வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

அகிலமெல்லாம் போற்றும் அம்மன் அருள்.!

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த  மாதம்.  ஆடிச்  செவ்வாய், ஆடி வெள்ளி எல்லாம் மிக சிறப்பாய் வீடுகளில், ஆலயங்களில் பூஜைகள் நடை பெறும். பண்டிகைகள் ஆரம்பிக்கும் மாதமும்  ஆகும். கோயில்களில் விழாக்கள் நடைபெறும் அம்மனுக்கு.

தொலைக்காட்சி சேனல்கள் போட்டிக் கொன்டு அம்மன் படங்கள், விழாக்களை ஒலிபரப்பிக் கொண்டு இருக்கிறது.

பதிவுகளில் ஆடிச் சிறப்பு   அம்மன்கள் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

பக்திமணம் கமழும் ஆடி மாதத்தில்  நான் மயிலாடுதுறையில் இருக்கும் போது எடுத்த அம்மன் படங்கள் உங்கள் பார்வைக்கு.


மயிலாடுதுறை அருள்மிகு சாந்தநாயகி சமேத புனுகீசுவரசுவாமி திருக்கோயிலில் ஆடி வெள்ளி அன்று செய்யும்  சந்தனகாப்பு அலங்காரம்.

 
                                               சாந்த நாயகி

Image may contain: 3 people
Add caption
மயிலாடுதுறையில் இருந்த போது அங்கு உள்ள  கள்ளக்குறிச்சி ஸ்ரீ மகா மாரியம்மன்.
No automatic alt text available.
அம்மனின் பின் அலங்காரம்.


புனுகீசுவரர் கோயில் துர்க்கை அம்மன் வெள்ளிக் கிழமை ராகு கால பூஜை சிறப்பு   அலங்காரம் புஷ்பபாவாடை.
புனுகீசுவரர் கோவில் துர்க்கை அம்மன்

ஆடி வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை சமயம்  குத்து விளக்கை அம்மனாக அலங்காரம்.

மயிலாடுதுறை செல்வ விநாயகர் கோயில் ஸ்ரீ சிவதுர்க்கை ஆடி மாதம் ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளில்  ஒவ்வொரு அலங்காரம்
கஜலட்சுமி அலங்காரம்

பாம்பு புற்றில் அம்மன் இருப்பது போல்
 அலங்காரம்
சிவதுர்க்கை
தேங்காய் பூவால் அலங்காரம்.
சிவதுர்க்கை அம்மன்  பழ அலங்காரம்.
சிவதுர்க்கை மீனாட்சி  அலங்காரம்.
சமயபுர மாரியம்மன் படம் வைத்த காவடி.

                                           
அம்மனை தாயின் தோளில் அமர்ந்து  பார்க்கும்  பச்சைக்கிளி

இன்று பக்கத்து வீட்டில் வரலட்சுமி அம்மன் விழாவிற்கு அழைத்தார்கள்  போய் அம்மனை வணங்கி தாம்பூலம் வாங்கி வந்தேன்.

அனைவருக்கும் வரலட்சுமியின் அருள் கிடைக்க வேண்டும்.

                                                              வாழ்க வளமுடன்.

35 கருத்துகள்:

  1. அழகிய படங்களுடன் பதிவு நன்று சகோ வாழ்க நலம்.
    த.ம.பிறகு

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் புலவர் இராமாநுசம், வாழ்கவளமுடன்.

    உங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் புலவர் ஐயா, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் பகவான் ஜி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அழகான படங்கள். அன்னையின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்....

    பதிலளிநீக்கு
  7. படங்கள் அழகும்மா. எங்க வீட்டில் வரலட்சுமி நோன்பு இல்ல. யார் வீட்டுக்கும் போகும் பாக்கியமும் இல்லம்மா. உங்க பதிவை பார்த்து திருப்தி அடைஞ்சுக்கிட்டேன்

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
    அன்னையின் பூரண அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் வெங்கட்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.
    உங்கள் பதிவில் அழகான வரலட்சுமி அம்மன் படம் போட்டீர்களே!
    அதனால் உங்கள் வீட்டில் வரலட்சுமி விரதம் உண்டு என்று நினைத்தேன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. படங்கள் அனைத்தும் அழகு கோமதிக்கா..குறிப்பாகக் குத்து விளக்கிற்கு அம்மன் அலங்காரம்! அந்த தீபமே அம்மன் ஒளியாய் இருப்பது போல் அருமை!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. நானும் ஒரு நண்பர் வீட்டிற்குத் சென்று தாம்பூலம் பெற்று வந்தேன்..மகிழ்வான, அருமையான பாசிட்டிவ் எனர்ஜி நிறைந்திருந்த தருணங்கள் அவை!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    //குத்து விளக்கிற்கு அம்மன் அலங்காரம்! அந்த தீபமே அம்மன் ஒளியாய் இருப்பது போல் அருமை!! //

    ஆமாம் , கீதா.

    ..//மகிழ்வான, அருமையான பாசிட்டிவ் எனர்ஜி நிறைந்திருந்த தருணங்கள் அவை!//

    குடியிருப்புக்கு வந்து யாரும் பழகவில்லை என்று நினைத்துக் கொண்டு இருந்தேன் , வரலட்சுமி அம்மன் வைத்து இருக்கிறேன் தாம்பூலம் பெற்றுக் கொள்ள வாருங்கள் என்று அழைத்தார்கள், அம்மனை தரிசனம் செய்து உரையாடி வந்தது நீங்கள் சொல்வது போல் அருமையான தருணம் தான்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி கீதா.


    பதிலளிநீக்கு
  13. அழகிய படங்கள். வரலக்ஷ்மி அம்மன் பூஜைக்கு இங்கேயும் ஒரு வீட்டில் அழைத்திருந்தார்கள் சென்று வந்தேன். ஆனாலும் இங்கே எங்கள் தளத்திலேயே பூஜை செய்த சிலர் அழைக்கக் கூட இல்லை. முன்னெல்லாம் ஆடி வெள்ளி, தை வெள்ளி என்றாலே சாதாரணமாகவே கூப்பிட்டுத் தாம்பூலம் தருவது உண்டு. அப்படி அழைத்தாலும் இப்போதெல்லாம் வருவதற்கு அலுத்துக் கொள்கின்றனர். இனி எல்லாம் மெல்ல மெல்ல மறையுமோ என்று பயம் வருகிறது.

    பதிலளிநீக்கு
  14. எத்தனை அம்மன்.. வணங்கிக்கொள்கிறேன். இங்கும் வரலக்ஷ்மி விரதம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

    தம ஆறாம் வாக்கு.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    மீண்டும் வந்து தமிழ்மண ஓட்டு போட்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.

    நீங்கள் சொல்வது போல் ஆடி, தை வெள்ளிக்கு அழைப்போம், இப்போது கோவிலில் கூட்டு வழிப்பாடு நடப்பதால் அதில் கொடுத்து விடுகிறேன். வசூல் செய்து சிறப்பாய் செய்கிறார்கள்.

    மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கிறது, நம்மால் முடிந்தவரை கடைப்பிடிப்போம்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    உங்கள் வீட்டு அம்மனை உங்கள் அண்ணா முகநுலில் போட்டு இருந்தார்கள் பார்த்தேன்.

    நன்றி கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும்.

    பதிலளிநீக்கு
  19. விடியற்காலையில் தான் நேற்றைய பதிவினைக் கண்டேன்..

    சிறப்பான தெய்வதரிசனம்.. மங்கலம் ததும்பும் படங்கள்..

    அனைத்தும் அம்மன் அருள்.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் துரை செல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    ஞாயிறு அம்மன் தரிசனம் நல்லது என்பார்கள், அதுதான் உங்களுக்கு
    ஞாயிறு தரிசனம் தந்து இருக்கிறார் அம்மன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. அம்மன் தரிசனம் மனதிற்கு நிறைவாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  22. மனதைக் குளிர வைக்கும் அருமையான தரிசனம். எத்தனை அழகான அலங்காரங்கள். பகிர்வுக்கு நன்றி கோமதிம்மா!

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் ஜம்புலிங்கம், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    புனுகீசுவ்ரர் கோயில் சேகர் குருக்கள் மிக அழகாய் அலங்காரம் செய்வார்.
    சிவவிஷ்ணு கோயிலில் உள்ள குருக்களும் வித விதமாய் அலங்காரம் செய்வார்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. நாங்கள் மயிலாடுதுறை வந்தபோது ஒரு கோவிலில் படம் வாங்கினேன் அபயாம்பிகை என்று நினைக்கிறேன் கண்ணாடி ஓவியம் வரைய ஆனால் அந்தப் படம் சரியாக
    வரவில்லை.அதன் பின் படம் வரையும் முயற்சிகளைக் கைவிட்டு விட்டேன்

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    நீங்கள் வாங்கியது அபயாம்பிகை படம் தான்.
    அது ஏற்கனவே நிறைய வேலைப்பாடுகளுடன் இருந்தது, உங்கள் கைவேலையால் இன்னும் மின்னியிருக்கும்.
    முடியும் போது வரையுங்கள்.

    பதிலளிநீக்கு
  27. அழகான படங்கள்.. அதுவும் சந்தனக்காப்பு படம் பிரமாதம். ஆச்சரியமா இருக்கு.. இப்படி படம் எடுக்க அனுமதிக்கிராங்களே? ஈ காக்கா இல்லாத மேல்மருத்துவக்குடி சிவன் கோவிலில் ரெண்டு படம் எடுக்கலாம்னா புகைப்படம் கூடாதுனுட்டாங்க!

    பதிலளிநீக்கு
  28. ஸ்ரீ சிவதுர்க்கை அம்மன்னின் அலங்காரங்கள் ஒவ்வொன்றும் அழகு....

    பதிலளிநீக்கு
  29. அம்மன் அலங்காரங்கள் மிகு‌ந்த அழகு.படங்கள் எடுத்து தொகுத்த உங்களுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் மாதேவி வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு