நம் நாட்டில் சித்தர்கள் எண்ணற்றவர்கள் இருக்கிறார்கள். சிலர் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து மறைந்தும் போகிறார்கள். சிலர் காலம் காலமாய் பேசப்படுகிறார்கள். சிலர் நிறைய அற்புதங்களை , சித்து விளையாட்டுகளை செய்து காட்டுவார்கள். சிலர் அற்புதமான மருத்துவம் அறிந்தவர்களாய் இருப்பார்கள். சித்தர்கள் திருமூலர் போல் கூடு விட்டுப் பாயும் கலை அறிந்தவர்களாக இருப்பார்கள். திருமூலருக்குத் திருவாவடுதுறையில் ஜீவசமாதி உள்ளது. வருடம் ஒரு பாடலாய் மூவாயிரம் வருடம் வாழ்ந்து மூவாயிரம் பாடல் அடங்கிய திருமந்திரம் தந்தார் நமக்கு.
நமக்கு தெரிந்த சித்தர்கள் 18 . எங்கள் ஊரில் பெரிய கோவிலில்(மயூரநாதர்) குதம்பைச் சித்தர் ஜீவசமாதியில் இருக்கிறார்.
நான் இங்கு சொல்லப்போகும் சித்தர் கழுகுமலையில் வாழ்ந்து சித்தியடைந்த மிளகாய்ப்பழசித்தர் பற்றி.
கிரிவலப்பாதையில் உள்ள அந்த சித்தரின் சமாதிக்கு சென்ற பங்குனி உத்திரநாள் அன்று (13/4/2014) போய் இருந்தோம்.
250 வருடத்திற்கு முன்பு அவர் ஜீவசமாதி அடைந்தார் என்கிறார்கள். புரட்டாசி அமாவாசை அன்று அவரது குருபூஜை கொண்டாடப்படுகிறது என்றார்கள்.
அவர் மேல் பக்தி உள்ளவர்களின் கண்களுக்கு இன்னும் தெரிகிறார் என்றார்கள்.
கழுகாசல மூர்த்தி கோவில் யானை , சித்தர் கோவிலின் வாசலின் அருகில் வரும் போது முட்டி போட்டு வணங்கிவிட்டுத்தான் செல்லுமாம். அவர் மேல் நம்பிக்கை வைத்து வேண்டுதல்களை வைத்து வணங்கிச் செல்பவர்கள் வேண்டுதல் நிறைவேறிய உடன் வந்து தன்னால் முடிந்த காணிக்கைகளை செய்வார்களாம்.
நோய் உற்ற போது மிளகாயொன்றை எடுத்து சித்தரை மனதில் நினைத்துக் கொண்டு விபூதியை பூசிக் கொண்டு மிளகாயை தண்ணீரில் போட்டு விட்டு பின் மறுநாள் சித்தரை மனதில் நினைத்து நோய் குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டு குடித்தால் நோய் குண்மாகும் என்று சொல்கிறார்.
-இவை எல்லாம் கோவிலைப்பார்த்துக் கொள்ளும் அம்மா சொன்னவை.
மிளகாய்ப் பழ சித்தர் கழுகுமலைப்பகுதியில் வாழ்ந்து இருக்கிறார் . அவருடைய உணவு மிளகாய்ப் பழங்கள் மட்டும் தானாம். தினம் காடுகளில் மலைகளில் சுற்றி வருவாராம் மிளகாய்ப் பழம் சாப்பிட்டு விட்டு தவத்தில் அமர்ந்து இருப்பாராம்.
சிறுவயதில் வீட்டில் மிளகாய்ப் பழம் சாப்பிடுவாராம். சித்தரின் பெற்றோர்கள் ஏன் இப்படி சாப்பிடுகிறாய் என்று கேட்டவுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டாராம். அது முதல், மலைதான் அவரின் வீடாய் மாறி விட்டது.
சித்தர் சமாதியைப் பார்த்துக் கொள்ளும் வயதான பெண்மணி கூறிய செய்திகள் இவை. அவரும் அவர்மகனும் நமக்கு செய்திகள் சொன்னார்கள். விபூதி, மிளகாய் பிரசாதமாய் கொடுக்கப்பட்டது.
கோவிலுக்கு விளக்கேற்ற எண்ணெய் வாங்கி கொடுங்கள் என்றார்கள் . நாங்கள் எண்ணெய் வாங்க கடைக்கு போக வேண்டுமே அதனால் அவர்களிடம் பணம் கொடுத்து விட்டோம்.
உங்கள் வேண்டுதல்களை சொல்லிச் செல்லுங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றி வைப்பார் மிளகாய்ப்பழ சித்தர். அடுத்தமுறை வரும் போது உங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு மகிழ்ச்சியாக வந்து வணங்கி செல்லுங்கள் என்றார்கள். எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டுக் கொண்டார்கள். எல்லோர் நலனுக்கும் சித்தரிடம் சொல்லி பூஜை செய்தார்கள்.
நாங்களும் எல்லோரும் நலமாக இருக்க வேண்டி வந்தோம்.
வாழ்க வளமுடன்
---------------------------
நமக்கு தெரிந்த சித்தர்கள் 18 . எங்கள் ஊரில் பெரிய கோவிலில்(மயூரநாதர்) குதம்பைச் சித்தர் ஜீவசமாதியில் இருக்கிறார்.
நான் இங்கு சொல்லப்போகும் சித்தர் கழுகுமலையில் வாழ்ந்து சித்தியடைந்த மிளகாய்ப்பழசித்தர் பற்றி.
கிரிவலப்பாதையில் உள்ள அந்த சித்தரின் சமாதிக்கு சென்ற பங்குனி உத்திரநாள் அன்று (13/4/2014) போய் இருந்தோம்.
250 வருடத்திற்கு முன்பு அவர் ஜீவசமாதி அடைந்தார் என்கிறார்கள். புரட்டாசி அமாவாசை அன்று அவரது குருபூஜை கொண்டாடப்படுகிறது என்றார்கள்.
அவர் மேல் பக்தி உள்ளவர்களின் கண்களுக்கு இன்னும் தெரிகிறார் என்றார்கள்.
கழுகாசல மூர்த்தி கோவில் யானை , சித்தர் கோவிலின் வாசலின் அருகில் வரும் போது முட்டி போட்டு வணங்கிவிட்டுத்தான் செல்லுமாம். அவர் மேல் நம்பிக்கை வைத்து வேண்டுதல்களை வைத்து வணங்கிச் செல்பவர்கள் வேண்டுதல் நிறைவேறிய உடன் வந்து தன்னால் முடிந்த காணிக்கைகளை செய்வார்களாம்.
நோய் உற்ற போது மிளகாயொன்றை எடுத்து சித்தரை மனதில் நினைத்துக் கொண்டு விபூதியை பூசிக் கொண்டு மிளகாயை தண்ணீரில் போட்டு விட்டு பின் மறுநாள் சித்தரை மனதில் நினைத்து நோய் குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டு குடித்தால் நோய் குண்மாகும் என்று சொல்கிறார்.
-இவை எல்லாம் கோவிலைப்பார்த்துக் கொள்ளும் அம்மா சொன்னவை.
சித்தருக்குப் பூஜை செய்கிறார்கள்
விளக்கின் ஒளி வெள்ளத்தில் சித்தர்
தலைமுறை தலைமுறையாக இவர்கள் குடும்பம் தான் கோவிலைப் பார்த்துக் கொள்கிறார்களாம் , அம்மா சித்தரைப்பற்றி சொல்கிறார்கள்.
கோவிலைப்பற்றி விபரங்களை சொல்லும் தாயும் மகனும்
உள் வாசலில் வாகனங்களை வைக்காதீர்கள் என்று கொட்டை எழுத்தில் எழுதினாலும் இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டு இருக்கிறது.(பூசாரியின் வாகனம் போலிருக்கிறது)
ஜீவசமாதியின் முகப்பு வாசல்
பூவரசம் பூ
வானைத் தொடும் வேப்பமரம், பூவரசு மரம்- சமாதி அருகில்
வேப்பமர நிழலில் கல் மண்டபம் - இன்றும் இந்த மண்டபத்தில் சித்தர் வந்து அமர்வதையும் அதன் பக்கத்தில் நடந்து போவதையும் பார்த்ததாய் கோவிலைப்பார்த்துக் கொள்ளும் அம்மா சொல்கிறார்கள்.
சிறுவயதில் வீட்டில் மிளகாய்ப் பழம் சாப்பிடுவாராம். சித்தரின் பெற்றோர்கள் ஏன் இப்படி சாப்பிடுகிறாய் என்று கேட்டவுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டாராம். அது முதல், மலைதான் அவரின் வீடாய் மாறி விட்டது.
சித்தர் சமாதியைப் பார்த்துக் கொள்ளும் வயதான பெண்மணி கூறிய செய்திகள் இவை. அவரும் அவர்மகனும் நமக்கு செய்திகள் சொன்னார்கள். விபூதி, மிளகாய் பிரசாதமாய் கொடுக்கப்பட்டது.
கோவிலுக்கு விளக்கேற்ற எண்ணெய் வாங்கி கொடுங்கள் என்றார்கள் . நாங்கள் எண்ணெய் வாங்க கடைக்கு போக வேண்டுமே அதனால் அவர்களிடம் பணம் கொடுத்து விட்டோம்.
உங்கள் வேண்டுதல்களை சொல்லிச் செல்லுங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றி வைப்பார் மிளகாய்ப்பழ சித்தர். அடுத்தமுறை வரும் போது உங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு மகிழ்ச்சியாக வந்து வணங்கி செல்லுங்கள் என்றார்கள். எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டுக் கொண்டார்கள். எல்லோர் நலனுக்கும் சித்தரிடம் சொல்லி பூஜை செய்தார்கள்.
நாங்களும் எல்லோரும் நலமாக இருக்க வேண்டி வந்தோம்.
வாழ்க வளமுடன்
---------------------------
எல்லோரும் நலம் வாழ் சித்தர் சுவாமிகள் அருளட்டும்..
பதிலளிநீக்குவிசித்திரமான செய்திகள், வித்யாசமான படங்கள்.
பதிலளிநீக்குமிளகாய்ப்பழம் போல பதிவு முழுவதும் காரசாரமான அருமையான விருந்து.
பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
மிளகாய்ப் பழ சித்தர் சுவாமிகளைப் பற்றி விவரமாகத் தந்தமைக்கு நன்றி..
பதிலளிநீக்குகேள்விப்பட்டிராத தகவல்கள். படங்கள் அருமை.
பதிலளிநீக்குசிறப்பான தகவல்களுக்கு நன்றி அம்மா...
பதிலளிநீக்குஇதுவரை அறியாத சித்தர்
பதிலளிநீக்குஅறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
tha.ma 2
பதிலளிநீக்குவணக்கம்,
பதிலளிநீக்குநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
2 நாட்களாக பதிவை இணைக்கும் போது ஏற்பட்ட தவறு சரிசெய்யபட்டது.
தற்போது பதிவை இணைக்கலாம்.
தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.
www.Nikandu.com
நிகண்டு.காம்
வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//இதுவரை கேள்விப்படாத சித்தர் பற்றிய தகவல்களுக்கும் படங்களுடனான பகிர்வுக்கும் மிக்க நன்றி மேடம். //
தவறுதலாக டெலிட் ஆகி விட்டது . ஐ போனில். மன்னித்துவிடுங்கள்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி கீதமஞ்சரி.
சிறப்பான கோவில் பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குபெயரே வித்தியாசமாக உள்ளது கோமதிம்மா,
பதிலளிநீக்குவணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம்,வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஎங்களுக்கும் கழுகுமலைக்கு உறவினர்வீட்டுக்கு போன போதுதான் சித்தரைப்பற்றி தெரியும்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
ஆச்சரியமான தகவல்கள் சகோதரி.
பதிலளிநீக்குதகவல்களிற்கு மிக்க நன்றி.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி.
வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ஸாதிகா, வாழ்க வளமுடன். நீங்கள் சொல்வது போல் பெயரே வித்தியாசம் தான்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் வேதா. இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
மிளகாய்ப் பழ சித்தர்....
பதிலளிநீக்குதகவல்களுக்கு நன்றிம்மா... பூவரசம் பூ பார்த்து மகிழ்ச்சி.
மிளகாய்பழ சித்தர் எனும் பெயர் மட்டும் கேள்விப்பட்டதுண்டு. அறியாத தகவல்கள். விரிவான பகிர்வுக்கு நன்றி. க்ளோஸ் அப்பில் பூவரசம் பூ மிக அழகாகத் தெரிகிறது.
பதிலளிநீக்குவணக்கம் ராமல்க்ஷமி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபூவரசம் பூவை ரசித்தமைக்கு நன்றி. உங்கள் பாராட்டுக்களால் தான் இன்னும் நன்றாக எடுக்க வேண்டும் படங்களை என்று ஆசை வருகிறது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராமல்க்ஷ்மி.
படங்கள் அனைத்தும் அருமை கோமதி அம்மா. குறிப்பாக தீப வெள்ளத்தில் நனைந்தபடி இருக்கும் சித்தர், வேப்பமரமும் பூவரசமரமும்
பதிலளிநீக்குஅழகு. எப்போதுமே ஜீவ சமாதிகளுக்குச் சென்று தரிசனம் செய்து வருவது வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது
நம்பிக்கை. உங்கள் பதிவின் மூலம் எங்களுக்கும் தரிசனம் கிட்டியது.
மிக்க நன்றி அம்மா. வாழ்த்துக்கள்.
வணக்கம் புவனேஸ்வரி ராமநாதன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபடங்களை ரசித்தமைக்கு நன்றி.
ஜீவசமாதிகளுக்குச் சென்று தரிசனம் செய்து வரும் போது நீங்கள் சொல்வது போல் வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது நிஜம் தான்.
மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி , மனநிறைவு கிடைக்கிறது.
அவர்களை போல் சித்தத்தை இறைவன் மேல் வைத்து வாழ வேண்டும் எப்போதும்.
உங்கள் அழகான கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி புவனா.
மிளகாய்ப் பழ சித்தர் அறியாதபெயர் தகவல்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குJagan ayyalusamy , வாழ்க வளமுடன்.
உலக நன்மைக்கு வேண்டிக் கொள்ளுங்கள்.
முருகன் அனைவரையும் காக்க வேண்டும்.
ஓம் முருகா!
சித்தர் சமாதிக்கும் சென்று வருவது நன்மையே.
எல்லோருக்கும் வேண்டிக் கொள்ளுங்கள்.
நன்றி .
சித்தர் ஐயா அவர்கள் எந்த வம்சாவளியை சேர்ந்தவர்?
பதிலளிநீக்குவேறு ஏதேனும் சிறப்புகள் அறியும் நோக்கம்.
சித்தர் ஐயா அவர்களைப் பற்றி தெரிந்ததை எழுதி விட்டேன்.
நீக்குமேலும் விஷயங்கள் தெரியாது.
கோவிலை பார்த்து கொள்பவரை கேட்டால் தெரியும்.
Ivar thevar vamsam enral entha vamsavaliyai sernthavar?
பதிலளிநீக்குதெரியாது.
நீக்கு