத்தி கொள்ள வேண்டும். குழந்தைகள் வீட்டிற்குள் கொண்டு வந்த குருவிகள் மகிழ்ச்சியை தருகிறது.

      நீக்கு
  27. உங்கள் குழந்தைகள் சொன்னதையே நானும் சொல்கிறேன்,"பதட்டப்படாமல் செயலாற்றும் கொள்" உங்களை புரிந்து கொண்டு வழிநடத்தும் குழந்தைகள் இருக்கும் பொழுது என்ன கவலை? உங்களைப் போன்ற இனிமையான சுபாவம் கொண்ட, இயற்கையை நேசிப்பவர்களுக்கு எந்த குறையும் வராது. உங்கள் பதிவை படித்த பிறகு உங்களை வந்து சந்திக்க வேண்டும் போல் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      //உங்கள் குழந்தைகள் சொன்னதையே நானும் சொல்கிறேன்,"பதட்டப்படாமல் செயலாற்றும் கொள்"//
      ஆமாம், பதட்டப்பாடாமல் செயல் ஆற்ற வேண்டும்.

      //உங்களை புரிந்து கொண்டு வழிநடத்தும் குழந்தைகள் இருக்கும் பொழுது என்ன கவலை? //

      ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான் கவலை படுவதை நிறுத்த வேண்டும். அவர்கள் வழி நடத்தி செல்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

      //உங்களைப் போன்ற இனிமையான சுபாவம் கொண்ட, இயற்கையை நேசிப்பவர்களுக்கு எந்த குறையும் வராது.//
      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.
      மகளும் இயற்கை சூழ்ந்த மேகமலை அழைத்து சென்றாள்.

      //உங்கள் பதிவை படித்த பிறகு உங்களை வந்து சந்திக்க வேண்டும் போல் இருக்கிறது.//
      சந்திப்போம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.






      நீக்கு