வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

அழகே அழகே எதுவும் அழகே



போன பதிவில் ஸ்ரீ மகா கணபதி ஆலயம்  போய்விட்டு வரும் வழியில்   பார்த்த  பூங்கா பற்றி குறிப்பிட்டு இருந்தேன் அல்லவா !  அந்த பூங்கா பற்றிய பதிவு இது.

 பூங்காவில்  உள்ள மலைமேல் மக்கள் ஏறிச் சென்று கொண்டு இருந்தார்கள். வேலை வேலை என்று வாரம் முழுவதும் ஓடுகிறார்கள். வார இறுதியில்  தங்கள் அலுப்பு தட்டும் வாழ்க்கையிலிருந்து விடுபட இந்த மலையேற்றம் உதவுகிறது.  இயற்கையை ரசித்தபடி  ஏறுவதால் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறுகிறது. அதுவும் குளிர் காலத்தில் மலைஏறுவது குளிரை விரட்டுகிறது. வெயிலின் அருமையை உணர்ந்து மாலை நேர சூரிய ஒளியை அனுபவிக்க வருகிறார்கள் இந்த பூங்காவிற்கு. 

"மழை மட்டுமா அழகு  சுடும் வெயில் கூட அழகு"என்ற பாடல் வரி நினைவுக்கு வந்தது. வெயிலை நாடி ,மக்கள் வருகிறார்கள்.


மலையும்  அதன் மீது விளையாடும் வெண் மேகமும்


வெண் மேகங்கள் மலைக்கு நிழல் தருகிறது. மணல் வண்ணத்தில் இருக்கும் மலை  நிறம் மாறுவது அழகு.
கள்ளிகளும்   அழகு

பேரன்
கொரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டியவை சொல்லும் பலகை
நம்மை கவனமாக இருக்கச் சொல்கிறது


தங்கள் வளர்ப்பு செல்லங்களையும் அழைத்துக் கொண்டு மலை ஏறி கொண்டு இருந்தார்கள் , அலைபேசியில் எடுத்த படங்கள் .
போகும் இடங்களில் எல்லாம் தங்கள் வளர்ப்பு செல்லங்களை அழைத்து வரும் அன்பர்களைப் பார்க்கிறேன்.
மலையின் உச்சியில் மனிதர்கள் தெரிகிறார்களா?

அறிவிப்பு பலகை பாதையில் மட்டும் நடக்க சொன்னாலும் மக்கள் ஒரு சிலர்  அவர்களுக்கு  வசதியாக இருக்கும் வழியாக நடந்து  மலை உச்சியை அடைந்து வேடிக்கைப் பார்க்கிறார்கள். மதிப்பு வாய்ந்த செடிகள் மனிதன் கால்பட்டு அழிந்து விடலாம், மண்சரிவு ஏற்படலாம் என்று எச்சரிக்கை செய்கிறார்கள். பாதையில் நடந்து அவைகள் வாழ  உதவ சொல்கிறார்கள். 


இங்கு  என்ன எல்லாம் பார்க்கலாம் என்பது பற்றி இருக்கிறது , இந்த பலகையில் . பேரன் "எலியை பார்த்தேன் பொந்தில் ஓடி ஒளிந்து விட்டது" என்றான். (அவன் காமிராவில் படம் எடுத்தேன் என்று காட்டினான் )
 கள்ளியில் பறவைக் கூடு  ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு மாதிரி கூடுக் கட்டி இருந்தது

பறவைக்கூடு இருக்கிறது
நெற்றியில் பொட்டு வைத்த மாதிரி இருக்கா?

மலையும் ,வானமும், வெண்மேகமும்  கள்ளிகளும் பார்க்க அழகுதான்


இங்கு மலை அழகு, கள்ளி அழகு, வானம் அழகு, மேகம் அழகு.
அது போல் இந்த பூங்காவில் நடந்து போனவர்கள் எல்லோரும் புன்னகை வீசி சென்றார்கள் அதுவும் அழகுதான். கவலையை மறக்க செய்யும் இயற்கை அழகு.

எல்லாம் அழகு பாட்டில் வருவது போல் இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகுதான்.

ஆயிரம் கால் சடை பின்னியது போல் கள்ளி, முற்களும் இருக்கிறது









 




 அமெரிக்கப் பூர்வகுடியினர் இதன் விதைகளை மருத்துக்கு பயன்படுத்தினார்கள்.
 
                                            அரிசோனாவின் தேசிய மரம்.

                               தேசிய மரங்கள் சுற்றிலும் இருக்க நடுவில் பேரன்

இப்படி ஒவ்வொரு செடிகளுக்கும், கள்ளிகளுக்கும், மரங்களுக்கும் அடியில் அதன் மருத்துவ பயன்கள் , மற்ற உயிரினங்களுக்கு  அது தரும்  பயன்கள் எல்லாம்  குறித்த பலகை இருக்கிறது.

இறைவன் படைப்பில் பயனற்றது என்று ஒன்றும் இல்லை.



                                                                            வாழ்க வளமுடன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------

49 கருத்துகள்:

  1. உண்மைதான்...

    இறைவனின் படைப்பில் பயனற்றது என்று எதுவும் இல்லை...

    அந்த ரகசியங்களை உணர்ந்து கொள்ளத்தான் நமக்கு இயலவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //அந்த ரகசியங்களை உணர்ந்து கொள்ளத்தான் நமக்கு இயலவில்லை..//

      உண்மை.

      இறைவன் , இயற்கை இரண்டுமே ரகசியங்களை நிறைய தன்னுள் வைத்துக் கொண்டு இருக்கிறது.

      நீக்கு
  2. என்ன... எல்லாம் கள்ளிச் செடிகளின் படங்களாகவே இருக்கின்றது - என்று நினைத்த வேளையில் பதிவின் நிறைவு வார்த்தைகள் சிகரம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலைவனத்தில் வளரும் தாவரம் கள்ளி இங்கு இதை தான் பாதுகாக்கிறார்கள்.

      அது எத்தனை பறவைகளுக்கு வீடு தருகிறது .
      இறைவன் படைப்பில் பயனற்றது என்று எதுவும் இல்லை என்று உணர்த்தி கொண்டே இருக்கிறது எனக்கு அதனால் அதை பதிவு செய்தேன்.
      உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
      கீதா சாம்பசிவம் அவர்கள் பதிவில் நீங்கள் எங்கள் இருவரையும் குறிபிட்டது உங்கள் அன்பை காட்டுகிறது. உங்கள் அன்புக்கு நன்றி.

      நீக்கு
    2. அதனைத் தங்களிடத்திலோ அடுத்து வந்த தங்களது பதிவினிலோ சொல்வதற்கான தைரியம் என்னிடத்தில் இல்லை...

      நீக்கு
    3. நீங்கள் எல்லாம் காட்டிய அன்பிலும், உங்கள் எல்லோரின் ஆறுதல் மொழியாலும் தான் மன ஆறுதல் அடைந்து வருகிறேன்.என் பிள்ளைகளும், உற்றம் , சுற்றம் எல்லாம் மீண்டும் எழுது அது உனக்கு ஆறுதல் தரும் என்றார்கள். நீங்கள் எல்லோரும்
      பதிவுகள் எழுத வேண்டும் என்று அழைத்த காரணத்தால் எழுதி கொண்டு இருக்கிறேன்.
      உங்கள் எல்லோர் அன்புக்கும் நன்றி நன்றி.
      நீங்களும் கவிதை, கதைகள் ஆன்மீக தகவல்கள் என்று எப்போதும் போல் எழுதி வாருங்கள்.

      நீக்கு
  3. இனிய மாலை வணக்கம் அன்பு கோமதி மா.
    ஏ அப்பா!!!!எத்தனை படங்கள். எத்தனை வகை
    கள்ளிகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக
    கைகளை நீட்டி யாரை அழைக்கிறது?
    இறைவனிடம் பேசுகின்றனவா.
    எனக்கு இன்னோரு அழகு பாட்டு நினைவுக்கு வந்தது.
    ''மழை அழகா
    வெய்யில் அழகா
    கொஞ்சும் போது மழை அழகு கண்ணா நீ
    கோபப்பட்டால் வெய்யில் அழகு
    சுட்டும் விழிச் சுடரே!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

      //கள்ளிகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக//
      ஆமாம் அக்கா.

      கைகளை நீட்டி யாரை அழைக்கிறது?
      நம்மைதான் என்னை பாருங்கள் கள்ளி என்று ஒதுக்காதீர்கள் என்கிறது.
      //இறைவனிடம் பேசுகின்றனவா.//

      இறைவனிடம் பேசும்தான் முள்செடி என்று மற்ற்வர்கள் ஒதுக்கினாலும் பறவைகள் எனை நாடி வருவது மகிழ்ச்சி என்று சொல்கிறதோ!

      நீங்கள் சொன்ன பாடல் அருமை.

      நீக்கு
  4. ஜொஜொபா அல்லது ஹோஹோபா எண்ணெய் உடலுக்கும் , தோலுக்கும் மிக நல்லது.
    அந்தச் செடியின் படத்தைப் பதிவிட்டதற்கு மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செடிக்கு மிகவும் தள்ளி அதன் பேர் அதன் குறிப்பு இருக்கிறது.
      ஒவ்வொரு செடியை தனியாகவும் அதன் குறிப்பை தனியாக எடுத்தேன்.
      அதனால் அத்தனையும் பகிர முடியவில்லை. இந்த இரண்டை மட்டும் பகிர்ந்தேன்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. ஆஹா... அழகான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. என்னவொரு அழகான காட்சிகள்... பார்க்க பார்க்க பரவசம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      காரணம் தெரியவில்லையே! மகனிடம் கேட்டுப் பார்க்கிறேன்.

      நீக்கு
    2. மகனிடம் நீங்கள் பெயர் காரணம் கேட்டதை சொன்னேன்.
      அதற்கு மகன் சொன்ன பதில் :-
      பூங்காவிற்கு போகும் பாதையை அமைத்த தொழிலாளி தன் மேல் அதிகாரியிடம் சொன்னராம் இந்த பூங்காவிற்கு சில்லி பார்க் என்று வையுங்கள் என்று. ரோடு போடும் தொழிலாளியின் வீடு அந்த பார்க் அருகில் தானாம்.
      தொழிலாளியின் விருப்பத்தை ஏற்று வைத்த மேல் அதிகாரியை பாராட்ட வேண்டும்.

      நீக்கு
  9. அந்த ஊரில் வெயில் நம்மூரைப் போல் அவ்வளவு பாதிக்காது என்று நினைக்கிறேன்.  அதனால்தான் வெயிலைப் பொருட்படுத்தாமல் ஏறுகிறார்களோ என்னவோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம், குளிர் காற்றும் வெயிலும் இதமாக இருக்கிறது. மூச்சு வாங்குதல், வேர்த்து கொட்டுவது இல்லை. அதனால் ஏறுவது சுலபமாக இருக்கிறது.

      நீக்கு
  10. மலைக்கு குடை பிடிப்பது போல இருக்கிறது வெண்மேகங்கள்.  மலையின் உச்சியில் மனிதர்கள் தெரிகிறார்கள்.  செல்லங்களை அழைத்து வந்த மனிதர்களை படம் பிடிக்கவில்லையா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலைக்கு வெண்மேகங்கள் குடைபிடிப்பது போல்தான் இருக்கிறது. மலை உச்சியில் மனிதர்கள் தெரிவது போல் கீழ் படத்தில் செல்லத்தை கூட்டிக் கொண்டு போகும் ஒரு பெண் தெரியவில்லையா?
      தனி பதிவாக போடலாம் அவ்வளவு படங்கள் எடுத்து இருக்கிறேன். ஒரு நாள் செல்லங்கள் போடுகிறேன்.

      நீக்கு
  11. பறவைக்கூடுகள் வித்தியாசமாய் அழகாய் இருக்கின்றன.  சில கள்ளிகள் பூமியிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கும் கை போல தோற்றம் கொடுக்கிறது.  இயற்கையை சிதைக்காத வரையில் இயற்கை என்றுமே அழகுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம், ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு மாதிரி கட்டி இருப்பது அழகுதான். ஒரு பற்வை தொட்டில் போல , ஒரு பறவை சிலிண்டர் வடிவில், சில கூடை போல் என்று ஒவ்வொன்றும் ஒரு அழகுதான்.
      நீங்கள் சொல்வது போல் "இயற்கையை சிதைக்காத வரையில் இயற்கை என்றுமே அழகுதான்".

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. புகைப்படங்கள் நீல நிற ஆகாயப்பின்னணியில் மிக மிக அழகு! பேரன் மிகவும் உற்சாகமாகத் தெரிகிறார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்

      ஆமாம், நீலவானம் அழகு. பேரன் எனக்கு சுற்றி காட்டுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறான்.
      உங்கல் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. அழகான இடங்கள். இயற்கை கொஞ்சும் மலைகளும், அந்த மலைகளை கொஞ்சும் வெண்மேகங்களுமாக அத்தனைப் படங்களும் கண்களை கவர்கின்றன. கள்ளிச்செடிகள் அனைத்தும் அழகாக உள்ளது. எத்தனை விதமான கள்ளிகள். அவை மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் எவ்வளவு உதவியாக உள்ளது என நினைக்கும் போது வியப்பாக உள்ளது.

    அரிசோனா மாகாணத்தின் தேசிய மரம் பற்றி தெரிந்து கொண்டேன். தங்களது பேரன் படங்களும் நன்றாக இருக்கிறது. நீங்களும் அத்தனைப் படங்களையும் அழகாக எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    /இறைவன் படைப்பில் பயனற்றது என்று ஒன்றும் இல்லை./

    தங்கள் கூற்று முற்றிலும் உண்மையான வரிகள். முட்களுடன் இருக்கும் இந்த கள்ளிகள் கூட ஜீவகாருண்யத்தை கடைப்பிடிக்கிறது. எத்தனைப் பறவைகளுக்கு அது புகலிடம் தந்து தன்னை பெருமைபடுத்திக் கொள்கிறது. இறைவன் படைப்பே விந்தைதான். அழகான படங்களை எடுத்து எங்களுடன் அதையெல்லாம் பகிர்ந்து கொண்டமைக்கு உங்களுக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது உண்மைதான் இயற்கை கொஞ்சும் மலைகள்தான் சுற்றிலும்.
      வானமும், வெண் மேகமும் அழகு.

      //எத்தனை விதமான கள்ளிகள். அவை மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் எவ்வளவு உதவியாக உள்ளது என நினைக்கும் போது வியப்பாக உள்ளது.//

      ஆமாம் , நமக்கு வியப்பாக இருப்பது உண்மை.

      உங்கள் பாராட்டுக்கு நன்றி.

      //இந்த கள்ளிகள் கூட ஜீவகாருண்யத்தை கடைப்பிடிக்கிறது. எத்தனைப் பறவைகளுக்கு அது புகலிடம் தந்து தன்னை பெருமைபடுத்திக் கொள்கிறது. //

      அருமையாக சொன்னீர்கள்.


      //இறைவன் படைப்பே விந்தைதான்.//

      ஆமாம் சகோ இறைவன் படைப்பே விந்தைதான்.

      உங்கள் அழகான விரிவான கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  15. நல்ல அருமையான படங்கள். அலுக்காத அழகு.
    இந்த வெறுமை நிறைந்த பாலைவனத்தின் பொக்கிஷங்கள் கள்ளிகள்.
    மனித ஆயுளைக் கேலி செய்யும் நிரந்தரங்கள்.
    கடுந்தவம் மேற்கொள்ளும் முனிவர்களைப் போல உலகைக் காத்து நிற்கும் அதிசயங்கள்.

    இறைவன் படைப்பில் எதுதான் பொருள் இல்லாதது!!!

    ஸில்லி மௌண்டென் என்ற பெயரானாலும் எத்தனை
    ஆராய்ச்சிகளை உள்ளடக்கி இருக்கிறது.

    பெயர்ப் பலகைகள் தள்ளி இருந்தாலும் நமக்கு வேண்டும் என்கிற
    செய்தியைக் கொடுக்கிறது.

    எச்சரிக்கையையும் மீறி ஏறிச் செல்லும் மனிதர்களை
    என்ன சொல்வது!!
    பேரன் ரொம்ப ஸ்மார்ட் மா. அட்டகாசமா இருக்கான். அன்பு ஆசிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ,அக்கா. கள்ளிகள் பாலைவன பொக்கிஷம் தான். அதை அவர்கள் பாதுகாப்பது மிகவும் வியக்க வைக்கும். அலுப்பே இல்லை நீங்கள் சொல்வது போல் இந்த கள்ளிகளை படம் எடுக்க.

      //மனித ஆயுளைக் கேலி செய்யும் நிரந்தரங்கள்.
      கடுந்தவம் மேற்கொள்ளும் முனிவர்களைப் போல உலகைக் காத்து நிற்கும் அதிசயங்கள்.
      //

      ஆமாம், ஒவ்வொரு கள்ளியின் வயதையும் கேட்டால் வியப்பாய் இருக்கும்.

      //இறைவன் படைப்பில் எதுதான் பொருள் இல்லாதது!!!//

      இறைவன் படைப்பில் அனைத்தும் பொருள் உள்ளதே!

      உங்கள் கருத்துக்களுக்கும், உங்களின் அன்பான ஆசிகளுக்கும் நன்றி நன்றி அக்கா.



      நீக்கு
  16. மனதை அள்ளுகின்றன இயற்கைக் காட்சிகள். பேரன் மகிழ்ச்சியாகச் சுற்றி வந்திருப்பது தெரிகிறது. விதம் விதமான வடிவங்களில் உயர்ந்து நிற்கும் கள்ளி முற்செடிகள் அழகு. படங்கள் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //மனதை அள்ளுகின்றன இயற்கைக் காட்சிகள்.//

      ஆமாம்.

      பேரன் மகிழ்ச்சியாக சுற்றி வந்தான்.
      உயர்ந்து நிற்கும் கள்ளிகளை பார்க்க பார்க்க வியப்புதான் ராமலக்ஷ்மி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. பூங்கா மிக அருமை. நீங்கள் எடுத்த படங்களும் மிக அழகு

    கள்ளிச்செடிகள் வானுயர்ந்து வளர்ந்ததுபோலத் தோன்றுகிறது.

    இது அழகு, இது அழகில்லை என்று இறைவன் படைப்பில் ஏதாவது இருக்கிறதா என்ன? எல்லாமே அழகுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      //கள்ளிச்செடிகள் வானுயர்ந்து வளர்ந்ததுபோலத் தோன்றுகிறது.//
      ஆமாம் , சில கள்ளிச்செடிகள் வானத்தை தொட்டுவிட்டது போல் இருந்தது.

      //இது அழகு, இது அழகில்லை என்று இறைவன் படைப்பில் ஏதாவது இருக்கிறதா என்ன? எல்லாமே அழகுதான்//

      நீங்கள் சொல்வது சரிதான். இறைவன் படைப்பில் எல்லாமே அழகுதான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  18. கள்ளிகளும் அழகு.கள்ளிச் செடிகள் உயரமாக வளரும் என்பதே ஆச்சரியமான விஷயம். மலையும் அழகு. இயற்கையின் படைப்பில் எல்லாமே அழகு.எல்லாவற்றிற்கும் பயன்பாடுகளும் உள்ளன. பேரன் நன்கு உயரமாகி விட்டான். இன்னமும் குழந்தையாகப் பார்த்ததே மனதில் இருக்கு. படங்கள் எல்லாமும் நன்றாக எடுத்திருக்கிறீர்கள். விளக்கங்களும் நன்றாக உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      நான் எடுத்த கள்ளிகளைவிட இன்னும் உயரமாக இருக்கிறது.

      இயற்கையின் படைப்பில் எல்லாம் அழகுதான், எல்லாவற்றிற்கும் பயன்பாடுகளும் உள்ளன
      பேரன் வளர்ந்து விட்டான். உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.

      நீக்கு
  19. கள்ளிச்செடிகூட புகைப்படம் எடுக்கும் விதமாக எடுத்தால் அழகுதான். வாழ்த்துகள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ஜி.

      நீக்கு
  20. படங்கள் அழகோ அழகு... மலையும் வானமும் சூப்பராக படம் பிடிச்சிருக்கிறீங்கள்..

    பேரன் மாஸ்க்குடன் அழகு.. உயர்ந்திட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      மலையும் வானமும் அழகாய் இருந்தது.
      ஆமாம் அதிரா, பேரன் வளர்ந்து விட்டான் .

      நீக்கு
  21. என்ன அழகான கள்ளி மரங்கள், ஆனா பறவையின் கூடுகளைப் பார்க்கப் பாவமாக இருக்குது, கூடு கட்ட மரங்கள் இல்லாமையாலதானோ முட்களுக்கு நடுவே கட்டுகின்றன.. அல்லது பாம்பு வேறு மிருகங்களிடமிருந்து தப்பிக்கவாகக் கூட இருக்கலாம்.. என்னே கடவுளின் படைப்பு.. வியக்க வைக்குது.

    அத்தனை படங்களும் அழகு கோமதி அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான கள்ளி மரங்கள் வித விதமாய் பார்க்க பார்க்க ஆசையாக இருக்கிறது படங்கள் எடுக்க.

      //அல்லது பாம்பு வேறு மிருகங்களிடமிருந்து தப்பிக்கவாகக் கூட இருக்கலாம்.. என்னே கடவுளின் படைப்பு.. வியக்க வைக்குது.//

      பாவம் இல்லை பறவைகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும் அதிரா நீங்கள் சொல்வது போல்.

      மரங்களில் எடுத்த படங்கள் அடுத்து வரும். மரங்களும் குச்சி குசியாக இருக்கிறது .
      நல்ல இலைகள் அடர்த்தியாக உள்ள மரத்தில் கூடு கட்டவில்லை பறவைகள்.

      போகன்வில்லா செடியில் வழக்கம் போல் மகன் வீட்டில் மணிப்புறா கூடு கட்ட வந்து பார்த்து போகுது, பழைய கூட்டில் அமர்ந்து பார்த்து போகிறது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.

      நீக்கு
  22. பந்து பந்தாய் மேகப்பொதிகள் பஞ்சு மூட்டைகள் போலிருக்குக்கா .இங்கேயும் எல்லாரம் வார இறுதியில் தான் இப்படி வெயில் வெளிக்காட்டும்போது நடைபயணிப்பாங்க .கள்ளிகள் ஆளுயரத்தில் அவற்றில் பாதுகாப்பாய் வீட்டைக்கட்டிய பறவைகள் சூப்பர்ப் அக்கா ,அது பொட்டு என்பதைவிட  தலை பில்லை ராக்கொடி போலிருக்குக்கா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
      ஆமாம் ஏஞ்சல், பஞ்சு பொதி மூட்டைகள் போல தான், அழகான பஞ்சுபொதி.
      இந்த வாரம் குளிர் காற்று வேகமாய் இருக்கிறது. கடல் அலை போல் சத்தம் போடுகிறது காற்று.

      //கள்ளிகள் ஆளுயரத்தில் அவற்றில் பாதுகாப்பாய் வீட்டைக்கட்டிய பறவைகள் சூப்பர்ப் அக்கா//

      உயர்ந்த் கள்ளி மரத்தில் பறவை உடகார்ந்து இருக்கும் பார்க்க அழகாய் இருக்கும்.
      போன முறை அந்த படம் போட்டேன்.

      //அது பொட்டு என்பதைவிட தலை பில்லை ராக்கொடி போலிருக்குக்கா :)//

      நீங்கள் சொல்வது போலவும் இருக்கிறது பார்க்கும் போது.
      உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.





      நீக்கு
  23. லட்டு லட்டாக வெண் மேகங்கள் மனதை கட்டி இழுக்கிறது மா...

    அந்த ஒற்றை கள்ளி செடி காட்சி படுத்திய விதம் மிக அழகு ...


    எல்லா காட்சிகளும் மிக அழகு ..ரசித்தேன் மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு