சனி, 1 ஜூலை, 2017

குன்றத்தூர் உதயகிரீசுவரர் கோயில்

மதுரையிலிருந்து சிவகங்கை சாலையில்  25 கி.மீ தூரத்தில்  இருக்கிறது குன்றத்தூர். போன வருடம் (2016) போய் இருந்தோம்.  தொல்லியல் துறை பொறுப்பில் உள்ளது. குன்றத்தூர்  உதயகிரீசுவரர் கோவில் அருகில்   உள்ள மலைக்குகைகுள் இருக்கும்  பைரவர் பற்றிக் கேள்விப்பட்டு  தேய்பிறை அஷ்டமிக்கு பைரவர் தரிசனம் செய்யலாம் என்று போனோம்.  அங்கு சமணப்படுக்கையும்,  பிராமிக் கல்வெட்டுக்கள், முருகன் கோவிலும் இருக்கிறது.

நாங்கள் போன போது  நிறைய கூட்டம் வந்து இருந்தது , எல்லோரும் மதுரையிலிருந்து ஒரு  குழுவாய்  சேர்ந்து வந்து இருந்தார்கள்.

இக் கோவிலைப்பற்றி  மேலும் விவரம் தெரிந்து கொள்ள டாக்டர் சுபாஷினி அவர்களின் காணொளியைப்  பார்க்கலாம்.(Dr.K. Subashini)



கிழக்குத் திசை நோக்கி இருக்கும் சிவன்- வாயிலில் துவாரபாலகர்கள் 
நந்தி பிற்காலத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது என்கிறார்கள்.. தூணில் தாமரைப் பூ விரிந்த நிலையில் இருக்கிறது.

இவர்தான் இந்த கோவில்களைப் பார்த்து கொள்கிறார், மேலே இருப்பவர்களைப் பற்றி கடைசிக்கோவில் போகும்போதுதான் கேட்டுத் தெரிந்து கொண்டோம்.

சதுர வடிவ ஆவுடையாருடன்   சிவலிங்கம்

இரண்டு கைகளுடன் நின்ற நிலையில் விநாயகர் சிலை -முற்றுபெறவில்லை
பக்கத்தில் இயற்கை சுனை நீர்
சமணக்குகை செல்லும் பாதை

உள்ளே சமணப்படுக்கை
மலைக் குகைக்குள்
கீழே குனிந்து போக வேண்டும்
சமணப்படுக்கைகளில் இப்போது சாமான்கள் வைக்கப்பட்டுள்ளன.

கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்த கோபாலன் போல் என்னவர்
நாங்கள் அமர்ந்து இருக்கும் இடத்தில் ஆடுபுலி ஆட்டம், பாதங்கள் எல்லாம் வரையப்பட்டு இருக்கிறது.
மலைக்குகைகுள், பைரவர், முருகன், பெருமாள், சிவன் எல்லோரும் இருக்கிறார்கள்


இந்தக் கோவிலுக்கு வரும் பாதையில் அழகான மரக் குகை  போன்ற தோற்றம் அளிக்கும் மரக்கூடாரம்.

மலைக்குகைக்குள் இருக்கும் தெய்வங்கள்  பற்றி அடுத்த பதிவில்.
                                                           வாழ்க வளமுடன்!

33 கருத்துகள்:

  1. ஸ்ரீராம். has left a new comment on your post "குன்றத்தூர் உதயகிரீசுவரர் கோயில்":

    இந்த இடம் போனதில்லை. ஒருமுறை சென்று பார்க்கவேண்டும்! கோவர்தனகிரியை குடையாகப் பிடித்த ஸார் நிற்கும் போட்டோ சூப்பர்.

    தம +1

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    அலைபேசியிலிருந்து உங்கள் பின்னூட்டத்தைப் பர்த்தேன், உடனே பப்ளிஷ் செய்தும் போகாமல் இப்படி வந்து விட்டது.
    .The comment doesn't exist or no longer exists.மன்னிக்கவும்
    உங்கள் கருத்தை எடுத்து ஒட்டி இருக்கிறேன்.
    சாரிடம் சொல்லி விட்டேன்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அனைத்துப் படங்களும் பல்வேறு செய்திகளும் அருமையோ அருமை !

    ’சுனைநீர்’ குடிக்க மிகவும் சுவையாக இருக்கும் எனக் கேள்விப்பட்டுள்ளேன்.

    //கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்த கோபாலன் போல் என்னவர்//

    படமும், அதற்கானத் தங்களின் கற்பனை வரிகளும் மிகவும் பொருத்தமாக உள்ளன. :)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. அழகான இடம் இயற்க்கை நமக்கு தந்த பரிசு. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார்,
    படங்களையும், செய்திகளையும் ரசித்து கருத்து சொன்னதற்கு
    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    இயற்கை தந்த பரிசு தான் அந்த இடம்.
    அமைதியான அழகான இடம்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அருமையான புகைப்படங்களும்
    விளக்கங்களும் நேரடியாகப் பார்க்கிற
    அனுபவத்தைத் தருகின்றன
    மதுரை சொந்த ஊராக இருந்தும்
    இதுவரை இந்தக் கோவில் பற்றி
    அறியாதிருப்பது மனம் வருத்தம் தந்தது
    இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள
    இணைப்பினைக் கொடுத்திருப்பது சிறப்பு
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
    எதற்கு வருத்தப்பட வேண்டும்? நமக்கு தெரியாத இடங்கள் நிறைய இருக்கும்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி .




    பதிலளிநீக்கு
  9. padangkaLudan pakirvu azagu. Athilum Gopalar photovukkana comment sema azagu :) <3

    பதிலளிநீக்கு
  10. எவ்வளவு அழகான இடம். குனிந்து நிமிர்ந்துபோனாலும், உதயகிரீசுவரர் தரிசனமும், சமணப் படுகைகளும், அழகான, சிறிதாக இருந்தாலும் குடவரைக் கோவிலும், மனதில் பளிச்சிடுகிறது. நிஜமாகவே குடையாகப் பிடித்தது போன்ற படமும், மிகவும் நன்றாக வந்துள்ளது. தேடினாலும் கிடைக்காத கோயில்கள். அருமையான விஷய தானம். நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  11. குன்றக்குடி போனதுண்டு ,குன்னத்தூர் இனிமேல்தான் போகணும் :)

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்.
    பகிர்வை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
    ஒவ்வொன்றையும் ரசித்து அழகாய், அன்பாய் கருத்து சொன்னதற்கு நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் பகவான்ஜி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வரலாற்று சின்னங்களை அழகு குறையாமல் பதிவு செய்கின்றீர்கள்..
    வரலாற்றை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்துப் படித்தவர் அல்லவா தங்கள்!..

    தங்களால் புதிய இடத்தைக் கண்டு கொண்டேன்.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  16. புதியதோர் இடத்தைப் பற்றித் தெரிந்து கொண்டோம். என்ன அழகு இல்லையா??!!! ஒரு அழகான கோயில், இடம் பற்றித் தெரிந்து கொண்டோம்மிக்க நன்றி கோமதி சகோ/அக்கா

    துளசி, கீதா

    பதிலளிநீக்கு
  17. புகைப்படங்களும் வர்ணனையும் அருமை!

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.
    அடுத்தும் மூன்று கோவில்கள் தொடர்ந்து வருகிறது கீதா, துளசிதரன் வாருங்கள்
    உங்கள் இருவர் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் அவற்றின் சிறப்புகளையும் உங்கள் தயவால் அறிந்துகொள்ளமுடிகிறது. நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் கீதமஞ்சசி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. பல புதிய இடங்களை உங்கள் வாயிலாக பார்க்க முடிகிறது...அதில் இன்று

    குன்றத்தூர் உதயகிரீசுவரர் கோயில் என்பதில் மகிழ்ச்சி அம்மா..

    படங்களும் அழகு...

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி அனு.

    பதிலளிநீக்கு
  24. படம் ஒவ்வொன்றையும் மிகவும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  25. படங்கள் அழகு
    அவசியம் ஒரு முறை சென்று பார்க்கவேண்டும்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    அடுத்த பதிவு போட்டு விட்டேன். ஊரில் இல்லையா?
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் நண்பர்களையும் அழைத்து செல்லுங்கள் , கூட்டமாய் போனால் தான் இந்த இடங்களுக்கு நன்றாக இருக்கும் தனிமையான இடம்.
    நாங்கள் தனியாக சென்றோம், மதுரையிலிருந்து வக்கீல்கள் நிரைய பேர் குடும்பத்தினருடன் வந்து இருந்ததால் பயமில்லை.

    பதிலளிநீக்கு
  28. மலை குகை கோவில்கள் என்றாலே நிறைந்த அழகுதான்.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
    நலமா? உங்கள் பெண் நலமா?
    எவ்வளவு நாட்கள் ஆகி விட்டது உங்களை பார்த்து!
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. உதயகிரீஸ்வரரையும் பார்த்தாச்சு. குன்றத்தூர் இங்கே இருந்தும் பக்கம் தான்னு நினைக்கிறேன். சுபாஷிணியின் காணொளியையும் பார்த்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் புலவர் ஐயா, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு