சனி, 10 நவம்பர், 2018

முருகனைச் சிந்திப்போம் -3


கந்த சஷ்டி நாட்களில் முருகனைச் சிந்தித்து வருகிறோம்.  இன்று மருதமலை முருகையா பாடலை ரேடியோ சிட்டியில் வைத்தார்கள். மதுரை சோமு அவர்களின் குரலும், பாடல் வரிகளும், குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையும் எல்லாம் சேர்ந்து கேட்கும் போது கண்ணில் நீர்துளிர்க்க வைக்கும் பாடல்.

இந்தப் பாடலைத்தான் இன்று  பகிர எண்ணி இருந்தேன். கீதா அவர்களின் பதிவு அதைக் கண்டிப்பாய் போட வேண்டும் எண்ணத்தை வளர்த்து விட்டது. ஸ்ரீராமுக்கு நன்றி சொல்ல வேண்டும்.  அவர் வியாழன் எழுதிய பதிவு நிறைய பேரை எழுத ஊக்கப்படுத்துகிறது. நன்றி ஸ்ரீராம், நன்றி கீதா.


2012 ம் வருடம் மருதமலை போன போது எடுத்த படங்கள்.

இந்தப் பாடலில் 'கோடிகள் கிடைத்தாலும் கோமகனை மறவேன்' என்று வரிகள் வரும். இன்பம் வந்தால் இறைவனை மறப்பதும், துன்பம் வந்தால் இறைவனை நினைப்பது இல்லாமல்  எப்போதும் அவரை நினைக்க வேண்டும். இன்பத்திற்கு நன்றி சொல்லி வணங்க வேண்டும், துன்பத்தில் என்னைவிட அதிகமாய் அடியார்கள் துன்பங்களை அனுபவித்து  இருக்கிறார்கள்   என் துன்பம் குறைவே என்று அவரை சரண் அடைந்து விட வேண்டும். 


//சிறந்த முருக பக்தராக விளங்கிய தேவர் ஒவ்வொரு படத்திலும் கிடைக்கும் லாபத்தை நான்காகப் பிரிப்பார். இதில் ஒரு பங்கு முருகனுக்கு வழங்குவார். முருகன் அருளால்தான் தனக்கு வெற்றி மேல் வெற்றி கிட்டுவதாக தேவர் எண்ணினார். அதனால், லாபத்தில் கால் பகுதியை, முருகன் கோவில் திருப்பணிகளுக்கு வழங்கினார். பழனி கோவில், மருதமலை முருகன் கோவில் உள்பட பல கோவில்கள் இதனால் பலன் அடைந்தன. ஒரு பங்கை தனக்கு வைத்துக் கொண்டு, மற்றொரு பங்கை, தனக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று பணம் கொடுத்து, திரைப் படம் எடுக்க 10 ஆயிரம் ரூபாயுடன் சென்னைக்கு அனுப்பி வைத்த பழைய நண்பர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். மற்றொரு பங்கை நன்கொடைகளாக வழங்கினார். தேவர், காலையில் அலுவலகம் வந்ததும் முருகனை வணங்கிவிட்டு வேலை தொடங்குவார். உதவி கேட்டு வருகிறவர்களுக்கு 'இல்லை' என்று கூறாமல் உதவி செய்வார்.//

நன்றி- விக்கிப் பீடியா.



'வரம் தருவாய் முருகா' என்ற பாடலும் மிகவும் பிடித்த பாடல். அவரை வாழ்நாள் எல்லாம் மறக்காமல் இருக்க அவர் தானே அருள வேண்டும்.
மாணிக்க வாசகர் சொன்னது போல்,
'அவனருளாலே  அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை
முந்தை வினை முழுதும் ஓயவுரைப் பன்யான்'

முருகன் அருள் இருந்தால் வாழ்நாள் எல்லாம் அவரை வணங்கும் பேறு கிடைக்கும்.

அருணகிரிநாதர் அருளிய மருதமலை முருகன் திருப்புகழ்:-
திரிபுரம் அதனை ஒரு நொடியதனில்
எரிசெய் தருளிய சிவன் வாழ்வே!
சினமுடைஅசுரர் மனமது வெருவ
மயிலது முடுகி விடுவோனே!
பருவரை யதனை உருவிட எறியும்
அறுமுகமுடைய வடிவேலா!
பசலையொ டணையும் இளமுலை மகளை
மதன்விடு பகழி தொடலாமோ!
கரிதிரு முகமும் இடமுடை வயிறும்
உடையவர் பிறகு வருவானே!
கனதனமுடைய குறவர்தம் மகளை
கருணையொ டணையும் மணிமார்பா!
அரவணை துயிலும் அரிதிரு மருக
அணிசெயு மருத மலையோனே!
அடியவர்வினையும் அமரர்கள் துயரும்
அற அருள் உதவு பெருமாளே!

மருதமலை ஆண்டவனே போற்றி போற்றி!

                                                                     வாழ்க வளமுடன்.

27 கருத்துகள்:

  1. கோமதிக்கா அருமையான பதிவு...பாடலும்...

    ஸ்ரீராம் தொடங்கி வைத்தது...ஆமாம் நானும் சொல்ல....அதை நீங்கள் இங்கு சொல்ல நேர்மறை இப்ப்டியே எல்லோரிடமும் தொற்றிக் கொள்ளட்டும்...என்றென்றும் என்று முருகனிடம் சொல்லிடுவோம்...வரேன் இன்னும் வாசித்துவிட்ட்
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      நல்ல எண்னங்கள் பரவுவது மகிழ்ச்சிதானே கீதா.
      முருகன் அருள்புரியட்டும்.

      நீக்கு
  2. இந்தப் பாடலில் 'கோடிகள் கிடைத்தாலும் கோமகனை மறவேன்' என்று வரிகள் வரும். இன்பம் வந்தால் இறைவனை மறப்பதும், துன்பம் வந்தால் இறைவனை நினைப்பது இல்லாமல் எப்போதும் அவரை நினைக்க வேண்டும். இன்பத்திற்கு நன்றி சொல்லி வணங்க வேண்டும், துன்பத்தில் என்னைவிட அதிகமாய் அடியார்கள் துன்பங்களை அனுபவித்து இருக்கிறார்கள் என் துன்பம் குறைவே என்று அவரை சரண் அடைந்து விட வேண்டும். //

    அருமையான வரிகள் கோமதிக்கா...மிகவும் ரசித்து வாசித்தேன்...மிக மிக உண்மையே....

    பாடல்கள் இரண்டையும் கேட்டு மகிழ்ந்தேன்...

    சொல்முகூர்த்தம் தொடங்கி வைத்த ஸ்ரீராமுக்குத்தான் நன்றிகள் பல சொல்லணும்...தொடர்ந்து கொண்டிருக்கே நல்ல வார்த்தைகள்!!

    டிடியின் சுட்டியும் கொடுத்திருக்கார் எங்கள் தளத்தில்..

    முருகன் அழகன்....அருணகிரி பாடலையும் அறிந்தோம் அக்கா..

    மருதமலைக்கு நிறைய தடவை சென்றிருக்கேன். கோயம்புத்தூரில் மூன்று வருடம் இருந்த போது, இப்போது அங்கு என் தம்பியின் வீட்டிற்குச் செல்லும் போதும் அவன் மருதமலை அருகிலேயே 3 கிமீ தூரத்தில்தான் இருக்கிறார். வீட்டு மொட்டைமாடி ஏறினாலே கோயில் தெரியும்...அங்கு போனால் செல்லாமல் வருவதில்லை...

    நல்ல பதிவு மிக்க நன்றி அக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  3. டிடியின் சுட்டியும் கொடுத்திருக்கார் எங்கள் தளத்தில்..//

    தனபாலன் அவர்களின் பதிவையும் படித்தேன்.
    அவர் பகிர்ந்து கொண்ட வாரியார் சாமிகள் பகிர்வும் அருமை.
    வேதாத்திரி மகரிஷி சொல்வது போல் சொல் செயல் இவற்றில் விழிப்புணர்வுடன் இருந்தால் நல்லதுதான்.
    செயலுக்கு ஏற்ற விளைவாகதான் இறைவன் வருவார்.

    மருதமலைக்கு முன்பு அடிக்கடி போவோம்.
    இப்போது புதிதாக மண்டபம் கட்டியபின் போகவில்லை.
    இறைவன் அருள் இருந்தால் மீண்டும் பார்க்கலாம்.
    உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  4. தேவர் பற்றிய குறிப்புகள் எனக்கு புதிது அழகிய படங்கள், காணொளிகள் அருமை சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      படங்கள், காணொளிகள் பார்த்து கருத்து சொன்னதற்கு
      கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. டிடியின் பதிவை இன்னமும் படிக்கவில்லை. உங்கள் இருவர் பதிவுகளும் அருமை! மருதமலைக்கும் போக வாய்ப்புக் கிடைக்கவில்லை. போகணும்னு எண்ணமும் ஆசையும் இருக்கு. முருகன் அழைக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.

      மருதமலை முன்பு மிக அழகாய் இருக்கும், மருதமரங்கள் சூழ ரம்மியமாய் இருக்கும்.
      இப்போது மலையை நிறைய உடைத்து விட்டார்கள்.
      பள்ளி பருவத்தில் கோவையில் இருந்த போது அடிக்கடி போவோம் அம்மா, அப்பாவுடன்
      மாட்டு வண்டியில் எல்லாம் பயணம் செய்து போய் இருக்கிறேன்.அப்புறம் திருமண ஆனதும் அடிக்கடி போவோம்.
      இப்போது சில வருடங்களாய் போக வில்லை.
      நாம் எல்லாம் படித்து பதில் சொன்ன பதிவுதான் டிடியின் பதிவு அருமையான பதிவு.
      எத்தனை முறை வேண்டுமென்றாலும் படிக்கலாம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி .

      நீக்கு
  6. வாசிக்க வாசிக்க இனிமை அம்மா...

    மெய் சிலிர்க்கும் அற்புத பாடல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலம், வாழ்க வளமுடன்.
      அற்புதமான பாடல்தான் டிடி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. முருகன் அருள் இருந்தால் வாழ்நாள் எல்லாம் அவரை வணங்கும் பேறு கிடைக்கும்....

    உண்மை ...உண்மை ..அவன் அருள் மட்டுமே வேண்டும் ..


    பல வருடங்களுக்கு முன் நாங்கள் சென்ற மருதமலை பயணம் நினைவுக்கு வந்தது அம்மா..


    முருகா சரணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுராதா, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி அனு.
      முருகா சரணம்
      கந்தா சரணம்.

      நீக்கு
  8. ஒரு முறை மருத மலைக்கு காரில் சென்றோம் கூடவே என் பேரன் வயது நான்கிருக்கும் ஒரே ரெஸ்ட்லெஸாக இருந்தான் நிறையராமாயணக்கதைகள்நான் கூறக் கேட்டிருக்கிறான் என்ன ஆயிற்று என்று கேட்டால் மலைமுகட்டில் இருந்து தாடகை வருகிறாளா என்று பார்க்கிறானாம்.........!

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார் , வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொன்ன கதையில் ஒன்றி விட்டார் போல
    தாட்கையை எதிர்பார்த்து இருக்கிறது குழந்தை.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. குட்மார்னிங் அக்கா... ஒரே மாதிரி தலைப்புகள் வைத்தால் சமயங்களில் கன்பியூஸ் ஆகிவிடுகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      நினைத்தேன் ஒரே தலைப்பு குழப்பம் என்று.

      நீக்கு
  11. ஓ... என்னை வேறு குறிப்பிட்டிருக்கிறீர்கள்... நன்றி அக்கா.

    மருதமலை மாமணியே குன்னக்குடி இசையில் மிகப் பிரபலமாக ஆகிவிட்ட பாடல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை குறிப்பிடாமல் இருக்க முடியுமா?
      நிறைய பேரை எழுத ஊக்கப்படுத்திய வியாழன் பதிவு.
      மருதமலை பாடல், குன்னக்குடி அவர்களின் சிறந்த பாடல். மதுரை சோமு அதை சிறப்பாக்கினார்.

      நீக்கு
  12. சின்னப்ப தேவர் பற்றிய விவரங்கள் நெகிழ்ச்சியூட்டுகின்றன. குணத்தில் அவர் பெரியப்ப தேவர்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குணத்தால் உயர்ந்த பெரியப்ப தேவர்தான்.
      ரசித்தேன்.

      நீக்கு
  13. அழகென்ற சொல்லுக்கு முருகன்... முருகனுக்குஒருநாள் அல்ல, எல்லா நாளும் திருநாளே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகனுக்கு எல்லா நாளும் திருவிழாதான்.
      உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

      நீக்கு
  14. மருதமலை முருகன் கோயில் சில முறை சென்றது உண்டு. முன்பு நடந்தே சென்று இருக்கிறேன் மலை அடிவாரத்தில் இருந்து. இப்போது கோவில் வாசல் வரை வண்டி செல்கிறது.

    தேவர் பற்றிய செய்தி - நெகிழ்ச்சி.....

    பதிலளிநீக்கு
  15. பார்வதியும் சிவனாரும் மிதித்த மலை - அந்தப்
    பாம்பாட்டி சித்தர் வந்து வசித்த மலை..

    எத்தனையோ முனிவர் எல்லாம் சுற்றிய மலை - இத்தனைக்கும்
    இந்தமலை ஏழைக்குத் தான் சொந்தமலை!..

    இப்போது எப்படியோதெரியவில்லை...

    1990 ல் மருதமலைக்குச் சென்றிருக்கிறேன்...
    அன்றைய மருதமலையை அடியோடு மாற்றி விட்டதாகச் சொல்கிறார்கள்...

    முருகன் திருவருள் முன்னின்று காக்க!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வாராஜூ, வாழ்க வளமுடன்.
      நீங்கள் சொன்னது மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க என்ற பாடல் வரிதானே1
      அருமையான பாடல்.
      ஏழைகளுக்கு சொந்த மலைதான்.
      இப்போது நிறைய மாற்றம் வந்து விட்டது.
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
      வேலை பளுவால் தொடர்ந்து வர முடியவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.
      இப்போது ஒரே நாளில் அத்தனை பதிவையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  16. இனிய பாடல்கள். சிறு வயதில் சின்னப்பத் தேவரின் படங்கள் பல பார்த்திருக்கிறேன். முதல் பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்துப் பிரபலமான ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
      தேவரின் படங்களில் முதல் வார்த்தை வெற்றி வெற்றி என்பதுதான்.
      தண்டாபாணி படமும் இருக்கும்.. இந்த பெயரில் தான் படம் தயாரித்தார்.
      மருதமலை முருகா பாட்டை என் பேரன் கள் பாடுவார்கள் . அன்றும், இன்றும் விரும்பி கேட்கும் பாடல்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு