//மன்னுபுகழ்க் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்
கன்னிநன்மா மதில்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலே தாலேலோ//
- குலசேகராழ்வார்
9.2.2014 ஆம்தேதி திருக்கண்ணபுரம் சென்று இருந்தோம். அன்று அங்கு கருட சேவை, அரையர் சேவை நடைபெற்றது. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு நடைபெற்றது.
திருக்கண்ணபுரம் போக நாகப்பட்டினத்திலிருந்து நன்னிலம் போகும் பஸ்ஸில் திருப்புகலூர் என்ற இடத்தில் இறங்கி 2, கி,மீ போக வேண்டும்.நன்னிலம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 7 கி,மீ தூரம். மாயவரத்திலிருந்து சன்னா நல்லூர்வழியாக திருப்புகலூர் வரலாம்.குடவாசலிருந்தும் பஸ் வசதி உண்டு.
மூலவர்: நீலமேகப் பெருமாள், செளரிராஜன்,
நின்ற திருக்கோலம்
உத்ஸ்வர் : செளரிராஜ பெருமாள்.
தாயார் : கண்ணபுர நாயகி (ஸ்ரீ தேவி, பூதேவி, ஆண்டாள், பத்மினி)
தனிக்கோயிலில் நாச்சியார் இருக்கிறார்.
தீர்த்தம் : நித்யபுஷ்கரிணி
விமானம் : உத்பலாவதக விமானம்.
கண்வமுனிவர், கருடன், தண்டக மஹரிஷிஆகியோருக்கு காட்சி கொடுத்து இருக்கிறார் இத தலத்தில்.
இத்தலப் பெருமாள் கையில் சக்கரம் , இடது புறம் ஆண்டாள், வலதுபுறம் பெருமாள் மணந்து கொண்ட பத்மாவதி தாயார் என்ற செம்படவ அரசகுமாரியும் உள்ளனர். உற்சவ பெருமாள் கன்யாதானம் வாங்க கையேந்திய நிலையில் காட்சி அளிக்கிறார்.
கோயிலின் பெருமைகள் ;
1.ஸ்ரீமந் நாராயணன் எல்லா அக்ஷரங்களிலும் இந்தக்ஷேத்திரத்தில் ஸாந்நித்யம் செய்கிறபடியால் இந்த ஸ்தலம் “ஸ்ரீமத்ஷ்டாக்ஷர மஹா மந்தரஸித்தி க்ஷேத்திரம்” என்று பெயர் பெற்றது.
2. திருமங்கையாழ்வாருக்கு திருமந்திர உபதேசம் செய்யப்பட்ட ஸ்தலம்.
3. ரங்கபட்டர் என்கிற அர்ச்சகர் சோழ அரசனுக்கு . பெருமாளுக்கு கேசம் வளர்ந்ததை காட்டுவதாக வாக்களித்ததைக் காப்பாற்ற, பெருமாள் தன் திருமுடியில் திருக்குழல் கற்றையை வளர்த்துக் கேசத்தைக் காட்டியருளியதால் செளரிராஜன் என்று அழைக்கப்பட்டார்.
4. விபீஷண ஆழ்வாருக்கு, ஸ்ரீ ரங்கநாதர் அருளியபடி அமாவாசை தினத்தன்று
பகவான் நடை அழகை காட்டியருளிய ஸ்தலம்.
5.பெருமாள் தன் சக்ராயுத்தால் விகடாக்ஷன் என்ற துஷ்டாசுரனை நிக்ரஹம் செய்தார். மஹரிஷிகளின் பிரார்த்தனைப்படி சக்ரப்பிரயோகம் செய்த கோலத்தில். மூலவர் காட்சி அளிக்கிறார்.
6. முனையதரையர் என்ற மஹாபக்திமான் தம்முடைய மனைவி சமைத்த பொங்கலை அர்த்தஜாமத்திற்குப் பிறகு கோயிலுக்குள் போக முடியாமல் மானஸீகமாக பக்தியுடன் ஸமர்ப்பித்தார்.பகவான் அதை ஏற்றுக் கொண்டார். மூடிய கோயிலில் மணி ஓசை கேட்டு பட்டர்கள் பார்த்த போது மூலஸ்தானத்தில் வெண்பொங்கல் வாசனை நிரம்பி இருந்தது. அது முதல் அர்த்தஜாமப் பொங்கல் நிவேதனத்திற்கு “முனியோதரம் பொங்கல்” என்ற பெயர். தினந்தோறும் வெண்ணெய் உருக்கி, பொங்கல் செய்து பெருமாளுக்கு நிவேதனம் செய்வது விசேஷம் .
மங்களாசாஸனம்: பாசுரங்கள்
பெரியாழ்வார் - 71
ஆண்டாள் - 535
குலசேகராழ்வார் - 719- 729
திருமங்கையாழ்வார் _ 1648-1747- 2067- 2078- 2673 (72)
நம்மாழ்வார் - 3656-3666
மொத்தம் 128 பாசுரங்கள்.
’திருக்கண்ணபுரத்தில் பெருந்திருவிழா நடக்கிறது, ஒரு நாள் போய் வருவோம்’ என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள் என் கணவர். ஜெயா தொலைக்காட்சியில் திருவரங்கம் 100 என்று பேசிக்கொண்டு இருக்கிறார் (அது மறு ஒலிபரப்பு)திரு. வேளுக்குடி திரு.கிருஷ்ணன் அவர்கள் . அவர் பேசிக் கொண்டு இருக்கும் போது இடையில் கண்ணபுரத்தில் விழாவில் மாலை 4.30 6.30 வரை பேசுகிறார் என்ற செய்தியைச் சொன்னார்கள். கருட சேவை நிகழ்ச்சி,கிருஷ்ணன் அவர்களின் பேச்சு இரண்டையும் பார்த்து விடலாம் என்று அங்கு போய் வந்தோம்.
முதலில் கோவில் வாசலில் உள்ள புனித புஷ்கரணியைப் படம் எடுத்துக் கொண்டோம்.
திருக்குளத்துக்குஅருகில் தசாவதார மண்டபம் ஒருபக்கம் ராமர் பட்டாபிஷேகம்- மறு பக்கம் அனுமன் ராமரை வணங்கும் காட்சி- சித்திரம் வரையப்பட்டு இருக்கிறது.
ராஜகோபுர வாயில்
ஆண்டாள் சந்நதி- இங்கு தான் திரு. கிருஷ்ணன் அவர்களின் உபன்யாசம் நடந்தது
ஆண்டாள் சந்நதியில் நடைபெற்றுக்கொண்டிருந்த திரு.கிருஷ்ணன் அவர்களின் பேச்சைக் கேட்க அமர்ந்து விட்டோம் . அவர் பேச ஆரம்பித்து விட்டார். ’திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள்’ என்ற தலைப்பில் பேசினார்.உபன்யாசத்தில் இருந்து நிறைய செய்திகள் தெரிந்துகொண்டோம்.
திருக்கோளூர் பெண்பிள்ளை வரலாறு
திருக்கோளூர் என்ற ஊருக்கு இராமானுஜர் சென்ற போது அங்கிருந்து ஒரு பெண் பிள்ளை ஊரை விட்டு வெளியேறிக் கொண்டு இருந்தார். இராமானுஜர் , ’தாயே !நான் ஊருக்குள் வரும் போது நீங்கள் வெளியேறக் காரணம் என்ன ? ’என்றபோது. ’காலம் தோறும் தோன்றிய திருமாலடியார்கள் சாதித்தது
போல் நான் சாதிக்கவில்லை’, என்று கூறி அவர்கள் செய்த செயல்களைப் பட்டியலிட்டு கூறினார். இராமாயணம், மகாபாரதம், பாகவதம், ஆழ்வார்களின் வரலாறுகள் ஆகியவற்றிலிருந்து சான்றோர்கள் செய்த 81 அருஞ்செயலகளை கவிதையாக வடிவில் கூறினார்.
இராமானுஜரும், திருக்கோளூர் சான்றோர்களும் அந்த பெண் பிள்ளை பணிவையும், ஞானத்தையும் கண்டு வியந்து அவர் திருமாலடியார்களைப் பற்றி பாடிய கவிதைகளை ”திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்” என்று குறிப்பிடுகிறார்கள் . அந்த 81 பாடல்கள் பற்றித் தான் தொடர் சொற்பொழிவு செய்து கொண்டு இருந்தார்.
முந்தின நாள் தான் பேசியதின் தொடர்ச்சியாக 29 வது கேள்வியிலிருந்து பேச ஆரம்பித்தார். தங்குதடையற்ற அருவி போன்ற பேச்சு. 44 வது கேள்வியுடன் முடித்துக் கொண்டார், மற்றவை நாளை என்று.
நாங்கள் போன அன்று பேசிய பெண்பிள்ளையின் கேள்விகள் இவை
:
29. கர்மத்தால் பெற்றேனோ ஜனகரைப் போலே!
30.கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கையாரைப் போலே!
31,குடை முதலானதானேனோ அனந்தாழ்வான் போலே!
32.கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே!
33. இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே!
34, இடைகழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே!
35. இருமன்னரைப் பெற்றேனோ வால்மீகரைப் போலே!
36,இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியார்போலே!
37,அவனுரைக்கப் பெற்றேனோ திருக்கச்சியார் போலே!
38. அவன்மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே!
39. அனுப்பி வையுமேன்றேனோ வசிஷ்டரைப் போலே!
40. அடி வாங்கினேனோ கொங்கில் பிராட்டியைப் போலே!
41.மண்பூவை இட்டேனோ குரவநம்பியைப் போலே!
42.மூலமென்றழைத்தேனோ கஜராஜனைப் போலே!
43. பூசக்கொடுத்தேனோ கூனியைப் போலே!
44.பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே!
4.30மணியிலிருந்து 6.30 வரை இரண்டு மணி நேரம் மிக அருமையாக பேசினார். நேரம் போனதே தெரியவில்லை. குறிப்புகள் எடுத்துக்கொண்டேன் அவற்றையும் பகிர்ந்தால் இன்னும் பதிவு பெரிதாகி விடும்.
இவ்வளவு நாளாய் அவர் பேசிய சொற்பொழிவுகளைத் தொலைக்காட்சிகளில் (விஜய், ஜெயா, பொதிகை) கேட்டு மகிழ்ந்த நாங்கள் நேரில் கேட்டு மகிழ்ந்தோம்.
இறைவன் புகழ் பாடிய அவரை அனைவரும்பெரியவர், சின்னவரென்று பேதம் இல்லாமல் எல்லோரும் பாதம் பணிந்து வணங்கினர்.
பிறகு கோவில் உள்ளே போய் செளரிராஜப்பெருமாளைச் சேவித்தோம். அவருக்கு மலர் கிரீடம், மலரில் ஆடை அணிந்து இருந்தார்கள். அவ்வளவு அழகு. கையில் தீயவரை அழிக்க தயாராக வீசும் நிலையில் சக்கரம். அதை பட்டர் அழகாய் தீப ஒளியில் ஒவ்வொருவருக்கும் பொறுமையாய் கதை சொல்லி, காட்டுகிறார். ஒரு வயதான அம்மா எல்லோரும் பொறுமையாக உள்ளே போங்கள் பொறுமையாய் பாருங்கள் அவசரம் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். நிம்மதியாக பொறுமையாக பெருமாளை தரிசித்தோம்.
அடுத்து தாயார் சந்நதி சாந்தமும் மகிழ்ச்சியும் ததும்பிய முக பாவத்துடன் கண்ணபுர நாயகி தன் கருணை பொருந்திய கண்களால் எல்லோர்க்கும் அருள்மழை பொழிந்து கொண்டு இருக்கிறார்.
கருட சேவை:
அலங்காரம் செய்து அழகாய் காட்சி அளித்தார் செளரிராஜ பெருமாள். அவருக்கு எதிரில் கருடன் இருந்தார். தனியாக பார்த்தோம். கருடன் மேல் இன்னும் வைக்கவில்லை.
அரையர் சேவை:
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வந்த அரையர்சேவை சாதிக்க ஒருவர் மட்டும் வந்து இருந்தார்.அவர் அழகாய் பாசுரங்களை அபிநயம் செய்தும், தாளத்தை இடை இடையே இட்டும் பாடினார். மிக மென்மையான குரல். அழகிய தோற்றம்.
அது முடிந்த பின் இரண்டு பெண் குழந்தைகள் பரதநாட்டியம் ஆட அமர்ந்து இருந்தனர்.ஆனால் வெகு நேரம் ஆகி விடும் என்பதால் இருந்து பார்க்கவில்லை.இரவு கார் ஓட்டி வர சிரமம் என்பதால் கிளம்பி வந்து விட்டோம். தங்கும் இடம் இருக்கிறது. கோவில் வாளகத்தில் விசாரித்த போது இடம் இல்லை என்றார்கள். அறைகள் கோபுர வாசல் பக்கமே இருக்கிறது.
தங்கும் அறைகள்
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பாடல் எப்போதும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்
”திருக்கண்ணபுரம் செல்வேன்,
கவலை எல்லாம் மறப்பேன்.
கண்ணனின் சந்நிதியில்
எந்நேரமும் இருப்பேன்.”
அது போல் அமைதியான கோவில் அழகான பெருமாள், எந்நேரமும் அங்கு இருக்க ஆசைதான்.
வாழ்க வளமுடன்
=============

கோயிலின் பெருமைகள் அனைத்தும் விரிவான விளக்கமான தகவல்கள் அம்மா... திருக்கண்ணபுரம் ஒரு முறை சென்றதுண்டு...
பதிலளிநீக்குபடங்கள் அருமை... நன்றி... வாழ்த்துக்கள்...
வணக்கம்
பதிலளிநீக்குஅம்மா.
கோயிலின் சிறப்பை மிக நன்றாக எழுதியுள்ளிர்கள்.... பதிவை படிக்கும் போது அங்கு போக வேண்டும் என்ற உணர்வு வருகிறது..அம்மா... போக விட்டாலும் தங்களின் பதிவின் வழி தகவல் அறியக்கிடைக்கிறது.. படங்கள் ஒவ்வொன்றும் அழகாக உள்ளது...வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
”திருக்கண்ணபுரம் செல்வேன்,
பதிலளிநீக்குகவலை எல்லாம் மறப்பேன்.
கண்ணனின் சந்நிதியில்
எந்நேரமும் இருப்பேன்.”
நாங்களுக்கும் மிகவும்
விரும்பும் அருமையான பாடல் ..!
கோவிலைப்ப்பற்றி மிகச்சிறப்பாக படங்களுடன் , நிகழ்ச்சிகளைகளையும் அழகாக வர்ணித்து மனக்கண்கள் மூலம் மீண்டும் கண்ணபுரத்த்ரிசனம் பெறச்செய்து விட்டீர்கள்..
மிகவும் நன்றிகள்.. பாராட்டுக்கள்..!
திருக்கண்ணபுரத் திருத்தலப் பெருமைகளைத் தங்களால் அறிந்தேன். திருக்கோளூர் பெண்பிள்ளையின் கேள்விகள் ஒவ்வொன்றும் ஒரு வரியானாலும் எவ்வளவு பொருள் பொதிந்தவையாய் உள்ளன? அறிந்திராத பல தகவல்களை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி மேடம்.
பதிலளிநீக்குதஞ்சை, நாகை யில் பல வருடங்கள் இருந்த போதிலும்,
பதிலளிநீக்குதிருக்கண்ணபுரத்தில் எனது நண்பர்கள் பலர் இருக்கும் போதிலும்
அந்த திவ்ய க்ஷேத்திரத்துக்கு சென்று பெருமாளை சேவிக்க
இன்னமும் இயலவில்லை.
அந்த குறை உங்கள் வலைப்பதிவை படித்த உடன் தீர்ந்ததோ !
சுப்பு தாத்தா.
www.wallposterwallposter.blogspot.in
www.subbuthatha.blogspot.com
அழகான படங்களும், செய்திகளும், கோயில் அமைந்துள்ள இட விபரங்களும், செல்லும் பாதை வழியும், ஸ்தல புராணக் கதைகளுமாக இந்தப்பதிவு மிகவும் கலக்கலாக ஜோராக உள்ளது.
பதிலளிநீக்குநல்லதொரு வர்ணனை. ;)
பாராட்டுக்கள்.வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
வணக்கம் திண்டுக்கல் தனபாலன்,வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்களுக்கும் திருக்கண்ணபுரம் பாடல் பிடிக்கும் என்று அறிந்து மகிழ்ச்சி.உங்கள் அன்பான கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.
வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குதிரு, வேளுக்குடி கிருஷ்ணன் மூலம் தான் நானும் அறிந்து கொண்டேன்.
திருக்கோளூர் பெண்பிள்ளையைப் பற்றி.
உங்கள் அன்பான கருத்துக்களுக்குநன்ற்.
வணக்கம் சூரி சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஇப்போது திருவிழா நடக்கிறது திருக்கண்ணப்புரத்தில் முடிந்தால் வாருங்களேன். உங்கள் நண்பர்களும் மகிழ்வார்கள்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
திருக்கண்ணபுர தகவல்கள் வெகு அற்புதம்! அழகிய படங்களுடன் பதிவாக்கியமைக்கு வாழ்த்துக்கள்! நன்றி!
பதிலளிநீக்குவணக்கம் சுரேஷ், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் அனபான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
உங்கள் பதிவு திருக்கன்னபுரத்தை கண்ணெதிரே கொண்டு வந்து விட்டது. படங்களுடன் பாடல்கள் அற்புதம்.
பதிலளிநீக்குமிக மிக அருமையான பதிவு. ஒரு முறை செல்லும் அஆசையைத் தூநடி விட்டது உங்கள் பதிவு.நன்றி.
வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி. ஒருமுறை சென்று வாருங்கள்.
ஒரே ஒரு முறை இக்கோவிலுக்கு போயிருக்கேன்.
பதிலளிநீக்குவணக்கம் வடுவூர் குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குதிருக்கண்ணபுரம் ஒருமுறை சென்றது அறிந்து மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
கும்பகோணம் சென்றால் கண்ணபுரம் காணாமல் வருவதில்லை. அதற்காகவே சீர்காழியின் பாடலைக் கேட்டு அனுபவிப்பது வழக்கம். அருமையாக எழுதி இருக்கிறீர்கள் கோமதி. திரு.வேளுக்குடியைத் தரிசனம் செய்ததும் ஒரு பாக்கியமே. பகவானைக் காட்டிலும் பாகவத தரிசனம் உயர்த்தி இல்லையா.மிக மிக மகிழ்ச்சி அம்மா.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குகோயிலின் சிறப்பை மிக நன்றாக எழுதியுள்ளிர்கள்.பகிர்வுக்கு நன்றி.
என் மாமியாரின் ஊர் திருக்கண்ணபுரம். வருடம்தோறும் இந்த மாசித் திருவிழாவிற்குச் செல்வோம். இந்தமுறை இயலவில்லை. எப்போதும் திரு வேளுக்குடி ஸ்வாமி 3 நாட்கள் உபன்யாசம் சாதிப்பார். இந்த முறை 5 நாட்கள். என் மனமெல்லாம் அங்கேயே இருந்தது. அவரது உபன்யாசம் மிக மிக நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குஎன் குறையை உங்களது இந்தப் பதிவு போக்கியது.
நன்றி, கோமதி!
அருமையான படங்களுக்கும், கோவில் குறித்த தகவல்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குகோயிலின் சிறப்பை மிக நன்றாக எழுதியுள்ளிர்கள். படங்களுடன் பாடல்கள் அற்புதம்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி
Vetha.Elangathilakam.
அன்பு வல்லி அக்கா, வண்க்கம் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//பகவானைக் காட்டிலும் பாகவத தரிசனம் உயர்த்தி இல்லையா.//
நீங்கள் சொல்வது சரிதான் அக்கா.
உங்கள் அன்பான கருத்துக்குநன்றி.
வணக்கம் காஞ்சனா ராதாகிருஷ்ணன், வாழ்க வளமுடன், உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் ரஞ்சனி நாராயாணன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் அத்தையின் ஊரா? வருடம் தோறும் கண்ணன் தரிசனமா? கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன். உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் கோவை கவி, வாழ்க வளமுடன். நான் இப்போது கோவையில் என் மாமியார் வீட்டில் இருக்கிறேன், உங்கள் பதிவுகளை ஊருக்கு வந்து படிக்கிறேன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
சிறப்பானதோர் திருத்தலம் பற்றிய தகவல்கள், காட்சிகள் என அசத்தலான பகிர்வும்மா....
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நிறைவான தரிசனம்.. தகவல்களும் அருமை.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் சாந்தி மாரியப்பன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
திருக்கண்ணபுரம் தரிசனம் பெற்றுக்கொண்டோம். நிறைவான தகவல்கள் பலவும் அறிந்தோம்.
பதிலளிநீக்குநன்றி.