Monday, September 11, 2017

மகாகவி பாரதியார் கவிதைகள்

பாரதியார் நினைவு நாளில்  பாரதியாரின்
கவிதை  விநாயகர்  நான்மணி மாலையிலிருந்து சில :-

காலைப் பிடித்தேன் கணபதி! நின்பதங் கண்ணிலொற்றி
நூலைப் பலபல வாகச் சமைத்து நொடிப்பொழு(தும்)
வேலைத் தவறு  நிகழாது நல்ல வினைகள் செய்துன்
கோலை மனமெனும் நாட்டின் நிறுத்தல் குறியெனகே.
No automatic alt text available.
எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்திற் சலன மில்லாமல் ,
மதியில் இருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலைவந்திட நீ செயல்வேண்டும்.
கனக்குஞ் செல்வம், நூறு வயது;
இவையும் தரநீ கடவாயே.


Image may contain: 1 person, indoor


கற்பக விநாயகக் கடவுளே, போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க !
வாரணமுகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரணமுகத்தான்  அருட்பதம் வெல்க!
படைப்புக் கிறையவன் , பண்ணவர் நாயகன்
இந்திர குரு, எனது இதயத் தொளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;
குணமதிற் பலவாம் ; கூறக் கேளீர்!
உட்செவி திறக்கும் ; அகக்கண் ஓளிதரும்;
அக்கனி தோன்றும்  ; ஆண்மை வலியுறும் ;
திக்கெலாம் வென்று  ஜெயக்கொடி  நாட்டலாம் .
கட்செவி தன்னைக் கையிலே யெடுக்கலாம்
விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்
துச்சமென் றெண்ணித் துயரிலா திங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்றோங்கலாம்;
அச்சதீரும், அமுதம்விளையும் ;
விந்தை வளரும்; வேள்வி ஓங்கும்;
அமரத் தன்மை  எய்தவும்
இங்கு நாம் பெறலாம் ; இஃதுணர் வீரே.

பாரதியின் கவிதைகள் புதிய சக்தியை ஊட்டும். புத்துணர்வு கொடுக்கும்.
தேசிய கவிக்கு வணக்கங்கள்.

                                                                   வாழ்க வளமுடன்.!

46 comments:

KILLERGEE Devakottai said...

அழகிய புகைப்படங்களுடன் பாரதியின் நினைவுகளை மீட்டிய கவிதைகளும் அருமை சகோ.

athira said...

ஆவ்வ்வ்வ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:)

என்ன அழகான பிள்ளையார்.. பார்க்கப் பார்க்க அழகாக இருக்கிறார்.

பாரதியார் கவிதை நன்று.

athira said...

ஆவ்வ்வ்வ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:)

என்ன அழகான பிள்ளையார்.. கள்:).. பார்க்கப் பார்க்க அழகாக இருக்கிறார்.

பாரதியார் கவிதை நன்று.

athira said...

இடையில் இருப்பது கொடித்தம்பமும் பிள்ளையாருமோ?

கோமதி அரசு said...

வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
பிள்ளையார் பயணத்தில் போது எடுத்த படங்கள்.
இடையில் இருக்கும் பிள்ளையார் வாடிப்பட்டி என்ற ஊரில் உள்ள டெம்பிள்சிட்டி ஓட்டலில்
எடுத்த படம்,பிள்ளையாருக்கு பின் புறம் குத்துவிளக்கு இருந்தது. அதை விட்டு விட்டு அலைபேசியில் எடுத்த படம், அப்படியும் குத்துவிளக்கின் தண்டு உங்களுக்கு கொடிக் கம்பம் போல் காட்சி அளித்து விட்டது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
தேவகோட்டை ஜி முதலில் வந்து விட்டார்.

கோமதி அரசு said...

பிள்ளையார்கள் படம்
பயணத்தில் எடுத்தது.

ராமலக்ஷ்மி said...

மகாகவியை நினைவு கூர்ந்த விதம் அருமை. படங்கள் அழகு.

கோமதி அரசு said...

வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

Durai A said...

பாரதியை மறக்காமலிருப்பதற்கு நன்றி. (நினைவூட்டியதற்கும் :-).

இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
யந்திரங்கள் வகுத்திடு வீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே!
கடலில் மூழ்கிநன் முத்தெடுப்பீரே!
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயி ரந்தொழில் செய்திடு வீரே!
பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன்.
பிரம தேவன் கலையிங்கு நீரே!

மண்ணெடுத்துக் குடங்கள்செய் வீரே!
மரத்தை வெட்டி மனைசெய்கு வீரே!
உண்ணக் காய்கனி தந்திடு வீரே!
உழுது நன்செய்ப் பயிரிடு வீரே!
எண்ணெய்,பால்நெய் கொணர்ந்திடு வீரே!
இழையை நாற்றுநல் லாடைசெய் வீரே!
விண்ணி னின்றெமை வானவர் காப்பார்!
மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே!

பாட்டும் செய்யுளும் கோத்திடு வீரே!
பரத நாட்டியக் கூத்திடு வீரே!
காட்டும் வையப் பொருள்களின் உண்மை
கண்டு சாத்திரம் சேர்த்திடு வீரே!
நாட்டி லேயறம் கூட்டிவைப் பீரே!
நாடும் இன்பங்கள் ஊட்டிவைப் பீரே!
தேட்ட மின்றி விழியெதிர் காணும்
தெய்வ மாக விளங்குவிர் நீரே!

கோமதி அரசு said...

வணக்கம் துரை சார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும்
பாரதியின் அருமையான கவிதையை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

ஸ்ரீராம். said...

படங்களையும் பதிவையும் ரசித்தேன். அருமை.

இரும்பைக்காய்ச்சி உருக்கிடுவீரே பாடலை முன்னர் சீர்காழி குரலில் கேட்டிருக்கிறேன். இப்போது தேடிப்போனால் யார் யாரோ பாடிய நிறைய குரல்களில் இந்தப் பாடல் கிடைக்கிறது!

நெல்லைத் தமிழன் said...

மூன்றாவது படம், மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. மஹாகவியை நினைவுகூர்ந்துவிட்டீர்கள்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அம்மா

அற்புதமான பாடல்கள் அழகிய விநாயகர் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கோமதி அரசு said...

வணக்கம் ஸ்ரீராம் , வாழ்க வளமுடன்.
நலமா?

எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி!
பாடலை சீர்காழி பாடி இருக்கிறார் அதை கேட்டு இருக்கிறீர்களா?

இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே பாடலும் சீர்காழியின் குரலில் நன்றாக இருக்கும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்.
உடல் நலமா?
படத்தை ரசித்தமைக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
வலைபக்கத்தில் பார்த்து வெகு நாட்களாய் ஆகி விட்டதே! நலமா?
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

படங்கள் அழகு.

பாரதியின் பாடல் நினைவு கூர்ந்தமை சிறப்பு.

கோமதி அரசு said...

வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

சீராளன்.வீ said...

வணக்கம் !

சாரதி இன்றிப் போகும்
சத்திய வாழ்வைப் போல
பாரதி தந்த பாட்டும்
பைந்தமிழ் வளர்த்துப் போகும் .....

அருமை அனைத்தும்

வாழ்க நலம்

Angelin said...

அக்கா நலமா ..உங்க பிளாக் எனக்கு போனில் திறக்கமுடியவேயில்லை .இப்போ கணினியில் தான் பின்ன்னூட்டமிட முடியுது .
குறுஞ்சிரிப்பு பிள்ளையாரும் அதற்கு கவிதை வரிகளும் அருமை அழகு

கோமதி அரசு said...

வணக்கம் சீராளன், வாழ்க வளமுடன்.

//பாரதி தந்த பாட்டும்
பைந்தமிழ் வளர்த்துப் போகும் .//

நீங்கள் சொல்வது உண்மை.

உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.


கோமதி அரசு said...

வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
ந்லமா ஏஞ்சல்? ஊரில் எல்லோரும் நலம்தானே!
நான் நலமே!
அதிராவின், தளத்திலும், 'எங்கள் ப்ளாக்' தளத்திலும் உங்கள் வருகையை பார்த்தேன்.
போனில் ஏன் திறக்க முடியவில்லை என்று தெரியவில்லையே!
உங்கள் கருத்துக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

தம முதலாம் வாக்கை அளித்து விட்டேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

படங்களை ரசித்தேன். தெரிவு செய்யப்பட்ட விதம் அருமை.

கோமதி அரசு said...

வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
தமிழ்மணம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதா? மகிழ்ச்சி.
மீண்டும் வந்து ஓட்டு அளித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.

கோமதி அரசு said...

வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்கவளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

துரை செல்வராஜூ said...

மகாகணபதியின் படங்களுடன் மகாகவியை நினைவு கூர்ந்தவிதம் அருமை..

அமரகவிக்கு அஞ்சலிகள்..

Geetha Sambasivam said...

மஹாகவியை நினைவு கூர்ந்தமைக்கும் பாடல் பகிர்வுக்கும் நன்றி. எனக்குப் பிடிச்சது "கணபதி ராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்!" என்பதுவே. ஆரம்பப் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படிக்கையில் பக்கத்தில் உள்ள ஐந்தாம் வகுப்பிற்கு கண்பதி வாத்தியார் என்பவர் வீராவேசமாக "அச்சமில்லை!" பாடலையும் இந்த "கணபதி ராயன்" பாட்டையும் சொல்லிக் கொடுப்பார். என் கவனம் அங்கே தான் இருக்கும். அப்புறமா நான் ஐந்தாவது வந்தப்போ அந்த ஆசிரியர் எனக்கு வரலை. இன்னொருத்தர் வந்தார்! அவர் இம்மாதிரி தேசபக்திப் பாடல்களை எல்லாம் சொல்லிக் கொடுக்கலை! ரொம்ப வருத்தமா இருந்தது! என்றாலும் என் நினைவில் தங்கிய பாடல் இது! சில சமயங்களில் பேத்திக்குத் தாலாட்டாகவும் ஆயிடும். மரும்களும் குழந்தைக்கு இந்தப் பாடலைப் பாடுவாள்.

கோமதி அரசு said...

வணக்கம் சகோ துரைசெல்வராஜூ , வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொன்ன பாட்டு எனக்கும் மிக பிடிக்கும் .
நான் பள்ளியில் படிக்கும் போது பாட்டு டீச்சர் சொல்லி தந்து இருக்கிறார்.
இப்போதும் கூட்டு வழிபாட்டில் பாடுகிறோம்.நீங்களும், மருமகளும் இந்த பாடலை
பேத்திக்கு பாடுவது அறிந்து மகிழ்ச்சி.
பாரதியின் நிறைய பாடல்கள் பள்ளியில் பாடி இருக்கிறோம். பள்ளி விழாக்களில் ஆடவும் செய்வோம். இப்போது சினிமா பாடல்கள் பள்ளி விழாக்களில் ஆடுகிறார்கள், கருத்துள்ள சினிமா பாடலாக் இருந்தால் பரவாயில்லை.

உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.


Angelin said...

அதுக்கா ..இந்த உங்க டைரக்ட்டா டாஷ் போர்டிலிருந்து வந்தா உங்க வலைப்பூ குதிக்கும் அதனால் கணினியில் வரும்போது .com /ncr போட்டதன் நிக்கும் அது போனில் செய்யமுடியாத அதான் பிரச்சினை இப்போ சேவ் செஞ்சி வச்சிருக்கேன் இனி சரி வரும்

பரிவை சே.குமார் said...

அருமை அம்மா...
ரொம்ப நாளாச்சு... இன்று சில முயற்சிக்குப் பின் தங்கள் தளம் திறந்தது..

மாதேவி said...

மகாகவியின் பாடல்கள் பகிர்வு நன்றாக உள்ளது.

மனோ சாமிநாதன் said...

அழகிய புகைப்பட‌ங்கள்! அதற்குப்பொருத்தமான பாரதியின் தேன் துளிகள்! சிறப்பான பதிவு!!

M.R said...

வணக்கம் , படங்கள் அருமை, பாரதியின் நினைவு சிந்தனைக்கு எமது வணக்கங்கள் , நன்றி

கோமதி அரசு said...

வணக்கம் எம், ஆர். வாழ்க வளமுடன்.
நலமா நீங்கள்?
மீண்டும் அனபு உலகத்தில் பதிவு செய்யுங்கள்.
வாழ்த்துக்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

Anuradha Premkumar said...

அழகிய படங்கள்...

என்றும் கவியின் பாடல்கள் வானுயர்ந்த வையே....அருமை


கோமதி அரசு said...

வணக்கம் குமார் வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது போல் செய்தால் குதிக்கவில்லையா நன்றிம்மா.

கோமதி அரசு said...

வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் அனுராதா பிரேம் குமார். வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

காமாட்சி said...

வெகுநாட்களாக வரவேயில்லை நான். பிள்ளையாரெல்லாம் அழகாக இருக்கிறது. பாரதியாரின்பாடல்கள் மிக்க அழகு. படிக்கப்படிக்கத் தெவிட்டாதவை. அன்புடன்

கோமதி அரசு said...

வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
நானும் வர முடியவில்லை வலைப் பக்கம்,மகன் வீட்டுக்கு வந்து இருக்கிறோம்.

உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

Alpha Beta said...

நல்ல பதிவு! நேரமிருந்தால் அறிவுக்களஞ்சியம் எனும் பதிவையும் பாருங்கள். நன்றி!