சனி, 19 நவம்பர், 2016

வண்டியூர்த் தெப்பக்குளம்


வண்டியூர்த் தெப்பக்குளத்தில் உள்ள நீராழிமண்டபம்


பசுமை நடை அமைப்பாளர்களுடன் சென்ற ஞாயிறு வண்டியூர்த் தெப்பக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்திற்குப் போய் வந்தோம்.
காலை 6.30 க்கு  முக்தீஸ்வரர்  கோவில் வாசலுக்கு எல்லோரையும் வரச் சொல்லி இருந்தார்கள். எல்லோரும் வந்தவுடன் நடை ஆரம்பிக்கும் என்றார்கள். எல்லோரும் வருவதற்குள் கோவில் சென்று வர அனுமதி பெற்று முக்தீஸ்வரர் கோவிலை வலம் வந்து வணங்கி  வந்து விட்டோம்.



பசுமைநடையில் இணைந்து கொள்ள அவர்கள் முகவரி.

முகதீஸ்வரர் கோவில் பற்றிய குறிப்பும் பசுமைநடை வெளியீடு பற்றிய குறிப்பும்
வண்டியூர்த் தெப்பக்குளம் பற்றிய வரலாறு  படிக்க  அவர்கள் கொடுத்த கையேடு

இரண்டு ஆண்டுகளுக்கு முன் தைபூசத்திற்கு தெப்பத்திருவிழா பார்த்தோம் , இப்போது தண்ணீர் இல்லாமல் இருப்பதைப் பார்க்க வருத்தமாய் இருக்கிறது. வரும் தைமாதம்  தெப்பத்திருவிழா நடக்க தண்ணீர் இருக்குமா? என்று தெரியவில்லை மழை பெய்தால் நல்லது. ஐப்பசிமாத அடைமழை இல்லை , குளத்திற்குத் தண்ணீர் வரும் வழிகளை கண்டுபிடித்து தண்ணீர் வரவழைத்தால் சமுத்திரம் போலவே இருக்கும். ஒரு காலத்தில் நடுமண்டபத்திற்குப் போக படகுகள்  வசதி இருந்தது.
முக்திஸ்வரர் கோவிலும் வண்டியூர்த் தெப்பக்குளமும்

இன்று இந்த தெப்பக்குளம் கிரிக்கெட் விளையாடும்  களமாய் உள்ளது, இதனால் ஒரு நன்மையும் அவர்கள் விளையாடுவதால் குளத்தைச் சுத்தமாய் வைத்து இருக்கிறார்கள் இல்லையென்றால் குப்பைகூளங்களைப் போட்டுக்  குளத்தை மூடியே விடுவார்கள் மக்கள்.

மைய மண்டபத்திலிருந்து எடுத்த படம்  வண்டியூர்  மாரியம்மன் கோவில் 
குளம் முழுவதும் கிரிக்கெட்குழுக்களைப் பார்க்க முடிந்தது காலை நேரம் அவர்கள் உற்சாகக்குரல் குளம் முழுவதும் ஒலித்துக் கொண்டு இருந்தது.
இரட்டைக்குழந்தைகள்  (அழகு செல்லங்கள்)


பசுமைநடை ஆரம்பித்து விட்டது மைய மண்டபம் நோக்கி
இரண்டு பக்கமும் அழகான கருங்கல் படிகள்


இருபக்கம் படி இருப்பதால்  கடைசியாக  ஏறும் குழந்தை கேட்டது  தன் அம்மாவைப் பார்த்து ”அம்மாநீ எங்கிட்டுகூடிஏறுவே?” என்று  கேட்டது எல்லோரையும் சிரிக்க வைத்தது.
முதலில் மைய மண்டபத்தை ஒரு வலம் வந்தோம்.

நாலு பக்கமும் இது போல் மண்டபம் அதில் சிலர் படுத்து இருந்தார்கள், சிலர் பேப்பர் படித்துக் கொண்டு இருந்தார்கள், சிலர் அலைபேசியைப்பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

பசுமைநடை அமைப்பாளர்
மைய மண்டபத்தின் வாசல்



நாலு பக்கமும் இது போல் வளைவுடன் வாசல்
மேல் விதானத்தில்  12 ராசிகள் உள்புறம் ஒரே இருட்டு 

மண்டபத்தில் கலைநயத்தோடு சிலைகள்- தூண்களுக்கு இடையில் சிலைகள்
ஜடைஅலங்காரம் காணீரோ

ஜடை அலங்காரத்தில் குஞ்சலங்கள், புடவை மடிப்புகள், இடையில் மேகலை

நடன மாது

பச்சைகிளியும்,  கிளிபோல பெண்ணும்  இருந்து இருக்கும் முகத்தை உடைத்து விட்டார்கள்

நடுமையத்தில் உள்ள கோபுரத்தின் மேல் தளம் போகப் படிகள்

கூட்டம் நிறைய இருந்ததால்  கொஞ்சம் ஒதுங்கி நின்றோம் மெள்ள ஏறலாம் என்று,  கூட்டம் குறைந்தவுடன் மேலே போனோம், அங்கு மேல் கூரை அலங்காரங்கள் அங்கிருந்து மாரியம்மன் கோவில் முக்தீஸ்வரர் கோவில் எல்லாம் படம் எடுத்துக் கொண்டு இருந்தோம்.  அதுக்கு மேல் போக மரப்படிகள் நெட்டுக்குத்தாக இருந்தது.

மேலே ஒரே சமயத்தில் எல்லோரும் ஏறக்கூடாது என்று சொன்னார்கள்,   பத்துப் பத்து பேராய்ப் போய் வாருங்கள் என்றார்கள்.
படிகளில் இறங்கி வந்தவர்கள் மேல் தளத்திற்கு போகப் படிகள் குறுகிய படிகளாய் இருக்கிறது, உங்களால் ஏறமுடியாது என்றும் சொன்னார்கள், 

அதற்குள் கீழே இறங்குங்கள் எல்லோரும், பேச்சு ஆரம்பிக்க போகிறது அப்புறம் பார்க்கலாம் என்று அழைப்பு வந்தது.
நாங்கள் மேலே போய் பார்த்தோமா? அங்கு என்ன இருந்தது என்பது அடுத்த பதிவில்.
                                                               வாழ்க வளமுடன்
                                                                  =================

29 கருத்துகள்:

  1. வழக்கம்போல அழகான படங்களுடன் அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. படகுகள் பயன்படுத்தப்பட்ட தெப்பக்குளம் நீரில்லாமல்..? மழை பொழியட்டுமாக. படங்களும் பகிர்வும் அருமை. அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வாக்குப்படி மழை பொழியட்டும் .
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. நான் சென்றுள்ளேன், பார்த்துள்ளேன். தங்கள் பதிவின் மூலமாக பல அரிய சிற்பங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. இந்தக் குளத்தில் தண்ணீர் எப்போதாவதுதான் நிறைகிறது. மலரும் நினைவுகள்! எங்கள் சந்திக்கும் இடங்களில் ஒன்று!!!! அழகிய படங்கள். நாட்டிய நங்கையை சிரச்சேதம் செய்தது யாரோ? என்ன கோபமோ!

    பதிலளிநீக்கு
  9. அருமையான படங்கள்
    அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கிறேன் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  10. நண்பர் குமார் மற்றும் ரேவதி அம்மா அவர்களும், இந்தப் பதிவு திறக்கவில்லை என்று முகநூலில் சொல்லி இருந்தார்கள்... ஆனால் அவ்வாறு இல்லை...

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

    மலரும் நினைவுகளை தந்த பதிவா?
    மகிழ்ச்சி.

    //நாட்டிய நங்கையை சிரச்சேதம் செய்தது யாரோ? என்ன கோபமோ!//

    என்ன கோபம் என்று சொல்வது?

    இப்படி வரலாற்று சின்னங்களை பாதுகாக்க தான் இப்போது பூட்டி வைத்து இருக்கிறார்கள்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    அடுத்த பதிவை விரைவில் பதிவிடுகிறேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் தனபாலன் , வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.
    குமாரும், ரேவதி அக்காவும் தெரியவில்லை என்று சொன்னது போல் கில்லர்ஜி கணினியில் படிக்க முடியவில்லை, அலைபேசியில் தான் படிக்கிறேன் என்கிறார்.
    ஜலீலாவும், ஹுஸைனம்மாவும் சொல்கிறார்கள் நீங்கள் தான் என்ன காரணம் என்று சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  15. 30 ஆண்டுகளுக்கு முன் இந்தத் தெப்பக்குளத்திற்கு சென்றிருக்கின்றேன்..
    படிக்கட்டுகளில் ஏறி மேலே சென்ற மகிழ்ச்சி இன்னும் மனதில் உள்ளது..

    ஆனால், அவ்வப்போது நீரின்றி வறண்டு கிடப்பது யார் செய்த குற்றம் எனத் தெரியவில்லை..

    இயற்கை மனம் வைத்தாலும் பேணிக் காக்கும் பொறுப்பு நல்லோர்களின் கையில்!..

    பதிலளிநீக்கு
  16. வண்டியூர்த் தெப்பக்குளம்..படமும், இடமும் அழகு...

    புதுமையான முயற்சி..

    பதிலளிநீக்கு
  17. சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.


    //ஆனால், அவ்வப்போது நீரின்றி வறண்டு கிடப்பது யார் செய்த குற்றம் எனத் தெரியவில்லை..

    இயற்கை மனம் வைத்தாலும் பேணிக் காக்கும் பொறுப்பு நல்லோர்களின் கையில்!..//

    இயற்கையும் மக்களும் மனம் வைத்தால் நீங்கள் சொல்வது போல் தெப்பக்குளம் பாதுகாக்க படும்.
    தைபூசத்திற்கு குளத்தில் நீர் வர இறைவன் அருள்புரியட்டும்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் அனுராதாபிரேம், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் ஜீவலிங்கம் , வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. விரிவாக ஸமாசாரங்கள். சிற்பங்கள். அழகான ஜடையும் குஞ்ஜலமும். உடைந்த சிற்பத்தைப் பார்க்கும் போது இப்படியும் மஹானுபாவர்கள் இருக்கிறார்கள் என்று தோன்றியது. படங்கள் மூலமாக தரிசித்ததற்கு எனக்கு உதவியுள்ளீர்கள். மிக்க ஸந்தோஷம்.அன்புடன்

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் காமாட்சியம்மா, வாழ்க வளமுடன்
    வரலாற்று சின்னங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறையினரும்
    பார்க்க பாதுகாத்து வருகிறார்கள். அப்படியும் சில இப்படி
    சேதபடுத்தப்படுகிறது.
    உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. பசுமை நடை வாயிலாய் பல விழிப்புணர்வு செயல்பாடுகள் நடப்பது அறிந்து மகிழ்ச்சி. தாங்களும் அதில் கலந்துகொண்டதோடு திருத்தலம் பற்றிய விவரங்களையும் எழில்மிகு கோவில் சிற்பங்களின் படங்களையும் இங்கு பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி மேடம். குளம் வறண்டிருந்தாலும் சிறார்களின் தயவால் குப்பைகளற்று இருப்பது நிம்மதி.

    பதிலளிநீக்கு
  24. மதுரைவாசி எனப் பெயர்
    இதுவரை மைய மண்டபம் போனதில்லை
    தங்கள் பதிவைப் பார்த்ததும்
    நிச்சயம் போகவேண்டும் என முடிவெடுத்துவிட்டேன்
    படங்களுடன் பகிர்வும் அருமை
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு