சனி, 19 நவம்பர், 2011

என் முதல் கவிதை

கண்ணே கண் உறங்கு
செல்ல பெண்ணே நீ கண் உறங்கு

பூவே கண் உறங்கு
பூவின் தேனே நீ கண் உறங்கு

பொண்ணே கண் உறங்கு
தங்க பொண்ணே நீ கண் உறங்கு

மானே கண் உறங்கு
மானின் விழியே நீ கண் உறங்கு

விழியே கண் உறங்கு
கயல்விழியே நீ கண் உறங்கு


ஆரி ஆரிரரோ ஆரி ஆரிரரோ ஆரி ஆரோ

இந்த ஆரி ஆரிரரோவை அவள் தூங்கும் வரை பாடுவேன்.

முதலில் சின்ன சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே தான் பாடுவேன்


வாராயோ வாராயோ தென்றல் காற்றே
வந்து எந்தன் சேயை கண்ணுறங்க வீசாயோ
வானகம் என்னும் சோலை தனிலே
வளரும் தாராகை நீயே!
இந்த நாலுவரியை திரும்ப திரும்ப பாடுவேன் .
அப்போது சிலோன் ரேடியோவில் பழைய பாடல் (எனக்கே இது பழைய பாடல் தான்)


தர்மபுர சுவாமி நாதன் பாடல் : வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
என்ற பாடலை பாடுவேன்.

அப்புறம் நாமே தயார் செய்து பாடினால் என்ன தாலாட்டு பாடல் என்று பாடியது தான்.எழுதி எல்லாம் பார்க்க வில்லை கவிதைக்கு எப்படி எழுத வேண்டும் என்று தெரியாது மனதில் வந்ததை பாடினேன். இன்று தான் இதை எழுதி இருக்கிறேன். மனதில் தான் இருந்தது.
இப்போது என் பேரக் குழந்தைகளுக்கும் இதை பாடுகிறேன். சொற் குற்றம் பொருள் குற்றம் பார்க்காமல் சும்மா படித்துப் பாருங்கள். என் குடும்பத்தார் இவள் பாடும் பாட்டு எல்லோரையும் தூங்க வைத்து விடும் போலவே என்று கேலி செய்வார்கள்.

பேரனுக்கு ஒரு பாட்டு பாடினேன் அதையும் இப்போது குறிப்பிட்டு விடுகிறேன்

செல்ல தங்கமே செல்ல குட்டியே
செல்ல தங்கமே செல்லம் செல்லம்
வைர தங்கமே வைர குட்டியே
வைர தங்கமே வைரம் வைரம்
பொண்ணு குட்டியே பொண்ணு தங்கமே
பொண்ணு தங்கமே தங்கம் தங்கம்

செல்லம் செல்லம். வைரம், வைரம், தங்கம், தங்கம், தொடர்ந்து சொல்லும் போது அவன்
விழுந்து விழுந்து சிரிப்பான்.


என் முதல் கவிதை என்று தலைப்பை பார்த்தவுடன் அட! கவிதைகூட எழுதுவார்களா இவர்கள் என நினைப்பீர்கள். என் முதல் கவிதையே என் பெண்தான்.அவளுக்கு பாடிய தாலாட்டுப் பாட்டுதான் அது.


மருத்துவமனையில் அவள் பிறந்தவுடன் நர்ஸ் சொன்னது கோமதி உனக்கு மூக்கை எடுத்து விட வேண்டிய வேலையே இல்லை. நல்ல அழகான தீர்க்கமான மூக்குடன் பிறந்து இருக்கிறாள். இந்திரா காந்தி பிறந்த அன்று பிறந்து இருக்கிறாள் என்று பாராட்டினார்கள்.

என்ன பெயர் வைக்கலாம் என நினைத்த போது மதுரையில் பிறந்ததால் மதுரை மீனாட்சியின் பெயர் வைக்க வேண்டும் என்று நினைத்து நானும் என் கணவரும் கயல்விழி என்று தேர்வு செய்தோம். பின் மாமியார் பெயரையும் அம்மா பெயரையும் சேர்த்து கயல்விழி முத்துலெட்சுமி என்று வைத்தோம்.

இப்போது தெரிந்து இருக்குமே என் மகள் யார் என்று பதிவுலக நண்பர்களுக்கு.

இன்று அவள் நிறைய கவிதைகள் எழுதுகிறாள். அவள் மகள் கவிதை எழுதுகிறாள்.

என் மகள் பிரசவத்திற்கு நான் அம்மா வீட்டுக்கு போய் இருந்த போது அவள் அப்பா கடிதம் நாலுவரி நாலுவரிதான் எழுதுவார்கள் அப்போது நான் ’விரிவுரையாளரே விரிவாய் கடிதம் எழுத கூடாதா’ என்று கேட்டு கடிதம் எழுதினேன் அதற்கு என்னை மகிழ்ச்சிப் படுத்த இரண்டு கவிதை எழுதி அனுப்பினார்கள். அதைத் திரும்ப திரும்ப படித்த காரணத்தால் என் மகளுக்கு கவிதை மேல் ஆர்வம் வந்தது போல.

என் மகளுக்கு இன்று பிறந்த நாள். அவள் இறைவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்.

49 கருத்துகள்:

  1. எழுதிய கவிதையும், வாழ்வின் முதல் கவிதைக்கு கவிதை நன்கு வருவதன் காரணமும் அருமை:)!

    //செல்லம் செல்லம். வைரம், வைரம், தங்கம், தங்கம், தொடர்ந்து சொல்லும் போது அவன்
    விழுந்து விழுந்து சிரிப்பான்.//

    ஸ்வீட். குழந்தைக்கு என் வாழ்த்துக்கள்:)!

    பதிலளிநீக்கு
  2. ஓ, கோமதியம்மா இப்படித்தான் கயல்விழி முத்து கவிதை எழுத கத்துக் கொண்ட ரகசியமா. தகவலுக்கு நன்றி!

    முத்துவிற்கு எங்களது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். :-)

    பதிலளிநீக்கு
  3. நீங்க நன்றாகப்பாடுவீர்கள் தெரியும்..
    நன்றாக எழுதுவீர்கள் என்று அன்றைக்கே கடிதத்தில் நிரூபித்திருக்கிறீர்கள் ..

    நன்றிம்மா.. :) பாட்டைப்பாடி பதிவு செய்து பதிவில் வைக்கலாம்.

    பதிலளிநீக்கு
  4. இந்திராகாந்தியின் பிறந்ததினத்தன்று பிறந்த கவிதைக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!!!!!!

    பதிலளிநீக்கு
  5. >>>
    மருத்துவமனையில் அவள் பிறந்தவுடன் நர்ஸ் சொன்னது கோமதி உனக்கு மூக்கை எடுத்து விட வேண்டிய வேலையே இல்லை


    மூக்கை நிமிர்த்தி விட வேண்டிய வேலையே இல்லை

    பதிலளிநீக்கு
  6. :) சிறுவயதில் ஒவ்வொருவரின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் இது போல சுவாரஸியமான அழகான கதைகள் இருக்கும். வளர்ந்த பின் இதுபோல் அழகாக எடுத்துக்கூற எல்லாருக்கும் இது போல் அம்மா கிட்டுவதில்லை. சற்றே பொறாமை உங்களைப்பார்த்து :)

    அக்காவுக்கு வாழ்த்துகளும், உங்களுக்கு நன்றிகள்..இப்பதிவிற்காக.

    பதிலளிநீக்கு
  7. அன்பு கோமதிக்கு முதல் வாழ்த்து அம்மாவுக்குத்தான்.
    பிள்ளைப் பேறின் போது புதிதாய்ப் பிறக்கிறோம் அல்லவா.
    பிறகு உங்கள் செல்ல மகளுக்கு மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள். கார்த்திகைப் பெண்ணா கயல்விழி. அழகிய நட்சத்திரமாக அவள் குடும்ப விளக்காக, இல்லறத்தின் ஜோதியாக என்னாளும் விளங்க எங்கள் வாழ்த்துகள். ஹாப்பி பர்த்டே கயல்.

    பதிலளிநீக்கு
  8. தங்கள் மகளுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஆசிகள்.

    எழுதியெல்லாம் வைத்துக் கொள்வதில்லை; மனத்தில் தோன்றியதைப் பாடுவேன் என்று சொல்லியிருப்பது உங்களுள் உள்ள கவிதை உணர்வைத் தான் வெளிப்படுத்துகிறது. ஆச்சரியமான பரிசு அது. அந்த காலத்து ஆசுகவிகளெல்லாம் இப்படித் தான் பாடினார்கள். அவர்கள் பேசிய வார்த்தைக் கோர்வைகளே கவிதையாக இருந்தது. அதை இப்பொழுது நாம் தான் கவிதை என்று தலைப்பிட்டு வகைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

    சிலோன் ரேடியோ என்றதும் மயில்வாகனன் நினைவு வந்தது.
    மறக்கவே முடியாத நினைவுகள் அவையெல்லாம்.

    நினைவுகளை அனுபவித்து எழுதுதலே ஒரு கலை; அந்தக் கலை உங்களுக்கு கைவந்திருக்கிறது. அதற்காக என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. பதிவு சூப்பர் ;-)

    அக்காவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ;-)

    பதிலளிநீக்கு
  10. முதல் கவிதை அழகு....

    உங்கள் மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா....

    அம்மாவிடம் இருந்து பிறந்த நாள் வாழ்த்து என்பது மிகவும் முக்கியமான வாழ்த்து அல்லவா....

    பதிலளிநீக்கு
  11. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வாங்க தெகா, வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. பாட்டைப்பாடி பதிவு செய்து பதிவில் வைக்கலாம்.//

    ஒ! வைத்து விடுவோம். நீங்கள் எல்லாம் பாடியது டேப்பில் உள்ளது.

    பதிலளிநீக்கு
  14. வாங்க செந்தில் குமார், வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வாங்க ஆதவன், வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. பிள்ளைப் பேறின் போது புதிதாய்ப் பிறக்கிறோம் அல்லவா.//

    வாங்க வல்லி அக்கா, நீங்கள் சொல்வது உண்மை.

    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வாங்க ஜீவி சார், உங்கள் வாழ்த்துக்கள், ஆசிகளுக்கு நன்றி.

    என் கவிதை நன்றாக இருக்கிறது என்று சொன்னதற்கு நன்றி சார்.

    சிலோன் ரேடியோவை மறக்க முடியாது தான்.

    எப்போதும் டிரான்ஸ்சிஸ்டருடன் தான் பாட்டுகள் கேட்டுக் கொண்டே வேலை நடக்கும்.

    பதிலளிநீக்கு
  18. வாங்க வெங்கட், வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. அட..கவிதை....தாலாட்டு ரொம்ப நல்லா இருக்கே.மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  20. உங்கள் முதல் கவிதைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தாமதமாய் தெரிவிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. அருமை கோமதிக்கா. எல்லாப் பெண்களுக்கும் குழந்தைதான் முதல் கவிதை. அந்த வகையில் எல்லாப் பெண்களுமே ‘கவிதாயினி’தான் இல்லையா?!!

    //☀நான் ஆதவன்☀ said...
    வளர்ந்த பின் இதுபோல் அழகாக எடுத்துக்கூற எல்லாருக்கும் இது போல் அம்மா கிட்டுவதில்லை//

    ஆதவா, கவலை வேண்டாம். எல்லாத் தாயும் பேரப்பிள்ளைகளிடம்தான் அந்தக் கதைகளை விவரிப்பார்கள். அப்போ, நீங்க “யம்மா, என் மானத்த வாங்காதம்மா” என்று கெஞ்சுவீர்கள் பாருங்கள்!! :-))))))

    பதிலளிநீக்கு
  22. வாங்க ஸாதிகா, பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வாங்க ஆதி, வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வாங்க ஹீஸைனம்மா, நலமா, பயணம் நல்லபடியாக ஆனதா?

    அருமை கோமதிக்கா. எல்லாப் பெண்களுக்கும் குழந்தைதான் முதல் கவிதை. அந்த வகையில் எல்லாப் பெண்களுமே ‘கவிதாயினி’தான் இல்லையா?!!

    //☀நான் ஆதவன்☀ said...
    வளர்ந்த பின் இதுபோல் அழகாக எடுத்துக்கூற எல்லாருக்கும் இது போல் அம்மா கிட்டுவதில்லை//

    ஆதவா, கவலை வேண்டாம். எல்லாத் தாயும் பேரப்பிள்ளைகளிடம்தான் அந்தக் கதைகளை விவரிப்பார்கள். அப்போ, நீங்க “யம்மா, என் மானத்த வாங்காதம்மா” என்று கெஞ்சுவீர்கள் பாருங்கள்!! :-))))))

    ஆம் ஹீஸைன்ம்மா எல்லா பெண்ணும் கவிதாயினிதான்.

    ஆதவன் கவலை பட வேண்டாம். நிச்சியம் ஆதவன் அம்மா என்னைவிட இன்னும் அருமையாய் அவர்கள் பேரபிள்ளையிடம் சொல்வார்கள்.
    நீங்கள் சொன்னது சரிதான் ஹீஸைனம்மா. ஒவ்வொரு தாயிடமும் தன் குழந்தையைப் பற்றி கூற நிறைய சுவரஸியமான அழகான கதைகள் இருக்கும்.

    நன்றி ஹீஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  25. பிறந்தநாளுக்கு வரமுடியவில்லையே :(

    இனிய வாழ்த்துக்கள் இருவருக்கும்.

    பதிலளிநீக்கு
  26. மகள் இறைவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  27. மாதேவி வாங்க , வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. வாங்க கே.பி. ஜனா, உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வாங்க இராஜராஜேஸ்வரி, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. பிறந்தநாள் வாழ்த்துக்கள்:

    பதிலளிநீக்கு
  31. அழகாய் இருக்கிறது சகோ ,வாசித்து ரசித்தேன் .பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  32. வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இப்போது தான் வந்தேன். அருமையான கருத்துக்கள். ரசித்துப் படித்தேன். தங்களின் முந்தைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி.. சகோதரி!
    நம்ம தளத்தில்:
    "மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

    பதிலளிநீக்கு
  33. என் வாழ்த்துகளும்.

    என் முதல் கவிதை என்று தலைப்பை பார்த்தவுடன் அட! கவிதைகூட எழுதுவார்களா இவர்கள் என நினைப்பீர்கள். என் முதல் கவிதையே என் பெண்தான்.அவளுக்கு பாடிய தாலாட்டுப் பாட்டுதான் அது.

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  34. வாங்க மாலதி. கவிதை எனநினைத்து என் பதிவுக்கு வந்தீர்களா?

    நன்றி உங்கள் வாழ்த்துக்கும், வருகைக்கும்.

    பதிலளிநீக்கு
  35. வாங்க M.R., உங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  36. வண்க்கம் திண்டுக்கல் தனபாலன், உங்கள் முதல் வருகைக்கும் ,என் முந்தைய பதிவுகளை படித்து வருவதற்கும் நன்றி.

    உங்கள் தளத்திற்கு வருகிறேன்.
    தலைப்பே நன்றாக இருக்கே!

    பதிலளிநீக்கு
  37. முதல் கவிதையே முத்தாக அமைந்துள்ளது. முதல் கவிதைக்கு முதலில் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    மகள் இறைவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

    தங்களிடம் வேறு ஒரு விஷயம் நான் கேட்க வேண்டியுள்ளது. தாங்கள் விருப்பப்பட்டால் தங்களின் மின்னஞ்சல் விலாசம் எனக்கு அனுப்பி வைக்கவும். என் மின்னஞ்சல் முகவரி:

    valambal@gmail.com அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  38. தாமதமாக வருகிறது இந்தப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். பதிவு அருமையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  39. அருமையான கவிதை.
    உங்கள் மகள் திருமதி முத்துலெட்சுமி என்று அறிந்து மிக்க மகிழ்ச்சி.
    நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு
  40. வியபதி, உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  41. ரதனவேல் ஐயா, உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  42. அருமை அக்கா.தாமதமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கயல்விழி முத்துலெட்சுமிக்கு.அருமையான பெயர்.நானும் இப்ப்டி என் மகன் மகளுக்காக பாடியதுண்டு.அவைகள் நினைவிற்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  43. பதிவு சூப்பர்.உங்கள் மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  44. வாங்க ஆசியா, ஒவ்வொரு தாயும் தன் குழந்தைகளுக்கு சொந்தாமாய் பாட்டு இசைத்து இருப்பார்கள். நீங்கள் பாடியதுஅறிந்து மகிழ்ச்சி.

    வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  45. வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன், உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  46. நீங்களே எழுதிய கவிதை அருமை.  என் பாஸ் கூட நவம்பரில் பிறந்தவர்தான்!  என் அம்மா பாடிய சில தாலாட்டுப் பாடல்கள் மங்கலாக நினைவில் இருக்கின்றன.  எனக்குப் பாடியது என்னவென்று தெரியாது.  என் தங்கைக்கு பாடும்போது கேட்டது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //நீங்களே எழுதிய கவிதை அருமை. என் பாஸ் கூட நவம்பரில் பிறந்தவர்தான்! //
      கவிதை நன்றாக இருப்பதாக சொன்னது மகிழ்ச்சி.

      என் பிள்ளைகள் இருவரும் நவம்பரில் பிறந்தவர்கள் தான்.

      //என் அம்மா பாடிய சில தாலாட்டுப் பாடல்கள் மங்கலாக நினைவில் இருக்கின்றன. எனக்குப் பாடியது என்னவென்று தெரியாது. என் தங்கைக்கு பாடும்போது கேட்டது!//

      நமக்கு அம்மா பாடியது நினைவு இருக்காதுதான். தங்கைக்கு பாடிய பாடலில் இரண்டு வரி நினைவு இருந்தால் சொல்லி இருக்கலாம்.
      பழைய பதிவை படித்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.


      நீக்கு