செவ்வாய், 20 மே, 2014

இறைவன் படைப்பில் அதிசயங்கள்!

எறும்பைப் பற்றி சிறு வயதில் படித்த கதை நினைவு இருக்கும் எல்லோருக்கும்.தண்ணீரில் தத்தளித்த எறும்புக்குப் புறா மரத்திலிருந்து இலையைப் பிய்த்துப் போட, எறும்பு அதைத் தெப்பமாய் உபயோகித்துத் தப்பித்தது.தப்பித்த எறும்பு புறாவை வேட்டையாட வந்த வேடன் காலில் கடித்து  புறாவைக் காப்பாற்றியது என்று கதை.. பிறருக்கு உதவும் மனப்பான்மைக்கும், செய்நன்றி மறவாமல் இருக்கவும் சொல்லப் பட்ட கதை. 

எறும்பு பூஜித்த கோவில் - எறும்பீஸ்வரர் கோவில் திருவெறும்பூரில் இருக்கிறது. 

இப்போது என்ன இந்த எறும்பு பற்றி சொல்கிறேன் என்றுபார்க்கிறீர்களா?

கோவையில் இந்தமுறை போன போது  எங்கள் வீட்டுஅருகில் இருந்த புங்கமரத்தில் வித்தியாசமாய் இருந்த காய்ந்த இலையின் மொத்த சேகரிப்பை பார்த்தேன் . அது என்ன என்று பார்க்கும்போது தான் தெரிந்தது, அவை எறும்புக் கூடு என்று . பின் எப்படி கட்டுகிறது என்று தினம் தினம் பார்த்துக் கொண்டு இருந்தேன்.  அதைப் படிப்படியாக எடுத்து இங்கு கொடுத்து இருக்கிறேன். எங்கள் வீட்டில் அருகில் உள்ள வேப்ப மரம். மற்றும் தூங்குமூஞ்சி மரத்திலும் கூடு கட்டி உள்ளது   எறும்பு.
 
                          என்னைக் கவர்ந்த காய்ந்த இலையின் சேகரிப்பு.

ஊரிலிருந்து விடுமுறைக்கு வந்த ஓர்ப்படியின் பேத்தியும்(சிறுமி) என்னுடன் வெகு ஆர்வமாய்  எறும்பு ஆராய்ச்சி செய்ய உதவினாள். தூங்குமூஞ்சி மரத்தில் இருக்கும் கூட்டை அவள்தான் மொட்டைமாடியில் போய் பார்த்து வந்து ,’ காமிராவை எடுத்துக் கொண்டு வா ஆச்சி வந்து பார் இங்கும் கூடு கட்டி இருக்கு’ என்றாள்,போய்ப்  பார்த்தால் அதுவும் எறும்புக் கூடுதான் அதுவும்  புங்க மரத்தில் இலையால் கூடு கட்டிய அதே எறும்பு  வகை தான். பின் வேப்பமரத்தை பார்த்தால் அதிலும் கட்டி இருப்பது தெரிந்து கொண்டேன்.

தரையில் நிமிசமாய் மண்ணைக் குவித்து வைக்கும் எறும்புப் புற்றையும், செடிகளில் வெண் பஞ்சாய் கூடு வைத்து செடியை சாகடிக்கும் எறும்புகளை பார்த்து இருக்கிறேன். இப்படி இலைகளை மடித்து கூடு கட்டும் எறும்பை இப்போது தான் பார்த்தேன்.

அமெரிக்கா போனபோது ஒரு படகுத் துறைக்கு அருகில் இருந்த மரத்தில் குளவி இலைகளால் கூடு கட்டியதை பார்த்தேன். அதை என் மருமகள் எடுத்த படம் கீழே பகிர்ந்து இருக்கிறேன் .



என்  சின்னக் காமிராவில் எடுத்த படம்

                 
           குளவி கூடு கட்டி உள்ள மரங்கள் அடர்ந்த பகுதியில் பரிதியின் ஒளி  

கோவையில் எடுத்த எறும்பு கூடு உருவாகும் படங்கள் பின் வருவது. இது நான் எடுத்த படங்கள்.
                   



               ஒன்றுக்கு ஒன்று பேசிக்கொண்டு வேலை பார்க்கும் அழகு.

இறைவன் ஒவ்வொரு உயிருக்கும் எவ்வளவு அறிவைக் கொடுத்து இருக்கிறான் என்று வியந்து பார்க்க வைக்கும் காட்சி
மடித்துத் தைக்கும் அழகு. தையல் குருவி இரண்டு இலைகளை தைக்குமே அது போல்
இலைகளில் மடிப்பு இடையே வெண் இழைகள்

பஞ்சு போன்ற இழைகளால்  இலைகளை மடித்து பொட்டலம் போல் கட்டும் விந்தை
புங்கமரத்து இலைகளையும்  கிளைகளையும்இணைத்து கட்டும் எறும்புகள்

தூங்குமூஞ்சிப் பூவின் காய்ந்த கொப்பை சேர்த்த்து இழை பின்னி , பின் இலைகளை இணைக்கிறது கூடாய்



தூங்கு மூஞ்சி மரத்தின் பூ, இலைகள் மாலையில் மூடிக் கொண்டாலும் விழித்து இருக்கும் பூ.
வேப்பமரத்தில் வேப்பமர இலைகளால் கட்டிய கூடு
என் பேரன் அடிக்கடி பார்க்கும் அனிமேஷன்  படம்- ’Bug's life ’  நானும் அதை அவனுடன் விரும்பிப் பார்ப்பேன். எறும்பு சுறு சுறுப்பு என்றுதான் தெரியும் ஆனால் அதன் வாழ்க்கை எவ்வளவு கஷ்டமானது,  பிற உயிரினங்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள எவ்வளவு கஷ்டப்படுகிறது,  உணவை சேகரிக்க எத்தனை பாடு படுகிறது என்று எல்லாம் அழகாய் காட்டும் படம்.

அது போல் புங்க மரத்தில் கூடு கட்டும் எறும்புகளின் உழைப்பைப் பார்த்தேன். இலைகளில் விலக்கி, சரியாக பார்க்க முற்பட்ட போது அவை அங்கும் இங்கும் கலைந்து பின் மறுபடியும் தன் வேலையில் கண்ணும் கருத்துமானதை பார்க்கும் போது எறும்புகளின் மேல் தனிப் பாசமே வந்து விட்டது.
நம்மிடம் எறும்புகள் போல் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால்    எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். சின்ன வேலையில் இடைஞ்சல் வந்தால் எவ்வளவு கோபம், எவ்வளவு மனத்துயர் படுகிறோம். எறும்பு போல் விடாமுயற்சியும், சுறுசுறுப்பும், தன்னம்பிக்கையும் உள்ளவர்களின்    வாழ்வில் வெற்றி நிச்சயம்! 

                                                         வாழ்க வளமுடன்!



83 கருத்துகள்:

  1. ஹைய்யோ!!!! எவ்வளவு நுணுக்கமான வேலை! அதை நீங்கள் படம் எடுத்துப்போட்ட விதம் சூப்பர்!

    இனிய பாராட்டுகள்.

    எறும்பின் சைஸுக்கு அதன் குட்டி மூளைக்குள் என்னமா சிந்திக்குது பாருங்க!!!!

    கடந்த 27 வருசங்களில் நம்ம வீட்டில் முதல்முறையா எறும்பு வந்துருக்கு. நம்மூர் பிள்ளையார் எறும்பில் மூணில் ஒரு வீதம் சைஸ். கடிப்பதில்லை. கையில் ஊறி நடக்கும் போதும் நமக்கு ஒரு ஃபீலும் இல்லாம நடக்குது.

    இந்த எறும்பு நியூஸிக்குப் புதுசுன்னு நினைக்கிறேன். சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பழம்/காய்கறிகளில் ஒளிஞ்சுவந்துருக்குதோ என்னவோ?

    இன்னும் அரசு இதைக் கவனிக்கலையோன்னு இருக்கு. இருந்தால் தொலைக்காட்சியில் வந்துருக்கணுமே!

    பதிலளிநீக்கு
  2. அழகான படங்கள்... முடிவில் சொன்னது 100% சர்வ நிச்சயம்...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் துளசி , வாழ்க வளமுடன்.
    முதலில் வந்து அழகான பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி.

    நான் இப்போது தான் எங்கள் வீட்டு(கோவையில்) பக்கத்தில் உள்ள மரத்தில் பார்க்கிறேன் முன்பு எல்லாம் பார்த்தது இல்லை.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும், நன்றி துளசி.
    ஊருக்கு அடிக்கடி போவதால் உங்கள் பதிவுகள் நிறைய இருக்கு படிக்க படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் தனபாலன், வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும்,கருத்துக்கும் நன்றி.
    பதிவிம் முடிவில் சொன்னது உங்களுக்கு பொருந்தும்.
    அவ்வளவு சுறு சுறுப்பு தன்னம்பிக்கை, உதவும் மனம் எல்லாம் சேர்ந்த உழைப்பால் வெற்றி கனியை எட்டி பறித்தவர். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. இயற்கையின் படைப்பில் எத்தனை எத்தனை அதிசயங்கள். நெய்வேலியில் மாமர இலைகளில் இப்படி சிகப்பு எறும்புகள் கூடு கட்டும். பழம் பறிக்க மாமரத்தின் மேல் ஏறும்போது உடம்பில் வீபூதி பூசிக்கொண்டு ஏறுவேன் - எறும்பு கடிக்காமல் இருக்க! :)

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.

    எங்கள் வீட்டில் (மதுரையில்) மாமரத்தில் கறுப்பு கட்டெறும்பு உண்டு ஆனால் கூடு பார்த்தது இல்லை அடுத்த முறை மதுரை போகும் போது பார்க்க வேண்டும்.நீங்கள் சொன்னது போல்
    முதலில் இயற்கையின் படைப்பில் அதிசயங்கள் தான் என்று வைத்தேன்,அப்புறம் இறைவன் படைப்பில் என்று வைத்து விட்டேன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. பார்த்து ரசித்திருக்கிறேன்..
    படம் எடுக்க முயன்றதில்லை..

    பதிலளிநீக்கு
  8. #எறும்பு போல் விடாமுயற்சியும், சுறுசுறுப்பும், தன்னம்பிக்கையும் உள்ளவர்களின் வாழ்வில் வெற்றி நிச்சயம்! #
    உண்மையான வார்த்தைகள் !நானும் அடிக்கடி எறும்புகளுடன்விளையாடுவது உண்டு ..நீங்களும் விளையாடிப் பாருங்களேன் ...சாரை சாரையாக செல்லும் எறும்பின் பாதையில் விரலால் தேய்த்து விடுங்க ,வழக்கமான பாதை அடைபட்டு விட்டது என்று எறும்புகள் முட்டி முட்டி பேசுவது போலிருக்கும் ...தரை அல்லது சுவர் முழுவதும் பரவி விடும் ...தற்காலிக3மாக ஒரு பைபாஸ் பாதையைப் போட்டு பழைய ரூட்டில் பயணத்தைத் தொடரும் ,சிறிதுநேரத்தில் பழைய பாதையைக் கண்டு பிடித்து பயணம் செய்ய ஆரம்பித்து விடும் !எறும்புகளின் புத்திக் கூர்மை வியக்க வைக்கிறது !
    த ம 3

    பதிலளிநீக்கு
  9. #எறும்பு போல் விடாமுயற்சியும், சுறுசுறுப்பும், தன்னம்பிக்கையும் உள்ளவர்களின் வாழ்வில் வெற்றி நிச்சயம்! #
    உண்மையான வார்த்தைகள் !நானும் அடிக்கடி எறும்புகளுடன்விளையாடுவது உண்டு ..நீங்களும் விளையாடிப் பாருங்களேன் ...சாரை சாரையாக செல்லும் எறும்பின் பாதையில் விரலால் தேய்த்து விடுங்க ,வழக்கமான பாதை அடைபட்டு விட்டது என்று எறும்புகள் முட்டி முட்டி பேசுவது போலிருக்கும் ...தரை அல்லது சுவர் முழுவதும் பரவி விடும் ...தற்காலிக3மாக ஒரு பைபாஸ் பாதையைப் போட்டு பழைய ரூட்டில் பயணத்தைத் தொடரும் ,சிறிதுநேரத்தில் பழைய பாதையைக் கண்டு பிடித்து பயணம் செய்ய ஆரம்பித்து விடும் !எறும்புகளின் புத்திக் கூர்மை வியக்க வைக்கிறது !
    த ம 3

    பதிலளிநீக்கு
  10. அதிசயம், ஆச்சரியம். /இப்படி இலைகளை மடித்து கூடு கட்டும் எறும்பை இப்போது தான் பார்த்தேன்./
    உங்கள் பகிர்வின் மூலமே அறிகிறேன். சிரத்தையுடன் கவனித்துப் படிப்படியாக படங்கள் எடுத்து எங்களுக்குக் காணத் தந்திருக்கிறீர்கள். சிறு வயதில் எறும்பு வரிசையைத் தொடருவதுண்டு:). அவற்றிடம் கற்றிட எத்தனை நற்பண்புகள்!

    அருமையான பதிவு.




    பதிலளிநீக்கு
  11. தங்களின் ஆர்வமும் உழைப்பும் படங்களில் தெரிகின்றது.

    இந்த இளஞ்சிவப்பு எறும்புகள் (நெருப்பெறும்புகளைப் போல) சுரீர் என கடிப்பதில்லை. பிள்ளையார் எறும்புகளுக்கு அடுத்த படியாக சாதுவானவை. பூவரசு இலைகளின் ஊடாகவும் தங்களின் கை வண்ணத்தைக் காட்டுவன.

    தூங்கு மூஞ்சி மரத்தில் இரட்டை நிறங்களுடன் மிக சுறுசுறுப்பாக ஒரு வகை எறும்பு இருக்கின்றது. அது கடிப்பதற்கென்றே அலைபவை. கடித்தாலும் நாள் முழுதும் தடித்து எரிச்சல் தாங்க முடியாததாக இருக்கும்.

    பதிவின் இறுதியில் - தாங்கள் குறிப்பிட்டு இருப்பதே சிகரம்.

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  12. ஆச்சர்யம்! இப்போதுதான் அதீதம் இதழில் வந்த தையல்காரக் குருவி பற்றியும், அது கூடு கட்டும் விதம் பற்றியும் (இந்த எறும்புகள் போலவே இலையை மடித்து, அதனுள் பஞ்சு வைத்து!) படித்து வியந்தேன். அந்த வியப்பு மறைவதற்குள், இங்கே உங்கள் எறும்புகள் இலையில் கூடு கட்டும் அழகு!

    அதீதம் இணைப்பு: http://www.atheetham.com/?p=6556

    @துளசி, எங்கள் ஊரில் நீங்கள் சொல்வதுபோல இத்துனூண்டு எறும்பு உண்டு. தொட்டுவிட்டால் சகிக்க முடியாத நாற்றம்! இவற்றை வாசனை எறும்பு என்பார்கள் இந்த ஊரில். அதுவா இது என்று தொட்டுப் பாருங்கள்


    பதிலளிநீக்கு
  13. //நம்மிடம் எறும்புகள் போல் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். சின்ன வேலையில் இடைஞ்சல் வந்தால் எவ்வளவு கோபம், எவ்வளவு மனத்துயர் படுகிறோம். எறும்பு போல் விடாமுயற்சியும், சுறுசுறுப்பும், தன்னம்பிக்கையும் உள்ளவர்களின் வாழ்வில் வெற்றி நிச்சயம்! //

    அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    படங்களும் விளக்கங்களும் மிகவும் அருமை.

    பொறுமையாக எறும்பைப் போல சுறுசுறுப்பாக சேகரித்துக் கொடுத்துள்ள செய்திகள் வியக்க வைக்கின்றன. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாலே முக்கால் ஆண்டுகள் ஆகியும், எனக்கு மட்டும் தாங்கள் ஏனோ பதில் அளிக்கவே இல்லை. :)))))))

      நீக்கு
    2. வணக்கம் வை. கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
      தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
      எப்படி விட்டு போனது என்று தெரியவில்லை, மன்னிக்கவும்.
      கோவையில் இருந்த போது போட்ட பதிவு.
      சரியாக போடாமல் விட்டு இருக்கிறேன்.
      மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

      நீக்கு
    3. சரியாபார்க்காமல் விட்டு இருக்கிறேன்.

      நீக்கு
    4. அதனால் பரவாயில்லை மேடம். இதெல்லாம் எல்லோருக்குமே சகஜம்தான். வாழ்த்துகள்.

      நீக்கு
  14. வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. படங்களைக் கண்டு மனம் சிலிர்த்துப் போனது தோழி மிக மிக அற்புதமாகப்
    படம் பிடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் .த.ம .3

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் வடுவூர் குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. தனித்துவம் இல்லாத உயிர்களே இயற்கையின் படைப்பில் இல்லை. என்பதை அழகான படங்களோடு எடுத்துரைத்தீர்கள்.

    நன்று.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் பகவான் ஜி, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது சரியே எறும்பின் புத்திக்கூர்மை, பார்வைத்திறன் வாசனைக்கண்டுபிடிப்பு எல்லாம் வியக்கத்தான் வைக்கிறது. எறும்பின் பாதையில் சென்று எந்த டப்பாவுக்கு போகிறது என்று தொடர்ந்து போய் அதன் செயல்பாட்டை கண்டு வியந்து இருக்கிறேன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் ராமல்க்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் எறும்புகளிடம் கற்றிட நற்பண்புகள் நிறைய இருக்கிறது.
    உங்கள் வரவுக்கும் அருமையான கருத்துக்கும் நன்றி.
    சார் sony 20 optical zoom வாங்கி தந்தமையால் இப்போது தூரத்தில் உள்ளதையும் என் விருப்பம் போல் எடுக்க முடிகிறது.
    நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.
    உங்களை நேரில் பார்க்கும் போது கொஞ்சம் கற்றுக் கொள்ள ஆசை.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் சுளுக்கை எறும்பு என்று ஒன்று எங்கள் வீட்டு வேப்பமரத்தில் இருந்தது முன்பு, அது கடித்தால் மிகவும் கடுக்கும் அமிர்தாஞ்சன் போட்டாலும் வெகு நேரம் கழித்து தான் அதன் வலி போகும் தடித்துவிடும் கடித்த இடம்.

    தேன் எறும்பு கடிக்காது, பிள்ளையார் எறும்பு போல்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் ரஞ்சனி, வாழ்க வளமுடன்.
    நீங்கள் அனுப்பிய அதீதம் இதழில் வந்த கல்பட்டு நடராஜன் அவர்கள் தையல்குருவி பதிவை படித்தேன்.
    மிக நன்றாக எழுதி இருக்கிறார்.

    குளிர்காலத்தில் நீங்கள் சொன்ன சிறு எறும்பு நாற்றம் உள்ளது வரும். இனிப்புக்கு எங்கே என்று வந்துவிடும்.
    பிள்ளையார் எறும்பு போன்று இருக்கும் ஆனால் கடிக்கும். இந்த எறும்பை டெல்லியில் பார்த்து இருக்கிறேன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.




    பதிலளிநீக்கு
  22. ஒரு கூடு உருவாகிறது... அழகாக...

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் அம்பாளடியாள், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும், தமிழ்மண வாக்களிப்புக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் முனைவர் குணசீலன், வாழ்கவளமுடன்.
    நீங்கள் சொன்னது போல் இயற்கையின் படைப்பில் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு தனித்துவம் உண்டு.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் கே.பி. ஜனா சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்து நல்லா இருக்கே!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  27. எறும்பு இது போலக் கூடு கட்டும் என்றே தெரியாது. ஒரு வேளைக் கோவை மக்கள் போலவே எறும்புகளும் புத்திசாலிகளாக உருவாகின்றன போலும். உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது கோமதி. இந்த எறும்புகடிக்கும் வகையோ....எப்படி இருந்தால் என்ன.தன்வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் தெரிந்த புத்திசாலி. நல்ல காமிரா வாங்கித்தந்த ஸாருக்கு என் நன்றி. எங்களுக்கும் நல்ல பதிவுகள் கிடைக்குமே.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    அக்கா நீங்கள் சொல்வது போல் எறும்பின் உழைப்பு பிரமிக்கத்தான் வைக்கிறது.
    காமிரா வாங்கி தந்த சாருக்கு நன்றியா! மகிழ்ச்சி.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  29. பொறுமையாக படம் பிடித்திருக்கிறீர்கள். பிரமிப்பாகத்தான் இருக்கிறது. என்ன திறமையான உயிரினங்கள்!

    எறும்பு பற்றி எங்கள் சக ப்ளாக்கில் வந்த பதிவு படித்தீர்களோ!

    http://kasusobhana.blogspot.in/2014/02/blog-post.html

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    திறமையான உயிரினங்கள் தான். படங்கள் எல்லாம் பார்க்க முடிந்ததா?
    சோபனா அவர்களின் எறும்பு பதிவு படித்தேன். நன்றாக இருக்கிறது.
    பிப்ரவரி மாத பதிவுகள் நிறைய விட்டு போய் இருக்கிறது ஊருக்கு போய் விட்டதால்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  31. உங்க "தோட்டத்திற்கு" வந்து ரொம்ப நாளாச்சுங்க! :)

    எல்லோரும் கேமராவை உங்களைப் போல் அர்த்தமாக பயன்படுத்துவதில்லை. மனிதனைப் படம் பிடித்து மனிதனைப் பற்றியே சிந்தித்தால், புதுசா எதுவும் கற்றுக்க இல்லை. இதுபோல் மற்ற உயிர்களின் வாழ்க்கையில்தான் நாம் உருப்படியாக எதுவும் கற்றுக்க முடியும் போலும்.

    நல்ல பதிவு! வாழ்த்துக்கள் கோமதி அரசு அவர்களே! :)

    பதிலளிநீக்கு
  32. படங்கள் திறக்க சற்று நேரம் பிடித்தாலும், படங்களின் சுவாரஸ்யம் கருதி, திறக்கும்வரைக் காத்திருந்து, பார்த்து விட்டுத்தான் பின்னூட்டம் இட்டேன்! :)))))

    பதிலளிநீக்கு
  33. எறும்பின் கூடு இப்படி இருப்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன். ஆச்சர்யமாயிருக்கிறது. அதுவும் நீங்கள் வரிசைகிரமமாய் எடுத்துப் ஒத்திருக்கும் போட்டோக்கள் அதிசயத்தை கண் வைக்கின்றன. பகிர்விற்கு நன்றி கோமதி .

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் வருண், வாழ்கவளமுடன்.
    தோட்ட பதிவில் உங்களூர்குளவிகூடும் இடம் பெற்றதும் வந்துவிட்டீர்கள்.எறும்பு கோவை,குளவி அமெரிக்கா.

    நீங்கள் சொல்வது போல் இது போன்ற உயிரினங்கள் வாழ்க்கையிலிருந்து நிறைய விஷ்யங்கள் கற்றுக் கொள்ளலாம்.
    பறவை கூடு கட்ட சிறு சிறு குச்சிகளை கொண்டு வந்து மரத்தின் கிளையில் வைக்கும் அவை கீழே விழுந்து கொண்டே இருக்கும் மறுமடியும் மறுபடியும் விடாமுயற்சியில் கூடு அமைக்கும்.
    சோர்ந்து விடாத மனஉறுதி கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல விஷயம் தான்.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி வருண்.

    பதிலளிநீக்கு
  35. வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    படங்களை பார்க்க நேரம் ஆனாலும் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி. மறுபடியும் வந்து படங்களின் சுவாரஸ்யம் பற்றி சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
    எனக்கும் ஆச்சிரியம் புதுமையாக இருந்ததால் தான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள படம் எடுத்தேன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  37. அருமையான படங்கள்.
    எறும்புகளின் தொல்லை தாங்க முடியவில்லை. அரிசியில் கூட மேய்ந்து நாசம் செய்யும் எறும்புகள் இப்படி இலை தழையில் மேய்ந்து கூடு கட்டக் கூடாதோ? என் வீட்டு சமையலறையை சேதம் செய்யலாமோ?

    பதிலளிநீக்கு
  38. வணக்கம் அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.

    //அருமையான படங்கள்//

    நன்றி.

    அங்கும் எறும்பு தொல்லை உண்டா?
    வெயில் காலம் என்றால் வெளியில் வெயிலின் கொடுமை தாங்காமல் வீட்டை நோக்கி படையெடுத்து வரும் தன் இருப்பிடத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும்.

    மழை பெய்யும் போது அதற்கு தெரியும் ’முட்டைக் கொண்டு திட்டை ஏறினால் கிட்ட மழை என்று’

    இப்படி பல திறமைகள் உள்ள எறும்பை வீட்டை விட்டு போ என்று சொல்லலாமோ!


    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  39. இந்த கோடைமழை வருவதை அறிந்த எறும்புகள் புற்றிலிருந்து மேட்டுப் பகுதிக்கு (எங்கள் வீட்டின் பின்புற வராண்டாவிற்கு ) முட்டைகளைச் சுமந்து வரத் தொடங்கின. இதைப் பார்த்த நானும் எறும்புகள் பற்றி எழுதலாம் என்று இருந்தேன். நீங்கள் முந்திக் கொண்டு விட்டீர்கள். இருந்தாலும் உங்களைப் போல STEP BY STEP – ஆக அவை கூடு கட்டுவதை படம் பிடித்து எழுதி இருக்க முடியாது.பொறுமையாக படங்களை எடுத்து இருக்கிறீர்கள். பதிவிற்கு பாராட்டுக்கள்.

    இந்த வகை சிவப்பு எறும்புகளை எங்கள் அம்மா ஊர் (திருக்காட்டுப்பள்ளி) பக்கம் முசுடு என்போம். இவைகள் கடித்த இடம் வீங்கிவிடும். அப்போதைக்கு கிராமத்தில் சுண்ணாம்பு வைத்து தேய்த்துக் கொள்வோம்..

    பதிலளிநீக்கு
  40. மகிழ்ச்சி:). வாழ்த்துகள். புதிய Cybershot மூலமாக மேலும் எங்களுக்குப் பல அருமையான படங்கள் கிடைக்க உள்ளன. சந்திக்கும் போது அவசியம் பேசுவோம்.

    பதிலளிநீக்கு
  41. வணக்கம் தி,தமிழ் இளங்கோ சார், வாழ்க வளமுடன்.
    நம் முன்னோர்கள் எறும்பு முட்டையை தூக்கிகொண்டு போவதையும், தட்டான் கிட்ட பறந்தால் மழை என்பதையும் சொல்வார்கள்.
    இறைவன் அவைகளுக்கு அந்த அறிவை கொடுத்து இருக்கிறார்.

    நீங்களும் எழுதுங்கள் எறும்புகளைப்பற்றி. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி எழுதுவார்கள் புது புது விஷயங்கள் கிடைக்கும்.

    தேனி கொட்டினால், கட்டெறும்பு கடித்தாலும் சுண்ணாம்பு வைத்து தேய்த்து விட்டால் அதன் கடுப்பு குறையும் என்பதை கேட்டு இருக்கிறேன்.

    பழைய நூல்களில் முசுடுக்கு பேர் முயிர் என்பார்கள் என்கிறார் என் கணவர். முசுறு என்றும் சொல்வார்களாம்.

    உங்கள் அம்மா ஊர் திருக்காட்டுபள்ளியா?
    தஞ்சாவூர் திருகாட்டு பள்ளியா?
    திருவெண்காடு பக்கம் உள்ளதா?
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.


    பதிலளிநீக்கு
  42. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்கவளமுடன்.
    //அருமையான படங்கள் கிடைக்க உள்ளன. சந்திக்கும் போது அவசியம் பேசுவோம்.//

    உங்கள் அளவுக்கு எல்லாம் என்னால் படங்களை எடுக்க முடியாது.
    உங்கள் படங்கள் பேசும், பாடும், கவிதையாக, காவியமாக இருக்கும்.
    நான் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் நிறைய.
    நேரில் பேசுவோம்.
    மீண்டும் வருகைக்கு மகிழ்ச்சி, நன்றி.

    பதிலளிநீக்கு
  43. தங்கள் மறுமொழிக்கு நன்றி! எங்கள் அம்மா ஊர் தஞ்சாவூர்ப் பக்கம் க்ல்லணை – திருக்காட்டுப்பள்ளி – திருவையாறு மார்க்கத்தில் உள்ளது.

    பதிலளிநீக்கு
  44. வாங்க தி. தமிழ் இளங்கோ சார், உடனே வந்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்தமைக்கு நன்றி.
    இரண்டு திருக்காட்டுபள்ளியும் பாடல்பெற்ற ஸ்தலங்கள் தான்.
    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  45. அருமையன , அழகான் பதிவு! சுறுசுறுப்புக்கும் விடாமுயற்சிக்கும் பெயர் போன எறும்புகள் கூடு பின்னும் அழகை நீங்களும் அதே சுறுசுறுப்புடனும் விடாமுயற்சியுடனும் அழகழகாய் படம் பிடித்திருக்கிறீர்கள்! இனிய பாராட்டுக்கள்!!

    பதிலளிநீக்கு
  46. வணக்கம் மனோசாமிநாதன், வாழ்க வளமுடன்.
    பதிவை ரசித்தமைக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கும் , இனிய பாராட்டுக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  47. எங்கள் வீட்டு மாமரத்தில் இந்த எறும்புகளின் கூடால் அருகே செல்ல முடிவதில்லை. மாடியில் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் காய்களைப் பறிக்கவும் இயலாது. அவற்றின் கடி பயங்கரமாய் வலிக்கும் பின் புறம் இருந்த செம்பருத்தி செடியிலும் கூடு. ஒரே தொல்லையாய்ப் போக. அருகிலிருந்தவர்கள் ஒரு உபாயம் கூறினார்கள். அவற்றின் மீது சுத்தமான விபூதியைத் தெளித்தால், என்ன மாயம் எல்லாம் பரலோகம் போகின்றன. நன்கு பூத்துக் கொண்டிருந்த செம்பருத்திச் செடியை வெட்ட வேண்டி வந்தது,அவை நமக்குத் தொல்லை தராதவரை ஜீவகாருண்யம் பழகலாம் , இருந்தாலும் உயிருள்ள எல்லாமே ஆச்சரியம்தான் அதிசயம்தான்

    பதிலளிநீக்கு
  48. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

    நீங்கள் சொல்வது சரிதான். அடுப்பு சாம்பல் போடுவார்கள் முன்பு செடிகளில் பூ பூக்கும் போது. இப்போது சாம்பல் கிடைக்காது என்பதால் விபூதி போடுகிறார்கள்.

    வீட்டுக்குள் லக்ஷ்மண கோடு வரைந்து எறும்பை விரட்டுகிறார்கள்.
    சின்ன எறும்புதான் போகும், கட்டெறும்பு போகாது.

    //உயிருள்ள எல்லாமே ஆச்சிரியம் தான்//

    உண்மைதான் சார்.
    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  49. படங்களையும் அவற்றிற்கான உங்கள் குறிப்புகளையும் பார்த்துப் பிரமித்தேன்.

    பொறுமையும், தளராத தொடர் முயற்சியும் ஆராய்ச்சிக்குத் தேவை என்பார்கள்.உங்களுக்கு அத்தனையும் வாய்த்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

    கூட்டு முயற்சியின் வெற்றிக்கு எறும்புகள் சரியான எடுத்துக்காட்டு.
    அவற்றைக் கேட்டால் 'ஹெய்யோ.. இது தான் எங்கள் வாழ்க்கையே' என்று சொல்லும் போலிருக்கு.
    பேசத் தெரியாதவைகளின் செயல்பாடுகளைப் பார்த்தும் வாழ்க்கையின் வெற்றிக்கு பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள மாட்டோம் என்று நாம் அடம்பிடிப்பது தான் எல்லாவற்றிலும் பெரிய சோகம்.

    பதிலளிநீக்கு
  50. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வருகையும் பின்னூட்டமும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஊரில் இல்லையா?

    //கூட்டு முயற்சியின் வெற்றிக்கு எறும்புகள் சரியான எடுத்துக்காட்டு//

    நீங்கள் சொல்வது போல் கூட்டுமுயற்சிக்கு எறும்புகளை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளலாம்.

    வரிசையாக செல்லும் அழகு இடையில் ஏதாவது இடையூறு ஏற்பட்டு வரிசை கலைந்தாலும் மறுபடியும் அது வரிசையாக செல்லும் அழகு எதிலும் ஒழுங்கு கடைபிடிக்கும் அழகு! என்று எப்போதும் வியக்க வைக்கும்.

    உங்கள் வரவுக்கும், அருமையான உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
    பாராட்டுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  51. எறும்புகள் புற்று உருவாக்கிப் பார்த்திருக்கிறேன். மரத்தில் கூடு கட்டி அதுவும் காய்ந்த இலைகளைப் பின்னியும் நெய்தும் என்ன அழகாய்க் கட்டுகின்றன.அவற்றை படிப்படியாய்ப் படம்பிடித்துத் தந்த உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள் மேடம். எறும்பு பற்றிய புதியதொரு தகவலை அறிந்துகொண்ட மகிழ்ச்சி. மிக்க நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  52. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும் ,கருத்துக்கும் மிகவும் நன்றி கீதமஞ்சரி.

    பதிலளிநீக்கு
  53. பொறுமையுடன் எடுத்த அருமையான படங்கள். மாமரத்தில் கூடு கட்டிப் பார்த்திருக்கேன். மாங்காய் பறிக்க ஏற்பவர்கள் ரொம்ப யோசிப்பார்கள். ஆனால் இப்படிப் படிப்படியாகக் கூடு கட்டும் அழகை இன்றே கண்டேன். உங்கள் விடாமுயற்சி பெரிசா, எறும்பின் விடா முயற்சி பெரிசானு போட்டி வைச்சால் தேர்ந்தெடுக்கிறது ரொம்பக் கஷ்டம். :))))

    பதிலளிநீக்கு
  54. எறும்பு போலச் சுறுசுறுனு எல்லோரும் வந்து பின்னூட்டம் போட்டிருக்காங்க. நான் தான் லேட்! :)

    பதிலளிநீக்கு
  55. கண்ணைக் கவரும் படங்கள்.
    திருவெறும்பூர் பெயர்க் காரணம் அறிந்தேன். நன்றி மேடம்

    பதிலளிநீக்கு
  56. இந்தப் பதிவைப் படிக்கும்போது ஒரு குற்ற உணர்வு... ஏனென்று இறுதியில் சொல்கிறேன்.

    பலரைப் போல, மரத்திலும் எறும்பு கூடு கட்டும் என்பது எனக்கும் மிகுந்த ஆச்சரியமேற்படுத்திய புதிய தகவல்.

    எனினும், அவற்றைப் படமெடுத்த உங்கள் ஆர்வமும், முயற்சி எனக்குப் புதிதல்ல!! :-)))))

    அதனால்தானே புதிய காமரா பரிசாகக் கிடைத்துள்ளது!!

    பதிவைப் போலவே, பின்னூட்டங்களிலும் சுவாரசியமானத் தகவல்கள். பிந்தி வருவதில் இது ஒரு அனுகூலம். (சமாளிஃபிகேஷனேதான்) :-)

    கோடை தொடங்கியதை ஒட்டி, எங்கள் வீட்டிலும் எறும்பு ஊர்வலம் தொடங்கிவிட்டது. ஆனால், இம்முறை தொல்லை என்பதைத் தாண்டி, பெரும் உபத்திரவமாகி விட்டதைத் தொடர்ந்து பல இயற்கை முறைகள் பயன்படுத்த வேண்டி வந்தது.

    மருந்துக்குக் கட்டுப்படாத புதிய வைரஸ்களைப் போல, இவ்வருட எறும்புகள் எனது வழக்கமான மஞ்சள் பொடிக்குக் கட்டுப்பட மறுக்கவே, பலரிடம் பெற்ற ஆலோசனைப்படி, பெருங்காயம், மிளகு, வற்றல், எலுமிச்சை என்று பல கைங்கர்யங்களையும் முயற்சித்தும் பலனின்றிப் போகவே... வேறுவழியின்றி, கனத்த மனதோடுதான் “லக்ஷ்மண் ரேகா” போட வேண்டியதாயிற்று. என்ன செய்ய அந்தளவுக்கு... சீனி டப்பாவையெல்லாம் விட்டுவிட்டு, அரிசி டப்பா, கம்ப்யூட்டர் மானிட்டர், மனிதர்கள் என்று தேடித்தேடி மேய்ந்தால் வேறு என்னதான் செய்வது...

    தற்போதைக்குக் கட்டுப்பட்டிருக்கிறது. பார்ப்போம்...

    துளசி டீச்சர் சொன்னதைப் போல, ஆரம்ப காலங்களில் எந்தத் தொந்தரவும் இல்லாமல், மேலே ஊறுவதே தெரியாமல் செல்லக்கூடிய அந்த வகைப் பொடி எறும்புகள்தான் வந்தன. ஆனால், அடுத்தடுத்த வருடங்களில் அதிரடியாக பரிணாம வளர்ச்சியடைந்து, ”வேலை”யைக் காட்டத் துவங்கிவிட்டன... :-)

    பதிலளிநீக்கு
  57. வணக்கம் கீதா சாமபசிவம், வாழ்க வளமுடன்.
    உங்கள் பின்னூட்டத்திற்கு தாமதமாய் பதில் அளிக்கிறேன்.
    மாமியார் ஊரில் இருக்கிறேன்.

    அதனால் தான் தாமதம்.
    உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி.
    ஊருக்கு வந்த பின் தான் உங்கள் பதிவுகளை படிக்க வேண்டும்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.


    பதிலளிநீக்கு
  58. வணக்கம் முரளிதரன், வாழ்க வளமுடன்.
    நலமா?
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  59. வணக்கம், ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.

    உங்களுக்கு மற்றும் குற்ற உணர்வு இல்லை எனக்கும் இருக்கு ஹுஸைனம்மா. ஊருக்கு வந்து விட்டால், குளவியும், எறும்பும் வீட்டில் எல்லா இடத்திலும் கூடு கட்டி விடும்.
    எறும்பு மண் குவித்து வைத்து விடும், குளவி அதற்கு இஷ்டப்பட்ட இடத்தில் எல்லாம் கூடு கட்டி விடும்.
    அதை கலைக்கவும் மனது இல்லாமல் படும் அவஸ்தை சொல்லி முடியாது.
    வரும் முன் காப்பது போல் வீட்டில் “லக்ஷ்மண் ரேகா’ போட்டுவைக்கும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டியது ஆகி விடுகிறது.

    கோடை விடுமுறைக்கு ஊருக்கு வந்தீர்களா?
    குழந்தைகள் நலமா?

    கயல்விழியும் குழந்தைகளும் வந்து இருக்கிறார்கள் எல்லோரும் கோவையில் இருக்கிறோம்.


    உங்கள் வரவுக்கும்,நீண்ட பின்னூட்டத்திற்கும் மிகவும் மகிழ்ச்சி ஹுஸனைம்மா.



    பதிலளிநீக்கு
  60. எறும்புகள் பற்றிய நுட்பமான விவரிப்பு.இப்படியான் ஒரு பதிவைத் தந்ததற்கும்,தரத்தோணியதற்குமாய் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  61. வணக்கம் !
    அன்பின் தோழி கோமதி இத் தொடர் பகிர்வு ஒன்றிக்குத் தங்களை அன்போடு
    அழைக்கின்றேன் என் தாழ்மையான இவ் வேண்டுகோளுக்கு இணங்கித் தாங்கள் கொடுக்கவிருக்கும் அன்பான பதில்களையும் காணும் ஆவலுடன் .சிரமம் கொடுப்பதற்கு
    மன்னிக்கவும் .

    பதிலளிநீக்கு
  62. வணக்கம் அம்பாளாடியாள், வாழ்க வளமுடன். நலமா? நான் இப்போது ஊரில் இருக்கிறேன் வந்தவுடன் தொடர் பதிவு அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  63. ஒவ்வொரு படங்களையும் ரொம்பவே ரசித்தேன். நான் எழுத நினைத்ததை டீச்சர் எழுதி விட்டார். என் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  64. வணக்கம் ஜோதிஜி, வாழ்க வளமுடன்.
    நீங்கள் படங்களைப் பார்த்து ரசித்தமைக்கு நன்றி.
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  65. படங்களின் தொகுப்பு அழகு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  66. நண்பர் பாண்டியன் மூலமாகத் தங்களின் பதிவைப் பற்றி அறிந்தேன். தங்களது எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    பதிலளிநீக்கு
  67. வணக்கம் டாகடர் .ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  68. வணக்கம்!
    இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.

    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com

    (இன்றைய எனது பதிவு
    "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
    சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
    குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
    படரட்டும்!
    (குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

    பதிலளிநீக்கு
  69. வணக்கம் யாதவன் நம்பி, வாழ்க வளமுடன்.

    உங்களின் வாழ்த்து கவிதைக்கு நன்றி.
    தகவலுக்கு நன்றி.
    வருகிறேன் உங்கள் தளத்திற்கு.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  70. மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள். குறிப்பாக உங்களுடைய கருத்து "இறைவன் ஒவ்வொரு உயிருக்கும் எவ்வளவு அறிவைக் கொடுத்து இருக்கிறான் என்று வியந்து பார்க்க வைக்கும் காட்சி"

    மரங்களுக்கும் மிருகங்களுக்கும் 5 அறிவைக் கொடுத்த இறைவன், ஏன் மனிதர்களுக்கு மட்டும் சிந்திக்கும் 6 அறிவைக் கொடுத்தான் எனில் மனிதன் இறைவனுடைய படைப்புகளைப் பார்த்து சிந்தித்து அந்த படைத்த இறைவனை உணர்ந்து அந்த ஒரு இறைவனை மட்டுமே வண்ங்கவேண்டும் என்பதற்காக. அதற்காகவே அவன் இறைத்தூதர்களையும், இறை வேதங்களையும் மனிதர்களுக்கு வழிகாட்டுவதற்காக தன்னை அறிந்து கொள்வதற்காக அனுப்பியிருக்கின்றான். படைப்புகளின் அற்புதங்களைப் பார்த்து பிரமிக்கும் நமக்கு ஏனோ அதைப் படைத்தவனைக் குறித்து சிந்திப்பதற்கு தயக்கம்

    பதிலளிநீக்கு
  71. வணக்கம் அமீன், வாழ்க வளமுடன்.


    நீங்கள் சொல்வது போல் படைப்புகளை பார்த்து சிந்தித்து அவைகளை படைத்த இறைவனை உணர்ந்து , எல்லம் வல்ல இறைவனின் கருணையை நினைந்து நாளும் இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

    உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  72. நீங்கள் சுட்டிக் கொடுக்காமலிருந்திருந்தால் இந்த அருமையான பதிவை கட்டாயம் இழந்திருப்பேன். (இன்னும் எத்தனை உண்டோ இப்போதைக்குத் தெரியாது, ஏனெனில் வலையுலகம் மிகப்பெரியது)

    எறும்புகள் இலைகளைப் பின்னி கூடு அமைக்கும் விதத்தை இப்போது தான் அறிகிறேன். அற்புதமான தகவல், உங்களுடைய அயராத உழைப்பு ஒரு நல்ல பதிவை வாசகர்களுக்கு தந்திருக்கிறது. எல்லோருடைய பின்னூட்டமும் இதை எதிரொலிக்கின்றன.

    இணைப்பு கொடுத்ததிற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  73. வணக்கம் கபீரன்பன், வாழ்க வளமுடன்.
    பதிவைப் படித்து உடனே கருத்து சொனத்ற்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு