வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

இராசிபுரம் அம்மன் கோயில்கள்


தம்பி மகள் (மறுவீட்டுக்கு 20. 2. 2019 )மாப்பிள்ளை வீட்டில்  திருமண வரவேற்பு வைத்து இருந்தார்கள். மாப்பிள்ளையின் ஊரான  இராசிபுரத்திற்குப் போய் இருந்தோம். மருமகளுக்கு அலங்காரம் செய்துகொண்டு இருந்தார்கள்.

உறவினர்களிடம் பேசிக்கொண்டு இருந்தபோது கோவில்களைப் பற்றி விசாரித்தேன்.  வரவேற்பு ஆரம்பிக்கும் முன்  வரும் வழியில் பார்த்த அனுமன் கோவில் போய் வருகிறோம் என்றோம், (வரவேற்பு நேரம் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை- நாங்கள் மீண்டும் ஊர் திரும்ப வசதியாக வைத்து இருந்தார்கள்.) அவர்கள் அந்தக் கோவில் சீக்கிரம்  அடைத்து விடுவார்கள், அதனால் நித்தியசுமங்கலி மாரியம்மன் கோவில் போய் வாருங்கள் அருமையான கோவில் என்றார்கள். அப்படியே  அங்காளபரமேஸ்வரி கோவிலும் போய் வாருங்கள் என்றார்கள், மாப்பிள்ளையின் அப்பா. எங்களை அழைத்துச் சென்று கோவில்களைக் காட்ட அவர் தம்பியை உடன் அனுப்பினார்கள்.
கிளம்பி விட்டோம் கோவிலுக்கு
நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில்


11ம் ஆண்டு காய்கறி  அலங்கார உற்சவ விளம்பரம்

கோவில் உள் அமைப்பு
பக்க வாசலில் பிள்ளையார்
ஊஞ்சலில் அம்மன் பாதம்  பதித்து வைத்து இருக்கிறார்கள்..

அந்த ஊஞ்சலை ஆட்டி விட்டால்  நினைத்த காரியம் நடக்கும் என்றார்கள் , ஊஞ்சலை ஆட்டிக் கொண்டு இருந்த அம்மா.  நாங்களும் எல்லோரும் நலமாக இருக்க வேண்டி ஆட்டி வந்தோம்.
தலவரலாற்றில் குழந்தைச் செல்வம் பெற அந்த ஊஞ்சலை ஆட்டிவிட வேண்டும் என்று படித்தேன்.
ஊஞ்சல் மண்டபத்திற்கு இருபுறமும் குதிரைகள் அழகாய் இருக்கிறது.

சேணத்தில் கால் வைத்து ஏறும் வசதியாகச் சிலையை வடித்து இருக்கிறார்கள்.
பூக்குழி இறங்கும் இடம் இருக்கிறது

அம்மன் சன்னதி செல்லும் வாசல் மேல் விதானத்தில் அழகிய காட்சி
அம்மன் மிக அலங்காரமாய் இருந்தார். அம்மன் முன் இருப்பது சுயம்பாக வயல்வெளியில் கிடைத்தவள் . ஒரு விவசாயி தன் நிலத்தை உழும் போது ஏதோ தட்டுப்படுவது போல இருந்ததாம். நிலத்தில் இரத்தம் பீறிட்டு வந்ததாம். அவர் ஊர் மக்களைக் கூவி அழைத்து அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்க,  சுயம்பாய் அன்னை காட்சி தந்தாளாம், பக்தர் ஒருவர் மேல் அருள் வந்து இங்கு கோவில் அமைக்கச் சொன்னாராம்.
சுயம்பு மட்டுமே வைத்து ஆலயம் அமைத்து இருக்கிறார்கள், பிற்காலத்தில் அம்மன் சிலை வடித்து வைத்து வழிபட்டு இருக்கிறார்கள். முதலில் சுயம்புக்கு அபிஷேகம், பூஜை ஆனபின் தான் அம்மனுக்கு ஆகுமாம்.

சதுர வடிவ ஆவுடையார் மேல் அம்மன் தோற்றம் இருக்கும். சுயம்பு  சிவன் மாதிரி தோற்றம் அளிப்பது இங்கு விசேஷம். இந்தக் கோவில் 600 ஆண்டு பழைமையானது என்றார். 

என் தங்கை போட்டோ எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டாள். நான் மிக அழகாய் அலங்காரம் செய்து இருக்கிறீர்கள். மண்டபத்தில் இருக்கும் உறவினர்களுக்கு காட்ட வேண்டும் எடுத்து கொள்ளலாமா என்ற போது அம்மா வந்தா எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். சுற்று வட்டார ஜனங்கள் எல்லாம் இவர் செய்யும் அலங்காரம் போல் யாராலும் செய்ய முடியாது என்று பாராட்டிச் செல்வார்கள் என்றார்.

அம்மா வந்தா எடுத்துக் கொள்ளுங்கள் என்றாரே குருக்கள்,  அலைபேசியில் அம்மாவை வணங்கி எடுத்தேன்.
கருணை மிகுந்தவள் அல்லவா! வந்துவிட்டாள், என் கண்ணிலும்    அலைபேசியிலும். தேடுகின்ற கண்களுக்குள் ஓடி வரும் தாயி.
அலங்காரம் செய்யச் சொன்னவர் கொடுத்த 100 ரூபாய் போலும் அம்மன் தாலிக்குக் கீழ் இருக்கிறது.
காமதேனு புடவை கட்டிக் கொண்டு,- வெள்ளைகலர் தூசி ஆகாமல் இருக்கப் போட்டு இருக்கிறார்கள் போலும்

அம்மனுக்குப் பின்புறம் மண்டபத்தில் ஒரு பக்கம் பிள்ளையார்
மறுபக்கம் முருகன்

குதிரை வாகனம்
திருவிழா
 
திருவிழாக் காலங்களில்  இப்படிக் கம்பம் நட்டுப் பூஜை செய்வார்கள் , ஆனால் இங்கு எப்போதும் நிரந்தரமாய் இருக்கிறது. கம்பம் அம்பாளின் கண்வராகக் கருதப்படுகிறது. அம்மன் தன் எதிரில் இருக்கும் தன் கணவரை பார்த்தபடியே இருப்பதால் தான்  அம்மனுக்கு பேர் நித்திய சுமங்கலி . 

கம்பத்தின் அடியில் உள்ள கல் பீடத்தில் நான்கு  திசையிலும் அழகான சிம்மத்தின் தலை இருக்கிறது.

ஐப்பசி மாதம் திருவிழாக் காலத்தில் இந்தக் கம்பத்தை எடுத்துவிட்டுப் புதுக் கம்பம் நடுவார்களாம். பழைய கம்பம் கிணறு இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து வைத்து அதற்குத் தயிர்சாதம் பிரசாதம் செய்து வைத்து எலுமிச்சைவிளக்கு ஏற்றி  வழிபட்டுத் தயிர்சாதத்தைப்  பெண்கள் சாப்பிடுவார்களாம். (குழந்தைப் பேறு வேண்டி.)

வரும் பக்தர்கள் எல்லாம் சின்ன பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் பிடித்து  கம்பத்தின் மேல் ஊற்றி பூப் போட்டு வணங்கிச் செல்கிறார்கள்.
மாட்டின் உருவச் சிலைகள் நிறைய இருக்கிறது, மணி, வேல், சூலாயுதம் எல்லாம் வேண்டிக் கொண்டு காணிக்கையாகக் கோவிலுக்குக் கொடுத்தது.

சிமெண்ட் தொட்டியில் உப்பு மிளகு கொட்டி இருந்தது.  முகத்தில் மரு, பரு, மற்றும் சரும நோய்கள் தீர வேண்டிக் கொண்டு கொட்டுவார்களாம்.
கோவில் மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது.
============================================

அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோவில்

பிள்ளையார் இருக்கிறார்
                                                                                                        அம்மன் சன்னதி கோபுரம்

                          
 
மேல் விமானம் தங்கம் போல பிரகாசமாய் இருக்கிறது- தங்க கலசம் மின்னுகிறது
                                   
முருகன் பழனி முருகன் போல் ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்தார். அவ்வளவு அழகாய் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல , விபூதி அலங்காரம் முகத்திற்கு. படம் எடுக்கக் கூடாது என்றார்கள். வெளிப் பக்கம் மட்டும் கேட்டுக்கொண்டு எடுத்த படங்கள்.
                                    
வெளிப்பக்கம் தெரியும் விமானத்திற்குக் கீழ பெரிய வலம்புரிப் பிள்ளையார் இருக்கிறார். அவர் பக்கத்து மண்டபத்தில் மதுரை வீரன், தன் இரு மனைவியருடன். அப்புறம் பரிவார  தெய்வங்கள்.

ஒரு அழகான மண்டபத்தில் நாகாஆபரணம் தலையில் அணிந்து படுத்து இருக்கும் கோலத்தில் அங்காளபரமேஸ்வரி. நாகாபரணம், கால், கைகளுக்கு வெள்ளிக் கவசம் அணிந்து இருந்தார்கள்.

அர்த்த மண்டபத்தில் அம்மன்   பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் சந்தனக் காப்பில் பச்சைப் பட்டு உடுத்தி அழகாய் காட்சி தந்தார். விபூதி கொடுத்தார்கள் முதலில், பின் அழகான குங்குமச் சிமிழ்  வெண்கலத்தில் -அழகிய வேலைப்பாடு நிரம்பியது -அதை முதலில் நம் தலையில் வைத்தனர்,(சடாரி போல்) பின் குங்குமம் தந்தனர்.

எல்லோருக்கும் எல்லா நலமும் அம்மன்கள் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் , மகிழ்ச்சியுடன்  திருமணவரவேற்பு மண்டபத்திற்குத் திரும்பினோம்.

                                                            வாழ்க வளமுடன்.

54 கருத்துகள்:

  1. அழகான படங்களும், விரிவான விளக்கங்களும் நன்று.

    பதிலளிநீக்கு
  2. அழகான படங்கள்... அருமையான விளக்கங்கள் அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. ஆஆஆஆஆஆஆஆ மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊ.. துண்டு போட்டு வச்சிட்டேன்ன்.. கொஞ்சத்தால வருகிறேன் கோமதி அக்கா:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சுவீட் 16 -அதிரா, வாழ்க வளமுடன்.
      தேவகோட்டையார் முந்தி விட்டார்.
      வாங்க வாங்க மெதுவாய்.

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 கில்லர்ஜி:)

      நீக்கு
  4. முதலில் முருகனை சேவித்து விட்டு இங்கே வந்தால் ஆஹா என்ன வடிவு. என்ன அழகு இந்த அம்மா. முகத்தில் எத்தனை அருள்.
    கருணையே உருவான தேவி காப்பாற்றம்மா சந்ததிகளை.

    அன்பு கோமதி நீங்கள் அடிக்கடி கோவில்கள் சென்று இது போல எழுதுங்கள்.

    குதிரைகளின் அமைப்பும் கம்பீரமும் மனதை அள்ளுகின்றன.
    மணமக்களுக்கு மீண்டும் வாழ்த்துகள் என்னாளும் இல்லறம் சிறக்க
    அம்மாவே அருள் புரியணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா , வாழ்க வளமுடன்.
      முருகனை சேவித்தீர்களா? எங்கு?

      //கருணையே உருவான தேவி காப்பாற்றம்மா சந்ததிகளை.//
      ஆமாம் அக்கா, அதுதான் வேண்டும். வேறு என்ன கேட்க போகிறோம் அன்னையிடம்.

      குதிரையின் கம்பீரம் மனதை கவர்வது உண்மை.
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  5. வா..வ் என்ன அழகாக அலங்காரம் அம்மனுக்கு. மிக மிக அழகா அலங்காரம் செய்திருக்கார். நீங்களும் அழகா படம் எடுத்திருக்கிறீங்க அக்கா. வரவேற்புசாரத்துக்கு போன இடத்தில் கொவில் தரிசனம். சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.
      உங்கள் வரவும், கருத்தும் மகிழ்ச்சி அளிக்கிறது.
      நன்றி அம்மு.

      நீக்கு
  6. அழகிய படங்கள். சுவையான விவரங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. அழகான படங்கள்.

    உங்கள் மூலம் ஒரு புதிய கோவில் பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டோம். ராசிபுரம் வழியே பயணித்ததுண்டு.

    படங்கள் சிறப்பாக வந்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
      ராசிபுரம் முழுவதும் கோவில்கள் நிறைய இருக்கும் போல , ஊரிலிருந்து கல்யாணமண்டபம் போகும் வழியில் நிறைய கோவில்கள் இருக்கிறது.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    தங்கள் உறவின் திருமணம் நன்றாக முடிந்ததா? மணமக்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள். சென்றவிடத்தில் தங்களுக்கு ஆலய வழிபாடு கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

    நித்திய சுமங்கலி அம்மன் கோவிலும், அங்காள பரமேஸ்வரி கோவில்களும் பற்றி விபரமாக அழகான படங்களுடன் தந்திருக்கிறீர்கள். ஒவ்வொரு கோவிலுக்கும் ஸ்தல புராணங்கள் தெரிய வரும் போது மனதுக்கு மகிழ்வாக இருக்கின்றன. இரண்டு கோவில்களும் மிக அழகாக உள்ளது. நித்திய சுமங்கலி அம்மன் மிகவும் அழகாக உள்ளார். கர்ப்பகிரகத்தின் முன்னால் இருக்கும் மரத்திலான கம்பு விபரம் அறிந்து கொண்டேன். அன்னையின் பரிபூரண அருள் கிடைக்கும் பட்சத்தில், அதற்கு இணையாக இந்த உலகத்தில் வேறு என்ன வேண்டும்? யாவரும் நலமாக இருக்க வேண்டுமென மனதாற அன்னைகளை துதித்துக் கொள்கிறேன்.தங்கள் பதிவு நாங்களும் கோவில்களை தரிசித்த திருப்தியை தந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் , வாழ்க வளமுடன்.
      தம்பி மகள் திருமணம் இனிதாக நிறைவு பெற்றது.
      மாப்பிள்ளை வீட்டு வரவேற்பிலும் கலந்து கொண்டு விட்டேன்.
      மருமகள் இப்போது படித்து கொண்டு இருக்கிறாள் மேல் படிப்பு (MBA) அதனால் தாய்வீடு வந்து இருக்கிறாள். மணமக்களுக்கு உங்கள் வாழ்த்து மகிழ்ச்சி தருகிறது, நன்றி.

      கோவில் தரிசனம் செய்து வைத்த மாப்பிள்ளையின் அப்பா. சித்தப்பாவிற்கு நன்றிகள் சொல்ல வேண்டும்.

      அன்னையின் அருள் கிடைத்தால் அப்புறம் வேறு என்ன வேண்டும் அதுவே போதும்.
      உங்கள் கருத்துக்கும், வேண்டுதலுக்கும் நன்றி.

      நீக்கு
  9. ஆஹா மணமக்கள் ரெடியாகமுன், நீங்க கோயில் சுற்றுலாவோ நல்ல விசயம்.

    கோயில் பெயர் புதுமையாக இருக்கு.. அதென்ன “நித்திய சுமங்கலி”.. அதுபற்றி ஏதும் தெரியுமோ கோமதி அக்கா? கோபுரம் அழகா இருக்கு, ஊர்க்கோயில் என்பது தெரியுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா, மணமக்கள் ரெடியாகும் முன் கோயில் தரிசனம் ஆச்சு.
      எங்கு போனாலும் பக்கத்தில் ஏதாவது கோவில் இருக்கா என்று பார்ப்பேன்.
      கோவிலை மிக சுத்தமாக வைத்து இருக்கிறார்கள்.
      நித்தியசுமங்கலி பெயர் காரணம் தெரிந்து கொண்டு விட்டீர்கள் தானே!

      நீக்கு
  10. ஓ அது ஊஞ்சலோ? ஆரோ பிள்ளைகள் ஏறி ஆட்டுகிறார்களோ.. தூரமாக எடுத்திருப்பதால், அம்மன் இருக்கிறா என நினைச்சேன்.

    //அந்த ஊஞ்சலை ஆட்டி விட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்றார்கள் //

    ஆவ்வ்வ்வ் மாப்பிள்ளை அழைபுக்குப் போன இடத்தில அம்மனின் ஊஞ்சல் ஆட்டும் பாக்கியம் கிடைச்சிருக்கே கோமதி அக்காவுக்கு அவ்வ்வ் நல்ல சகுனம்தானே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊஞ்சலை ஒரு அம்மா ஆட்டிக் கொண்டு இருக்கும் போது எடுத்தது. தூரத்திலிருந்து.
      அவர்கள் தான் எல்லோரும் நல்லது வேண்டிக் கொண்டு ஆட்டலாம் என்று.

      //ஆவ்வ்வ்வ் மாப்பிள்ளை அழைபுக்குப் போன இடத்தில அம்மனின் ஊஞ்சல் ஆட்டும் பாக்கியம் கிடைச்சிருக்கே கோமதி அக்காவுக்கு அவ்வ்வ் நல்ல சகுனம்தானே.//

      ஆமாம் அதிரா, நல்ல சகுனம் தான்.எல்லாம் நன்மைக்கே!

      நீக்கு
  11. அம்மன் வந்துவிட்டா கோமதி அக்காவின் கமெராவில்.. அப்படியே எங்கள் கண்களுக்கும்.. அழகிய சாந்தசொரூபி அம்மன்.

    கம்பம்.. வித்தியாசமாக இருக்கு.

    //அம்மன் தன் எதிரில் இருக்கும் தன் கணவரை பார்த்தபடியே இருப்பதால் தான் அம்மனுக்கு பேர் நித்திய சுமங்கலி .//

    ஓஒ மேலே அவசரப்பட்டுக் கேள்வி கேட்டு விட்டேன், கீழே படித்து வரும்போதுதான் விடை கிடைத்திருக்கு. அம்மன் பதில் தந்திட்டா...

    மாமா கொஞ்சம் மெலிந்துவிட்டதுபோல இருக்கிறார், கலியாண அலைச்சலோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா, அம்மன் வந்து விட்டார் நாம் எல்லோரும் கண்டு வழிபட.
      நேரில் பார்க்க பார்க்க பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் அழகு அதனால் தான் குருக்களிடம் கேட்டு எடுத்தேன்.

      அம்மா எப்போது பதில் தர காத்து இருக்கிறாள் அதிரா .
      மாமா மெலிந்து விட்டார்கள் தான். ஓய்வு எடுக்க வேண்டும். என்ன செய்வது தவிர்க்க முடியாமல் சில பயணங்கள் போக வேண்டி உள்ளது.
      மாமனார் திவசம் வருகிறது அதற்கு கோவை போக வேண்டும்.

      நீக்கு
  12. அழகிய திருப்தியான அம்மன் தரிசனம், அங்கிருந்த குருக்களும் அம்மனைப்போல சாந்தமானவர்போலும், அதனால்தான் அனைத்துக்கும் ஒத்துக் கொண்டிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா, நல்ல மனிதர். கோவிலை வணங்கி முடிந்தவுடன் கிளம்பும் போது அங்கு நடக்கும் அன்னதானத்திற்கு அழைத்தார். நாங்கள் விழாவிற்கு வந்து இருக்கிறோம் இல்லையென்றால் அம்மன் பிரசாதத்தை மறுக்க மாட்டோம். என்று சொல்லி வந்தோம்.

      நீக்கு
    2. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன். அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி நன்றி.
      உங்களை போல் கீழ் இருந்து பதில்கள் சொன்னேன். அதனால் இப்போது வாழ்க வளமுடன் .

      நீக்கு
  13. நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில்..அழகான பெயர் மா..

    கோவில் உள்ள இடமும் , தல புராணமும், படங்களும் துல்லியம் ...

    அம்மனின் திருமுகம் ..ஆஹா என்ன அழகு ..

    அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோவிலும் அறிந்துக் கொண்டோம் ..

    மிக மகிழ்ச்சி மா பல புதிய இடங்களை அறிந்துக் கொள்வதற்கு ..

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் அனுராதா பிரேம் குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி அனு.

    பதிலளிநீக்கு
  15. படங்கள் பிரமாதம்.

    அப்புறம் அந்த உற்சவ வாகனம் தூசியாகக்கூடாதுன்னுலாம் மூடல. துணிய காய வச்சிருக்காங்க...

    புதியதொரு கோவில் பற்றி தெரிஞ்சுக்கிட்டேன். மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  16. அருமையான விபரங்களுக்கும் அழகிய புகைப்படங்களுக்கும் அன்பு நன்றி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  17. கோமதிக்கா கல்யாணம் சிறப்பாக நடந்திருக்கும் என்று நினைக்கிறோம்..

    மறுவீட்டு அழைப்பா ஓ! அங்குள்ள வரவேற்பு...ராசிபுரம் சேலம்பக்கம் இருக்கும் ராசிபுரம்தானே அக்கா?

    போன இடத்தில் கோயில் தரிசனம் சூப்பர் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      கல்யாணம் சிறப்பாக நடை பெற்றது.
      சேலம் பக்கம் இருக்கும் இராசிபுரம்தான்.
      எதிர்பாராத கோவில் தரிசனம்.

      நீக்கு
  18. அம்மன் அழகாக இருக்கிறார்.

    காமதேனுவும் சூப்பர்...தூசிக்காகத்தான் புடவையா?

    குதிரை செம அழகா இருக்கு..

    அந்தக் கம்பைப் பார்த்ததும் இப்போதெல்லாம் மரங்கள் வெட்டப்பட வேண்டியோ அல்லது விழுந்தாலோ அடித்தண்டை கலர் அடித்து வித்தியயசாமாக காட்சிபடுத்துறாங்கக்கா..முதலில் அப்படி நினைத்துவிட்டேன்...அப்புறம் தெரிந்தது இது திருவிழாவுக்கு வைக்கப்படுவது இங்கு நிரந்தரமாக இருக்கு என்று...

    நான் பாண்டியில் எடுத்த் படங்கள் இருக்கு போடுகிறேன்.,..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மன் மிக அழகு தான் கீதா.
      காமதேனு முகம் அழகு.

      //தூசிக்காகத்தான் புடவையா?//

      நான் அப்படித்தான் நினைக்கிறேன், ராஜி காயபோட்டு இருக்கிறார்கள் என்கிறார்கள்.
      நிறைய கோவில்களில் திருவிழாவிற்கு கம்பம் நட்டு காப்பு கட்டுவார்கள் பார்த்து இருக்கிறேன். ஆனால் அப்படி அடியில் பீடத்துடன் நிரந்தரமாக இருப்பது இங்கு மட்டும் தான்.
      நீங்களும் பாண்டியில் எடுத்த படங்களை போடுங்கள்.

      நீக்கு
  19. தங்கக்கோபுரம் அழகு..

    அம்மன் அலங்காரம் வெகு அழகாக இருக்கிறது..நிஜமாகவே யாருக்கோ நடனத்துக்கான மேக்கப் போட்டது போன்று தத்ரூபமாக இருக்கு கண்கள்!!!

    படங்கள் அனைத்தும் செம...

    கீத

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்ககோபுரம் கண்ணை கவர்ந்தது கீதா.
      அம்மன் கண்கள் நடனமணி கண்கள் போல் இருக்கா?
      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி கீதா.

      நீக்கு
    2. அம்பலக் கூத்தனின் துணையல்லவா.. - அங்கு
      களிநடம் புரிபவள் அவளல்லவா!..

      அவள் நயனங்கள் நளினம்
      இமைகளும் நளினம்..

      கரங்களும் நளினம்
      விரல்களும் நளினம்
      இடையொரு நளினம்
      நடையதும் நளினம்..

      நளினங்கள் இல்லையெனில்
      இங்கு ஏது சலனம்!?...

      நீக்கு
    3. நீங்கள் சொல்வது உண்மை உமாபதி ஆடும் நடனம் களிநடம் தான்.
      நயனங்கள் நளினம் தான்.
      சக்தி இருந்தால்தானே சலனம்.
      அருமை அருமை.
      நன்றி மீள் வருகைக்கு.

      நீக்கு
    4. இந்தக் கருத்துரையும் நேற்று இரவில் எழுதியது... அப்போதே தெரியும் தளத்தில் சேரவில்லை என்று.... எனவேதான் இன்று மறுபடியும் எழுதினேன்.. மகிழ்ச்சி..

      நீக்கு
    5. உங்கள் கருத்துக்கு நன்றி.
      மகிழ்ச்சி. சேரவேண்டிய நேரத்தில் சேர்ந்து விட்டது.

      நீக்கு
  20. ஊரெல்லாம் போய்விட்டு பதிவு ஒன்றையும் போட வில்லையே என்றிருந்தேன்..

    தாயே வந்து நின்றாள் - தயவு கொண்டு!...

    அந்த மங்கலான ஒளியில் தாயின் காலடியில் வந்து நிற்பது போலவே நாகப் பதுமை..

    அம்மனை அலங்கரித்த குருக்களுக்கு பணிவான வணக்கம்...

    மஞ்சளிலே நீராடி அம்மா
    மங்கலமாய் வந்தாளாம்...

    சந்தனத்தில் நீராடி அம்மா
    சத்தியமாய் வந்தாளாம்..

    பூவாடைக்காரி அந்தப்
    புனிதவதி வந்தாளாம்...

    பிச்சிப் பூசூடிக் கொண்டு
    பிரியமுடன் வந்தாளாம்..

    முல்லைப் பூசூடிக் கொண்டு அம்மா
    முக மலர்ந்து வந்தாளாம்..

    தாழம்பூ சூடிக் கொண்டு அம்மா
    தயவுடனே வந்தாளாம்..

    செந்தூரப் பொட்டுக்காரி
    சிரித்தபடி வந்தாளாம்...

    மாவிளக்கு வைத்தவர்க்கு
    மடி நிறைக்க வந்தாளாம்...

    வாசல்படி துடைத்தவர்க்கு
    வாழ்வளிக்க வந்தாளாம்...

    தாம்பூலம் அளித்தவர்க்கு
    தாயாகி வந்தாளாம்..

    கதி நீயே என்றவர்க்கு
    கைகொடுக்க வந்தாளாம்...

    கவலை எதற்கு என்மகனே
    என்றபடி வந்தாளாம்...

    காட்சி ஒன்றைத் தருவதற்குக்
    கடல் கடந்து வந்தாளாம்...

    அம்மா - கடல் கடந்து வந்தாளாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
      //அந்த மங்கலான ஒளியில் தாயின் காலடியில் வந்து நிற்பது போலவே நாகப் பதுமை..//
      சுயம்பு அன்னை அருகில் இரண்டு நாகபதுமைகள் அதை நான் குரிப்பிடவில்லை, நீங்கள் கவனித்து சொல்லி விட்டீர்கள்.
      உங்கள் கவிதை அருமை.
      அம்மன் பாட்டு உங்களுக்கு தாய்மீது உள்ள நம்பிக்கையை சொல்கிறது.
      உங்கள் கருத்துக்கும் அம்மன் கவிதைக்கும் நன்றிகள்.
      கை கொடுப்பாள் அன்னை.
      வாழ்க வளமுடன்.

      நீக்கு
  21. ஆம், அம்மனுக்கு மிக அழகாக அலங்காரம் செய்துள்ளார்கள். படங்களும் பகிர்வும் நன்று.

    பதிலளிநீக்கு
  22. அருமையான விளக்கங்களுடன் கூடிய கோயில் தரிசனம்.நித்திய சுமங்கலி அம்மன் கோயில் பழமையானது எனப் பார்த்தாலே தெரிகிறது. கம்பத்தைப் பற்றிய தகவல் எனக்குப் புதியது. இன்று வரை பார்த்தது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
      மாயவரத்தில் அம்மன் கோவில்களில் திருவிழா சமயம் கம்பத்தைப் பார்த்து இருக்கிறேன்.
      இந்த கோவிலில் சொல்லபடும் கம்பத்தைப்பற்றிய தகவல் புதியது நானும் இதுவரை கேட்டது இல்லை.

      நீக்கு
  23. வாகனங்கள் வெகு அழகு. அங்காள பரமேஸ்வரி எல்லா இடங்களிலும் படுத்த வண்ணமே அருள் பாலிக்கிறாள் போலும்! கோயில் கோபுரமும் கோயிலைச் சுற்றி உள்ள இடங்களும் படு சுத்தமாகக் காட்சி அளிக்கிறது.எடுத்தவரை படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் தங்கை சொன்னாள் அவள் ஊரிலும் அங்காள பரமேஸ்வரி படுத்த வண்ணமே இருக்கும் என்று , நான் இங்கு தான் அங்காளபரமேஸ்வரியை படுத்த நிலையில் பார்க்கிறேன்.
      மாயவரத்தில், திருவெண்காட்டில் எல்லாம் உடகார்ந்த நிலையில் தான் இருக்கும்.
      கோவில்கள் படு சுத்தமாய் இருந்தது.

      நீக்கு
  24. சுயம்பு அன்னையின் அருகே காணப்படும் நாகங்கள் நிஜம் போல் இருக்கின்றன. துரையின் பாடலைப் படிக்கையில் எனக்கு மாரியம்மன் தாலாட்டு நினைவில் வந்தது. கிட்டத்தட்ட வார்த்தைகள் அதில் வருவது போல் விழுந்திருக்கின்றன. அன்னையின் அருள் மழை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாகங்கள் இரு பக்கமும் அழகாய் இருந்தது உண்மை.நானும் மாரியம்மன் தாலட்டு படித்து இருக்கிறேன். அவர் எழுதிய அன்னை பாட்டு மனதுக்கு நிறைவு தருகிறது, அன்னையின் அருள்மழை அவர் கவிதையில் பொழிந்து இருக்கிறது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  25. ராசிபுரம் அம்மன் கோயில் பற்றிய விவரங்களும், படங்களும் அருமையாக உள்ளது. அம்மன் படம் கண்ணில் நிற்கின்ற அளவு வெகு அழகாக இருக்கிறது. மிக்க நன்றி பகிர்விற்கு

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  27. அம்மன் படங்கள் ரொம்ப அருமையா வந்திருக்கு.

    அலங்காரம் பண்ணறவங்க ஈடுபாட்டோடு செய்யும்போது அந்தத் தெய்வச் சிலை மிளிர்கிறது.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.

      //அலங்காரம் பண்ணறவங்க ஈடுபாட்டோடு செய்யும்போது அந்தத் தெய்வச் சிலை மிளிர்கிறது.//

      ஆமாம் தமிழன், சரியாக சொன்னீர்கள்.
      மாயவரத்தில் சாந்தநாயகியை மிக அழகாய் அலங்காரம் செய்வார், நம்மிடம் எப்படி இருக்கிறது? அடுத்தமுறை செய்ய ஏதாவது ஆலோசனை கேட்பார் எல்லோரிடமும். நவராத்திரிக்கு ஏதாவது செய்ய யோசித்து கொண்டு இருப்பார்.

      அது போல் இராசிபுரத்தில் இந்த அம்மனை அலங்கரித்தவர் அவரே பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தார். ஈடுபாட்டோடு செய்ததால்தான் அம்மன் மிளிர்கிறார்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு