ஒவ்வொரு ஊரிலும் என் கணவர் உறவினர்கள், என் உறவினர்கள் என்று
உறவுகளுடன் உறவாடி, கல்யாணங்களில் கலந்துகொண்டு, கோவை போய் கொஞ்சநாள் அத்தையுடன் இருந்து வந்தோம்.
மறுபடியும் போக வேண்டும் பயணம். அதற்குள் கொஞ்சம் உங்களுடன் உரையாடல்.
கல்யாணங்களில் வெகு நாட்களுக்கு(பல ஆண்டுகள் முன் பார்த்த) முன் பார்த்த என் அத்தை பெண், சித்தப்பா மகள்கள், மகன்கள், பெரியப்பா மகன்கள், என்று சகோதர சகோதரிகளைப் பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. அப்பா இருந்த போது எப்போதும் உறவினர் வருகை ஜே ஜே என்று இருக்கும். அதன் பின் அம்மா இருந்த போது அதன் பின் சிறிது சிறிதாக குறைந்து, இப்போது விசேஷங்களில் சந்திக்கும் நிகழ்வுகள் நடக்கிறது.
மாமா பெண் மதுரையில் இருப்பதால் அடிக்கடி பார்க்க முடிகிறது. மாமாவும் தன் அக்காகுழந்தைகள் வீட்டு விசேஷங்களுக்கு, தன் வயதையும் பொருட்படுத்தாமல் திருவனந்தபுரத்திலிருந்து வந்து ஒருகுழந்தையின் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்வார்கள்.
மதுரையில் என் தங்கை பெண் திருமணம், கோவில்பட்டியில் சித்தப்பா பேரன் திருமணம், கழுகுமலையில் தங்கைபெண் மறுவீடு, என்று பயணங்கள்.
திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் அழைப்பு என்ற கதையில் இப்படி குறிப்பிடுகிறார்: --
//இந்த காலத்தில் பணம் மட்டும் கையில் இருந்தால், கல்யாணம் செய்வது அவ்வளவு ஒன்றும் கஷ்டமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
பெண்ணைப் பெற்றவரோ, பிள்ளையைப் பெற்றவரோ, யாராக இருந்தாலும் எல்லாவற்றிற்குமே காண்ட்ராக்ட்காரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு விடுவதால், யாருக்கும் அந்தக்காலம் போல அதிக சிரமம் இல்லாமல் எல்லாம் நல்லபடியாகவே முடிந்து விடுகிறது. //
சார் சொல்வது சரிதான். சார் சொல்வது போல் காண்ட்ராக்ட்காரர்களிடம் விட வில்லை என்றால் கல்யாணத்திற்கு வேண்டிய சாமான்கள் அது இது என்று கடை கடையாக ஏறி இறங்கி வாங்கி பத்திரப்படுத்தி யாராவது சாமான் அறையில் பொறுப்பாய் சமையல் செய்பவருக்கு எடுத்துக் கொடுத்துக் கொண்டு இருக்க வேண்டும்.
முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு, மறுநாள் கல்யாணம், அதற்கு அடுத்த நாள் காலை பலகார பந்தி, மதியம் சொதியுடன் அடைபிரதமன், இஞ்சி துவையல், உருளைக்கிழங்கு காரக்கறி, வாழைக்காய் சிப்ஸ், வடை, இன்னும் பல ஸ்பெஷல் அயிட்டங்களுடன் மறுவீட்டு சாப்பாடு முடித்து மாப்பிள்ளை வீட்டாரை கட்டுசாதக் கூடை, பலகாரக் கூடையுடன் ,அனுப்பும் வரை நல்லபடியாக பார்த்து பார்த்துச் செய்ய வேண்டும். கல்யாணத்திற்கு வந்தவர்களுக்கு தாம்பூலப் பைகள், சொந்தங்களுக்கு பலகாரப் பைகள் எல்லாம் தயார் செய்ய வேண்டும்.
இப்போது காண்ட்ராட்காரரிடம் மூன்று நாள் சாப்பாட்டு மெனு கொடுத்து விட்டால் போதும். அதன் பின் மண்டப அலங்காரம், பெண், பிள்ளை வீட்டு பெண்களுக்கு தலைக்கு வைக்கும் பூ, கல்யாணமாலை, நலுங்கு மாலை, தேங்காய் உருட்டி விளையாடியதும் நலுங்கில் பூப்பந்து உருட்டி விளையாட பூப்பந்து, அப்பளம் தட்டி விளையாட சுட்ட அப்பளம், குத்துவிளக்கிற்கு மாலை , மற்றும் சாமி பட மாலைகள், வாசலில் வரவேற்புத்தட்டில் வைக்க பூக்கள், அவப்போது ஆரத்தி எடுக்க ஆரத்தி கரைத்து மொத்தமாக மேடையில் வைத்தல், மணமேடைக் கோலம், வாசல் கோலம் ஆகிய எல்லாவற்றுக்கும் ஆள் ஏற்பாடு செய்துவிடுகிறார்கள்.
மாப்பிள்ளை வீட்டாரர் தங்கி இருக்கும் இடத்திற்கு அதிகாலையில் காப்பி, பால், சப்ளை, அன்பான விசாரிப்பு என்ன வேண்டும் ஏது வேண்டும் என்று கேட்டுக் கொள்வது என்று அனைத்தும் அருமையாக செய்கிறார்கள். அதனுடன் நாமும் மாப்பிள்ளை வீட்டாரை உபசரித்தால் அவர்களுக்கு மகிழ்ச்சிதான்.
.அந்த காண்ட்ராக்ட்காரர் எனது பெரிய தங்கை குடும்பம், அண்ணன் குடும்பத்திற்கு எல்லாம் திருமணத்திற்கு செய்து கொடுத்தவர். தெய்வ பக்தி நிறைந்தவர். செய்யும் தொழிலை அனுபவித்து ரசித்து ரசித்து செய்பவர். அவர் பேர் S, பாபு. அவரிடம் வேலை பார்ப்பவர்களும் அவர் போலவே . ஒவ்வொரு கல்யாணத்திற்கும் வரவேற்பில் புதுமை செய்வார்கள். இந்த முறை கடலைமாவால் இனிப்பில் செய்யப்பட்ட வாழைப்பழ சீப்பு, தேங்காய், குட்டி ஆப்பிள், வெற்றிலை பாக்கு வைத்த தாம்பாளத்தை செய்து இருந்தார். புடவை , ஜாக்கெட்துணி போல் பால்கோவாவால் செய்து இருந்தார். மயில் கண் வேஷ்டி, நேரியலை பாதம்ஸ்வீட்டால் செய்து இருந்தார். கிருஷ்ணா ஸ்வீட்காரர்கள் முன்பே இப்படி செய்து இருக்கிறார்கள்.
மண்டபத்திற்கு போகும் முன் வீட்டில் பூஜை செய்தல்.
ஒருதங்கை அன்னையின் பக்தை -தன் தங்கை மகள் திருமணம் நன்கு நடை பெற அன்னைக்கு நவதானியங்களால் அரவிந்தர் அன்னை சின்னத்தை அலங்கரித்து இருந்தாள்.
கீழே வருபவை எல்லாம் கல்யாண மண்டபத்தில் வாசலில் வரவேற்புக்கு இருந்தவை. பாதாம் ஸ்வீட்கள்
இனிப்பு பலகாரம் தான்= வாழை, தேங்காய், வெற்றிலை
ஆப்பிள் எல்லாம்
பால்கோவா சேலை
பால்கோவா ஜாக்கெட்
பாதாம் வேஷ்டி
பாதாம்நேரியல்
தங்கை செய்த அலங்காரத் தட்டுக்கள்
மாப்பிள்ளை அழைப்பு அன்று மேடை அலங்காரம்
மாப்பிள்ளை அழைப்புக்கு ஒரு அலங்காரம் செய்தவர்கள் மறு நாள் திருமணத்திற்கு பூ ஜோடனை செய்கிறார்கள்.
எத்தனைபேரின் உழைப்பு!
சரியாக இரும்பு சட்டத்தில் உட்கார்ந்து விட்டதில் மகிழ்ச்சி.
மாங்கல்யம் அணிவித்தவுடன் அட்சதை மழை பொழிகிறது.
நீங்களும் வாழ்த்துங்கள் மணமக்களை.
//மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்//
நலுங்கு தேங்காய் உருட்டி விளையாடுதல்
நலுங்கில் மணபெண்ணின் சித்தப்பா குழந்தைகள், பெரியப்பா பேத்தி குட்டி பெண்ணும் ஆட்டம்
பெரியவர்களுக்கும், சிறுவர்களுக்கும் மியூசிக்கல் சேர் விளையாட்டு.
எல்லோரும் மகிழ்ச்சியாக கலந்து உரையாடி மகிழ்ந்து இருப்பதற்கே இந்த விழாக்கள் உதவுகிறது. மனக்குறைகளை களைந்து நம்மால் திருமண விழாவில் என்ன உதவி செய்ய முடியுமோ செய்து நாமும் மகிழ்ந்து மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தி மணமக்களை வாழ்த்தி மகிழ்வோம்.
அடுத்து அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயிலில் நடந்த பங்குனி உத்திரத் திருவிழா, மிளகாய்ப்பழ சித்தர் சமாதி, வெயிலோடு விளையாடும் சிறுவர்கள் என்று பதிவு --வந்துவிடுங்கள் மறக்காமல்.
வாழ்க வளமுடன்.
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஒரு திருமணச் சடங்கை முழுமையாக
பதிலளிநீக்குநேரில் கண்டு அனுபவித்த திருப்தி கிட்டியுள்ளது தங்களின் பகிர்வின் மூலம் அருமை !
மணமக்களுக்கு இனிய வாழ்த்துகள்..
பதிலளிநீக்குபுடவை , ஜாக்கெட்துணி போல் பால்கோவாவால் செய்து இருந்தார். மயில் கண் வேஷ்டி, நேரியலை பாதம்ஸ்வீட்டால் செய்து இருந்தார். கிருஷ்ணா ஸ்வீட்காரர்கள் முன்பே இப்படி செய்து இருக்கிறார்கள்.//
சேவை நிறுவனம் ஒன்று கோவையில் அலங்காரங்கள் செய்வதால் பயன்படுத்திக் கொள்கிறோம் ..
திருமண விழா என்றாலே சந்தோஷம், உற்சாகம்தான். இல்லறத்தில் அடியெடுத்து வைக்கும் நம் வீட்டுக் குழந்தைகளை சந்தோஷம், பலநாள் காணாத உறவுகளைக் காணும் சந்தோஷம், நாவுக்கும் விதம் விதமான ருசிகளில் அவ்வப்போது கிடைக்கும் சந்தோஷம்... ஆஹா... எனக்குத்தான் பதிவின் கடைசியில் உள்ள சில படங்கள் திறக்கவில்லை. சுற்றிக் கொண்டே இருக்கின்றன.
பதிலளிநீக்குவணக்கம் அம்பாளடியாள், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி அம்பாளடியாள்.
பதிலளிநீக்குஇப்போதெல்லாம் இந்த மாதிரி ஏற்பாடுகளை கவனித்துக் கொள்ள ஆட்கள் இருப்பதால் பெண்வீட்டினரும் கவலையின்றி விழாவில் உற்சாகமாக இருக்க முடிகிறது.
பதிலளிநீக்குஎங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்....
வணக்கம் இராஜராஜேஸ்வரி,வாழ்க வளமுடன். மணமக்களுக்கு உங்கள் வாழ்த்தை அளித்து விட்டேன்.
பதிலளிநீக்குசேவை நிறுவனம் அலங்கார தட்டுகள் செய்கிறார்களா நல்ல சேவைதான்.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
ரசித்து ரசித்து செய்தவைகள்
பதிலளிநீக்குமனம் கவர்ந்தது
நாங்களும் கண்டு ரசிக்க
அருமையான பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
பயணங்கள் சிறப்பாக அமைய
நல்வாழ்த்துக்கள்
tha.ma 2
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் கல்யாணம் என்றாலே எல்லோரையும் தொற்றிக் கொள்ளும் சந்தோஷம்.
பல நாள் காணத உறவுகள் சந்தித்து பேசியது போதவே இல்லை.உறவுகள் நட்புக்கள் என்று எல்லோரும் ஒரே இடத்தில் பார்த்தாலும் இன்னும் நாட்கள் நீடிக்காதா? பேசிக் கொண்டு இருக்கலாம் என்ற எண்ணம் தான் வருகிறது.
அட்சதை மழை பொழியும் படம் பார்க்க வில்லையா? போட்டோ, வீட்டியோகாரர்கள் சொந்தங்களுக்கு இடையே புகுந்து மிகவும் கஷ்டப்பட்டு எடுத்தேன் பார்த்து விட்டு மணமக்களை வாழ்த்துக்கங்கள்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபொறுப்புகள் குறையும் போது கலயாணத்திற்கு வந்து இருக்கும் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக உரையாட முடிகிறது.
உங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்.
வணக்கம் ரமணி சார், வாழ்க் வளமுடன்.
பதிலளிநீக்குபடங்கள் பிடித்தமைக்கு நன்றி.
உங்கள் வாழ்த்துக்களுக்கும், தமிழ்மண வாக்கு அளித்தமைக்கும் நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குஅம்மா
மங்கள நிகழ்வை நானும் இன்புற்று
உவகை கொண்டேன்அம்மா...பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் இன்புற்று வாழ்த்தியமைக்கு நன்றி ரூபன்.
மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ் மனமார வாழ்த்துகிறேன். அருமையாய் படிப்படியாய் எல்லா போட்டோக்களையும் பார்த்ததில் திருமணத்தை நேரில் வந்தத் திருப்தி வந்து விட்டது . நன்றி மறு வீட்டு பதிவிற்குக் காத்திருக்கிறேன்
பதிலளிநீக்கு’அழைப்பு’ என்ற தலைப்பில் நான் எழுதியுள்ள கதையின் ஆரம்ப வரிகளைச் சுட்டிக் காட்டியுள்ளதற்கு முதற்கண் என் நன்றிகள்.
பதிலளிநீக்குதங்களின் இந்தப்பதிவு மிக அழகாக இனிமையாக தித்திப்பாக உள்ளது.
//புடவை , ஜாக்கெட்துணி போல் பால்கோவாவால் செய்து இருந்தார். மயில் கண் வேஷ்டி, நேரியலை பாதம் ஸ்வீட்டால் செய்து இருந்தார்.//
எல்லாமே அழகோ அழகு தான்.
பல திருமணங்களில் பலவிதமான திறமையாளர்கள் இதுபோல தங்களின் கற்பனையை அள்ளி அளிப்பது மிகுந்த மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. எல்லாவற்றிலுமே ஏதாவ்து ஒரு புதுமை .... அலுப்புத்தட்டாமல் ரஸித்து மகிழ முடிகிறது.
பகிர்வுக்குப்பாராட்டுக்கள். நன்றிகள்.
மணமக்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமணமக்களை மனமார வாழ்த்தியதற்கு நன்றி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் வை.கோபலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்களின் அழைப்பு கதை மிகவும் நன்றாக இருந்தது.
பத்திரிக்கை கொடுக்க போகும் போது ஏற்படும் அனுபவங்கள் எல்லோரும் உணர்ந்து இருப்பார்கள்.
கதையில் நீங்கள் சொன்ன மாதிரி பொறுப்புகளை கல்யாணத்தை எடுத்து செய்பவர்களிடம் கொடுத்து விட்டதால் எல்லோரும் கவலையின்றி மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
//பல திருமணங்களில் பலவிதமான திறமையாளர்கள் இதுபோல தங்களின் கற்பனையை அள்ளி அளிப்பது மிகுந்த மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. எல்லாவற்றிலுமே ஏதாவ்து ஒரு புதுமை .... அலுப்புத்தட்டாமல் ரஸித்து மகிழ முடிகிறது//
ஆம், நீங்கள் சொல்வது உண்மை.
மணமக்களை வாழ்த்தியதற்கு நன்றி சார்.
பொங்கும் மங்கலம் எங்கும் தங்கட்டும்!..
பதிலளிநீக்குமணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்..
நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு படிக்க சந்தோஷம், கோமதி.
பதிலளிநீக்குஎன் பெண் திருமணத்தில் நாங்களே எல்லாம் வாங்கிக் கொடுக்கிறோம் என்று சொல்லிவிட்டார் என் கணவர். இங்கே பெங்களூரில் நடந்தது திருமணம். எங்கள் உறவினர்கள் யாருக்கும் கன்னட மொழி தெரியாது. மாப்பிள்ளை வீட்டவர்களை உபசரிப்பதில் இருந்து, சத்திரம் காலி செய்யும் வரை - நான் ஒருத்தியாகவே செய்ய வேண்டியதாயிற்று. அதுமட்டுமில்லை; அவ்வப்போது அது வேண்டும் இது வேண்டும் என்று சமையல்காரர்கள் கொடுத்த தொல்லை தாங்கமுடியவில்லை.
அவர்களிடமே காண்ட்ராக்ட் கொடுத்துவிட்டால், கொஞ்சம் பணம் அதிகமானாலும் மற்ற வேலைகளை நாம் கவனிக்கலாம்.
மிக அழகான ஜோடனைகள், இனிப்புகளிலேயே வேஷ்டி, புடவை என்று பிரமாதமாக இருக்கிறது. உங்கள் தங்கையின் கைவண்ணம் அபாரம். மணமக்களுக்கும், உங்கள் தங்கைக்கும் எனது வாழ்த்துகள்!
வணக்கம், துரை செல்வராஜூ சார், வாழக வளமுடன்.
பதிலளிநீக்குமணமக்களுக்கு உங்களுடைய ஆசியும், வாழ்த்தும் கிடைத்தது மகிழ்ச்சி.
நன்றி சார்.
கல்யாணமே! வைபோகமே காண்ட்ராக்டே! என்றுதான் பாடத் தோன்றுகிறது. அதிலும் நிறையபேர் கோயிலில் எளிமையாக தாலி கட்டிவிட்டு, மண்டபம் கிடைக்கும் நாட்களில் பெரிய ஓட்டல்களில் வரவேற்பு வைத்து விடுகிறார்கள்!
பதிலளிநீக்குஉங்கள் உறவின் வீட்டு கல்யாணம்! உங்களின் மகிழ்ச்சி உங்கள் பதிவில் தெரிகிறது! மணமக்களுக்கும் உங்கள் வீட்டார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
த.ம.3
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநாங்களும் கலந்து கொண்ட உணர்வு... மணமக்களுக்கு இனிய வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குபலரின் உழைப்பின் மேடை அலங்காரம் மிகவும் அருமை...
வணக்கம் ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநாங்களும் எங்கள் பெண்ணுக்கு நாங்களே எல்லாம் வாங்கி கொடுத்து மிகவும் கஷ்டப்பட்டு விட்டோம்.
உக்கிரண அறை பொறுப்பை தங்கை கணவர் பார்த்துக் கொண்டாலும் எல்லோரும் மிக சிரம பட்டோம் . மண்டபத்திலிருந்து மீதி சாமான்களை கொண்டு வர வாரவழிபாட்டு அன்பர்கள் உதவி செய்தார்கள் அவை வீட்டில் வந்து அடைத்துக் கொண்டது. அதை எல்லோருக்கும் வாரி வழங்கினோம் வீணாகி போய் விடுமே என்று.
மகன் வரவேற்புக்கு காண்ட்ராகடரிடம் ஒப்புவித்து விட்டு சுகமாய் இருந்தோம்.
முன்பு எல்லாம், அக்கம் பக்கம், உறவினர்கள் எல்லோரும் சேர்ந்து திருமணத்தை நடத்தினார்கள். இப்போது அப்படி முடிவதில்லை. காலத்திற்கு ஏற்ற மாதிரி நாமும் மாறவேண்டி உள்ளது.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்கை, மற்றும் மணமக்களுக்கு வாழ்த்து சொன்னதற்கு நன்றி.
கல்யாணமே! வைபோகமே காண்ட்ராக்டே!//
பதிலளிநீக்குஅருமையாக இருக்கே!
இதயே தலைப்பாய் வைத்து இருக்கலாம் போலும்.
கல்யாணம் நினைக்கும் தோறும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று இப்போது மக்கள் கடன் பட்டு என்றாலும் ஆடம்பரமாய் திருமணம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
மணமக்களையும் எங்கள் குடும்பத்தினர்களையும் வாழ்த்தியதற்கு நன்றி.
தமிழ்மண வாக்குக்கு நன்றி இளங்கோ சார்.
வணக்கம் ஜெயக்குமார் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமணமக்களை வாழ்த்தியமைக்கு நன்றி சார்.
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குதிருமணவிழாவில் நீங்களும் கலந்து கொண்டீர்களா! மகிழ்ச்சி.
இனிய வாழ்த்துக்களை மணமக்களுக்கு
அளித்தமைக்கு நன்றி.
தமிழ்மண வாக்கு அளித்தமைக்கும் நன்றி.
முதலில் மணமக்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவீட்டில் சுப விசேஷங்கள் நடக்கும்போது நீண்ட நாட்களாக
சந்திக்க முடியாதவர்களை சந்திக்கும்போது கிடைக்கும் ஆனந்தமே தனிதான். அதற்குமேல் உங்கள் வீட்டுத் திருமணத்தை நேரில்
பார்த்தது போல் நீங்கள் பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் உணர வைத்தன. நீங்கள் சென்று வந்த திருக்கோயில்கள் பற்றிய பதிவுகளைக் காண ஆவலாக உள்ளது கோமதி அம்மா. மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
வணக்கம் புவனேஸ்வரி ராமநாதன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி.
நீங்கள் சொல்வது போல் விஷேச வீடுகளில் தான் சொந்தங்களை பார்க்க முடிகிறது. அத்தை பெண்ணைப் பார்க்கும் போது அத்தை நினைவு, சித்தப்பா பிள்ளைகளை பார்க்கும் சித்தப்பா நினைவுகள், மலரும் நினைவுகளை பேசி பேசி மகிழ்ந்தோம்.
முன்பே கழுகுமலை கோவிலைப்பற்றி பகிர்ந்து இருந்தாலும் பங்கினி உத்திர நாளில் அங்கு போனது மகிழ்ச்சியாக இருந்தது.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
அன்பு கோமதி,நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைப் பார்ப்பதில் மிக மகிழ்ச்சி. இந்தத் திருமண விவரங்கள் படு ஜோர். என்ன ஒரு நேர்த்தி. காண்டிராகடர் கல்யாணம் என்றாலும் இவ்வளவு சிரத்தை பார்ப்பது அதிசயம் தான். நேரில் பார்த்தது போன்ற மகிழ்ச்சியைக் கொடுத்துவிட்டீர்கள் மணம்க்கள் நலம் வளம் கொழிக்க வாழவேண்டும். மிக நன்றி அம்மா.
பதிலளிநீக்குவணக்கம் அன்பு வல்லி அக்கா,வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகாண்ட்ராக்டர் பெரிய தங்கை வீட்டில் வாடகைக்கு இருந்தவர். இப்போது உண்மையான உழைப்பால் உயர்ந்து நல்ல வசதியாக இருக்கிறார். நம் வீட்டு விசேஷம் என்றால் அதிக சிரத்தை எடுத்து செய்வார் எப்போதும்.
மணவிழா கண்டு மகிழ்ச்சி அடைந்து மணமக்களை வாழ்த்தியமைக்கு நன்றி அக்கா.
திருமணங்கள் பெரும்பாலும் உறவுகளைக் காணவும் புதுப்பிக்கவும் அடையாளப் படுத்திக் கொள்ளவும் உதவுகின்றன.
பதிலளிநீக்குவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது உணமை.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் நண்பர்களே
பதிலளிநீக்குஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்
வாழ்க மணமக்கள்!
பதிலளிநீக்குஅழகான அலங்காரங்கள். இனிப்பு வகைகளை துணிமணிகள் போல் செய்திருப்பது இப்போதுதான் பார்க்கிறேன்.
உங்கள் பகிர்வு திருமண விழாவைத் திட்டமிடும் பலருக்கு உதவக்கூடும்.
உறவுகள் ஒன்று கூடும் இனிய, மறக்க முடியாத தருணங்களைத் தருகின்றன மண விழாக்கள்.
திருமணத்தை நேரில் கண்டுரசித்த நிறைவு ஏற்பட்டுவிட்டது. மணமக்களுக்கு இனிய இல்லறம் அமைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள். திருமண ஏற்பாட்டாளர்களின் தயவால் ஓரளவு நிறைவாக திருமணங்களை நடத்தி முடிக்கமுடிகிறது. வந்திருக்கும் உறவினர்களை நல்லபடியாக உபசரித்து அனுப்பவும் முடிகிறது. நல்ல ஏற்பாடு. கலைநயமிக்க பழங்கள், திருமணப் புடவை, வேட்டிகள், ஆரத்தி தட்டுகள், நவதானியக் கோலம் எல்லாமே ரசித்துவியக்கவைக்கின்றன. பகிர்வுக்கு நன்றி மேடம்.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவாழ்க மணமக்கள்!
//
வாழ்த்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.
மாப்பிள்ளை வீட்டாரை இனிப்பு வாழைபழத்தாம்பாளத்தை வைத்து வரவேற்ற்வுடன் மிகவும் மகிழ்ந்தார்கள். ஊருக்கு போகும் போது அவர்களுக்கு தாம்பூல் பைகளுடன் இந்த இனிப்பும் கொடுத்து விடபட்டது.
//உறவுகள் ஒன்று கூடும் இனிய, மறக்க முடியாத தருணங்களைத் தருகின்றன மண விழாக்கள்.//
உண்மைதான் ராமலக்ஷமி.
முன்பு போன் நம்பர், பின் அலைபேசி நம்பர் வாங்கிய உறவினர்களும் நண்பர்களும் மெயில் முகவரி போனில் WhatsApp வசதி இருக்கா பேசலாம் படங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றார்கள்.
எதில் பேசினால் என்ன? உறவுகள் பலபட்டால் சரி மகிழ்ச்சிதான்.
உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.
வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமணமக்களுக்கு உங்களின் இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி.
நீங்கள் சொல்வது போல் திருமண ஏற்பாட்டாளர்களின் தயவால் கவலையின்றி மனநிறைவாய் விருந்தினர்களை உபசரிக்க முடிகிறது. சில ஏற்பாட்டாளர்கள் அதற்கு அழகான பெண்களை ஏற்பாடு செய்து விடுகிறார்கள் அவர்கள் அழகாய் பந்தி விசாரிக்க வருகிறார்கள். என்ன வேண்டும் உணவு நன்றாக இருக்கிறதா? குறைகளை எங்களிடம் சொல்லுங்கள், நிறைவை மற்றவர்களிடம் பகிருங்கள் என்கிறார்கள் அதுவும் நன்றாக இருக்கிறது.
கலைநயமிக்க பழங்கள், திருமணப் புடவை, வேட்டிகள், ஆரத்தி தட்டுகள், நவதானியக் கோலம் எல்லாமே ரசித்துவியக்கவைக்கின்றன. பகிர்வுக்கு நன்றி மேடம்.//
பதிவை ரசித்து அழகாய் கருத்து அளித்தமைக்கு நன்றி கீதமஞ்சரி.
மணமக்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குபுகைப்படங்கள் எல்லாமே மிக மிக அழகு! துணிகள், இனிப்பு வகைகள் எல்லாமே இனிப்பால் செய்தவை போலவே தோன்றவேயில்லை அத்தனை தத்ரூபமாக இருக்கின்றன!
உறவுகளும் அவற்றின் இனிமையும் வாழ்த்துக்களும் சூழ நடந்தேறும் எந்த நிகழ்வும் மனதில் மகிழ்ச்சியையும் நிறைவையும் கொடுக்குமல்லவா?
வாங்க மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமணமக்களுக்கு உங்கள் இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி.
புகைப்படம், இனிப்புகளை ரசித்தமைக்கு நன்றி.
நீங்கள் சொல்வது போல் உறவுகளின் வரவும் அவர்களின் வாழ்த்தும் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தருவது உண்மைதான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
அழகான அலங்காரங்கள். மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
Thanks For Sharing The Amazing content. I Will also share with my
பதிலளிநீக்குfriends. Great Content thanks a lot.
positive thinking stories tamil
வணக்கம் தமிழ் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.