திங்கள், 18 அக்டோபர், 2021

அன்றும் , இன்றும்

  வரலாற்று சிறப்பு மிக்க வீடு

பழமையும் , புதுமையும்

நகர் வலம்

அரிசோனாவில் உள்ள "டோம்ப்ஸ்டோன்"  என்ற  ஊர் வரலாற்று சிறப்புமிக்க ஊர். அந்த ஊரில் தங்கி பார்த்தவை தொடர் பதிவாக வந்து கொண்டு இருக்கிறது.  அங்கு  ஊரைச்சுற்றிப்பார்க்க , பயணம் செய்ய அந்தக்கால  வண்டிகள், மற்றும் இந்தக்கால வாகனங்கள் உள்ளன.  அவற்றின் படங்கள் இந்த பதிவில்  இடம் பெறுகிறது.

இந்த வண்டிகளில் பயணம் செய்து  ஊரின் அழகை பார்க்கலாம்.   வண்டிக்கு அருகில் துப்பாக்கி சண்டை நாடகம் பார்க்க அழைப்பவர் நிற்கிறார்.

நிறைய வித விதமான குதிரை வண்டிகள் இருக்கிறது

இந்த வண்டியில் மேலே   பெட்டி வைத்துக் கொண்டு பயணம் செய்வது போன்ற தோற்றம் கொடுக்க மேலே பழைய காலத்து பெட்டி வைத்து இருக்கிறார்கள் .

வண்டி ஓட்டுபவர் அந்தக்கால கவ்பாய் ஆடை அணிந்து இருக்கிறார். வண்டியும் பழமையாக இருக்கிறது .
நாங்கள் பயணம் செய்த வாகனத்திற்கு  பயணச்சீட்டு வாங்கும் இடம்
ஹலோவின் சிறப்பு நாடகம்

 நாம் பயணம் செய்யும் நேரத்தைப் பொருத்து நாம் பார்க்கும் 
 நாடகங்கள் மாறும். இரவு பயணம் செய்தால் இரவு காட்சியாக மேலே  பலகையில் சொல்லி இருக்கும் ஆவிகள் நாடகம் பார்க்கலாம். அது பயணகட்டணத்தில் சேர்ந்து இருக்கிறது. நாங்கள் காலை பயணம் செய்தோம் , "துப்பாக்கி சண்டை" பார்த்தோம்.

நாங்கள் பயணம் செய்த  வாகனம்

பின்னால் பயணக் கட்டணம் உள்ளது

இவர் வாகனத்தை ஓட்டிக் கொண்டே ஊரைப்பற்றி சொல்லி வந்தார். நாங்கள் தங்கிய வீட்டையும் காட்டி இது மிகவும்  பழைய  காலத்து வீடு என்று சொன்னார்.  இவரும் பழைய காலத்து உடை அணிந்து இருந்தார், தொப்பியை எடுத்து  பக்கத்தில் வைத்து விட்டார்.


தொடர்ந்து இது போன்ற வாகனங்கள் போய் கொண்டு இருந்ததால் எங்கள் வாகனத்தில் 7 பேர்கள் தான் பயணித்தோம். 


ஊரின் காட்சிகளை  போன பதிவில் பகிர்ந்து விட்டேன்.

இன்னொரு வாகனமும் ஊரைச்சுற்றி காட்டுகிறது.

நாங்கள்  பயணம் செய்தபோது அழகான ஒரே நிற கார்கள் கண்ணில் பட்டது . 

பழைய சரக்கு ரயில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.


அடுத்த பதிவில்  துப்பாக்கி சண்டை  நாடக காட்சிகள் பார்க்கலாம்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !

----------------------------------------------------------------------------------------------------

34 கருத்துகள்:

  1. படங்களும் தகவல்கலும் அருமைம்மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. முந்தைய பதிவுகளையும் பார்க்க வேண்டும். அப்போத் தான் புரியும். என்றாலும் ஓரளவு புரிந்தது. பின்னால் போய் மற்றவற்றையும் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      முந்தைய பதிவுகளையும் படித்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி.
      உடல் நிலை இப்போது நன்றாக இருக்கிறதா?
      அன்னை மனபலமும், உடல் நலமும் தந்து விட்டாள் என்று மகிழ்கிறேன்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. அன்பின் கோமதி மா,
    வாழ்க வளமுடன்.
    எல்லாப்படங்களும் மிக அருமை.
    பல கோணங்களில் படமாக்கி இருக்கிறீர்கள்.

    இந்த ஊரின் செய்திகள் எல்லாமே
    அருமையாக இருக்கிறது.
    வரலாற்றின் பழைய ஏடுகள்
    இவ்வளவு சுவையாகச் சொல்லப் படும் என்றால்
    அனைவரும் சரித்திரம் படிக்க அஞ்ச மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

      //எல்லாப்படங்களும் மிக அருமை.
      பல கோணங்களில் படமாக்கி இருக்கிறீர்கள்.//

      நன்றி அக்கா.

      //இந்த ஊரின் செய்திகள் எல்லாமே
      அருமையாக இருக்கிறது.
      வரலாற்றின் பழைய ஏடுகள்
      இவ்வளவு சுவையாகச் சொல்லப் படும் என்றால்
      அனைவரும் சரித்திரம் படிக்க அஞ்ச மாட்டார்கள்//

      நீங்கள் இன்னும் சுவையாக சொல்வீர்கள்.


      உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.




      நீக்கு
  4. பழைய கால வண்டிகளும் மனிதர்களும்
    அசல் பொம்மை விடிவாகத் தெரிகிறார்கள்.
    சரித்திரம் அழியாமல் அங்கே நிற்பது போல
    ஒரு தோற்றம்.
    அற்புதமான படங்களும் விவரங்களும் .
    அன்பின் கோமதிமா மிக அருமை.

    அந்த ரயில் வண்டி ஆச்சரியப் படுத்துகிறது.
    ரயில் கொள்ளைகளும் அப்போது சகஜம் தானே!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பழைய கால வண்டிகளும் மனிதர்களும்
      அசல் பொம்மை விடிவாகத் தெரிகிறார்கள்//

      சினிமாவில் பார்த்து இருப்போம், அவர்கள் நடப்பது, பார்ப்பது, பேசுவது அப்படியே இங்கே பார்த்தோம். என்ன படம் எடுக்க விரும்புகிறாயா? என்று கேட்டு விட்டு ஒரு வெடிச்சிரிப்பு .

      சரித்திரம் அழியாமல் பாதுகாத்து கொண்டு இருக்கிறார்கள் அந்த இடத்தில்.
      ரயிலில் தானே அந்தகாலத்தில் முதன் முதலில் இங்கு வந்தார்கள் கால்நடைகளை கவர்ந்து கொண்டும், கால்நடைகளை மேய்க்கவும் வந்தார்கள் என்கிறார்கள்.

      ரயில் கொள்ளைகளும் உண்டுதான்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. கோமதிக்கா படங்கள் எல்லாம் வெகு அருமை வழக்கம் போல்.

    குதிரை வண்டிகள் அங்கு சில கிராமங்களில் பயன்படுத்துகிறார்கள்...இதைப் பார்த்ததும் அங்கு இதை மட்டுமே பயன்படுத்தும் கிராமங்கள் பற்றித்தான் நான் 2013ல் எழுதத் தொடங்கி அப்படியே விட்டதை முடித்து பதிவு போட வேண்டும் என்று. இன்று மகனுடன் பேசும் போது அவன் சொன்ன சில விஷயங்கள் நான் வெளியிடாமல் வைத்த பதிவு பற்றிய நினைவு வந்தது. தேடி எடுத்துவிட்டேன் பார்த்தால் இங்கும் அப்படியான ஒரு படம்.

    டோம்ப்ஸ்டோன் அப்படியான ஒரு இடமோ என்று பார்த்தால் மோட்டார் வாகனம் பார்த்ததும் அது இல்லை என்று தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
      பழனியில் இன்னும் குதிரை வண்டிகள் இருக்கிறது.
      காசியில் இன்னும் இது போன்ற வண்டிகள் இருக்கிறது.
      ஆனால் இங்கு உள்ள குதிரைகள் போல வாட்டசாட்டமாக இருப்பது இல்லை, மெலிந்த தோற்றத்தில் காணப்படும்.
      விட்டதை எழுதி பதிவு செய்யுங்கள்.

      நீக்கு
  6. ஊர், குதிரைவண்டிகள் எல்லாம் மிக அழகாக இருக்கிறது அக்கா.

    இரவு பயணம் செய்தால் இரவு காட்சியாக மேலே பலகையில் சொல்லி இருக்கும் ஆவிகள் நாடகம் பார்க்கலாம். //

    ஹாஹாஹா அக்கா நான் இது பார்க்க விரும்புவேன்!!!! சுவாரசியமாக இருக்கும் எப்படி நாடகமாகப் போடுகிறார்கள் என்று பார்க்க ஆவல். இணையத்தில் இருக்கிறதா என்று பார்க்கிறேன்.

    துப்பாக்கிச் சண்டைக் காட்சிகளைப் பார்க்க ஆவல் தொடர்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஊர், குதிரைவண்டிகள் எல்லாம் மிக அழகாக இருக்கிறது அக்கா.//
      ஆமாம் கீதா. அழகுதான்.

      //ஹாஹாஹா அக்கா நான் இது பார்க்க விரும்புவேன்!!!! சுவாரசியமாக இருக்கும் எப்படி நாடகமாகப் போடுகிறார்கள் என்று பார்க்க ஆவல்.//

      எங்களுக்கும் ஆசை இருந்தது, ஆனால் வெகு தூரம் பயணம் செய்து வந்த காரணத்தால் இரவு ஓய்வு எடுத்தால்தான் நல்லது என்பதால் பார்க்கவில்லை.

      //துப்பாக்கிச் சண்டைக் காட்சிகளைப் பார்க்க ஆவல் தொடர்கிறேன்//

      அவர்கள் பேசி கொண்டே இருக்கிறார்கள் ஆங்கில படத்தில் பேசுவது போல !
      நடாகத்தின் இறுதியில் தூப்பாக்கி சூடு ஓரளவு சின்ன சின்ன காணொளி எடுத்தேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.




      நீக்கு
  7. படங்களே ஊரைப்பற்றிச் சொல்லிவிடுகின்றன. அத்தனை நேர்த்தியாக எடுத்துள்ளீர்கள் சகோதரி.

    பழமையான ஊர் பற்றி எல்லாம் தெரிந்து கொள்வது ஒரு சுவாரசியம்தான். அதுவும் உங்களைப் போன்றோர் நேரில் கண்டு எடுத்த படங்களோடு சொல்வதால்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன் , வாழ்க வளமுடன்

      படங்களை பாராட்டியதற்கு நன்றி.

      பழமையான இடங்கள் பார்க்க வேண்டியது நிறைய இருக்கிறது. மகன் மூன்று முரை வந்து விட்டான், இன்னும் இந்த இடத்தில் பார்க்காதவை இருக்கிறது என்கிறான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்களும் மிக அழகாக எடுத்துள்ளீர்கள். பழைய கால குதிரை வண்டிகள் ராஜா காலத்து சார்ட் வண்டிகள் போல அழகாக உள்ளது. நீங்கள் பயணம் செய்த பேருந்தும் நல்ல விஸ்தாரமாக உள்ளது. உள்ளே ஏழு பேர்கள்தான் சென்றீர்களா? ஒரு வேளை இது போல் நிறைய வாகனங்கள் இருந்ததினால் அதிக பேர்களை ஏற்றிச் செல்லாமல் செல்கிறார்களோ ? அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான். ஊரைப்பற்றி வாகனம் ஓட்டுபவர் சொல்வதை கேட்டபடி நிம்மதியாக பயணிக்கலாம். அந்த ஊரைப் பற்றிய அத்தனை தகவல்களும் சுவாரஸ்யமாக உள்ளது. அடுத்தப்பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. படங்களும் மிக அழகாக எடுத்துள்ளீர்கள்//

      நன்றி.

      //பழைய கால குதிரை வண்டிகள் ராஜா காலத்து சார்ட் வண்டிகள் போல அழகாக உள்ளது//

      ஆமாம்.


      //உள்ளே ஏழு பேர்கள்தான் சென்றீர்களா? ஒரு வேளை இது போல் நிறைய வாகனங்கள் இருந்ததினால் அதிக பேர்களை ஏற்றிச் செல்லாமல் செல்கிறார்களோ ?//

      இருக்கலாம். இரண்டு பேர் அமரும் இருக்கைகள் உள்ளது ஆனால் ஒருவர் தான் அமர வேண்டும் என்று சொல்கிறார்கள்.முதலில் வந்து அமர்ந்த எங்கள் நல்வாருக்கும் கதை சொல்ல ஆரம்பித்து விட்டார், பின்னால் வந்த மூவருக்கும் திரும்ப சொல்லவில்லை. அவர் சொல்லி கொண்டு இருந்த இடத்திலிருந்துதான் அவர்கள் கேட்டார்கள்.

      நிறைய படங்கள் இருக்கிறது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வலை ஏற்றி சொல்லி வருகிறேன். தொடர்ந்து போடவும் முடியவில்லை.

      உற்சாகம் தரும் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. படங்களைப் பார்க்கும்போது அந்தக்காலத்துக்கே சென்று வந்தோம். நன்கு பேணுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //நன்கு பேணுகிறார்கள்.//

      அந்த ஊர் சுற்றுலா வரும் அன்பர்களை நம்பி இருக்கிறது.
      தங்கள் ஊரை அழகாய் காட்சி படுத்தி காட்டுகிறார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. அந்த காலத்து வண்டிகளின் அழகே அழகு...

    அப்படியானவை தானே பல்வேறு கால கட்டங்களில் உருமாறி இன்றைய நாகரிக வடிவங்களை அடைந்துள்ளன...

    பழை விரும்பிகளுக்கு அட்டகாசமான விருந்து..

    பழைமையின் படங்களுடன் சிறப்பான பதிவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்


      அந்த காலத்து வண்டிகளின் அழகே அழகு...

      //அப்படியானவை தானே பல்வேறு கால கட்டங்களில் உருமாறி இன்றைய நாகரிக வடிவங்களை அடைந்துள்ளன...//

      ஆமாம்.

      பழை விரும்பிகளுக்கு அட்டகாசமான விருந்து..//
      ஆமாம்.

      பழைமையின் படங்களுடன் சிறப்பான பதிவு //

      நன்றி.



      நீக்கு
  11. 15/20 வருடங்களுக்கு முன்பு கூட சுற்றுலா பயணியர்களைக் கவர்வதற்காக சாரட் வண்டிகள் சுற்றிக் கொண்டிருந்தன..

    இப்போது அவை எங்கு போயின என்று தெரியவில்லை..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் காசி , டெல்லி ஆகிய இடங்களில் இந்த பழைய வண்டிகள் இருக்கிறது.

      மாப்பிள்ளை அழைப்புக்கு முன்பு சாரட் வண்டியில் வைத்து அழைத்து வருவார்கள் நம்மூர் பக்கம்.

      பழனியில் பழைய குதிரை வண்டிகள் இன்னும் இருக்கிறது. இது போன்ற சாரட் வண்டி இல்லை.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  12. படங்கள் அருமை.  அந்தக் கால வண்டி அமைப்பில் பயணம் செய்வது சுவாரஸ்யம்.  இரவு நேரத்தில்தான் ஆவி நாடகம் காணக்கிடைக்குமா?  பகல் நேரத்தில் பார்க்க முடியாதா?  அநியாயம்! !  வண்டி ஓட்டுபவர் ஹேர்ஸ்டைலும் பழங்காலத்து பாணியிலேயே இருக்கிறது போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //படங்கள் அருமை.
      நன்றி.


      //அந்தக் கால வண்டி அமைப்பில் பயணம் செய்வது சுவாரஸ்யம்//

      இரண்டு மூன்று மூறை இதே போன்ற வண்டியில் பயணம் செய்து இருக்கிறோம். அதனால் இந்த முறை அதில் போகவில்லை.

      //இரவு நேரத்தில்தான் ஆவி நாடகம் காணக்கிடைக்குமா? பகல் நேரத்தில் பார்க்க முடியாதா? அநியாயம்! ! //

      ஆவிகள் இரவுதானே வரும் ! பகைலில் பார்க்க முடியாது இல்லையா! அதனால் இரவு தான் ஆவி நாடகம் போல!


      //வண்டி ஓட்டுபவர் ஹேர்ஸ்டைலும் பழங்காலத்து பாணியிலேயே இருக்கிறது போலும்.//

      ஆமாம். அப்போதுதானே பழைய காலத்தில் பயணம் செய்வது போலவே கற்பனை செய்து கொள்ள முடியும்.




      நீக்கு
  13. நீங்கள் சென்று வந்த இடங்களில் இது ரொம்ப சுவாரஸ்யமான இடம் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது சரிதான், பழங்குடியினர் வாழ்ந்த இடம், சரித்திரத்தில் இடம்பெற்ற மக்கள் வாழ்ந்த இடம் பார்ப்பது சுவாரஸ்யம் தான்.

      நீக்கு
  14. அந்தக் மூடு குதிரை வண்டிகள் இப்போது பழமையாய் இருந்தாலும், அந்தக் காலத்தில் அவை எவ்வளவு நாகரீகமாகக் கருதப்பட்டிருக்கும்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அப்போது அது நாகரீகமாக மேல் தட்டு மக்கள் மட்டுமே பயணம் செய்த காலமாக இருந்து இருக்கிறது.

      நீக்கு
  15. அழகான படங்கள் மூலம் ஊரைப் பற்றிய தகவல்களை அறிய முடிகிறது... அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      அந்த ஊரில் பழமை காக்கப்படுவதை காட்சி படுத்த எனக்கு நான் எடுத்த படங்கள் உதவுகிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. தெள்ளத்தெளிவான அழகான படங்கள். அந்த குதிரை வண்டியை கோச் வண்டி என்பார்கள் இல்லையா? நம் ஊரில் இப்போது பாரம்பரியத்தை போற்றும் விதமாக ரிஸார்டுகள் வருகின்றன. அங்கெல்லாம் இப்படிபட்ட வண்டிகளை வைக்கலாம். நீங்கள் கோச் வண்டியில் பயணிக்கவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      தெள்ளத்தெளிவான அழகான படங்கள்.//

      நன்றி.

      //அந்த குதிரை வண்டியை கோச் வண்டி என்பார்கள் இல்லையா? நம் ஊரில் இப்போது பாரம்பரியத்தை போற்றும் விதமாக ரிஸார்டுகள் வருகின்றன.//

      ஆமாம், 2015ல் மகன் இந்தியா வந்த போது கும்போணம் அருகில் இப்படி பட்ட ரிஸார்டில் தங்கினோம்.

      கோச் வண்டியில் முன்பு செய்து இருப்பதால் இந்த முறை பயணம் செய்யவில்லை.

      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  17. படங்களும் தகவல்களும் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா. பழமையை பாதுகாத்து காட்சியாக்கும் அவர்களது செயல் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //படங்களும் தகவல்களும் சிறப்பு.//
      நன்றி.


      //பழமையை பாதுகாத்து காட்சியாக்கும் அவர்களது செயல் சிறப்பு.//

      ஆமாம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு