எல்லாம் மிக சின்ன குறும்படங்கள்தான்.(இரண்டு, மூன்று நிமிடங்கள்தான் வரும்) அவன் பார்க்கும் டிஸ்னியின் கதாபாத்திரங்களை வைத்து இந்த படங்களை செய்து இருக்கிறான். படங்களை வரைந்து அவனே பல குரல்களில் பேசி பின்னணி இசை கொடுத்து செய்து இருக்கிறான்.
Remy's Cooking Day
https://www.youtube.com/watch?v=R5-sMlpevE8&t=2s
காணொளிகள் அலைபேசி வழியே பார்க்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு காணொளிகளுக்கும் கீழ் அதன் சுட்டி கொடுத்து இருக்கிறேன், அதன் வழியே பார்க்கலாம்.
Nemo is Missing
Woody's House Adventure
பார்த்து எப்படி இருக்கிறது என்று சொன்னால் மிகவும் சந்தோஷப்படுவான். மேலும் அவன் இது போன்ற படங்களை செய்வதற்கு அவனுக்கு ஊக்கம் ஏற்படும்.
இன்னும் செய்து கொண்டு இருக்கிறான்.
சிறு வயதில் (மூன்றாம் வகுப்பு படிக்கும் போது) இப்படி நிறைய கதைகள் படம் வரைந்து புத்தகம் தயார் செய்து வைத்து இருக்கிறான். நீண்ட நெடும் தொடர் கதை 8 பாகம் இருக்கிறது.


படங்கள் வரைந்து அதை வைத்து கதை சொல்வான்
சுவற்றில் டைனோசர்- காலை சூரிய உதயம் சமயத்தில் டைனோசர் பயணம் செய்வதை காட்டி கதைச் சொன்னான்.
முன்பு படங்கள் வரைந்து கதை சொன்னான். அப்புறம் அவன் விளையாடும் பொருட்களை வைத்து கதை சொன்னான்., தன் ஐபேடை வைத்து அதில் குழந்தைகள் படம்(வால்ட்டிஸ்னியின் )தியேட்டர் செட் செய்து சினிமா காட்டினான். பார்வையாளர்கள் டிக்கட் பெற்று அமர்ந்து இருப்பது போல் காட்டினான். இப்போது குறும்படம் எடுத்து இருக்கிறான்.
அவன் எழுதிய கதை
இளம் எழுத்தாளர் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் முதல் பரிசு கொடுத்து ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள்.
பேச்சுப் போட்டி, எழுத்தாளர் போட்டி பரிசுகள்
கவின் எழுதிய கதையும் மற்றும் சில குழந்தைகள் எழுதிய கதையும் இதில் இடம் பெற்று இருக்கிறது. தமிழ் கற்றுக் கொடுத்து கதை, கவிதை, பாட்டு என எல்லாவற்றிலும் கலந்து கொள்ள குழந்தைகளை ஊக்கப்படுத்திய பெற்றோர்களுக்கும், மற்றும் தமிழ் தொண்டு செய்த ஆசிரிய பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்
-------------------------------------------------------------------
அன்பின் கோமதிமா,
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
எத்தனை விதமாகப் படங்கள் எடுத்துக் கதையும் சொல்லி இருக்கிறான்!!
இத்தனை புத்தகங்கள் வேறு எழுதி ,யூ டியூபிலும்
அமைத்திருக்கிறானே.
மனம் மகிழ்ச்சியில் பூரிக்கிறது.
மீண்டும் வந்த பார்க்கிறேன். கவினுக்கு என் அன்பு முத்தங்கள்.
வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
நீக்குஆமாம் , அக்கா படங்கள் வரைந்து கதை சொல்வது அவனுக்கு பிடித்த விஷயம்.
யூடியூப் இப்போது செய்து கொண்டு இருக்கிறான்.
//மனம் மகிழ்ச்சியில் பூரிக்கிறது.
மீண்டும் வந்த பார்க்கிறேன். கவினுக்கு என் அன்பு முத்தங்கள்.//
வாங்க அக்கா, உங்கள் அன்பு முத்தங்களுக்கு , அன்பான கருத்துக்கு நன்றி அக்கா.
கவினுக்கு இளவயதிலேயே நல்ல திறமை இருப்பது இறையின் அருட்கொடை.
பதிலளிநீக்குமனம் நிறைந்த வாழ்த்துகள்.
யூடியூப்பில் கருத்துரை எழுத முடியவில்லையே ?
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குபோன பதிவு படித்தீர்களா?
//கவினுக்கு இளவயதிலேயே நல்ல திறமை இருப்பது இறையின் அருட்கொடை.
மனம் நிறைந்த வாழ்த்துகள்.//
உங்கள் அன்பான கருத்துக்கும், மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கும் நன்றி.
//யூடியூப்பில் கருத்துரை எழுத முடியவில்லையே ?//
கவினிடம் பார்க்க சொல்கிறேன். நானும் பார்க்கவில்லை.
பதிலளிநீக்குஅனைத்து காணொளிகளும் அருமை. இந்த இளம் வயதில் கவின் செய்திருப்பது மிக சிறப்பு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்
வணக்கம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//அனைத்து காணொளிகளும் அருமை. இந்த இளம் வயதில் கவின் செய்திருப்பது மிக சிறப்பு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்//
காணொளிகளை பார்த்தது மகிழ்ச்சி. உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. கவிடம் சொல்லி விட்டேன், மகிழ்ந்தான். எல்லோருக்கும் நன்றி சொல்லுங்கள் என்றான்.
மிக மிக பிரமிப்பாக இருக்கிறது அன்பு கோமதிமா.
பதிலளிநீக்குமூன்று படங்களும் விவரமாகக் கதை சொல்கின்றன. எலிக்கதையும், நீமோவும்,
Andy Adventure எல்லாமே வெகு சிறப்பு.
சிரமப்பட்டு, சிரத்தை காட்டி செய்திருக்கிறான்.
பார்க்கப் பார்க்க அதிசயமாக இருக்கிறது.
அவன் புத்தகமும் எழுதி இருக்கிறானா?
தொன்மா புரி பேரே சங்க காலம் மாதிரீ இருக்கிறதே.
குழந்தையின் திறமை கண்ணைக் கட்டுகிறது.
இன்னும் புத்தகங்கள் வரப் போகின்றன என்று நினைக்கப்
பெருமை மா.
இந்த கொரோனா காலத்தில் அவன் நண்பர்கள் யாரும் வீட்டுக்கு வர முடியவில்லை, இவனும் அவர்களைப்பார்க்க போக முடியவில்லை.
நீக்குபொழுது போக தினம் கதைஎழுதுவது, படம் வரைவது என்று இருப்பான். திடீர் என்று நான் வீடியோ செய்து இருக்கிறேன் என்று எங்களிடம் காட்டினான். அப்புறம் அது மிக நன்றாக இருக்கிறது என்று சொன்னோம். முன்பே அவன் தன் பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து யூடியூப்பில் காணொளிகள் roblox விளையாட்டுக்கள் செய்து விளையாடுவான்.
அதில் தீமா பார்க் அமைப்பான், வீடு கட்டி விளையாடுவான், பண்ணை வீடு அமைப்பான். தமிழ் பள்ளி குழந்தைகளை கதை எழுதச்சொல்லி அவர்கள் கதையை புத்தகமாய் செய்து அவர்களூக்கு பரிசாக கொடுத்து விட்டார்கள். அவர்களைப் பாராட்ட வேண்டும்.
பிரமிக்க வைக்கிறான் கவின். இந்தச் சிறு வயதில் என்ன கற்பனை, என்ன திறமை.. வருங்காலத்தில் பெரிய ஆளாய் வரப்போகிறான் என்பதற்கான கட்டியங்களைக் காட்சி செல்கிறது பதிவு. எட்டு பாகங்கள் கதையா? அம்மா...டி. பாராட்டுகளும், வாழ்த்துகளும். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் பெற்றோருக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//பிரமிக்க வைக்கிறான் கவின். இந்தச் சிறு வயதில் என்ன கற்பனை, என்ன திறமை.. வருங்காலத்தில் பெரிய ஆளாய் வரப்போகிறான் என்பதற்கான கட்டியங்களைக் காட்சி செல்கிறது பதிவு.//
உங்கள் ஆசிகள் படி நடக்கட்டும்.
எட்டு பாகங்கள் கதையா? அம்மா...டி.//
அவன் கற்பனைகள் விரிந்து கொண்டே போகும் . நாம் அந்த நாளில் கதைகள் சொன்னது போல் ஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி கதைகள் போகும்.
//ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் பெற்றோருக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.//
நன்றி நன்றி ஸ்ரீராம்.
மகிழ்ச்சி உங்கள் அன்பான பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
அரிசோனா தமிழ்ப் பள்ளி திறம் கொண்டு
பதிலளிநீக்குவளம் பெற வேண்டும்.
இத்தனை அருமையாக செய்கிறார்களே!!!
பேரனுக்குத் தந்தையின் கைவண்ணமும், தாத்தாவின்
சித்திரத் திறமையும் வந்திருக்கின்றன.
அன்பும் ஆசிகளும்.
அரிசோனா தமிழ்பள்ளி, தமிழ் சங்கம் இரண்டும் நன்றாக நடைபெறுகிறது, மகன், மருமகளும் அதில் பொறுப்புகள் ஏற்று பணி செய்கிறார்கள்.
நீக்கு//பேரனுக்குத் தந்தையின் கைவண்ணமும், தாத்தாவின்
சித்திரத் திறமையும் வந்திருக்கின்றன.//
தாத்தா, அப்பா, அம்மா எல்லோரும் சித்திரம் நன்றாக வரைவார்கள்.
உங்கள் அன்பும் ஆசியும் அவனை மேலும் வளர வைக்கும் நன்றி அக்கா.
அனைத்தும் அருமை. இளம் வயதில் அருமையான கற்பனை வளம் கிடைத்திருப்பது இறைவன் கொடுத்த வரம். குழந்தைக்கு எங்கள் ஆசிகளும் வாழ்த்துகளும். நினைவாகச் சுத்திப் போட்டு விடுங்கள். அவனிடம் எங்கள் வாழ்த்துகளைச் சொல்லுங்கள். காணொளிகளும் நன்றாக எடுத்திருக்கிறான்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்கு//அனைத்தும் அருமை.//
நன்றி.
//இளம் வயதில் அருமையான கற்பனை வளம் கிடைத்திருப்பது இறைவன் கொடுத்த வரம்.//
ஆமாம், இறைவனுக்கு நன்றி.
//குழந்தைக்கு எங்கள் ஆசிகளும் வாழ்த்துகளும். நினைவாகச் சுத்திப் போட்டு விடுங்கள். அவனிடம் எங்கள் வாழ்த்துகளைச் சொல்லுங்கள். காணொளிகளும் நன்றாக எடுத்திருக்கிறான்.//
சுத்திப்போட்டு விட்டேன். உங்கள் வாழ்த்துக்களை சொல்லி விட்டேன்.
உங்கள் ஆசிகள், வாழ்த்துக்களுக்கும், மற்றும் அன்பான கருத்துத்துக்கும் நன்றி.
// குழந்தைகளை ஊக்கப்படுத்துகின்ற பெற்றோர்களுக்கும், மற்றும் தமிழ் தொண்டு செய்கின்ற ஆசிரிய பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்..//
பதிலளிநீக்குகவின் மேலும் பல திறமைகளுடன் மிளிர்வதற்கு வேண்டிக் கொள்வோம்..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//கவின் மேலும் பல திறமைகளுடன் மிளிர்வதற்கு வேண்டிக் கொள்வோம்..//
ஆமாம், வேறு என்ன வேண்டும்! வேண்டிக் கொள்வோம்.
உங்கள் கருத்துக்கும் வேண்டுதலுக்கும் நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குதங்கள் பேரன் கவின் எடுத்த குறும்படங்கள்,அருமையாக உள்ளது படங்களுடன் கதை சொல்வது பற்றி முன்பு நீங்கள் இங்கு இருக்கும் போதே சொல்லிக் கேட்டிருக்கிறேன். இப்போது வரைந்த படங்களையும் பார்த்தேன். மிகவும் அழகாக வரைந்தருக்கிறார். பள்ளியில் இளம் எழுத்தாளர் போட்டியில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கியிருப்பதற்கு என் மனம் கனிந்த வாழ்த்துகள்.பாராட்டுக்கள். உங்கள் பேரனுக்கு நல்ல திறமையும், எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் இருக்கிறது. எல்லா திறமைகளும் நல்லபடியாக வளர்ந்து, மேலும் சிறப்பாக ஓவியம் வரைவது, கதைகள் எழுதுவதில் என பல சான்றிதழ்களையும் பெற்று, பாராட்டுகளையும். புகழையும் நிறைய சம்பாதிக்க வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். உங்கள் பேரனை நான் மிகவும் கேட்டதாகக் கூறி என் அன்பான வாழ்த்துகளை அவருக்கு தெரிவிக்கவும். அவரை இந்த அளவில் ஊக்கமளிக்கும், உங்கள் மகன், மற்றும் மருமகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்கு//தங்கள் பேரன் கவின் எடுத்த குறும்படங்கள்,அருமையாக உள்ளது//
நன்றி கமலா.
//படங்களுடன் கதை சொல்வது பற்றி முன்பு நீங்கள் இங்கு இருக்கும் போதே சொல்லிக் கேட்டிருக்கிறேன். //
ஆமாம், சிறு வயதிலிருந்து படம் வரைந்து கதை சொல்வது மிகவும் இஷ்டம். அவனுக்கு பிடித்த டைனோசர் வரைந்து கொடுப்பான் எல்லோருக்கும்.
என் மனம் கனிந்த வாழ்த்துகள்.பாராட்டுக்கள். உங்கள் பேரனுக்கு நல்ல திறமையும், //எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் இருக்கிறது. எல்லா திறமைகளும் நல்லபடியாக வளர்ந்து, மேலும் சிறப்பாக ஓவியம் வரைவது, கதைகள் எழுதுவதில் என பல சான்றிதழ்களையும் பெற்று, பாராட்டுகளையும். புகழையும் நிறைய சம்பாதிக்க வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்//
உங்கள் அன்பான வார்த்தைகளும், பாராட்டுக்களும் , வாழ்த்துக்களும் அவனை மேலும் வளர செய்யும் . உங்கள் எல்லோர் கருத்துக்களையும் அவனுக்கு படித்து காட்டினேன், அவனும் படித்தான். மகிழ்ச்சியோடு உங்களுக்கு தன் நன்றிகளை தெரிவிக்க சொன்னான்.
//இந்த அளவில் ஊக்கமளிக்கும், உங்கள் மகன், மற்றும் மருமகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.//
மகனை, மருமகளை பாராட்டியதற்கு நன்றி.
உங்கள் அன்பான அழகான விருவான கருத்துக்கு நன்றி.
அற்புதமான திறமை... வருங்காலத்தில் பல உயரங்களை அடைய வாழ்த்துகள்...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
ரொம்ப வித்தியாசமான ஆர்வம். நிச்சயம் பாராட்டணும், ஊக்கப்படுத்தணும்.
பதிலளிநீக்குஉங்க மகன், மருமகள் நிறையவே ஊக்கப்படுத்துகிறார்கள் என்று தோன்றுகிறது. அவங்களையும் பாராட்டறேன்.
கதை எழுதும் சொல்லும் ஆர்வம் பொதுவாக சிறுவர்களில் சிலருக்கு இருக்கும். கார்ட்டூன் வடிவில் சொல்வதற்கு இன்னும் அதிக ஆர்வம் வேணும். மென்மேலும் வளர்ந்து ஜொலிக்கட்டும்.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//ரொம்ப வித்தியாசமான ஆர்வம். நிச்சயம் பாராட்டணும், ஊக்கப்படுத்தணும்.//
ஆமாம் நெல்லை. உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.
இந்தியாவில் இருக்கும் போது தினம் எங்களுடன் பேசும் போது தான் புதிதாக் வரைந்த ஓவியங்கள், விளையாட்டுக்கள் எல்லாம் காட்டுவான், புதிதாக கற்றுக் கொண்டதை சொல்வான். இருவரும் பாராட்டுவோம். மேலும் புதிதாக செய்ய சொல்வோம். அந்த பாட்டியிடமும்(மருமகளின் அம்மா) சொல்வான்.அவர்களும் அவனை உறசாகப் ப்டுத்துவார்கள்.
அவன் அம்மா, அப்பாவும் நீங்கள் சொல்வது போல நிறையவே ஊக்கப்படுத்துகிறார்கள் நிச்சயம் பாராட்டணும், விளையாட்டு பொருட்களை கவனமாக அவனுக்கு பிடித்த மாதிரி பார்த்து வாங்கி தருகிறார்கள்.
அவர்களை பாராட்டியதற்கு நன்றி.
//மென்மேலும் வளர்ந்து ஜொலிக்கட்டும்.//
உங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.
சகல் கலா வல்லவராக வளர்ந்து கொண்டிருக்கும் கவினுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! அன்பார்ந்த ஆசிகள்! அவரது திறமைகள் குன்றிலிட்ட விளக்காக ஒளிர அனைவருமே ஊக்குவிக்க வேண்டும் எப்போதும்!பெற்றோரின் ஊக்குவிப்பும் பாராட்டுக்களும் மட்டுமே கலைத்திறன் மிக்க ஒரு குழந்தையை மிகப்பெரிய கலைஞனாக மாற்றும்!!
பதிலளிநீக்குவணக்கம் மனோ சாமி நாதன், வாழ்க வளமுடன்
நீக்கு//கவினுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! அன்பார்ந்த ஆசிகள்! //
உங்கள் வாழ்த்துக்கள், ஆசிகளுக்கு நன்றிகள்.
//!பெற்றோரின் ஊக்குவிப்பும் பாராட்டுக்களும் மட்டுமே கலைத்திறன் மிக்க ஒரு குழந்தையை மிகப்பெரிய கலைஞனாக மாற்றும்!!//
உண்மை.அதுவும் இந்த கொரோனா காலத்தில் பள்லிக்கும் செல்லாமல், குழந்தைகளுடன் விளையாடவும் போக முடியாமல் இருக்கும் காலத்தில் இப்படி செய்து எங்களுக்கும் காட்டி, அவனும் மகிழ்ந்து இருந்தான் . அதற்கு உறுதுணயாக அவன் பெற்றோர்கள் இருந்தார்கள்.
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
அருமை
பதிலளிநீக்குதங்களின் அன்புப் பெயரனுக்கு வாழ்த்துகள்
வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
இத்தனை சின்ன வயதில் என்ன ஒர் கற்பனை! படங்கள் நல்ல கற்பனை வளத்தோடு மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கின்றன. ஒலி சற்று குறைவாக இருந்தது. இளம் தமிழ் எழுத்தாளர் விருது பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் பல விருதுகளும், பரிசுகளும் வாங்க ஆசிகள்!
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
நீக்கு//இத்தனை சின்ன வயதில் என்ன ஒர் கற்பனை! படங்கள் நல்ல கற்பனை வளத்தோடு மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கின்றன.//
நன்றி.
ஒலியை அடுத்த பதிவில் சரியாக கொடுக்க சொல்கிறேன்.
//இளம் தமிழ் எழுத்தாளர் விருது பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் பல விருதுகளும், பரிசுகளும் வாங்க ஆசிகள்!//
உங்கள் கருத்துக்கும், ஆசிகளுக்கும் நன்றிகள்.
மூன்று குறும்படங்களும் அருமை. ஓவியம், கதை சொல்லுதல் எனப் பன்முகத் திறமை கொண்டவராக மிளிர்கிறார். கவின் சிட்டி தியேட்டர் படங்களையும் வெகுவாகு ரசித்தேன். மென்மேலும் சாதனைகள் புரிந்து பல பரிசுகளும், விருதுகளும் பெற்றிட வாழ்த்துகள்!
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//கவின் சிட்டி தியேட்டர் படங்களையும் வெகுவாகு ரசித்தேன். மென்மேலும் சாதனைகள் புரிந்து பல பரிசுகளும், விருதுகளும் பெற்றிட வாழ்த்துகள்!//
கவினின் திறமைகளைப் பாராட்டி, வாழ்த்தி ஆசிகள் வழங்கியதற்கு நன்றி ராமலக்ஷ்மி.