வியாழன், 22 பிப்ரவரி, 2018

அந்தி வானமும் ஏரியும்

அந்திவானம்

மகனுடைய ஊரில் தினமும் 
காலை மாலை வானத்தின் அழகைப் பார்ப்பது மிகவும் பிடித்த பொழுது போக்காய் இருந்தது . காலைக் கதிரவனின் தோற்றத்தையும், மாலை சூரியன் மறையும் போது வானம் செவ்வானமாய் மாறுவதையும் கண்டு மகிழ்ந்தேன் . அதில் சில உங்கள் பார்வைக்கு.

இங்கே கொடுக்கப் பட்டு இருக்கும் படங்கள் எல்லாம் மாலையில் எடுத்த படங்கள்.
சிறு பறவைகள்   கூடு திரும்புது
சிவக்கத் தொடங்கி விட்டது
நடைப்பயிற்சி செய்யும் போது எடுத்த படம்


காரில் போகும் போது எடுத்த படம்

மகன் வீட்டுக்கு எதிபுறம் உள்ள வீடு


மஞ்சள் வெயில்  மாலை

கைகள் வணக்கம் சொல்லும் செங்கதிரவனைக் கண்டு
மலை வாயில் சூரியன்
அந்தி வானமும் அந்தி விளக்கும்

இருளும் ஒளியும்
உதிக்கிறதா? மறைகிறதா ? என்ற மாயத் தோற்றம் தருகிறது

மஞ்சளும் கறுப்பும் சேர்ந்த இருட்டு ,நடைபாதையை  ஆக்கிரமித்த காட்சி.



கடை வளாகத்தின் அருகில் இருந்த மலையையும் அந்தி வானத்தையும் நான் ரசிப்பதைப் பார்த்த என் மகன்  பக்கத்தில் ஒரு இடம் இருக்கு . அங்கு சென்று
சூரியன் மறைவதைப் பார்க்கலாம் என்றான். உடனே லேக் ப்ளெசெண்ட்
 ( LAKE PLEASENT ) என்ற இடத்திற்குச் சென்றோம்

இந்த இடம்  பீனிக்ஸிலிருந்து 35 மைல் தூரத்தில் இருக்கிறது.

சூரியன்  மறைவதைப் பார்க்கவே அந்த இடம் அடையாளப்படுத்தப் பட்டுள்ளது. மக்கள், குடும்பத்துடன் நட்புகளுடன் வந்து இருந்தார்கள். நாங்கள் கொஞ்சம் தாமதமாய்ப்போய் விட்டோம். சூரியன் மறைய ஆரம்பித்து விட்டது.      சூரியன் மறையும் நேரம் ஏரியைச் சிவப்பாய்க் காட்டுமாம். நாங்கள் தாமதமாய்ப் போனதால் கொஞ்சம் சிவப்பபாய்
இருந்தது.

இங்குள்ள எரி 10,000 ஏக்கர் நீர்ப் பரப்பு  உள்ளது. கொலராடோ ஆற்றிலிருந்து நீர் திருப்பிவிடப்பட்டு  அணைகட்டித் தேக்கி வைத்து இருக்கிறார்கள்.
260 அடி ஆழம் இருக்கிறது. 700 வண்டிகள் (கார்கள்) நிறுத்த வசதி உள்ளது.

365  நாளும் திறந்து இருக்கும் . 24 மணி நேரமும் உண்டு . குடும்பத்துடன்
 பிக்னிக் போக  ஏற்ற இடம்.வேகமாய் மோட்டார்ப் படகு ஓட்டுபவர்களுக்கு இந்த ஏரி மிகவும் உற்சாகம் தருமாம். காரில்  படகைக் கட்டிக் கொண்டு வருகிறார்கள்.  சொந்தப் படகு இல்லாதவர்களுக்கு வாடகை போட் கிடைக்கும். மீன் பிடிக்கலாம், பிடித்த மீனை அங்கே சமைத்து சாப்பிடுவார்களாம்.பாதுகாப்பான இடம் என்பதால் கூடாரம் அமைத்து அங்கே தங்குவார்களாம். இரவு நிலவொளியில் படகு சவாரி செய்வார்களாம்.

காலை முதல் மாலை வரை அங்கு இருக்க ஒரு காருக்கு 6 டாலர் வசூல் செய்கிறார்கள்.

கழுகு போன்ற பறவைகள் நிறைய இருக்கிறது என்கிறார்கள் . நாங்கள் போனபோது பறவைகளைப் பார்க்க வில்லை,  கூடு திரும்பும் நேரம் ஆகி விட்டதால் போலும்.


 .அங்கு எடுத்த படங்கள் அலை பேசியில் எடுத்த படம். காமிரா கொண்டு போகவில்லை, திடீர் என்று போனதால்.





குடும்பத்துடன் வந்து இருந்தார்கள் 
ஏரியின் அழகு, நீலவானம், செவ்வானம், நிலவும் தெரிய ஆரம்பித்து விட்டது.
மலை, செவ்வானம், ஏரி

இருட்ட ஆரம்பித்தவுடன் வீடு திரும்பினோம்.
                                                                           வாழ்க வளமுடன்.

40 கருத்துகள்:

  1. புகைப்படத்தின் அழகு தங்களது ரசனையையும், திறமையையும் வெளிப்படுத்தியது அருமை வாழ்த்துகள் சகோ.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வ(ர்)ண்ணங்களைக் குழப்பி வானத்தூரிகையில் தீற்றியது போல இருக்கிறது முதல் புகைப்படம். இயற்கைக் குழந்தை வானத் தரையில் வர்ணங்களைக் கவிழ்த்து விளையாடி இருக்கிறாள் போலும்!

    பதிலளிநீக்கு
  4. சொன்னால்தான் தெரிகிறது காலையா மாலையா என்று! வானத்துக்கில்லை நேரங் கால பேதம்! சூரியன் உதிக்கிறதா? மறைகிறதா? சூரியன் மறைவதும் உதிப்பதும் மனிதனின் மயக்கம்!

    பதிலளிநீக்கு
  5. வானம் காட்டிய வண்ணக் காட்சிகளை புகைப்பட ஆவணமாக எங்களுக்கு வரிசைப்படுத்தியமைக்கு நன்றி. எல்லாப் புகைப்படங்களும் அழகாய் இருக்கின்றன. வரிகளையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

    இயற்கைக் குழந்தை வானத் தரையில் வர்ணங்களைக் கவிழ்த்து விளையாடி இருக்கிறாள் போலும்!//

    அருமையாக சொன்னீர்கள்.

    //சூரியன் உதிக்கிறதா? மறைகிறதா? சூரியன் மறைவதும் உதிப்பதும் மனிதனின் மயக்கம்!//

    உண்மை.

    படங்களை ரசித்து ரசனையுடன் கருத்து சொன்ன உங்களுக்கு நன்றி நன்றி.


    பதிலளிநீக்கு
  7. அழகு ...

    அழகு...

    அழகு...ஒவ்வொன்றும் மிக அழகு...

    தக தக வென்னும் மின்னும் சூரியனின் அழகும் ஏரியின் அழகும் அட டா..

    மிக மகிழ்வாக ரசித்தேன் அம்மா...

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்கவளமுடன்.

    படங்களை ரசித்து உற்சாகமூட்டும் கருத்து சொன்னதற்கு நன்றி அனு.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் அக்கா!

    மாலைக் கதிரோன் மயங்கும் பொழுதினில் சேர்த்த காட்சிப்பதிவு அத்தனையும் மிகச் சிறப்பு!
    பார்த்துக்கொண்டே இருக்க வைக்கிறது படங்கள்!
    வண்ணமயமாய் வானம் அத்தனை அழகாய் இருக்கிறது!

    பகிர்விற்கு நன்றியுடன் நல் வாழ்த்துக்கள் அக்கா!

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் இளமதி , வாழ்க வளமுடன்.


    //மாலைக் கதிரோன் மயங்கும் பொழுதினில் சேர்த்த காட்சிப்பதிவு அத்தனையும் மிகச் சிறப்பு!//

    உங்கள் கருத்தைப் படித்தவுடன் சினிமா பாடல் நினைவுக்கு வருது.
    மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மயங்கிய ஓளியினை போல!

    ஸ்ரீராம் சொன்னது போல் சில வேளைகளில் இயற்கை வண்ணதுரிகையால் வரைந்த வண்ணமயமான வானம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
    சிறு காமிரா, அலைபேசியில் எடுத்த படங்கள் தான்.

    உங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. எல்லாப் படங்களும் அருமையாக இருந்தன. முதல் படம், ஓவியமோ என்றுதான் நான் நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.

    //முதல் படம், ஓவியமோ என்றுதான் நான் நினைத்தேன்//

    இயற்கை வரைந்த ஓவியத்தை ரசித்து கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி, நன்றி.

    பதிலளிநீக்கு
  13. அருமையான படங்கள்
    வாழ்த்துகள் சகோ

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் mohamed althaf, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. கோமதிக்கா படங்கள் மனதை அள்ளுகிறது...பார்த்துக் கொண்டே இருந்தேன்...

    இருளும் ஒளியும், மஞ்சள் வெயில் மாலை செம....அக்கா இங்கேயே இப்படி நாங்கள் ரசிக்கிறோம் என்றால் நீங்கள் நேரில எப்படி ரசித்டிருப்பீங்க இல்லையா...ஏரி படங்களில் 3, 4 மற்றும் அந்தச் சிவப்பு நிறம் ஏரி படம் அழகோ அழகு!!!!

    அட்டகாசமான படங்கள். அங்கெல்லாம் அக்கா அவர்கள் பலரும் வார இறுதி நாட்களில் காரின் மேல் படகைக் கட்டிக் கொண்டு செல்கிறார்கள். செல்லப்பிராணிகளையும் சேர்த்து...

    உல்லாசமாகக் கொண்டாடுவார்கள் வார இறுதிநாட்களை. பொதுவாகவே அந்தூர் மக்கள் இப்படி விடுமுறை நாட்களை உல்லாசமாய்க் கழிப்பதில் ரொம்பவே ஆர்வம் காட்டுகிறார்கள்.

    பல படங்கள் வரைந்த ஓவியங்கள் போல செமையா இருக்கு கோமதிக்கா....

    பகிர்விற்கு மிக்க நன்றி அக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.

    நீங்கள் சொல்வது போல்தான் கீதா வார இறுதிநாட்களை ஒய்வு எடுக்கவும் மனதை மகிழ்ச்சியாக வைத்து இருக்கவும் இது போன்ற இடங்களுக்கு தன் குடும்பத்தினர்களுடன் தங்கள் வளர்ப்பு செல்லங்களுடன் செல்கிறார்கள்.

    காரின் பின் புறம் சைக்கிள் கட்டி கொண்டு போவார்கள். காரின் மேல் படகு இருக்கும் இவற்றையும் படங்கள் எடுத்து இருக்கிறேன் வேறு பதிவில் போடுகிறேன்.


    இந்த பதிவில் கூடாரத்திற்கு பக்கத்தில் வளர்ப்பு செல்லம் விளையாடிய படம் எடுத்தேன் இப்போது தேடினால் கிடைக்கவில்லை.

    நேரில் இன்னும் அழகுதான்.

    படங்களை ரசித்து விரிவாக மகிழ்ச்சியான கருத்துக்களை சொன்னதற்கு மிகவும் நன்றி கீதா.



    பதிலளிநீக்கு
  17. இனியதொரு மாலைப் பொழுதினைக் கண் முன் வழங்கி இருக்கின்றீர்கள்...

    அடடா.. பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் நீர்த்தேக்கம்.. ஏக்கமாக இருக்கின்றது..

    அழகிய படங்களுடன் அரிய தகவல்களையும் கண்டு மகிழ்ச்சி..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  18. அந்தி வானம் அழகோ அழகு கொள்ளை அழகு !கைப்பேசியில் எடுத்தாலும் நல்ல தெளிவா இருக்குக்கா .
    அதுவும் லேக் பிளேசன்ட் காட்சிகள் காலண்டரில் வரும் காட்சி போல அழகா எடுத்திருக்கிங்க .
    நாங்க லண்டன்காரங்க சம்மரிலும் சூரியனை தேடுவோம் :)

    பதிலளிநீக்கு
  19. அக்கா ஒருவழியா வந்திட்டேன். அப்பப்பா என்னா அழகு. படங்கள் எல்லாம்.. சூப்பர் அக்கா. முதல் 5 படங்களும் சூப்பர்ப். அந்தி மாலையும்,அந்தி விளக்கும் படம் அழகு.
    இங்கு என் ஏரியாவிலும் மலைசார்ந்த இடம் .நிறைய பரந்த வெளிகளில் சம்மர் நேரம் போய் இருந்தால் நேரம் போவதே தெரியாது அவ்வளவு ரசனையாக வானம் இருக்கும். நன்றி அக்கா

    பதிலளிநீக்கு
  20. இங்கு கஷ்டப்பட்டு வந்தமைக்கு ஹெல்ப் செய்தவர் இளமதி.நன்றி அவருக்கு. சொல்ல மறந்திட்டன் அக்கா.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.


    //அடடா.. பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் நீர்த்தேக்கம்.. ஏக்கமாக இருக்கின்றது..//

    நமக்கு எல்லாம் ஏக்கமாய் தான் இருக்கும். இப்போது உள்ள தண்ணீர் கஷ்டத்தில்
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்ககும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.

    //அதுவும் லேக் பிளேசன்ட் காட்சிகள் காலண்டரில் வரும் காட்சி போல அழகா எடுத்திருக்கிங்க .
    நாங்க லண்டன்காரங்க சம்மரிலும் சூரியனை தேடுவோம் :)//

    ஆஹா! மகிழ்ச்சியாய் இருக்கிறது, காலண்டரில் வரும் காட்சி போல என்று சொன்னவுடன்.

    சம்மரிலும் சூரியனை தேட வேண்டுமா ? அட கஷ்டமே!

    உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.




    பதிலளிநீக்கு
  23. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.
    வரவேண்டும் வரவேண்டும் நல்வரவு.
    இளமதியின் உதவியால் வந்தீர்களா?
    மகிழ்ச்சி. நானும் நன்றி சொல்லிக்கிறேன் இளமதிக்கு .


    //இங்கு என் ஏரியாவிலும் மலைசார்ந்த இடம் .நிறைய பரந்த வெளிகளில் சம்மர் நேரம் போய் இருந்தால் நேரம் போவதே தெரியாது அவ்வளவு ரசனையாக வானம் இருக்கும்.//

    அப்படி என்றால் அவற்றை படம் எடுத்து எங்களுக்கு காட்டலாமே ! நாங்களும் ரசிப்போம் அம்மு.

    உங்கள் வரவிற்கும் அன்பான ஊக்கம் தரும் கருத்துக்கும் நன்றி.


    பதிலளிநீக்கு
  24. பீனிக்ஸ் தாண்டி ஒரு இடம். இடம் பெயர் மறந்து விட்டது. அங்கு அமெரிக்காவின் பழங்குடிகள் வாழ்ந்த பகுதி மாதிரி நகரின் தோற்றத்தை உருவாக்கியிருப்பார்கள். ஒரு 3D படம் பார்க்கிற ஒரு தியேட்டர் உண்டு. அங்கு திரையிடப்படும் அமெரிக்க பழங்குடிகள் பற்றிய படம் பிரமாதமானது. விஷம் பூசிய அம்பும், வில்லும், வேலும் தாங்கிய பழங்குடிகள் காடுகளில் கன வேகத்தில் குதிரை சவாரி செய்வதும், அம்பெய்யும் போது அந்த அம்பு நம்மை நோக்கி அதிவேகத்தில் வருவது போலவுமான 3D காட்சிகள் அற்புதம்.
    படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளிவரும் போது அந்தப் பழங்குடிகளுடன் வாழ்ந்த உணர்வோடையே வெளிவருவோம்.

    அந்த ஊருக்கும், தியேட்டருக்கும் போனீர்களா?... ஹூவர் டாம் போனீர்களா?.. Los Vegas?..

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.

    அமெரிக்க பழங்குடிகள் வாழ்ந்த ஊருகளுக்கு போய் இருந்தோம்.
    நீங்கள் சொல்கிற ஊர் தானா என்று தெரியவில்லை.
    எழுதி வைத்து இருக்கிறேன்.

    ஹூவர் டாம் போனீர்களா?.. Los Vegas?.?/

    போகவில்லை.

    இந்த பதிவைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே!

    உங்கள் வரவுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  26. சூரியன் உதிப்பதற்காக மறைவதும், மறைவதற்காக உதிப்பதும் என்றுமே அழகு தான்.

    அந்த ஏரியின்பிர்மாண்டம் மலைக்க வைக்கிறது. அமெரிக்கர்கள் எந்த விஷயத்தையும் அதற்கான ஒரு அர்த்ததுடன் கேளிக்கையாக அனுபவிக்கிறார்கள்.

    இதையெல்லாம் நாம் என்று கற்றுக் கொள்ளப் போகிறோமோ, தெரியவில்லை.

    அமெரிக்காவில் ஒவ்வொரு இடத்திலும் சூரியன் மறைகின்ற நேரம் வித்தியாசப்படும் அழகில் அந்தி நேரம் என்றாலும் படங்களும் நன்றாக படமாகியிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  27. ஆவ்வ்வ் கோமதி அக்கா, இன்று அங்கடிபட்டு இங்கடிபட்டு எப்படியும் நித்திரைக்கு முன் வந்திடோணும் என வந்து விட்டேன்...

    சொல்லி வேலையில்லை மிக மிக அழகிய அருமையான படங்கள். அந்த மலை கற்பாறைபோல இருக்கு பார்க்க.

    நல்ல நேரம் தான் நீங்க அங்கு போயிருக்கிறீங்க, மிக அருமையான இடம் உங்கள் மகன் குடும்பம் இருக்குமிடம்.

    படங்கள் மிக அழகாக எடுக்கப் பட்டிருக்கு. வானத்தை எடுப்பதெனில் எடுத்துக் கொண்டே இருக்கலாம்.. கடலும் அப்படித்தானே

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் ஜீவி சார, வாழ்க வளமுடன்.

    //சூரியன் உதிப்பதற்காக மறைவதும், மறைவதற்காக உதிப்பதும் என்றுமே அழகு தான்.//

    உண்மைதான் சார். நாம் கன்னியாகுமரி, திருச்செந்தூர் போன்ற இடங்களில் சூரிய உதயம், மறைவுப் பார்க்க காத்திருந்த காலங்களை நினைத்துக் கொள்கிறேன்.
    மலை, கடல் இரண்டிலும் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி தரும் மனதுக்கு.

    //அந்த ஏரியின்பிர்மாண்டம் மலைக்க வைக்கிறது. அமெரிக்கர்கள் எந்த விஷயத்தையும் அதற்கான ஒரு அர்த்ததுடன் கேளிக்கையாக அனுபவிக்கிறார்கள். //

    நம்மவர்களும் ஒவ்வொன்றையும் அர்த்ததுடன் கேளிக்கையாக கொண்டாடி அனுபவித்தவர்கள் தான். இப்போது வேலை வேலை என்று இரவும் பகலும் ஓடி கொண்டு இருக்கிறார்கள். சிலர் நின்று நிதானித்து அனுபவித்து வாழ்கிறார்கள்.

    //அமெரிக்காவில் ஒவ்வொரு இடத்திலும் சூரியன் மறைகின்ற நேரம் வித்தியாசப்படும் அழகில் அந்தி நேரம் என்றாலும் படங்களும் நன்றாக படமாகியிருக்கின்றன//

    ஆமாம் சார்.

    இந்த பதிவைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே! என்று கேட்டதற்கு மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி.
    நன்றி சார்.



    பதிலளிநீக்கு
  29. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
    பிறந்தநாள் பேபி இப்படி அங்கடிபட்டு இங்கடிபட்டு இப்படி வரலாமோ!
    வாழ்த்துக்கள் அதிரா.
    நேற்று இரவு கோவிலுக்கு போய் விட்டேன் அதனால் பதில் உடன் அளிக்க முடியவில்லை.

    //அந்த மலை கற்பாறைபோல இருக்கு பார்க்க.//

    மலை மண் மலை, பாறை போன்ற மலை என்று பலவடிவங்களில் இருக்கிறது. எங்குப் பார்த்தாலும் மலைதான் ஊரில்.

    //மிக அருமையான இடம் உங்கள் மகன் குடும்பம் இருக்குமிடம்.//

    ஆமாம், மலையடிவாரத்தில் இருக்கிறான்.

    //படங்கள் மிக அழகாக எடுக்கப் பட்டிருக்கு. வானத்தை எடுப்பதெனில் எடுத்துக் கொண்டே இருக்கலாம்.. கடலும் அப்படித்தானே//

    படங்களை பாராட்டியதற்கு நன்றி. வானமும், கடலும் பார்க்க பார்க்க அலுக்காது தான்.
    படம் எடுப்பது என்றாலும் அலுக்காது எடுத்துக் கொண்டே இருக்கலாம் அதிரா நீங்கள் சொன்னது பஞ்சு பொதி வானம் நிமிடத்திற்கு நிமிடம் வேறு வேறு தோற்றம் கொடுக்கும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

    உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.



    பதிலளிநீக்கு
  30. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  32. படங்களின் அழகு மனதை மயக்குகிறதாய்!

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் சகோ விமலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  34. மிக அருமையான, அழகான படங்கள். அந்தி வானச் சூரியன் மறையவும் செய்கிறான். உதிக்கவும் செய்கிறான். இல்லையா? அவனுக்குத் தான் ஓய்வே இல்லையே! ஏரித் தண்ணீர் நிறம் கொஞ்சமாக மாறி இருக்கு போல! மானசரோவர் நினைவில் வந்தது. வானம், கடல் மட்டுமில்லாமல் யானை, ரயில் போன்றவையும் பார்க்கப் பார்க்க அலுக்காது! :)

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    சூரியன் தன் வேலையை சரிவர சோம்பல் இல்லாமல் செய்கிறார்.
    தண்ணீர் நல்ல சிவப்பாய் இருக்குமாம் சூரியன் மறையும் சமயம்.
    மானசரோவர் நினைவில் வந்தது மகிழ்ச்சி. வானம், கடல், யானை ரயில் போன்றவை பார்க்க அலுக்காதுதான்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  36. அடடா! என்ன அழகான படங்கள்! ஒரு மாலை நேரத்தில் சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருக்க, நிர்மலமான வானத்தில் பறவைகள் கூடு திரும்புவதை பார்த்த பொழுதுதான் ராமகிருஷ்ணா பாரமஹம்சருக்கு
    முதல் முதலாக பரவச நிலை ஏற்பட்டதாம். உங்கள் படங்களும் அப்படி ஒரு பரவச நிலைக்கு நம்மை இட்டுச் செல்கின்றன.

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன்
    , வாழ்க வளமுடன்.

    ராமகிருஷ்ணபரமஹம்சருக்கு ஏற்பட்ட பரவச நிலையைப் பற்றி அருமையாக சொன்னீர்கள்.
    படங்கள் பரவசநிலை தந்தது அறிந்துமகிழ்ச்சி. உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  38. அற்புதமான காட்சிகள். அழகான படங்கள்.

    பதிலளிநீக்கு